எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 11, 2020

குட்டிக்குஞ்சுலு ஊருக்குக் கிளம்பி விட்டது!

அஞ்சலி என்னும் நடிகையின் படத்தைத் தற்செயலாக எங்கள் ப்ளாகில் திரு கௌதமன் போட்டிருந்தார். அதைப் பார்த்த துரை "அங்காடித் தெரு" என்னும் படத்தையும் அதில் கதாநாயகியாக நடித்த அஞ்சலியையும், அவள் பாத்திரத்துக்குக் கடைசியில் கிடைத்த தண்டனையையும் பற்றி வருந்தி எழுதி இருந்தார். அது என்ன படம் என அதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு அந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அடுத்த 2,3 நாட்கள் வீட்டின் வேலைகளால் பார்க்க முடியாமல் கடைசியில் நேற்றுப் பார்த்து முடித்துவிட்டேன். தமிழில் இப்படி இயல்பாக ஒரு படம் வந்திருப்பதே தெரியாது எனில் அதில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் பாத்திரப் பொருத்தம் அம்சமாக அமைந்திருப்பதோடு எல்லோருமே இயல்பாக வாழ்ந்தும் காட்டி இருக்கிறார்கள். அதிலும் அண்ணாச்சியாக நடிக்கும் பழ.கருப்பையா, கருங்காலியாக நடிக்கும் நடிகர்(அவர் யாரோ இயக்குநர் என்று கேள்வி) கதாநாயகன் ஜோதிலிங்கமாக நடித்திருக்கும் மகேஷ் என்னும் இளைஞர், (திண்டுக்கல்லைச் சேர்ந்த விளையாட்டு வீரராம்) அருமையான நடிப்பைக் காட்டி இருக்கிறார். அஞ்சலி கேட்கவே வேண்டாம். எல்லாப் படங்களிலுமே அவர் தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து நடிப்பார். இதில் இன்னும் அதிகமாக உணர்ச்சிகளைக் கொட்டி நடித்துள்ளார். இல்லை/ கனியாகவே வாழ்ந்திருக்கிறார்.

Angadi Theru- Dinamani

ஆனால் துரை சொன்னாற்போல் முடிவு கடைசியில் இப்படி இருந்திருக்க வேண்டாம். கஷ்டப்படுகிறவர்கள் எப்போதும் கஷ்டமே படுவார்கள் என்பதை நிலை நிறுத்தும் வண்ணம் அமைக்கப்பட்ட முடிவா? என்றாலும் அதிலும் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் இருவருமே திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பிப்பதும், சந்தோஷமாக இருப்பதும் தன்னம்பிக்கையைக் கொடுக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவர்கள் இருவரும் படுக்க இடம் தேடி அலைந்து ஓர் இடம் கிடைத்துப் படுப்பதோடு படம் முடிந்திருக்கலாமோ என்னும் எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ரங்கநாதன் தெருவிலேயே எடுத்திருப்பதால் படம் பார்க்கிறோம் என்னும் எண்ணமே ஏற்படாமல் கண் முன் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் உணர்வு! பல வருடங்கள் கழித்து ரங்கநாதன் தெருவில் அலைந்த உணர்வு. மொத்தத்தில் வசந்த பாலன் படம் எனில் பார்க்கும்படியாக இருக்கும் என்னும் நம்பிக்கையைக் கெடுக்காமல் படத்தை எடுத்திருக்கார். சரியாகப் பத்தாண்டுகள் ஆகி இருக்கின்றன படம் வெளி வந்து. என்றாலும் அன்றும், இன்றும், என்றும் நடக்கும்/நடந்து கொண்டிருக்கும் ஓர் விஷயமே இது. இப்போதும் ஒன்றும் மாறிவிட்டதாகத் தெரியவில்லை.

*********************************************************************************

ஒரு வழியாக ரொம்ப ஆலோசித்துப் பல்வேறு நிலைகளையும் யோசித்துக் கொண்டு இன்று அதிகாலை கிளம்பிய தில்லி -- சிகாகோ விமானப் போக்குவரத்தில் (வந்தே பாரத்) மருமகளும், குட்டிக்குஞ்சுலுவும் சிகாகோவுக்குப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். வழக்கமான போக்குவரத்து ஆரம்பிக்கும், ஆரம்பிக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்ததில் நாட்கள் தாம் ஓடின. மாதங்கள் ஓடின. ஆகவே இப்போது இந்த அறிவிப்பு வந்ததும் உடனேயே நன்கு ஆலோசித்துக்கொண்டு பயணச்சீட்டு வாங்கி விட்டார் பையர். என்ன ஒரு பிரச்னைன்னா உள்ளூரில் இருக்கும் உறவினர்களோ, அல்லது நாங்களோ குட்டிக்குஞ்சுலுவைப் பார்க்கப் போக முடியவில்லை. உள்ளூரிலேயே இருக்கும் என் மைத்துனர் பார்க்க நினைத்துப் போகப் பல முயற்சிகள் எடுத்தும் போக முடியவில்லை. இப்போது பயணம் ஏற்பாடு ஆனதும் போகலாம் எனில் அது இன்னும் பயமாக இருந்தது. விமான சேவையிலும் பல்வேறு நிபந்தனைகள், ஆலோசனைகள். மருத்துவப் பரிசோதனை பயணிகளுக்கு உண்டு என்பதால் வீட்டுக்கு யாரையும் வரவேற்க யோசனை. கிளம்பும் நேரம் ஏதாவது ஆகிவிட்டால் இத்தனை பணம் செலவு செய்தது மட்டுமின்றி மன வருத்தம் இன்னமும் தாங்க முடியாது. ஆகவே யாரையும் வரவேற்கவில்லை. சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது. எங்களுக்கும் குழந்தையைத் தொட்டுக் கொஞ்ச முடியவில்லை, போக முடியவில்லை என வருத்தம் தான். இனி எப்போ நேரில் பார்ப்போமோ என்றும் யோசனைதான். ஆனாலும் வேறே வழி இல்லை. நல்லபடியாக அவங்க இடத்துக்குப் போனால் போதும் என்று ஆகி விட்டது.

நேற்று மத்தியானம் குஞ்சுலுவைப் பார்த்தோம். ஒளிந்து விளையாடியது. முகத்தை மூடிக்கொண்டு கை விரல்களின் இடுக்கு வழியாகவும், திரையில் முகத்தை மூடிக்கொண்டும் விளையாட்டுக் காட்டியது. பின்னர் "பை" சொன்னது. ஆனாலும் நேரிடையாகப் பார்க்கவே மாட்டேன் என்று பிடிவாதம். கோபம். இப்போ நாங்களும் வரப்போகிறோம்னு நினைச்சதோ என்னமோ! கொஞ்சம் யோசனையுடனேயே பை சொன்னது.



மேலும் இந்த வந்தே பாரத் விமானங்களில் குடிமக்கள் தான் பயணிக்க முடியும். அதாவது அம்பேரிக்கா போக அம்பேரிக்கக் குடிமக்களாய் இருக்கணும். அதே போல் அங்கிருந்து வருபவர்கள் இந்தியக் குடிமக்களாய் இருக்கணும். மற்றவர்களின் போக்குவரத்துக்கு வழக்கமான விமான சேவை தொடங்கினால் தான் போக முடியும். இதில் பணமும் அதிகம். போகவரப் பயணச் சீட்டுக்குச் செலவு செய்யும் தொகையை இதில் மொத்தமாகக் கொடுக்கும்படி ஆகிறது. ஆனாலும் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் பின்னர் எப்போவோ! இதுவே பதினாறு, பதினேழு தேதிகள் வரைதான். மொத்தம் ஆறு விமானங்களோ என்னமோ அம்பேரிக்காவின் வெவ்வேறு ஊர்களுக்குப்போகின்றன. அதன் பின்னர் வழக்கமான விமான சேவை மாதக் கடைசியில் தொடங்கலாம் என ஊகங்கள் வருகின்றன. வந்தாலும் அவற்றில் பயணச்சீட்டுக் கிடைக்கணும். தமிழக அரசு அந்த விமானங்களை அனுமதிக்கணும். எத்தனையோ பிரச்னைகள். இப்படி எல்லாம் நடக்கும்னு யார் நினைச்சுப் பார்த்தது? விரைவில் இந்தச் சங்கடமான சூழ்நிலை சரியாகப் பிரார்த்திப்பதை விட வேறு வழியே இல்லை.

63 comments:

  1. குட்டிக்குஞ்சுலு ஊருக்குக் கிளம்பிவிட்டது என்று சந்தாஷப் பதிவு போடும்படியாக காலம் மாறிவிட்டது. அவங்க பத்திரமா கிளம்பியது மகிழ்ச்சி.

    நீங்க சொன்னபடி, பார்க்க, வழியனுப்ப என்று யாருமே போகவும், அனுமதிக்கவும் பயமாயிருக்கும்படி நிலைமை.

    சென்று சேர்ந்ததும் எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழரே, ஆமாம், குழந்தை இங்கே வரவில்லை என்று நினைத்தால் மனசு வேதனை தான். ஆனாலும் சூழ்நிலை அப்படி ஆகிவிட்டதே! வழியனுப்ப மருமகளின் அப்பா மட்டும் போனார். இன்னிக்கு இரவு சிகாகோ போய்ச் சேருவாங்க. அங்கிருந்து ஹூஸ்டனுக்கு நம்ம நடு இரவுக்குப் போவாங்கனு நினைக்கிறேன். போனதும் 21 நாள் தனித்திருக்கணும் இருவரும்! குழந்தையை எப்படிச் சமாளிப்பார்களோ!

      Delete
    2. I don’t think There is Any quarantine requirement in Houston. Tx.
      Rajan

      Delete
    3. OK! Then! Our daughter in Houston told me about the quarantiine days. Anyhow since they are in Jetlag they should be in separation. It will take atleast a week to normalise.

      Delete
  2. வசந்தபாலன் நல்ல இயக்குநர். இருந்தாலும் கிளைமாக்சில் கோணங்கித்தனம் செய்து படத்தை ப்ப்படமாக்க முயற்சிப்பார்.

    அருமையான படம் கல்லூரி (தமன்னா). அதிலும் கிளைமாக்ஸ் சொதப்பல். நேரமிருந்தால் எங்கேயும் எப்போதும் படமும் பாருங்க. அருமையா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நெல்லை, படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கையில் முடிவில் சொதப்பித்தான் விட்டார். தேவையற்ற விபத்து ஏற்படுத்திக் காலை நொண்டியாக்கி!

      Delete
    2. எங்கேயோ எப்போதோ படம் இரு முறை பார்த்திருக்கேன். ஆனால் வசந்தபாலன்னு தெரியாது.

      Delete
    3. இல்லை..என் கவனக்குறைவு. எ.எ படம் சரவணன் இயக்குநர். கல்லூரி பாலாஜி சக்திவேல். நம்ம வசந்தபாலன் அவர்கள் சொதப்பின படம் அரவான்.

      Delete
    4. Oh, OK. didnot hear about Aravan.

      Delete
  3. நடிகைகளின் வாழ்வில் ஒட்டுண்ணிகள் ஜாஸ்தி. அவங்க, வேலையே செய்யாமல் நடிகையின் உழைப்பில் வாழ்ந்துவிட்டு சக்கையானதும் கம்பி நீட்டிடுவாங்க. அஞ்சலிக்கும் நிறைய ஒட்டுண்ணிகள் உண்டு. அவங்க கேரியரே அதனால் மிகவும் பாதிப்படைந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அஞ்சலியின் சித்தியோ யாரோ அவரைத் தன் பிடிக்குள் வைத்திருந்ததாய்க் கேள்விப் பட்டிருக்கேன். நல்ல நடிகை. இப்போது படமே இல்லை போல! காணவே காணோம்!இந்த "ஜெய்" என்னும் நடிகர் (ஶ்ரீராம் சொன்னார்) அஞ்சலியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படங்கள் நன்றாகவே இருந்தன. கும்பகோணம் ஓட்டலை வைத்து ஒரு படம். அதிலும் அஞ்சலி வருவார், ஜெய்யுடன் ஜோடி. தொலைக்காட்சி உபயம்!

      Delete
    2. அது கலகலப்பு மஸாலா கபே

      Delete
    3. ஓஹோ, அப்படி ஒரு படமா? அதுவும் நல்லாவே இருந்தது. முக்கியமாய் அந்த குண்டான நடிகர், ஜெய்யின் தம்பியாவோ என்னமோ வருவார், அவர் ரொம்ப இயல்பாக அநாயாசமாகக் காமெடி செய்து நடிக்கிறார். அவங்கல்லாம் இப்போக் காணவே காணோம்.

      Delete
  4. கேஜிஜி சார், தற்செயலாக அஞ்சலி படத்தை அங்கு வெளியிட்டிருந்தார் என்று நீங்கள் தெரிவித்த நம்பிக்கையை, நான் தற்செயலாகப் படித்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹஹாஹாஹாஹா!

      Delete
  5. விமர்சனம் அழகான விளக்கம்.

    குஞ்சுலு இவ்வளவு காலம் இந்தியாவில் இருந்தும் நீங்கள் பார்க்க முடியாத சூழல் அமைந்தது வேதனையான விசயம்.

    பார்க்கலாம் எல்லாம் சரியாகும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!(விமரிசனத்துக்குப் பாராட்டுகள் கொடுத்ததுக்கு) என்ன செய்ய முடியும்? சாதாரணமாக இருந்திருந்தால் இங்கேயும் வந்து ஒரு மாசமோ இரண்டு மாசமோ இருந்திருக்கும். உடனே கிளம்பி இருந்திருந்தால் கூட சாதாரண காலத்தில் நாங்களே போய்ப் பார்த்துட்டு வருவோம். இப்போவும் அப்படித் தான் நினைச்சிருந்தோம். ஈ பாஸ் கிடைக்காது என்பதோடு இந்தச் சமயம் சென்னை போகவும் பயம். குழந்தையைப் பார்க்கவும் பயம். ஊருக்குக் கிளம்பும் நேரம் நல்ல நேரமாக இருக்கணுமே!

      Delete
  6. பயணம் பத்திரமாக இருந்தால் போதும். இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அப்பாதுரை!

      Delete
  7. நல்லபடியாக உங்கள் மருமகளும், பேத்தியும்  ஊருக்கு  பயணப்  பட்டதுக் குறித்து சந்தோஷம். விரைவில் நிலைமை சீரடைந்து விமானப் போக்குவரத்து தொடங்கினால்தான் என்னைப்  போல் மகளின் பிரசவத்திற்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள்  வெளிநாடு செல்ல முடியும். பார்க்கலாம்.  

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, உடனே வந்துட்டீங்க! ஆச்சரியமான வருகை! விரைவில் விமானப் போக்குவரத்துத் துவங்கி நீங்க உங்க பெண்ணிற்குத் தேவையான உதவிகள் செய்யவும் கொஞ்ச நாட்கள் அங்கே தங்கி இருக்கவும் பிரார்த்திக்கிறோம்.

      Delete
    2. @ பானுமதி, என்னோட நண்பர் பாலாஜி வாசு மகள்,மருமகள் பிரசவங்களுக்கு அம்பேரிக்கா வருகிறவர்கள் வந்து கொண்டு தான் இருப்பதாய்ச் சொல்கிறார். உங்களை அந்தப் பதிவில் முகநூலில் டாக் செய்துள்ளேன். உங்க பெண்ணையும் விசாரித்துக்கொண்டு நல்லபடியாகக் கிளம்பிப் போய் வாருங்கள்.

      Delete
  8. அங்காடித் தெரு பற்றி நீங்கள் கேட்ட அதே நாள் ஏதோ ஒரு சேனலில் மதியம் அந்தப் படம் போட்டார்கள். நீங்கள் தூங்கும் நேரமோ என்பதால் சொல்லவில்லை. வசந்த பாலனின் வெய்யில், காவியத்தலைவன் போன்ற எல்லாமே சோக முடிவுகள்தான். 

    ReplyDelete
    Replies
    1. நான் மத்தியானமெல்லாம் தூங்க மாட்டேன். இதுக்கே ராத்திரி தூக்கம் வரப் பத்து, பத்தரை ஆகிவிடும். கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதால் கட்டாயமாக மத்தியானம் ஒன்றரை மணியில் இருந்து இரண்டரை வரை படுத்துக் கொள்வேன். இரவிலும் கணினியை அதிகம் பார்க்க வேண்டாம் என்கிறார்கள். தொலைக்காட்சியும் பார்க்க வேண்டாம் என்பது மருத்துவர் சொல்கிறார். கணினியை மாலை ஆறு, ஆறரையோடு ஓரம் கட்டி விடுவேன். என்னிக்காவது அதில் வேலை இருந்தால் உட்காருவேன்.

      Delete
    2. வெயில் பார்த்த நினைவு. ஆனால் அதுவும் வசந்தபாலன் என்பது தெரியாது.

      Delete
  9. அங்காடித் தெரு படம் மீண்டும் தொலைக்காட்சியில் பார்த்தோம்... யதார்த்தமான படம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க திரு தனபாலன். நன்றி.

      Delete
  10. அங்காடித்தெரு - சோகமான முடிவு.

    வந்தே பாரத் - குழந்தையும் மருமக்ளும் ஊருக்குச் சென்று சேர்ந்து விட்டார்கள் - நல்ல விஷயம்.

    நலமே விளையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இன்னிக்கு இரவு தான் சிகாகோ போய்ச் சேருவாங்க. போனதும் 21 நாள் தனித்திருக்கவேண்டும். பிரார்த்தனைக்கு நன்றி.

      Delete
    2. மருமகளும், குழந்தையும் நல்லபடியாப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். இனி ஹூஸ்டன் செல்ல உள்நாட்டு விமானத்திற்காகப் பையருடன் காத்திருக்கின்றனர்.

      Delete
  11. ஜுலை இறுதி வரை வெளிநாட்டு விமான சேவை கிடையாது என்று மத்திய அரசு சொல்லியுள்ளது. எங்களுக்கும் [ஐக்கிய அரபுக்குடியரசு குடியுரிமை பெற்றவர்களுக்கு ] வந்தே பாரத் விமான சேவை ஆரம்பித்திருக்கிறது. 11ந்தேதியிலிருந்து 26 வரை மட்டும். அதுவும் திருச்சியிலிருந்து துபாய்க்கு மொத்தம் மூன்றே மூன்று முறை மட்டுமே. நாங்களும் சென்று விடலாமா என்று நிறைய யோசித்தோம். ஆனால் வீடை இழுத்து கட்டும் வேலை இன்னும் முடியவில்லை. அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு போய் விடலாமா, பிறகு முடியும் போது வந்து பார்த்துக்கொள்ளலாமா என்று ஒரே குழப்பம். எப்படியும் ஆகஸ்டில் வெளிநாட்டு விமான சேவை ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டே செல்வோம் என்று முடிவு செய்து பிரயாணத்தை தள்ளிப்போட்டு விட்டோம். இப்போது போனாலும் 15 நாள் தனித்திருத்தல் என்ற நிலைமை இருக்கலாம். பின்னால் சென்றால் அந்த நிலைமையிலும் தளர்வு ஏற்படலாம் என்று கற்பனை வேறு!

    அங்காடித் தெரு ' வன்முறை அதிகம்' என்று கேள்விப்பட்டதால் நான் பார்க்க வில்லை. முடிவு சோகமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ, உங்களுக்குக் குடியுரிமை இருக்கா? இங்கே திருச்சி வழியாய்த் தான் துபாய்க்கு விமானங்கள் சென்று வருகின்றன. இதைத் தவிர்த்து சிங்கப்பூருக்கும் போகின்றன. விரைவில் விமான சேவை ஆரம்பித்தால் நல்லது தான். ஆனால் ஒரு வருஷமாவது இந்தத் தனித்திருத்தலைக் கடைப்பிடிக்கணும் எனச் சொல்கின்றனர்.

      அங்காடித் தெரு அத்தனை ஒண்ணும் வன்முறை இல்லை. சிவகுமார் மகன் கார்த்தி நடித்த ஒரு படம் பார்க்கவே முடியலை. அதே போல் ஒரு சில விஜய் படங்கள், கமலஹாசன் படங்கள்! இவற்றை விட இதில் வன்முறை என்பதே கிடையாது. திரைப்படத்தில் வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான அடி! அந்த இடத்தில் அது அதிகமாய்த் தெரியாது.

      Delete
  12. குட்டிக்குஞ்சுலு இங்கிருந்தாலும் அங்கிருந்தாலும் ஒன்றுதானே ஸ்கைப்வழியேதான் பார்க்க முடியும்

    ReplyDelete
  13. துர்கா குட்டி அப்பாவைப்பார்க்க போய்விட்டாள் என்று கேட்டு மகிழ்ச்சி.
    ஆனால் போகும் போது நீங்கள் வழி யனுப்ப போகமுடியவில்லையே என்று வருத்தம் தான்.
    என்ன செய்வது காலம் அப்படி இருக்கே! நல்லபடியாக ஊருக்கும் போய் சேர்ந்ததும் தகவல் சொல்லுங்கள்.

    ஸ்கைபில் துர்காவைப் பார்த்து விளையாடுங்கள் அவள் தனித்து இருக்கும் போது.
    படம் விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, அப்பாவைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டு அப்பா மடியில் உட்கார்ந்திருப்பதைப் பிள்ளை செல்ஃபி எடுத்து அனுப்பி இருக்கார். அவள் தனித்து எங்கே இருப்பாள்? ரொம்பக் கஷ்டம்! அதோடு ஸ்கைபை ஆன் செய்துவிட்டு இவங்க வேலையாப் போனால் குழந்தை அதை மாற்றி விடுகிறாள். விஷமம் தாங்கலைனு சென்னையிலே இருக்கும்போதே மருமகள் சொன்னாள்.

      Delete
    2. எத்தனை மாதம் குழந்தை அப்பாவை பார்க்கவில்லை! பார்த்தவுடன் மகிழ்ச்சி மனதுக்கு நிறைவு.
      குழந்தை விஷமம் செய்தால் தான் நல்லது.
      நேற்று இரவு நலமாக வீட்டுக்கு வந்து விட்ட செய்தி வந்து இருக்கும்.
      வாழ்த்துக்கள் குழந்தைக்கு.

      Delete
    3. Yes, they reached home safely and taking rest. All is well by God's Grace. _/\_ to God.

      Delete
  14. எத்தனையோ H1Bயும் H4ம் ஸ்டாம்பிங்க்குக்காக வந்துவிட்டு திரும்பிபோகமுடியாமல் இருக்கிறார்கள்.
     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நீங்கள் சொல்லவருவது/வந்தது எனக்குப் புரியவில்லை. அம்பேரிக்காவில் இருக்காங்க எனில் வந்தே பாரத் விமான சேவையைப் பயன்படுத்திக்கொண்டு திரும்பணும். ஆனால் பணம் அதிகம். அவரவர் சௌகரியம் இதெல்லாம். நான் என்ன செய்ய முடியும்?

      Delete
  15. இன்று வேலை அதிகம்...

    காலையிலேயே fb வழியாகப் பதிவு வெளியாகி இருப்பதை அறிந்தேன்...

    அப்புறமாக வருகிறேன்..

    அங்காடித் தெரு படம் பார்த்து பதிவில் எழுதியதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. மெதுவா வாங்க துரை, உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ வாங்க!

      Delete
  16. அன்பு கீதாமா குட்டிக் குஞ்சுலு
    ஊருக்குக் கிளம்பியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது
    நல்ல படியாகப் போய்ச்சேர்ந்து
    நலமாக இருக்கட்டும்.
    காலத்தின் சோதனைகள் தான் எத்தனை.!

    அங்காடித்தெரு நல்ல படம். ஏதோ சோகத்தை யதார்த்தம் என்ற பெயரில் 'திணிப்பது
    எனக்குப் பிடிப்பதில்லை.

    எங்கேயும் எப்போதும் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.
    அஞ்சலி, ஜெய் இருவருமே நல்ல நடிப்பு கைவரப்
    பெற்றவர்கள்.
    மிக நல்ல விமரிசனம்.

    ReplyDelete
    Replies
    1. உங்க நேரப்படி காலை ஆறரை மணிக்கே சிகாகோ சேர்ந்தாயிற்று. அங்கே உள்ள நடைமுறைகளை முடித்துக் கொண்டு ஹூஸ்டன் செல்ல உள்நாட்டு முனையத்தில் விமானத்திற்குக் காத்திருக்கிறார்கள். நல்லபடியாக மத்தியானம் இரண்டரை மணி அளவில் போய்ச் சேருவாங்க. எங்களுக்கு இரவு ஒரு மணி இருக்கும் அப்போது. நாளைக்காலை பேசுவார்கள்.

      Delete
  17. ஒரே கம்மெண்ட் மூணு முறை வந்திருக்கு. இந்த வருடம் என் மனைவியும் ஊருக்கு செல்ல இயலவில்லை. மைத்துனர் பெண்ணை வீடியோ காலில் பார்த்து பேசிக் கொள்கிறோம். புரட்டாசியில் மாமனாரின் சஷ்டியப்த பூர்த்தி வருது. அதற்குள் நிலை சீராகணும். அந்த விநாயகர்தான் வழி காட்டணும்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா எல்கே, இப்போத் தான் நானும் பார்த்தேன். எடுத்துடறேன். எங்களுக்கும் சென்னை வர முடியலை. அதோடு இன்னும் சில இடங்களுக்கும் போக முடியலை. புரட்டாசிக்குள் சரியாகும்னு நினைக்கிறேன்.

      Delete
  18. வணக்கம் சகோதரி

    தங்கள் மருமகளும், பேத்தியும் நலமுடன் அவர்கள் இடத்திற்கு கிளம்பிச்செல்வது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அனைவரும் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்கவென பிரார்த்தித்துக் கொள்கிறேன். இங்கு இந்தியா வந்து ஒரிரு மாதங்கள் தங்கலாம் என்றவர்களுக்குத்தான் இந்த வைரஸால், எத்தனை சோதனை..அங்கு தனித்திருக்கும் தங்கள் மகனுக்கும் எத்தனை மனக் கிலேசங்கள்.. இனி எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும். நீங்களும் விரைவில் மறுபடியும் தங்கள் பேத்தியை தொட்டுப் பேசி கொஞ்சி மகிழ்ந்திருக்கும் காலங்கள் விரைவில் வரட்டும். அவர்கள் ஊருக்குப் போய் சேர்ந்ததும் தெரியப்படுத்துங்கள். குழந்தையுடன் தனியாக அவ்வளவு தூரம் பயணிக்கும் தங்கள் மருமகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நீங்கள் பார்த்த படம் பற்றிய விமர்சனம் அருமை. நானும் இந்தப்படம் இதுவரை பார்த்ததில்லை. தங்கள் விமர்சனம் கண்டதினால் பார்க்க முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. முடிந்தப்போ இந்தப்படங்களைப் பார்க்கவும். மருமகளும், குழந்தையும் சிகாகோ போய்ச் சேர்ந்து அங்கிருந்து ஹூஸ்டன் செல்லும் விமானத்துக்குக் காத்திருக்கின்றனர். நாளைக்காலை/அவங்களுக்கு சனிக்கிழமை மாலை பேசுவார்கள். அனைவரின் பிரார்த்தனைகளாலும் குழந்தைகள் நல்லபடியாக ஊர் போய்ச் சேர்ந்தார்கள். விரைவில் அனைத்தும் நல்லபடியாக ஆகிக் குழந்தையைத் தொட்டுக் கொஞ்சும் வாய்ப்புக்கு நாங்களும் காத்திருக்கோம். என்னதான் இருந்தாலும் கையில் எடுத்துக் கொஞ்சுவது போல் வருமா?

      Delete
  19. பையர் குடும்பத்துடன் இணைந்து விட்டது மகிழ்ச்சி.   

    ஒரு வழியாய்..   
    பாவம் மருமகளும், குழந்தையும்...   ஏன், பையரும்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஸ்ரீராம், நல்லபடியாக இறை அருளால் இருப்பிடம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் நிச்சயம் இது இறை அருளன்றி வேறே இல்லை.

      Delete
  20. வரும் பாதுகாப்பு நாட்களும் சீக்கிரம் கடந்து விடவேண்டும்.  குழந்தையைக் கட்டுபப்டுத்துவது கஷ்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. தனிமைச்சிறையிலிருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள் என நம்புவோம். பிரார்த்திப்போம்.

      Delete
  21. அங்காடித்தெரு வந்தபோது பார்த்தது.  வெயில் பார்த்திருக்கிறேன்.  பெயருக்கேற்ற படம்.    கலகலப்பு, எங்கேயும் எப்போதும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெயில் பார்த்த மாதிரியும் இருக்கு. இல்லை போலவும் இருக்கு. ஆனால் அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்புப் போன்ற படங்களை என்னால் ரசிக்க முடிந்தது.

      Delete
  22. குட்டிக்குஞ்சுலு இங்கிருந்தும் சென்று பார்க்க முடியாதது வேதனைதான்...

    அதுவுமில்லாமல்
    அன்புடன் முத்தங்கள் இட்டு வழியனுப்பி வைக்கக் கூட இயலவில்லை எனில் என்ன சொல்வது!..

    இதுதான் இந்தக் காலத்தில் இறைவன் முதியவர்களுக்கு அளிக்கும் அன்புப் பரிசு போல் இருக்கிறது...

    குழந்தை அமெரிக்காவுக்கு சென்று சேர்ந்ததும் காணொளியில் கண்டு மகிழுங்கள்...

    நலம் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாங்கள் போய்ப்பார்க்க முடியவில்லை என்பதோடு உள்ளூரிலேயே உள்ள எங்கள் மைத்துனர், அவர் மனைவி இருவரும் போய்ப் பார்க்க முடியவில்லை. பயணம் நிச்சயம் ஆனதும் போனால் அதன் காரணமாக ஏதேனும் வந்துடுமோனு பயம், எங்களுக்கும்! ஏனெனில் அவங்க வீட்டிலும் எல்லோரும் வரணும்னு சொல்லிக் கொண்டிருந்தனர். யாரையும் கூப்பிடவில்லை. எல்லோருக்கும் மன வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் சூழ்நிலை அப்படி. அப்புறமாக் கிளம்பும் நேரம் ஏதேனும் நேர்ந்துவிட்டால்! அந்த பயம் தான் தள்ளியே இருக்க வைத்தது.

      Delete
    2. இப்போத் தான் குழந்தையைப் பார்த்தோம். தன் இடத்துக்கு வந்துவிட்டோம் என்பது நன்கு முகத்தில் தெரிகிறது. விளையாடினாள். எங்களை முக்கியமாய் என்னைப் பார்த்ததும் கைகளை மூடிக்கொண்டு விரல் இடுக்கு வழியாகப் பார்த்தாள், சிரித்தாள். தாத்தா விளையாட்டுக்காட்டவும் சப்தம் போட்டுச் சிரித்தாள். கடைசியில் மூடும்போது பை சொல்லி டாட்டாக் காட்டியதோடு ஃப்ளையிங் கிஸ்ஸும் கொடுத்தாள். அதை விட வேறே என்ன வேண்டும்! நோபல் பரிசு கூட இதுக்கு ஈடாகாது! :)))))

      Delete
    3. உண்மை...   உண்மை...

      Delete
  23. சங்கடமான சூழலிலிருந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் நாளை இறைவன் நமக்கு அருளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, அனைவரும் பிரார்த்திப்போம்.

      Delete
  24. அங்காடித் தெரு அழாமல் பார்ப்பது கடினம்.இதே போல அஞ்சலி நடித்த ’எங்கேயும் எப்போதும்’ ப்டமும் சோகக் காவியம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க முரளிதரன், பலரும் பேசும் இந்தப் படம் வந்திருப்பதே இப்போத் தான் தெரியும். அதிகம் வாராந்தரியெல்லாம் வாசிப்பதில்லை என்பதால் தெரியவில்லை.

      Delete
  25. வந்தே பாரத்தில் அமெரிக்கா போக அமெரிக்க குடிமக்களாக இருக்கணும்.. அப்படி என்றால் உங்கள் மருமகள், குட்டிக் குஞ்சுலு அமெரிக்கக் குடிமக்களா! அப்போ பையன் - ..ர்?

    ReplyDelete
  26. @ஏகாந்தன், பையர் குடும்பம், பெண் குடும்பம் இரண்டுமே அமெரிக்கக் குடிமக்கள் தாம். பெரும்பாலான இந்திய மக்கள் அங்கே அம்பேரிக்கக் குடியுரிமை பெற்றே தொடர்ந்து வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பச்சை அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இப்போது அம்பேரிக்கா செல்ல முடியும். பச்சை அட்டைக்காரங்க 2 வருஷத்துக்கு ஒரு முறை அம்பேரிக்கா போய்க் குறைந்தது ஆறு மாதமாவது தங்கிட்டுத் திரும்பலாம். அங்கேயே நிரந்தரமாக இருக்க விரும்பினால் இருக்கவும் இருக்கலாம். ஆனால் இரண்டு வருஷத்துக்கும் மேல் அம்பேரிக்கா போகலைனா விசா தானாகவே ரத்தாகிவிடும் என்கிறார்கள்.

    ReplyDelete