எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 02, 2020

சின்ன வெங்காயத்தைச் சாப்பிடலாமா?

நேற்றுக் கொஞ்சம் மளிகை சாமான்கள் வாங்க வேண்டி இருந்ததால் காலையிலேயே அதற்கான பட்டியலைத் தயாரித்து சாமான்கள் வாங்கி அதை உரிய இடங்களில் வைத்துனு சரியா இருந்தது. மத்தியானமா இந்தக் கிண்டிலில் இணைந்ததில் சில விபரங்கள் கொடுக்கலைனு அவங்க நினைவூட்டல் கடிதம் அனுப்பி இருந்தாங்க. அதை எல்லாம் சரி செய்ததில் நேரம் போய்விட்டது. பின்னர் வெளியிட வேண்டிய தொகுப்பில் இன்னும் இணைக்க வேண்டியதை எடுத்துக் காப்பி, செய்தால் அது பேஸ்ட் ஆகவே இல்லை. வேர்டில் ஏதோ பிரச்னை. இந்த ஆப்ஷன் உபயோகத்தில் இல்லைனு வருது. சரினு புதுசா வேர்ட் திறந்து அதில் போடலாம்னு முயற்சித்தால் வேர்டே திறக்கலை என்பதோடு மைக்ரோ சாஃப்ட் உன்னோட கணக்கு முடிந்து விட்டது என்கிறது. எப்படி எல்லாமோ முயற்சித்து முயற்சித்துக் கடைசியில் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கே கேடிபியிலும் பப்ளிஷ் செய்ய எப்படி அப்லோட் செய்வது என்பதையும் சரியாகப் புரிஞ்சுக்க முடியலை. ஏற்கெனவே ம.ம. இதில் இது சரியா வரலை, அது சரியா வரலைனு இருக்கையில் மனது எங்கே பதியும். இதுக்கே மணி நாலு ஆகிவிட்டது. ஆகவே அத்தோடு கணினியை மூடிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். இன்னிக்கு மத்தியானம் மறுபடி உட்கார்ந்து எல்லாத்தையும் என்னனு பார்க்கணும்.
*********************************************************************************
இந்தச் சீன "ஆப்கள்" பலவற்றை அரசு தடை செய்திருக்கிறது. நல்லவேளையா நான் எதையுமே மொபைலில் டவுன்லோடு செய்து கொள்வதில்லை. வாங்கும்போது என்னென்ன கொடுத்தாங்களோ அதான். அதுவே பாதிக்கும் மேல் என்னனு பார்த்ததில்லை. எல்லாவற்றிற்கு அவ்வப்போது அப்டேட் மற்றும் நடக்கும். மற்றபடி ஜியோ சாவன், காலக்ஸி, ஷேர் சாட், ப்ரைம் வீடியோ, மை காம்ஸ், அமேசான் ஷாப்பிங் என எதுவும் திறந்து கூடப் பார்த்ததில்லை. எல்லா நோட்டிஃபிகேஷன் அறிவிப்பையும் மூடி வைத்திருக்கேன். அப்படியும் சில நாட்களில் இரவில் டிட்டடங் என சப்தம் போட்டுக்கொண்டே இருக்கும். எங்கே எதை அணைத்தால் இந்த சப்தம் நிற்கும் எனப் புரியாது. செட்டிங்க்ஸில் திறந்து பார்த்தால் எல்லாம் நோட்டிஃபிகேஷன் வந்து சுமார் ஒரு மணி நேரமாவது ஆகி இருக்கும். புதுசாக எதிலும் வந்திருக்காது. ஆனாலும் இரவு முழுவதும் சப்தம் தாங்காது. மொபைல் டாட்டாவை வீட்டில் இருக்கையில் போடுவதே இல்லை. ஒரு நாள் பூரா மின்சாரம் வராதுனா அன்னிக்குப் போட்டுப்பேன். மின்சாரம் வந்ததும் நினைவா மொபைல் டாட்டாவை அணைச்சுடுவேன். எல்லோருமே இரண்டும் பயன்பாட்டில் வைச்சிருக்கிறதாச் சொல்றாங்க. நமக்கு இந்தத் தொழில் நுட்பம் எல்லாம் புரியாது; வராது என்பதால் அந்தப் பக்கம் போவதே இல்லை.

இந்த டிக்டாக் என்றால் என்னனு தெரியலை. ஆனால் அதன் மூலம் நல்ல விஷயங்கள் நடப்பதாகவோ/நடந்ததாகவோ தெரியவில்லை. பூனை, நாய், குரங்கு போன்ற வாயில்லா ஜீவன்களைத் தூக்கில் தொங்க விட்டுப் படம் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் பார்க்க நேர்ந்தது. செய்திகளே பார்க்க இப்போதெல்லாம் மனசு வருவதில்லை. இன்னும் சில ஆபாசமான காட்சிகளாகவும் இருக்கின்றன/இருந்தன.இவை எல்லாம் நல்லதுக்கா/நன்மைக்கா? தொழில் நுட்பம் முன்னேறியதில் நமக்கு என்ன கிடைத்திருக்கிறது? இம்மாதிரிச் சட்டவிரோதமான ஆபாசங்கள் தான்.

நேத்திக்கு நான் பதிவுகளுக்கு வரலைனதும் வல்லி பயந்திருக்கார் போலே! எனக்கு வாட்சப்பில் செய்தி அனுப்பிக் கேட்டிருந்தார். எங்க பெண்ணிற்கும் செய்தி அனுப்பிக் கேட்டிருந்திருக்கார். பெண்ணிற்குக் கவலை. உடனே கூப்பிடும்படி அவளுக்கு முடியலை. அவங்க காலை நேரம் என்பதால் அவளும் செய்தி அனுப்பிக் கேட்டிருந்தாள். எங்கள் ப்ளாக் புதன் பதிவில் கமலா ஹரிஹரனும் என்னைக் காணோமே என்று தேடி இருந்தார். வர நேரம் இல்லை என்பது தான். மற்றபடி மத்தவங்க யாரும் நல்லவேளையா தேடலை. ஏனெனில் நான் இப்படி ஏதேனும் அசட்டுத் தனம் செய்து கொண்டிருப்பேன் என்பது அவங்களுக்குத் தெரியும்.

சின்ன வெங்காயம் பித்தத்திற்கு நல்லது. கொழுப்புக் குறையும்.மூலக்கோளாறுகளுக்கு நல்லது. தலைவலியைக் குறைக்கும். ஆசனக்கடுப்பு நீங்கும். இருமல் குறையும். வெங்காயச் சாறு பல்வலி, ஈறு கொழுத்திருத்தல் ஆகியவற்றுக்கு நல்ல மருந்து. உடல் சூடு உள்ளவர்கள் பழைய சாதத்தோடு சின்ன வெங்காயம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். நரம்புக்கு பலம். தூக்கம் வரும். இன்னும் எத்தனையோ பலன்கள் இருக்கின்றன. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்குச் சின்ன வெங்காயம் சிறந்த மருந்து. ஆகவே விரத நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சாப்பிடலாம். இதில் எந்த விதமான வசியமோ அல்லது அஜீரணமோ ஏற்படாது. புலனடக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள், யோகிகள் மற்றும் சில ஆசாரமானவர்கள் வெங்காயத்தை உணவில் சேர்க்க மாட்டார்கள். நோயாளிகளுக்குப் பலன் தரும் என்பதால் சேர்க்கலாம்.


59 comments:

  1. கீதாம்மா, நல்லாருக்கீங்களா?

    ReplyDelete
    Replies
    1. அட! என்னடா! இங்கே மழை மேகம் ஓடி விட்டதேனு நினைச்சேன். இத்தனை வருடங்களுக்குப் பின்னர் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. சுப்புத்தாத்தா மூலம் நீங்கள் அவருடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்பது தெரியும்.

      Delete
  2. கீதாக்கா நானும் எந்த ஆப்ஸும் வைச்சு என் மொபைலுக்கு ஆப்பு வைப்பதில்லை ஹா ஹா ஹா

    இப்ப ஆரோக்கியா சேத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டதால் அது மட்டும் இருக்கிறது.

    மொபைலோடு வந்ததிலேயே நான் பலதும் பயன்படுத்துவதில்லை. என் மொபைல் அவ்வப்போது ஹேங்க் ஆகிவிடும் என்பதால். வாட்சப்ல வரதே பலதும் டவுன்லோட் செய்வதில்லை. அப்பப்ப மொபைலில் உள்ளே உள்ள ஃபைலெஸ் எல்லாம் சுத்தம் செய்து கொண்டே இருக்கிறேன் இல்லனா மொபைல் மூடிக் கொண்டுவிடும்.

    கோட்டிற்குக் கீழ் உள்ள இரண்டாவது பாரா மனதுக்கு கஷ்டமாக இருக்கு அதனாலேயே பல பார்ப்பதில்லை.

    நான் என்னடா கீதாக்கா வரலையே என்று நினைத்தேன் ஸோ மதியம் மேல வருவீங்க ந்னு நினைச்சேன் ஆனா நான் அதுக்கு அப்புறம் வரலை...அப்படியே போயிடுச்சு..எனக்கும் நேற்று வேலைகள் அப்புறம் இங்கு அடுத்த குறுக்குத் தெருவில் நம் வீட்டிற்கு வெகு பக்கத்தில் கணவன் மனைவி கஅவர்கள் குழந்தைகள் இருவர் கார்ப்பரேஷன் ஆட்கள் வந்து கூட்டிக் கொண்டு சென்றனர். அதனால் எங்கள் குறுக்குத் தெருக்கள் இருக்கும் மெயின் ரோட்டின் அந்தப் பக்கம் தான் நாங்கள் வாங்கும் காய், பழம், பால் எல்லாம் 2, 3 நிமிட நடை...ஸோ அப்புறம் அந்தப் பக்கமே செல்லவில்லை.

    நாங்களும் கவனமாக இருக்கிறோம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி.கீதா, நானும் எந்த ஆப்புக்களும் வைச்சுக்கலை. நமக்கு நாமே ஏன் ஆப்பு வைச்சுக்கணும்! :))))) ஆரோக்கியா உள்பட! நேற்றுக் கணினியில் சில மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். ஆனால் வேலை நடக்கலை. இங்கேயும் நாளுக்கு நாள் கொரோனா பெருகி வருவதால் கவலையும் பயமுமாகத் தான் இருக்கு!

      Delete
  3. நீங்க க்ளீனிங்க் வேலையா இருக்கும்னு நினைச்சேன். இன்றும் காணவில்லை நா இன்று உங்களை வாட்சப்பில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். வந்துட்டீங்க..

    சி வெ ரொம்ப நல்லது ஆமாம். நான் இங்கு சேர்த்துக் கொள்வதுண்டு. ஆய்ர்வேத மருத்துவர் எனக்குச் சொல்லியிருக்கிறார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, க்ளீனிங் வேலை நாங்க இரண்டு பேருமாச் செய்தா ஆகாது. ஆட்கள் வரதுனா இப்போ வரவழைப்பது உசிதம் இல்லை என்பதால் முடிந்தவரை துடைச்சுச் சுத்தம் பேணுகிறோம்.

      Delete
  4. கிண்டில் - வாழ்த்துகள். விரைவில் உங்கள் புத்தக வெளீயிடு நடக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்! எங்கே ஒரு வருஷம் ஆயிடும் போல! :(

      Delete
  5. இந்த டிக்டாக் வந்து பல குடும்ப பெண்களின் வாழ்வை திசைமாற்றி விட்டது இதை பல பெண்கள் அனுபவப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.

    சரி கண்ணீர் வடிக்கும் பெண்களை கண்டாவது மற்றவர்கள் இதிலிருந்து விலகுவோம் என்று திருந்துகிறார்களா ? அதுவும் இல்லை.

    எல்லாம் அழிவை நோக்கி... விஞ்ஞானம் வளர, வளர வீழ்ச்சிதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! முன்னரே நீங்க சொல்லி இருக்கீங்களே! ஆனாலும் எப்படி எல்லாம் ஆபாசமாகப் படம் எடுத்துக்கப் பெண்கள் துணிந்துவிட்டார்கள் என்பதை நினைக்கவே கவலையும், பயமும் வருகிறது.

      Delete
  6. கிண்டில் விசயங்களை நம் நண்பர் கில்லர்ஜியிடம் கேட்கலாம்... வெற்றிகரமாக பல பிரச்சனைகளை சமாளித்து நேற்று தன்னுடைய மின்னூலை கிண்டிலில் போட்டு விட்டார்... உதவி செய்த நம் நண்பர் வெங்கட் ஜி அவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன்.

      Delete
  7. Notification ஒலியை மட்டும் குறைவாக கேட்கும் ஒலியில் (Settings-ல்) அமைத்துக் கொள்ளலாம்...

    இரவு தூங்கும் போது Mobile data, Wifi என அனைத்தையும் OFF செய்து விடுவதே நல்லது...

    டிக்டாக் பயன்படுத்தி பைத்தியங்கள் ஆனவர்கள் பலருண்டு...

    ReplyDelete
    Replies
    1. திரு தனபாலன், அப்படித் தான் வைச்சிருக்கேன். இரவில் வைஃபை எப்போவுமே அணைச்சு வைப்போம். அதோட இங்கே இடி இடிக்க ஆரம்பிச்சாலே வைஃபை உடனே அணைச்சுடுவோம். மொபைல் டாட்டா வீட்டில் பயன்படுத்துவது என்பது மின்சாரம் இல்லாத பகல்பொழுதுகளில் தான். டிக்டாக்குக்கெல்லாம் போகவோ அங்கே அதைப் பயன்படுத்தவோ தெரியவே தெரியாது.

      Delete
  8. 'சின்ன வெங்காயம் சாப்பிடலாமா?' - இவ்வளவு ஆதரவாக சின்ன வெங்காயத்துக்காக இடுகைத் தலைப்பு வைக்கறீங்கன்னா, அனேகமா நீங்க சின்ன வெங்காய மண்டி துவங்கியிருக்கணும் இல்லைனா வெங்காயம் விளைவிக்கும் ஓரிரண்டு ஏக்கர் வாங்கியிருக்கணும். எனக்கு மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்லவும்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நெல்லையாரே, சின்ன வெங்காயம் இடம் பெற்றதின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?

      Delete
    2. ஹா ஹா ஹா கரீட்டு நெல்லைத்தமிழன்:)).. கீசாக்கா கொஞ்சம் லேட்டா வருகிறேன்:))

      Delete
    3. வாங்க ஞானவில்லி! உங்க வசதிப்படி வாங்க!

      Delete
  9. மளிகைச் சாமான்களை பட்டியலிட்டு, வந்த பிறகு அடுக்கி வைத்து - இங்க நான் இந்த வேலையை எடுத்துக்கொண்டிருக்கிறேன். என்ன இருக்கு, என்ன இல்லை என்று தெரியும். அதற்கேற்றவாறு வாங்க சுலபமா இருக்கும். அதேபோல, அவ்வப்போது பார்த்து, எந்த பாட்டிலில் என்ன குறைந்திருக்கிறது எனச் சரிபார்த்து, ஸ்டாக்கிலிருந்து அதனை நிரப்பி வைப்பதும் நாந்தான்.

    வேறு யாரும் இதனைச் செய்யக்கூடாதுன்னும் சொல்லியிருக்கேன். ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. இங்கே எப்போவுமே நான் தான்! நான் மட்டும் தான்! மாமியார் இருக்கும்போது எல்லா சாமான்களையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அன்றாடம் அவங்க வந்து எடுத்துக் கொடுக்கணும் என்பாங்க! எனக்கு என்னமோ அது சரியா வராது. கொஞ்ச நாட்கள் ஓடியது. அப்புறம் அவங்க ஊருக்குப் போக நேரவும் நானே பார்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

      Delete
  10. நான் கேம் ஸ்கேனர் தவிர பிறவற்றை உபயோகித்ததில்லை. இப்போ அதையும் உபயோகிக்கப்போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இதெல்லாம் என்னன்னே தெரியாது நெல்லையாரே! இதுக்கே மாமா என்னை செல்லும் கையுமா இருக்கே என்கிறார்! :)))))

      Delete
  11. கிண்டில் எனக்கும் தண்ணி காட்டுது...

    டிக் டாக்கில் நானும் புழங்குறதில்லை...

    வெங்காயம் சேர்ப்பதால் புலனடக்கம் ஏற்படாதா?! எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. புலனடக்கம் மனசில் இருக்கனும்ன்னு நம்புறவ நான்.

    ReplyDelete
    Replies
    1. கிண்டில் பிரச்னை பண்ணவில்லை. ஏனெனில் நான் இன்னமும் வேர்டில் என்னோட புத்தகத்துக்கானவற்றைத் தொகுத்துக் கிண்டிலில் அப்லோட் செய்யும்வரை போகவில்லை. அந்தச் சமயங்களில் என்னென்ன நடக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாதே! இஃகி,இஃகி,இஃகி,!:))))))

      Delete
    2. கிண்டில் என்ன பிரச்சனை என சொன்னால் சரி பண்ணிடலாம்

      Delete
    3. Thank You Lk. இன்னும் கிண்டிலில் எந்த வேலையும் ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே என்னோட பதிவுகளைக் காப்பி, பேஸ்ட் செய்து வந்த வேர்டில் தொடர்ந்து காப்பி, பேஸ்ட் செய்ய முடியவில்லை. அது முடிஞ்சு அப்புறமாத் தானே கிண்டிலுக்கு வரணும். ஆகவே வேர்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது புரியாமல் விழிக்கிறேன். இன்னொரு மடிக்கணினியில் வேர்ட் அளவில் மிகச் சின்னச்சின்னதாகத்தட்டச்சவே முடியாதபடிக்குக் காட்சி அளிக்கிறது. அதை எப்படிப் பெரிது பண்ணித் தட்டச்சுவது அல்லது அதில் காப்பி, பேஸ்ட் பண்ணுவது என்பதே புரியவில்லை.

      Delete
  12. சின்ன வெங்காயத்தில் வைட்டமின் K என்ற ஒன்று நிறைந்து இருப்பதாக அறியப் படுகின்றது.. V K பலவிதத்திலும் நல்லது என்று சொல்கிறார்கள்..

    70 களில் குமுதம் வார இதழில் வந்த ஒரு செய்தி.. வேறு சில பொருள்கள் மாதிரி சின்ன வெங்காயமும் இரத்த் விருத்திக்கானது... உயிர் அணுக்களை அதிகரிப்பது..

    இதன் பொருட்டே உண்மையான யோகியர் வெங்காயத்தைத் துறப்பது...

    வெங்காயத்தைக் கொண்டு வேறொரு வைத்தியம் உண்டு.. அதைப் பொது வெளியில் சொல்வதற்கில்லை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதைப் பற்றிய வாதம் நடந்தது. அதன் விளைவாக இங்கே சின்ன வெங்காயத்தின் பலன்கள். பொதுவாகப் புலன் அடக்கத்திற்கு வெங்காயம், பூண்டு மற்ற வாசனைப் பொருட்கள் சேர்க்க மாட்டார்கள். இதன் பொருட்டே பிரமசாரிகள் வெங்காயம், பூண்டு, வாசனைப் பொருட்கள் இல்லாமல் சாப்பிட வேண்டும் எனவும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் சொல்வார்கள். பிரமசாரிகள் வெற்றிலை, பாக்கும் போட்டுக்கொள்ளக் கூடாது என்பார்கள். இப்போதெல்லாம் யாரும் கடைப்பிடிப்பதில்லை.

      Delete
    2. ஓ...   இதுதான் பின்னணியா?  அங்கு விவாதம் காரசாரமாக இருந்ததே...!

      Delete
    3. :)))))))) @ஸ்ரீராம்!

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    6. மன்னிச்சுக்குங்க...   மெயில்ல பதில் பார்த்தாலே கன்பியூஸ் ஆயிடுச்சு!

      Delete
  13. சின்ன வெங்காயம் பல நிலைகளில் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, கருத்துக்கு நன்றி.

      Delete
  14. அந்த டிக் டாக் வந்த நோக்கம் பிரபலமிலா பாடகர் / நடன கலைஞர்களை அறிமுகப் படுத்துவது. ஆனால் அது எங்கேயோ திசை மாறி போயாச்சு. எப்பவாது இன்ஸ்டால் பண்ணுவேன். அரைமணியில் தூக்கிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க எல்கே, நீங்க சொல்வது போல் நடந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும். ஆனால் நம் மக்களின் பேராசை விபரீதங்களில் கொண்டு விட்டு விட்டது!

      Delete
  15. ஒரு நாள் பொழுது எப்படி போனது என்று தெரிந்து கொண்டேன்.
    சின்னவெங்காயம் உடம்புக்கு நல்லது. சின்னவெங்காயம் கிடைக்கவில்லை என்றால்தான் பெரியவெங்காயம் சேர்த்துக் கொள்வது. சில சமையலுக்கு சின்னவெங்காயம்தான், வடை, அடை எல்லாம் சாமிக்கு என்றால் மட்டுமே வெங்காயம் விலக்கு, விரதம் என்றால் வெங்காயம் இல்லாமல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நம்ம ரங்க்ஸுக்குச் சர்க்கரை குறைய முருங்கைக்கீரையும், சின்ன வெங்காயமும் அதிகம் சேர்க்கச் சொல்லி இருக்கின்றனர். முருங்கைக்கீரையைச் சுண்டல் செய்தால் அது அவர் தொண்டையில் மாட்டிக்கொள்கிறது என்பதால் சூப் செய்தே கொடுத்துவிடுகிறேன். சனிக்கிழமைகள், செவ்வாய்க்கிழமைகள், விரத நாட்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை.

      Delete
  16. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களது புது மின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சீன தொழில் நுட்பங்கள் இங்கு (இந்தியா) நீக்கம் பற்றி மட்டும் செய்தியில் அறிந்தேன். அதில் பல பெயர்கள் எனக்கும் புதிது. இப்போதிருக்கும் கைப் பேசியிலே பல விஷயங்கள் அறவே தெரியாது. என் குழந்தைகள் சொல்படி பதிவுலகம் வரப்போக மட்டும் அதில் கற்றுக் கொண்டேன். மற்றபடி அவர்கள்தான் அதில் அகற்ற வேண்டியதை அகற்றி, வேண்டியவற்றை சேர்த்துத் தருவார்கள்.

    நேற்று நீங்கள் உங்கள் வீட்டு வேலைகளில், மற்றும் சில எழுத்து வேலைகளில் பிஸி எனத் தெரியாமல் உங்களை நேற்று முழுதும் காணவில்லையே எனத் தேடினேன். இன்று விபரம் அறிந்து கொண்டேன். எனக்கும் சில சமயங்களில் வீட்டு வேலைகள் சிறைப் பிடித்து கொள்வதால் இப்படி வர முடியாமல் போகிறது.

    சின்ன வெங்காயம் பற்றி அறிந்து கொண்டேன். உண்மைதான்..! அந்த காலத்தில் பெரியவர்கள் வெங்காயம், பூண்டு அடிக்கடி உணவில் சேர்ப்பதை அவர்கள் தவிர்ப்பதுடன், சின்னவர் களுக்கும் அறிவுறுத்துவார்கள். என் மாமியார் வீட்டில் பூண்டு சேர்ப்பதை விரும்பவே மாட்டார்கள். அதனாலேயே நிறைய வருடங்கள் எனக்கு மசாலா உணவுகள் செய்யவே அவ்வளவாக தெரியாது.

    இப்போது பூண்டு, வெங்காயம் தேவைகள் அறியப்டுகின்றன. மேலும் வலியுறுத்தப் படுகின்றன.தங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, புது மின்னூலுக்கு இன்னும் ஆயத்தமே ஆரம்பிக்கலை. உங்க வாழ்த்துகள் முன்கூட்டியே கொடுத்ததுக்கு நன்றி. எங்க அப்பாவீடு, தாத்தா வீடு ஆகியோர் வீடுகளில் வெங்காயத்தின் பயன்பாடு மிகக் குறைவு. அபூர்வமாக ஆறு மாசத்துக்கு ஒருதரம் வெங்காயம் சேர்த்தால் உண்டு. ஆனால் இங்கே வெங்காயம் அதிகம் சேர்ப்பார்கள். ஆகவே எனக்கும் அது பழக்கத்தில் வந்திருக்கிறது. என்றாலும் வாரத்தில் 2,3 நாட்கள் சேர்க்க முடியாமல் இருக்கும். என் அப்பா காலிஃப்ளவர் கூட வாங்கிச் சமைக்கக் கூடாது என்பார்! இப்போ இங்கேயும் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், நூல்கோல், பீட்ரூட், டர்னிப், முள்ளங்கி போன்றவை சேர்க்கக் கூடாது என்று சொல்லி இருக்கார் மருத்துவர். அவருக்குத் தைராய்ட் இருப்பதால் இவை எல்லாம் ஒதுக்கவேண்டும் எனச் சொல்லி இருக்காங்க.

      Delete
  17. நான்லாம் வெங்காயம் சேர்க்க பலநேரம் மறந்திருக்கேன் :) எனக்கென்னமோ தாளிச்சு  குழம்போ கூட்டோனு கூட்டணி ஆனபின் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை :) என் பொண்ணுக்கு வெங்காயம் பிடிக்காது அதனால் குட்டியா எதோ கொஞ்சூண்டு சேர்ப்பேன் . அதைவிட சின்ன வெங்காயம் என்னை அளவுக்கதிகமா அழ வைக்கும் என்பதாலேயே வாங்கறதில்லை :)  
    டிக்டாக் மற்றும்  பல ஆப்களை போன் வாங்கினதும் எடுத்துட்டேன்   ..இதெல்லாம் நான் வைச்சுக்கலை ..இது ஒரு பாடலை நடிகர்களின் வாயிசை இமிடேட் செய்றமாதிரி தோணுச்சு ஒரு காணொளி பார்த்து .அதில் வன்முறையும் இருக்கா???? ஆஆ தொழில்நுட்பம் சில விஷயங்களில் பாதாளத்துக்கு தள்ளி விட்டது மனிதர்களை :( 



    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், அபூர்வமா வந்திருக்கீங்க ரொம்ப நாட்கள் கழிச்சு! பணிச்சுமை குறைஞ்சிருக்கா? வெங்காயம் இங்கே இப்போத் தான் அடிக்கடி சேர்க்கிறோம். முன்னால் எல்லாம் சப்பாத்திக் கூட்டுக்கு அல்லது வெங்காய சாம்பார் வைச்சால் என்று குறிப்பாகத் தான் இருக்கும். இப்போவும் வாரத்தில் 2,3 நாட்கள் சேர்ப்பதில்லை. இந்த டிக்டாக் நிறைய வன்முறைகளை அரங்கேற்றி வைத்திருக்கிறது. மக்களாய்ப் பார்த்து மனம் திருந்தாவில்லை எனில் யார் தான் என்ன செய்ய முடியும்!

      Delete
  18. நான் வெங்காயம் பற்றி எழுதின பின்னூட்டத்துக்கு ஞான எலி ஞானப்பல்லி எசப்பாட்டு பின்னூட்டம் தர தடா :) 
    எனக்கு தெரியும் ஞானம் என்ன எழுதுவாங்கன்னு அதனால் :) முன்னெச்சரிக்கை 

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஞான எலியும் நல்லா இருக்கு, ஞானப்பல்லியும் நல்லா இருக்கு. ஆனால் பாவம், அது ஒண்ணும் சொல்லலை. தன் பாட்டுக்கு வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விட்டது! :)))))))

      Delete
  19. அடடா இம்முறையும் கீசாக்காவின் மைண்ட் வொயிஸ் தான் போலும் அவ்வ்வ்வ்வ்வ்... நான் எல்லாம் ஒரு கிழமை ஆரையும் காணவில்லை எனில்தான் தேடுவேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

    அதுசரி எதுக்கு திடீரென சின்ன வெங்காயம் பற்றிப் போட்டிருக்கிறீங்க? ஆராவது உங்களை சாப்பிட வேண்டாம் என தடா.. போட்டினமோ?.. அதனாலதான் மேலே நெல்லைத்தமிழனுக்கும் டவுட் வந்திருக்குது ஹா ஹா ஹா:))..

    நானும் வெங்காயத்தின் மகிமைகள் பற்றி முன்பு ஒரு போஸ்ட் போட்டேன் கீசாக்கா... பொதுவா வெங்காயம் சாப்பிட்டால் நிறைய நற்பலன்கள் உண்டு.. வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்டால் ., குரல் இனிமையாகும், மூச்சுக்கோளாறு இருப்பின் அதுவும் சரியாகும்...

    ReplyDelete
    Replies
    1. ஞான எலி/பல்லி/வில்லி, புகை விடாதீங்க! நான் எம்புட்டுப் பிரபலமாக இருந்தால் என்னை ஒரு பொழுது காணலைனதுமே தேடுவாங்க! நீங்களும் தான் வாரக் கணக்கில் போய் ஒளிஞ்சுக்கறீங்க! நாங்கல்லாம் இதான் உங்க வழக்கம்னு புரிஞ்சுக்கிட்டோம். அதான் தேடறதில்லை. :)))))))) என்னை யாரும் சாப்பிடவேண்டாம்னு எல்லாம் சொல்லலை. வெங்காயம், பூண்டு பற்றி எங்கள் ப்ளாகில் ஒரு வாதம் நடந்தது. அதை ஒட்டி எழுதினேன்.

      Delete
  20. தொடர்வதற்காகப் போட்டு வைத்துக் கொள்கிறேன்.  பதிவு இன்னும் படிக்கவில்லை.  கடும் பணிச்சுமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், வந்ததே பெரிய விஷயம். மெதுவா வந்து படிங்க!

      Delete
    2. இந்த பதிலில் உள்குத்து ஒன்றும் இல்லையே...?

      :))

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்குத் தெரியும், உங்க பிரச்னை ஓரளவுக்காவது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  21. நான் இன்னும் கிண்டில் வேலைகள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.  கௌதமனும் வெங்கட்டும்தான்.  நீங்கள் வெங்கட்டைக் கேட்கலாமே...  அவர் உதவுவார்.  M S Office பணம் கொடுத்து வாங்கி இருக்கிறீர்களா?  இலலாவிட்டால் மறுபடி ரீ இன்ஸ்டால் செய்யவேண்டி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், கிண்டிலில் இணைவதெல்லாம் பிரச்னை இல்லை. வேர்டில் என்னோட பதிவுகளைக் காப்பி செய்வது தான் பிரச்னை! யாரானும் கேட்டாச் சிரிக்க மாட்டாங்களோ! வேர்ட் எல்லாம் காசு கொடுத்து வாங்கும் அளவுக்குப் பணம் இல்லை. முந்தைய வெர்ஷன். 2007 ஆம் வருடத்தியது. 2010க்குப் பின்னர் தான் காசு கொடுக்கணும்னு சொன்னாங்கனு நினைவு.

      Delete
  22. சீன ஆப்கள் - முதல் மூன்று வரிகள் எனக்கும் பொருந்தும்.  தேவையிலலாத அனாவசிய (எனக்கு) ஆப் கள் எதுவுமே நான் வைத்துக்கொள்வதில்லை.  இரவு சத்தத்தை மியூட் செய்து வைத்து விட்டால் நோட்டிபிகேஷன் சத்தம் வராது.  மொபைல் டாட்டா ஆன் ல இருந்தாலும் வைஃபைக்கு வந்து விட்டால் அதைதான் மொபைல் எடுத்துக் கொள்ளும்.  வைஃபை இல்லாத இடத்தில தானாகவே மொபைல் டாட்டா ஆன் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே ம்யூட்செய்தாலும் டிட்டடய்ங்க்க்க்க்க் என்கிறது. என்ன செய்யறதுனு புரியலை. என்னோட மொபைல் டாட்டா தானாக எல்லாம் ஆன் ஆகாது. நான் தான் தேவைப்படும்போது போட்டுப்பேன். வேண்டாதபோது அணைச்சுடுவேன். பணம் என்னமோ ஒரு வருஷத்துக்குக் கட்டி இருக்கோம்.

      Delete
  23. திடீரென ஏன் சின்ன வெங்காயம் புகழ் பாடி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.  ஒரு முன்னுரையும் இல்லாமல் எழுதி இருந்தாலும் உபயோகமான குறிப்புகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நல்லா யோசிங்க, புரியும்/ புரியலாம்!

      Delete
  24. உங்களைக் காணோமே என்ரு தோன்றியது. ஆனால், உங்கள் காலனி செக்யூரிடி ஆட்களுக்கு சமைக்க வேண்டிய நாளாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
    பே.டி.எம்., ஜூம் போன்றவை இன்னும் தடை செய்யப்படவில்லை. அதனால் அவைகளை நீக்காமல் வைத்திருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் அப்போவே முடிச்சுட்டாங்களே! இப்போ இங்கே சில, பல ஓட்டல்கள், தேநீர்க்கடைகள், பக்கத்து சூப்பர் மார்க்கெட்டில் உள்ள தேநீர், காஃபிக்கடை, டிபன் கடை என எல்லாம் திறந்திருக்காங்க. ஆகவே இப்போ செக்யூரிடிக்குக் கொடுப்பதில்லை யாரும். எனக்கு பேடிஎம்மும் தெரியாது. ஜூமும் தெரியாது. காமிராவில் தான் ஜூம் செய்வேன். ஜூம் ஆப்பெல்லாம் தரவிறக்கவே இல்லை.

      Delete