உழவர் ஓதை, மதகு ஓதை
உடைநீர் ஓதை, தண்பதம் கொள்,
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய் வாழி காவேரி!
காவிரியில் தண்ணீர் வரத்துவங்கியதும் எடுத்த படங்களை முன்னர் பார்த்தீர்கள். இது ஓரளவுக்குத் தண்ணீர் ஓடுவதால் இன்று காலை எடுத்த படங்கள். அதுவும் நேற்று மேலும் பனிரண்டாயிரம் கன அடி தண்ணீர் திறந்திருப்பதாகச் செய்தியில் பார்த்ததும் இன்று போய் எடுத்து வந்தேன். ஒரு வாரமாகக் காமிராவை எடுத்து வைச்சுட்டு பாட்டரியை சார்ஜ் பண்ணவே இல்லை. ஒரு வழியா நேற்று சார்ஜ் பண்ணிட்டு இன்று காலை போய்ப் படங்கள் எடுத்தேன். அதிகாலையில் எடுக்க நினைச்சேன். ஆனால் வெளிச்சம் வேண்டும் என்பதால் கொஞ்சம் விடிந்தும் விடியாமலும் இருக்கும் ஐந்தே முக்கால் மணிக்கு எடுத்தேன்.
இது மேற்கே இருந்து காவிரி திரும்பும் இடம். வீடுகள் மறைக்கின்றன. முன்னெல்லாம் இங்கே தோப்புக்களாக இருந்தனவாம். சமீப காலங்களில் வீடுகள் பெருகி விட்டன. எங்க குடியிருப்புக்குப் பக்கத்திலேயே ஒரு தோப்பை அழித்துவிட்டுக் கல்யாண மண்டபம் வந்து விட்டது. இப்போத் தான் இரண்டு வருடங்களாகச் செயல்படுகிறது. இன்னொரு வீட்டை இடித்துவிட்டுக் குடியிருப்புக் கட்டப் போறாங்களாம். கபிஸ்தலக்காரர்கள். ஒருவேளை மூப்பனாருக்குச் சொந்தமாக இருக்கலாமோ என நினைப்போம்.
கொஞ்சம் கிழக்கே வந்துவிட்டாள். அங்கே நீளமாகப் பாலம் போல் தெரிவது குடி தண்ணீருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் செக் டாம். இங்கே பல படங்கள் ஷூட்டிங் எடுத்திருக்கிறார்கள். அஞ்சலி என்னும் நடிகை கூட யாரோ ஒருத்தருடன் இந்த இடத்தில் பேசுவது போல் எடுத்திருக்கின்றனர். படத்தில் பேருந்து விபத்து நேரும் என நினைக்கிறேன். அந்தப் படமா இல்லைனா வேறே ஏதோ படமா நினைவில் இல்லை.
இதுவும் அதே தான். கொஞ்சம் ஜூம் செய்து எடுத்தேன். இஃகி, இஃகி,இஃகி, தொ.நு.நி. ஆயிட்டேனோ?
கிழக்கே திரும்பிய தண்ணீர். நேற்றிலிருந்து பனிரண்டாயிரம் கன அடி கூடத் தண்ணீர் வருது. அதனால் 2 நாட்களில் இன்னும் கூடவே தண்ணீர் போகும். தண்ணீர் வரலைனால் அடிச்சுப்பாங்க. எல்லாத்துக்கும் மோதி தான் காரணம், அவர் தான் கையை வைச்சுத் தடுத்து நிறுத்திட்டதாச் சொல்வாங்க. இப்போத் தண்ணீர் வந்திருப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கலை யாரும். இதிலே விவசாயிங்க போராட்டம் வேறே நடத்தப் போறாங்களாம். முன்னர் தில்லியிலே போய்ப் போராடினாங்களே அவங்களே தான். இப்போவும் தொடரப் போறோம்னு சொல்லி இருக்காங்க.
கீழிருக்கும் இரு படங்களும் கிட்டக்க செக்டாமைக் காட்டுது. எதிர்க்கரையில் இன்னமும் மிச்சம், மீதித் தோப்புக்கள் இருக்கின்றன. இங்கே விடத் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பரவாயில்லை. காவிரிக்கரையில் இன்னமும் பசுமை மீதம் இருக்கு அங்கெல்லாம்.
இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இன்னொரு கோணத்தில் எடுத்தது. அம்புடுதேன். தொ.நு.நி.ன்னா கோணம் எல்லாம் பார்த்துக் கோணலாக எடுக்க வேண்டாமோ! என்ன நான் சொல்றது?
திரும்பிடுச்சுப்பா, திரும்பிடுச்சு! கிழக்கே போயிட்டிருக்கு!
இன்னும் கொஞ்சம் தள்ள்ள்ள்ளி
நல்லாக் கரை ஓர வீடுகள் மட்டுமே தெரியும் வண்ணம் வந்திருக்கு பாருங்க!
அங்கே நம்ம பக்கத்துக் கரை இல்லை அது! வீடுகள் சில தெரிகின்றன. தென்னை மரங்கள் மறைக்குது. தூரத்தில் தெரியும் சர்ச் உ.பி.கோயில் பக்கம் இருப்பது தான். பழைய சர்ச் அது! ஜூம் பண்ணி எடுக்கலை.
இங்கே நம்ம உ.பி.யை ஜூம் பண்ணி எடுத்திருக்கேன் ஓரளவுக்கு. என்றாலும் இன்னமும் பண்ணி இருக்கலாமோ? அவர் எதிர்க்கரையில் திருச்சியில் இருக்கார்.
இது நம்ம வீட்டுப் பிரபலமான ஜன்னல். லிஃப்ட் பக்கத்தில் இருக்கும். நம்ம எ.பி. ஸ்ரீராம் எடுத்துப் போட்டிருக்கார். நானும் எடுத்துப் போட்டிருந்தேன். ராமலக்ஷ்மிக்கு நினைவிருக்கும். ஆனால் அப்போ மாதிரி இப்போக் காவிரி அவ்வளவு தெரியலை. படத்தைக் கொஞ்சம் பெரிது பண்ணித் தான் காவிரியைப் பார்க்கணும். முன்னைக்கு இப்போ வீடுகள் வந்துவிட்டன. ஆகவே முன் போல் தெரியறதில்லை.
அழகான படங்களுடன்
ReplyDeleteகாவிரியாளுக்கு நேர்முக வர்ணனை...
அருமை... அருமை...
காவிரியாள் வாழ்க - அவள்
புகழ்பாடும் நெஞ்சமும் வாழ்க!..
வாங்க துரை. காவிரியைப் பார்க்க முதல்லே வந்திருக்கீங்க. பாராட்டுக்கு நன்றி.
Deleteமூன்றாவது படத்திலிருந்துதான் தண்ணீர் தெரிகிறது. இன்னும் கரைபுரண்டோடும் தண்ணீரை எதிர்பார்த்தேன். ஆனாலும் இந்த அளவு இந்த நேரத்தில் வநததே பெரிதுதான்.
ReplyDeleteமுதல் படத்திலும் தெரிந்தாலும் அது மேற்குத் திசை அல்லவா? அங்கே இருள் பிரியவில்லை. அதே நேர் எதிர்க் கிழக்கில் இருள் பிரிந்து கொண்டிருந்தது. எனக்கு இந்தக் காட்சியைக் காண ரொம்பப் பிடிக்கும். முன்னெல்லாம் நடைப்பயிற்சிக்குப் போகையில் மேற்கே இருட்டாகவும் கிழக்கே வெளுத்தும் காணப்படும் வானத்தையும் இடங்களையும் பார்த்து ரசிப்பேன். பார்த்துக்கொண்டே இருக்கையில் சூரியன் நெருப்புப் பந்தாக ஒளிர ஆரம்பிப்பான்.
Deleteஅஞ்சலி ஜெய்யுடன் பேசும் அந்தக் காட்சி நினைவுக்கு வருகிறது. படத்தின் பெயர் எங்கேயும் எப்போதும்.
ReplyDeleteஅது ஜெய் என்னும் நடிகரா? இயல்பான நடிப்பு. அஞ்சலியிடம் நன்றாகப் பயந்திருப்பார். இன்னொரு படம் அஞ்சலியின் வீட்டுக்கே போய் (எதுக்குனு நினைவில் இல்லை) முறை மாப்பிள்ளை ஆன விவேக்கை ஏமாற்றினு வரும். அந்தப் படமும் பார்த்தேன். இதெல்லாம் அம்பேரிக்காவில் பார்த்தவை! "கோ" என்னும் படம் மாட்டுப்பெண் பார்க்கச் சொல்லிப் பார்த்தேன்.
Deleteஇந்த "ஜெய்" என்பவரோடு அவர் நண்பராக/தம்பியாக ஒரு குண்டு நடிகர் வருவார். அவருக்கும் காமெடி இயல்பாக வரும். அவருடைய நகைச்சுவைக்காட்சிகள் எல்லாம் ஆரவாரமில்லாமல் ரசிக்கும்படி இருக்கும். ஏதோ ஒரு படத்தில் வைரத்தைத் தேடிக் கொண்டு இருவரும் போவாங்க!
Deleteஅந்த ஜன்னலைப் பார்த்ததும் நானும் எடுத்திருக்கேனே என்று சொல்ல நானும்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள அடுத்த வரியைப் படிச்சு ஸைலண்ட் ஆயிட்டேன் - மனசுல!
ReplyDeleteஹாஹாஹாஹா!
Deleteமீ ஃபர்ஸ்டோ? 2? 3? 4?
ReplyDeleteஇதுக்குத்தான் அப்போ வேக வேகமா ஓடி வந்தேன்...ஆனா பாருங்க இடையில் தடசம்! ஃபோன் கால். கணவர் வருகைன்னு!!!
இப்ப கணினி ஃப்ரீனு வந்துவிட்டேன் அப்புறம் இது வேறு வேலைக்குப் போயிடும்..
படங்கள் எலலம் ரொம்ப அழகா வந்திருக்கு கீதாக்கா
கீதா
தி/கீதா, நபர் கணக்குக்கு நீங்க 3, கமென்ட் கணக்குக்கு ஐந்துனு நினைக்கிறேன். துரை ஒரு கமென்ட், ஸ்ரீராம் 3, நீங்க ஐந்தாவது.
Deleteகோபுரம் மிக அழகாக இருக்கிறது.
ReplyDeleteதெற்கு கிழக்கு என்று வளைந்து நெளிந்து ஓடும் காவிரி!! அழகுதான்.
செக் டேம் ரொம்ப அழகா வந்திருக்கு கீதாக்கா. தொ நு நி ஆகிட்டீங்கள்!!!!!!!!!!! பிடிங்க ஒரு பொக்கே. நெல்லை வந்து படம் அது சரியில்லை இது சரியில்லைனு ஏதாவது சொன்னா எங்கிட்ட சொல்லுங்க! ஹா ஹா ஹா ஹா
கீதா
ஹாஹாஹா, நெல்லை குறை சொல்லலைனா என்னமோ மாதிரி இருக்கும்! என்ன சொல்லப் போறார்னு பார்க்கலாம். கீழே வந்துட்டாரே! பாராட்டி இருக்கார்.
Deleteகடைசிப் படம் ரசித்தேன். காவிரி கொஞ்சம் தெரிகிறாள்!.
ReplyDeleteகரையோரம் வீடிருந்தால் என்ன சுகம் இல்லையா?! ஆமாம் நீங்க சொல்லிருக்காப்ல அதைப் பார்த்துக் கொண்டே காஃபி குடிக்கலாம் நொறுக்ஸ் கடிக்கலாம். நிறைய யோசிக்கலாம். மனமும் அவளைப் போல் சந்தொஷமாகத் துள்ளும்.
நிறைய வீடுகள் வந்துவிட்டன தெரிகிறது. 96, 97 ககளில் இங்கெல்லாம்வீடுகள் இல்லை. நிறைய தோப்புகள் இருந்தன என்றுதான் நினைவு
உ பி பார்த்தேன் நன்றாகவே வந்திருக்கு கீதாக்கா. மிக அருகில் இருப்பது போல் இருக்கு.
படங்கள் எல்லாமே நன்றாகவே வந்திருக்கிறது கீதாக்கா. பூஸார் வந்து பார்க்கட்டும்!!!
கீதா
முன்னே இத்தனை வீடுகள் கிடையாது. ஒரு வரிசை வீடுகள் மட்டும் எங்கள் குடியிருப்பின் பின்னால்! அதுக்கப்புறமா நாங்க வந்தபின்னரே நிறைய வீடுகள் வந்திருக்கின்றன. நானும் 96, 97 ஆண்டுகளில் பார்த்திருக்கேன். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா அப்படிப் போய் ரங்கநாதரை தரிசித்துவிட்டு வந்திருக்கோம். 86 ஆம் வருடம் நாத்தனார் பெண் கல்யாணம் நடந்தப்போ நினைச்சப்போ எல்லாம் கோயிலுக்குத் தான்! அப்போ ராஜகோபுரம் கட்ட ஆரம்பிக்கலை. அதன் பின்னர் சுறுசுறுப்பாக ஆரம்பித்து 87 ஆம் ஆண்டில் முடிந்தே விட்டது.
Deleteபூஸார் அவ்வளவு சீக்கிரம் வரமாட்டாங்க! பிசியோ பிசி!
Deleteதலைப்பும் நடந்தாய் வாழி காவேரி பாடலும் பொருத்தம் ரசித்தேன்..
ReplyDeleteகீதா
என்னமோ தெரியலை, நெல்லையும் ஸ்ரீராமும் தலைப்புச் சரியா வைக்கறதில்லை என்கிறார்கள். ஆனால் எனக்கு என்னமோ அப்படித் தோணலை. இது காவிரிப் படங்கள் என்பதால் சிலப்பதிகாரத்தின் கானல்வரிகள்/வரிப்பாடல்கள் என்றும் சொல்வார்கள். இவை பொன்னியின் செல்வனில் கூடக் குந்தவையின் அந்தப்புரத் தோழிகள் பாடுவதாய் வரும்.
Deleteஇன்று நான் அப்படிச் சொல்லவில்லையே...
Deleteஇது சொந்தத் தலைப்பு இல்லையே! சொந்தத் தலைப்புன்னா சொதப்பி இருப்பேனோ என்னமோ! :)))))
Deleteபடங்கள் அழகு. இடுகையை அரங்கனின் கோவில் படத்தை வைத்து ஆரம்பித்திருப்பது சிறப்பு
ReplyDelete@நெல்லை, "ஆத்தா! நான் பாஸாயிட்டேன்!"
Deleteநல்ல கருக்கல்ல படம் எடுத்திருக்கீங்க. கொஞ்சம் வெயில் வந்து எடுத்திருந்தா இன்னும் அழகாக ஜொலித்திருக்கும்.
ReplyDeleteகாவிரியில் நன்றாக ஓடும் தண்ணீரைப் பார்ப்பதே அழகு
ரொம்ப ஒண்ணும் கருக்கல் இல்லை. விடியும் முன்னர் சட்டுனு வந்துட்டுப் போகுமே ஓர் கருமை! அந்தக் கருக்கல்! அதான் முதல் படத்தில் தண்ணீர் சரியாத் தெரியலை.
Deleteஒரு நாள் சாயங்காலத்தில் போய் எடுக்கிறேன். மாலைச்சூரியனும் அழகாய்த் தெரிவான்.
Deleteதண்ணீர் பிரச்சனை எப்போதுமே மழைக்காலத்தில் வராது. காவிரி தண்ணீர் பற்றிப் பேச்செல்லாம் ஜனவரியில் ஆரம்பித்து ஏப்ரலில் உச்சம் பெறும். அப்போதுதானே தமிழகத்தில் வெயில்.
ReplyDeleteஆட்சியில் இருப்பவர்களைப் பொறுத்து, எதிர்கட்சிகளோ இல்லை குழுக்களோ இதைப் பற்றிப் பேசுவார்கள் அவ்ளோதான்.
ஜனவரியில் காவிரித் தண்ணீரின் தேவையே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏப்ரலில் ஆரம்பித்து ஜூலை, ஆகஸ்ட் வரைனு சொல்லி இருக்கணும். ஏனெனில் ஜூலை, ஆகஸ்டில் கர்நாடகாவில் வெள்ள நீரைத் திறந்து விடுவாங்க. இந்த வருஷம் தான் முறையாகத் தண்ணீர் பனிரண்டு வருடங்களுக்குப் பின்னர் திறந்திருக்காங்க.
Deleteநீங்க சொல்றதைப் பார்த்தால், கேஜிஜி சார், கீதா ரங்கன், பா.வெ.மேடம் போன்றோரெல்லாம் கர்னாடகாவில் வசிக்க ஆரம்பித்தபிறகும் வராத தண்ணீர், நான் வந்த சில மாதங்களிலேயே வர ஆரம்பிச்சுருச்சுங்கிறீங்களா? (ஆனா நான் இதைச் சொல்லலை. இஃகி இஃக்கி இஃக்கி)
Deleteரொம்பப் பெருமை அடிச்சுக்காதீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஉச்சிப்பிள்ளையார் கோவில் நன்றாக வந்திருக்கிறது. அரங்கன், பிள்ளையார், காவிரித் தாய் தரிசனம் இன்று உங்களுக்கு. வாழ்த்துகள்
ReplyDeleteதிருவானைக்கா கோபுரமும் தெரியும். அதுக்கு அந்த ப்ளாக் பக்கம் போகணும். அதோட கோபுரம் கொஞ்சம் தூரத்தில் இருப்பதால் சரியா வருமானு சந்தேகம். மேலும் அந்தப் பக்கம் எல்லோரும் மாஸ்க்கோடு நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நான் மாஸ்க் போட்டுக் கொண்டு போகலை. இவ்வளவு சீக்கிரம் மொட்டை மாடிக்கு யார் வரப்போறாங்கனு நினைச்சேன்.
Deleteபடங்களோடு கூடிய விளக்கம் நன்று.
ReplyDeleteதொழில் நுற்ப நிபுணர் ஆனமைக்கு வாழ்த்துகள்.
அடியாத்தி பதிவை காப்பி செய்ய முடியலையே....
ஹாஹாஹா, கில்லர்ஜி, எப்போவோ காப்பி, பேஸ்ட் செய்வதை டிசேபிள் பண்ணிட்டேனே!
Deleteகாவிரிப் பெண்ணே வாழ்க.!!
ReplyDeleteஅருமையான தலைப்போடு என்றும் மாறாக் காவிரியின் புனித நெஞ்சம்
போலப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.
உச்சிப் பிள்ளையாரை வெள்ளிக் கிழமை தரிசித்ததில்
மனம் நிறைகிறது.
செக் டாம் அழகாகத் தெரிகிறது.
ஸ்ரீரங்க கோபுரம் கண்ணை நிறைக்கிறது.
என் தம்பி ரங்கனுக்கு நேற்று பேரன் பிறந்திருக்கிறான்.
பேரனைப் பார்க்க அவன் பாட்டியும் முதலிலேயே
வந்தாச்சு.
எல்லோருடைய ஆசிகளுடன் குழந்தையும் தாயும்
நன்மை பெற்று வளங்களுடன் இருக்க வேண்டும்.
காவிரித்தாய் வந்த படங்கள் அத்தனையுமே அழகு.
வாங்க வல்லி, புதுப் பேரனுக்கும் அவன் பெற்றோருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்/ஆசிகள். கோபுரத்தை எவ்வளவு தரிசித்தாலும் மனம் திரும்பத் திரும்பக் கேட்கும். இங்கே கண்ணெதிரே போறச்சேயும், வரச்சேயும் கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டே இருப்போம்.
Deleteபடங்கள் அருமை... ஜூம் செய்து எடுத்த படங்களும் அழகு...
ReplyDeleteஆஹா இப்பொழுது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எங்கள் ஆற்றுக்குத் தண்ணி வந்து விட்டது என்கின்றனர்... இவ்ளோ தண்ணி வந்துவிட்டதே காவேரியில், கல்யாணவீடு சீரியல் தொடர்ந்து வந்திருந்தால் அதிலும் காட்டியிருப்பினம் ஹா ஹா ஹா.
ReplyDeleteஅதுசரி திரும்படியும் மொட்டைமாடி யூம்ம்ம்ம் தானா கர்ர்:)) நான் நினைச்சேன் அருகில் சென்று, காவேரியைத் தொட்டுத்தடவி எல்லாம் படம் எடுக்கப் போகிறா கீசாக்கா எண்டு:)).. ஆனாலும் படங்கள் அழகாக எடுத்திருக்கிறீங்க.
பிஞ்சு வில்லி/வல்லி/சே, பல்லி, எனக்கும் கிட்டேப் போய் எடுக்கத்தான் ஆசை. ஆனால் அங்கெல்லாம் காவல்துறை காவல் இருக்காங்களே! யாரையும் உள்ளே விடறதில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் இந்த லாக் டவுன் காரணம் தான்! ஒவ்வொரு வருஷமும் தண்ணீர் வந்தப்புறமா மேற்குப் பக்கக் கரை, இங்கே அம்மாமண்டபப் படித்துறைனு போய்ப் படங்கள் எடுப்பேன். இந்த வருஷம் முடியலை. :(
Deleteஆஆஆஆஆஆ அது உச்சிப்பிள்ளையாரோ அதெப்படி?... இந்தப்பக்கம் ஸ்ரீரங்கம் அந்தப்பக்காம் திருச்சியோ? அப்போ தண்ணி இல்லாத நேரம் காவேரியில நடந்தே கோயிலுக்குப் போகலாமெல்லோ?... இன்னும் கொஞ்சம் யூம்ம்ம்ம் பண்ணியிருந்தால் கோபு அண்ணனையும் பார்த்திருக்கலாம் ஹா ஹா ஹா..
ReplyDeleteபிஞ்சு! காவிரியில் நடந்தெல்லாம் அக்கரைக்குப் போக முடியாது. கால் சூடு பொறுக்காது. அதோடு நதியில் செருப்புப் போட்டுக்கொண்டு இறங்கவும் முடியாது. மேலும் கால்கள் மணலில் புதையும். அதான் பாலம் இருக்கே! அதிகம் போனால் ஒன்றரை கிலோ மீட்டர். காவிரிக்குத் தெற்கே திருச்சி, வடகரையில் ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கத்தின் வடக்கே கொள்ளிடம். நாங்க இன்னும் ஒன்றரை கிலோ மீட்டர் வடக்கே இருந்தோம் எனில் கொள்ளிடத்தையும் பார்க்கலாம். ஒரு முறை போகணும்னு நினைச்சு நினைச்சுப் போகவே முடியறதில்லை. வடக்கு கோபுரத்திலிருந்து அரை கிமீ தூரத்தில் கொள்ளிடம். காவிரி அரங்கனை மாலையாகச் சுற்றிக்கொண்டு போகிறாள்.
Deleteஇந்த உச்சிப் பிள்ளையார் தான் விபீஷணன் கிட்டே இருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வாங்கி எடுக்க முடியாமல் இங்கேயே வைச்சுட்டு விபீஷணன் கிட்டே இருந்து தப்பிக்க மலை உச்சியில் போய் உட்கார்ந்தார் என்பது ஐதீகம் விபீஷணன் அப்போவும் விடாமல் அவரைத் துரத்திப் பிடித்துக் குட்ட நினைக்க அந்தக் குட்டுக்கள் அவன் தலையிலேயே விழுந்தனவாம். அதுக்கப்புறமாத் தான் பிள்ளையாருக்குத் தலையில் குட்டிக் கொள்ளும் வழக்கம் வந்தது என்பது வாய்வழிச் செய்தி!
Deleteஅதிரா கிட்ட இருந்து அடுத்த மறுமொழி, இந்த விபீஷனந்தானே திரெளபதியின் துகில் உரிந்தது? அப்படித்தான் கண்ணதாசன் அங்கிள் எழுதின மகாபாரதத்தில் படித்திருக்கிறேன். ஹா ஹா
Deleteஹாஹாஹாஹா, அவங்க தான் "கம்ப பாரதம்" எழுதினவங்களாச்சே! :)))))))
Deleteகாவேரியை கண்டேன் ...
ReplyDeleteஅரங்கன் கோபுரம் கண்டேன் ...
மிக மகிழ்ச்சி மா .. மாதம் மாதம் நினைத்தவுடன் ஊருக்கு வந்து சென்றுக் கொண்டிருந்தோம் ...இப்பொழுது நான்கு மாதங்கள் ஆகிவிட்டது காவேரியை கண்டு ....ம்ம்ம்ம்
வாங்க அனு. உங்க பதிவுகளுக்குத் தொடர்ந்து வரணும்னு நினைப்பதோடு சரி. வர முடியறதில்லை. இங்கே வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteபடங்கள் நன்று. காலை நேரத்தில் காவிரி ஆறும் கரையும், நீரும்! இனிமை.
ReplyDeleteவாங்க வெங்கட், அம்மாமண்டபம் படித்துறைக்குப் போக முடியலை! :(
Deleteஅரங்கன் கோபுர தரிசனம் அதுவும் விளக்கு அலங்காரத்தில் மிக அருமை.
ReplyDeleteதரிசனம் செய்து கொண்டேன்.
உச்சி பிள்ளையார் கோபுரமும் நன்றாக இருக்கிறது.
காவிரி ஓடி வருவது அழகு. காவிரிபடங்களும் வர்ணனைகளும் அருமை.
தினம் கோபுர தரிசனம் கிடைப்பது மகிழ்ச்சி.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வாங்க கோமதி, பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி. படங்கள் காமிராவில் எடுத்ததால் ஓரளவு சுமாராக வந்திருக்கின்றன.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. தங்களால் ஸ்ரீரங்கம் கோபுர தரிசனம் கிடைக்கப் பெற்றேன். கூடவே என் இஷ்ட தெய்வமான உச்சிப் பிள்ளையாரின் தரிசனமும் அடைந்து மகிழ்ச்சியடைந்தேன்.
அழகான சிறு ஓட்டத்துடன் நடை பயிலும் அகன்ற காவிரித்தாயின் படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. நன்றாக, அதே சமயத்தில் தெளிவாகவும் புகைப்படங்களை எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஒவ்வொரு படத்திற்கும் பொறுமையாக அதன் விளக்கம் சொல்லி பகிர்ந்திருப்பது நான் நேரில் வந்து உங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து உங்கள் அருகில் நின்றவாறே ரசித்ததை போன்ற உணர்வை தந்தது. படங்களைப் போல, படங்களுக்கு நீங்கள் தந்திருக்கும் ஒவ்வொரு விளக்கங்களும் மிக அழகாக இருக்கின்றன.
அந்த பாலம் படங்களும், அதன் செய்திகளும் அருமை. நீங்கள் படங்கள் எடுத்திருக்கும் அந்த காலை வேளையிலேயே அதில் மக்கள் நடந்து செல்கிறார்களே..!
தொ.நு.நி என்றால் தொழிற் நுட்ப நிபுணரா எனக் கேட்பதற்குள் கருத்துரையில் சகோதரர் கில்லர்ஜி விளக்கம் தந்து ஊர்ஜிதபடுத்தி விட்டார். கருத்துரைகளையும் படித்து ரசித்தேன். அதற்கு நீங்கள் தந்திருக்கும் விளக்கங்களும் கச்சிதமாக இருக்கிறது
நான்தான் தாமதமானதற்கு வருந்துகிறேன். நேற்று காலையிலிருந்தே தொடர்ந்து ஏதேதோ வேலைகள். கைப்பேசியை வைத்துக் கொண்டு ஓரிடத்தில் அமரவே இயலவில்லை. இன்று காலை எழுந்ததுமே எப்படியும் உங்கள் பதிவுக்கு வந்து பார்த்துவிட வேண்டுமென்றுதான் இருந்தேன். நீங்களும் அன்போடு நினைவாக என்னை அழைத்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி சகோதரி.
இந்த கொடுமையான கால கட்டங்கள் விரைவில் நல்லபடியாக முடிந்து ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்க அந்த ரங்கநாதன் அருள வேண்டும். அருள்வான்.. அப்போது இந்த அழகான படங்களை காண உதவி செய்த உங்கள் வீட்டின் மொட்டைமாடியையும் தரிசிக்கும் பேறு கிடைக்கும் எனவும் நம்புகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, தாமதமாக வந்தாலும் விரிவான கருத்துரை தந்ததுக்கு நன்றி. மக்கள் நடைப்பயிற்சிக்குச் செல்வார்கள். நடைப்பயிற்சிக்குக் காலை ஐந்திலிருந்து ஆறுக்குள் போவது நல்லது அல்லவா? ஆமாம், நான் சின்னச் சின்ன சுருக்கெழுத்து முறையைக் கடைப்பிடிப்பேன். பழகினவர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். அ.வ.சி.=அசடு வழியச் சிரித்தேன். விவிசி=விழுந்து விழுந்து சிரித்தேன். து.தூ.வி=துஷ்டரைக் கண்டால் தூர விலகு. தொ.நு.நி= தொழில் நுட்ப நிபுணன்/நிபுணி, க.கை.நா.= கணினி கை நாட்டு இப்படி நிறைய இருக்கு. ஒவ்வொண்ணா அந்த அந்த சமயத்துக்கு வரும். உங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு நேரம் கிடைக்கையில் வந்தால் போதும். ஒண்ணும் அவசரமெல்லாம் இல்லை. விரைவில் உங்களுக்கு அரங்கன் தரிசனமும் எங்க வீட்டு மொட்டை மாடி தரிசனமும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
Deleteரசனையான படங்கள். அழகான விமர்சனம். மகிழ்ச்சி.
ReplyDelete