பொதுவாவே நம்மவருக்கு ஒரு (standard) திட்டமிட்ட சமையல்னா பிடிக்கிறதில்லை. மாத்திட்டே இருப்பார். நானுமே தினம் ஒன்று எனப் பண்ணும் ரகம் தான். இப்போப் புதுசா ஒரு "பழக்கம்" வந்திருக்கு நம்ம ரங்க்ஸுக்கு. அதான் சமையல் யூ ட்யூப் எல்லாம் பார்க்கிறது. அதைப் பார்த்துத் தவலை அடை செய்யச் சொன்னார் ஒரு முறை. அது செய்து படம் எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன். இன்னும் போடலை. அப்புறமா ஒரு நாள் சட்னி வகைகள் பார்த்துட்டு இருந்தப்போ, "மதுரைத் தண்ணிச் சட்னி" பண்ணச் சொன்னார். அன்னிக்கு ராத்திரிக்கு இட்லி பண்ணறதா இருந்தேன். மதுரைத் தண்ணிச் சட்னி ஒண்ணும் இல்லை. கிட்டத்தட்டக் கடப்பா மாதிரி. ஆனால் இதில் கடலைமாவு கரைச்சு விடாமல் உ.கி வேகவைத்துச் சேர்க்காமல் பண்ணணும். அதை அப்புறமாப் பார்ப்போம். இப்போ இரண்டு நாட்களாக ஒரு மாமியின் யூ ட்யூபைப் பார்த்துட்டு அதிலே பண்ணி இருக்கும் குழம்பைப் பண்ணச் சொன்னார். குழம்பின் பெயர் "முத்துக்குழம்பு!" அதற்குத்தொட்டுக்கச் "சவரன் துவையல்!" இஃகி,இஃகி,இஃகி.
சின்ன வயசில் மதுரை மேலாவணி மூலவீதியில் இருக்கும்போது அங்கே கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு மாமி சீதாமாமினு இருந்தாங்க. அவங்க சொந்தக்காரங்க ஒரு மாமி சேமா மாமினு அடிக்கடி இங்கே வருவாங்க. ஒரு முறை அவங்க சமைச்சப்போ எங்க அப்பாவோ, அம்மாவோ என்ன சமையல்னு கேட்கவும் அவங்க "முத்துக்குழம்பு, சவரன் துவையல்" என்றார்கள். கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது. ஆனால் பார்த்ததும் தான் புரிந்தது. மணத்தக்காளிக் குழம்பும், பருப்புத் துவையலும் என. அன்னிக்கப்புறமா அதை மறந்தே விட்டேன். சுத்தமா அந்த நினைப்பெல்லாம் இல்லவே இல்லை. இப்போ இந்த மாமியின் சமையல் குறிப்பைப் பார்த்ததும் அது நினைவில் வந்தது. இரண்டு நாட்களாக எங்கேயோ கேட்டிருக்கோமே என்றே தோன்றிக் கொண்டிருந்தது. ஆனால் சவரன் துவையல்னு நம்மவர் சொன்னதுமே துவரம்பருப்புத் துவையல்னு உடனே டக்குனு சொல்லிட்டேன். இன்னிக்குத் தான் பண்ணும்போது நினைவு வந்தது இது சேமா மாமி பல வருடங்கள் முன்னர் பண்ணியது என்பது. இனி செய்முறையைப் பார்ப்போமா? ரொம்பவே எளிது. கிட்டத்தட்ட மிளகு குழம்பு மாதிரித்தான். ஆனால் அது இல்லை.
முத்துக்குழம்பு செய்யத் தேவையான பொருட்கள். ஒரு நெல்லிக்காய் அளவுக்குப் புளி ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
உப்பு தேவையான அளவுக்கு. மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, மணத்தக்காளி வற்றல் ஒரு குழிக்கரண்டி. வறுக்க நல்லெண்ணெய் அல்லது நெய் தாராளமாக.
வறுத்து அரைக்க: மிளகாய் வற்றல் 4 அல்லது 5 காரத்துக்கு ஏற்றபடி, ஒரு தேக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஒரு துண்டு, கருகப்பிலை ஒரு கைப்பிடி. இவை எல்லாவற்றையும் நல்லெண்ணெயில் வறுத்து ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கல்சட்டி வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு/நெய் ஊற்றிக் கொண்டு மணத்தக்காளி வற்றலைப் போட்டு நன்கு வறுக்கவும். அது நன்கு வறுபட்டதும் அதிலேயே அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். அரைத்த விழுது நன்கு வறுபட்டதும் புளி ஜலத்தை ஊற்றி விட்டு நன்கு கிளறவும் கட்டிகள் இருக்கக் கூடாது. புளிஜலம் அரைத்த விழுது, மணத்தக்காளி வற்றல் எல்லாம் சேர்ந்து கொதிக்கையில் மஞ்சள் பொடி, உப்புச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்துச் சேர்ந்து வரும்போது பக்கத்தில் ஒரு இரும்புக்கரண்டி அல்லது வாணலியைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டுப் பெருங்காய்த் தூள் சேர்த்து ஒரே ஒரு மிளகாய் வற்றல் போட்டுக் கருகப்பிலையும் போட்டுப் பொரிந்ததும் தாளிதத்தைக் குழம்பில் கொட்டவும். அடுப்பை அணைத்து விடலாம். மணத்தக்காளி வற்றல் கறுப்பு முத்தைப் போல் தெரியும் என்பதால் முத்துக்குழம்பு.
சவரன் துவையல். ஒரு குழிக்கரண்டி துவரம்பருப்பை வெறும் வாணலி அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு நன்கு சிவக்க வறுக்கவும். சிவப்பாக வறுத்தால் தான் துவையல் ருசியே நன்றாக இருக்கும். இதைக் குழம்புக்கு வறுக்கும்போதே வறுத்து வைக்கலாம். ஏனெனில் துவரம்பருப்பு ஊற வேண்டும். வறுத்த துவரம்பருப்பில் வெந்நீர் விட்டு ஊற வைக்கவும். அதோடு ஒரு சின்னச் சுண்டைக்காய் அளவுக்குப் புளியையும் ஊற வைக்கவும். சமையல் முடியும் தருவாயில் 2 மிளகாய் வற்றல்,பெருங்காயம் வறுத்துக் கொண்டு ஊற வைத்த துவரம்பருப்போடு சேர்த்து உப்பும் போட்டுக் கொண்டு அரைக்கவும். ரொம்பவும் நைசாகவும் இல்லாமல் ரொம்பவும் கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்க வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் மாற்றி நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கவும். சாப்பிடும்போது தாளிதத்தைக் கலந்தால் தான் நன்றாக இருக்கும். இந்தக் குழம்பு சாதத்துக்குச் சவரன் துவையல் நன்றாக இருந்தது. மோர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். வறுத்த துவரம்பருப்பு அந்தக் காலச் சவரன்கள் போல (காசுமாலையில் சின்னச் சின்னதாகச் சேர்ப்பார்கள்) இருப்பதால் சவரன் துவையல்.
ஹிஹிஹி, என்ன படமா? காலை வேளையில் இன்னிக்கு வேலை செய்யும் பெண்ணும் வராமல் இருந்ததில் அடுத்தடுத்து வேலை செய்ததில் படம் எல்லாம் எடுக்கவே இல்லை.படம் எடுக்கும் மனோநிலை இல்லை. :)))))) இன்னொரு நாள் படம் எடுத்துப் போடறேன்.

இளம் வயதில் நானும் இந்த முத்துக்குழம்பு, சவரன் துவையல் குறிப்புகளைப்படித்திருக்கிறேன். மங்கையர் மலர் புத்தகத்தில் என்று ஞாபகம். இருந்தாலும் மீண்டும் இந்த செய்முறைகள் உங்கள் மூலம் கிடைத்தது மகிழ்ச்சியே!
ReplyDeleteவாங்க மனோ, தலைப்பு உங்களை இழுத்து வந்துவிட்டது போல. மங்கையர் மலரில் வந்திருந்ததா? எனக்கு நினைவில் இல்லை.
Deleteசவரன் விலை நாற்பதாயிரத்தை தொட்டு விட்டது.
ReplyDeleteசவரன் துவையல் செய்து ஆசையை தீர்க்க வேண்டியதுதான்.
ஹாஹாஹாஹா, செய்ங்க கில்லர்ஜி!
Delete//சமையல் யூ டியூப் பார்த்துவிட்டுச் செய்யச் சொல்வது// - ஹா ஹா ஹா. நானும் சில நாட்களுக்கு முன், வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வெஜ் பிரியாணியைப் பார்த்துவிட்டு, மனைவியை அதனைப் பார்த்துச் செய்யச் சொன்னேன். அவள், வெஜிடபிள்லாம் போடறதைவிட பனீர் போட்டு அதே மாதிரி செய்யறேன் என்று சொல்லிச் செய்தாள்.
ReplyDeleteஇப்பவுமே ரெகுலரா செய்முறைகள் பார்த்து, நான் செய்வதற்கும் குறித்துக்கொள்வேன். சமீபத்தில் அப்படி குறித்துவைத்துள்ளது கூட்டு, கூட்டுப்பொடி. கிச்சன் என் ஆளுகையில் வரும்போது செய்துவிடுவேன். ஹா ஹா.
நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன். அநேகமாய் மாட்டேன்னு தான் சொல்லுவேன். ஆனால் இப்போல்லாம் கொஞ்சம் பிடிவாதம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சரினு செய்துடலாம், இது என்ன நம்ம செய்முறை மாதிரித்தானேனு செய்துட்டேன்.
Deleteகொஞ்ச நாட்களுக்கு முன் எங்கள் வீட்டில் இளையவன் சொல்லி, பாஸ் ரொம்ப சிம்பிளாய் ஒரு பனீர் பிரியாணி செய்திருந்தார். மிகச் சிறப்பாய் இருந்தது.
Deleteபனீர் பிரியாணி செய்முறையைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ஸ்ரீராம். ஆனால் நம்மவருக்குப் பனீர், சீஸ் எல்லாம் பிடிக்காது.
Deleteபிடிக்காது என்றால் செய்ய மாட்டீர்களே... பின்ன சொல்லி என்ன செய்ய!!!!!
Deleteநாங்கள் பாசுமதி அரிசியில் எல்லாம் செய்வதில்லை. சாதாரண சாப்பாட்டுப் பச்சை அரிசிதான்.
அரிசியை கெட்டித் தயிரில் மஞ்சள்பொடி, காரப்பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, கரம் மசாலா இவற்றைப்போட்டு குழைத்துக் கொள்ள வேண்டும்.
200 0r 300 கிராம் பனீரை அவரவர்கள் சௌகர்யம்/ விருப்பத்திற்கேற்ற அளவில் கட் செய்து
அதிலேயே போட்டுக்கொள்ளவே வேண்டும். ஒரு குடைமிளகாய், ஒரு பெரிய வெங்காயம், இரண்டும் பெரியச சைஸில் வெட்டிப்போட்டு இதனுடன் கலந்து சுமார் ஒருமணிநேரம் ஊறவைத்துவிட வேண்டும்.
வாணலியில் எண்ணெயை விட்டு ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி பொன்னிறமாகும்வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளல்வேண்டும். அதே வாணலியில் மறுபடி எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, கிராம்பு 2, ஏலக்காய் 2, பட்டை 1 எல்லாம் போட்டு வதக்கி விட்டு இந்தத்தயிரில் ஊறவைத்ததை அதில் கலந்து (3 ஆழாக்கு அரிசி- இந்த அரிசியை முதலிலேயே அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்திருக்க வேண்டும்) லேசாகக் கிளறிவிட்டு விட்டு, ஊர் வைத்த அரிசியை அதில் கலக்க வேண்டும்,. வெஜ் புலாவுக்கு விடும் தண்ணீரை விட சற்று கம்மியாய் தண்ணீர் விடவேண்டும். உப்புப்போட்டு (முதலிலேயே தயிரில் உப்புப் போட்டிருந்தால் கவனமாகப் போடவேண்டும்) விடவேண்டும், புதினா இலையைப் போடவேண்டும், பொன்னிறமாக வறுத்த வெங்காயத்தையும் அதில் கலந்து மூடி, ஒன்றோ இரண்டோ விசிலில் இறக்கிக் கிளறி பரிமாறலாம்! இது சுமார் 3 பேர்களுக்கான அளவு!
Thank You Sriram. Will cook for guests and for our children.
Deleteஸ்ரீராம் இந்த ப்ரியாணி இப்படி மாரினேட் செஞ்சு செய்திருந்தாலும் நீங்க சொல்லிருப்பது கொஞ்சம் மாறுபட்டுள்ளது.
Deleteகுறித்துக் கொண்டுவிட்டேன். செஞ்சு பார்த்துவிடுகிறேன். செஞ்சு பார்த்துட்டு நீங்கதான் திங்கவுக்கு அனுப்பலை நான் கோகுல் சொன்ன குறிப்பு பாஸ் செஞ்சு ஸ்ரீராம் வழி கற்றுக் கொண்ட குறிப்புனு , ஃபோட்டோ எடுக்க முடிஞ்சா .....திங்கவுக்கு அனுப்பிடறேன்...ஹா ஹா ஹா ஹா
கீதா
ஸ்ரீராம் இது கிட்டத்தட்ட மொகலாய் ஸ்டைல் பனீர் ப்ரியாணி. நான் பாசுமதியில்தான் பெரும்பாலும் செய்யறது. செஞ்சு உங்களுக்கு அனுப்பறேன்...பார்சல் இல்ல பதிவு ஹிஹிஹிஹிஹி
Deleteகீதா
சேமா மாமி - இப்படி பெயர் இருக்காதே... சீமா மாமி அல்லது ஹேமா மாமி. இதில் சீமா என்பது சீனிவாசன் என்ற ஹஸ்பண்ட் பெயரை வைத்துச் சொல்வார்கள். ஹேமா என்பது அவர் பெயர். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ReplyDeleteசேமா மாமி தான். முழுப்பெயர் மறந்து போச்சு. அவங்க பெண் பெயர் ரங்கமணி, கன்னத்தில் குழி விழும். அது மட்டும் நன்றாக நினைவில் இருக்கு. கல்லாட்டம் ஆடும்போது கல்லை விரல் இடுக்கிற்குள் மறைச்சு வைச்சுக்கொண்டு என்னை ஏமாத்துவாள். அந்தக்காலத்திலே ஹேமானு எல்லாம்பெயர் இல்லை. நான் சொல்வது அறுபதுகளில்.
Deleteஎன் மாமியார் பெயர் ரங்கமணிதான். ஆனால் கன்னத்தில் குழி எல்லாம் விழாது! பெரிய பள்ளமே இருக்கிறது. பல் இல்லை... அஹ்...ஹ்....
Deleteஹாஹாஹாஹா, ஸ்ரீராம்! :)))))) திருநெல்வேலிப்பக்கம் ஆண்/பெண் இருவருக்குமே ரங்கமணி என்னும் பெயர் இருக்கும். கல்லுக்குள் ஈரம் (ர.சு.நல்லபெருமாள்) கதாநாயகன் பெயர் ரங்கமணி தான்.
Deleteசவரன் துவையல் - வித்தியாசமா இருக்கும்னு தோணுது (புளி சேர்ப்பதால்). செய்து பார்க்கணும்.
ReplyDeleteஇன்னொரு நாள் படங்கள் எடுத்து, இந்தச் சுட்டியைக் கொடுப்பீங்க போலிருக்கு. பார்க்கலாம். அதற்கு முன்னால் நான் செய்துவிடுகிறேனா என்று
பருப்புத்துவையல் தான். நான் எல்லாத் துவையல், சட்னி எல்லாத்துக்கும் புளி வைச்சுடுவேன். கொஞ்சம் புளியை எடுத்து ஊறப் போட்டுடுவேன். சட்னி அரைக்கையில் சேர்த்து அரைப்பேன். இதுக்குத் துவரம்பருப்பௌ ஊற வைக்கும்போதே துளி புளியையும் சேர்த்து ஊற வைச்சுட்டேன். தேங்காய்த் துவையல், பறங்கி, பீர்க்கை துவையல், கத்திரிக்காய்ச் சுட்டுத் துவையல், வதக்கித் துவையல் எல்லாவற்றிலும் புளி சேர்ப்பேன்.
Deleteபண்ணிட்டு சொல்றேன்
ReplyDeleteசொல்லுங்க, சொல்லுங்க எல்கே.
Deleteநாலு மணி நேரத்துக்கு முன் இந்தப் பதிவு..
ReplyDeleteஇங்கே மதியம் சாப்பாட்டு நேரம்...
சஷ்டி அல்லவா இன்று .. பொது சமையல் கூட உணவுக்கு தடா...
காலையிலேயே சோறாக்கி முடித்து
வாழைக்காயுடன் மணத்தக்காளி சுண்டை வற்றல் புளிக் குழம்பு வைத்தேன்...
அக்காவின் பதிவில் சுவையான குறிப்புகள்...
ஆகா!..
நானும் மணத்தக்காளியுடன் சுண்டைக்காய் வற்றலும் சேர்த்துத் தான் போடுவேன். பாராட்டுக்கு நன்றி துரை. விரதங்களைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதற்கும் பாராட்டுகள்.
Deleteபெயர்களே கவர்கின்றன...
ReplyDeleteயூ ட்யூப் சமையல்கள் சிலது நன்றாகவே இருக்கும்...
வாங்க திரு தனபாலன். நான் அதிகம் பார்ப்பது இல்லை. அவர் தான் பார்ப்பார். சிலது சொல்லுவார். பண்ண முடிஞ்சதைப் பண்ணுவேன்.
Deleteமணத்தக்காளி வத்தக்குழம்பு செய்வதுண்டு. வறுத்து அரைக்கும் வேலை எல்லாம் செய்ததில்லை. கொஞ்சம் மாறுதலாய் இருக்கிறது. துவரம்பருப்பு துவையலும் அப்படியே!
ReplyDeleteஎங்க அம்மா வீட்டில்/மாமியார் வீட்டில் அரைப்புளிக்குழம்புனு ஒண்ணு பண்ணுவாங்க ஸ்ரீராம். அதுக்குப் பொடி எல்லாம் கிடையாது. தாளிதத்தில் எல்லா சாமான்களும் போடும்போது தேங்காய்ப் பல்லுப் பல்லாகக்கீறிப் போட்டுத் தாளித்துக் கொண்டு கருகப்பிலை போட்டுப் புளி ஜலத்தை விடுவார்கள். முன்னாடி ஒரு வாணலியில் மி.வத்தல், துவரம்பருப்பு, வெந்தயம் வறுத்துப் பொடி செய்து வைத்திருப்பார்கள். அந்தப் பொடியைக் கடைசியில் போட்டு இறக்குவார்கள். இப்போதெல்லாம் காடரிங்காரங்க குழம்புப் பொடியையும் போட்டு இந்தப் பொடியையும் போட்டு அரைச்சு விட்ட வத்தக்குழம்பு என்னும் பெயரில் பண்ணுகின்றனர்.
Deleteயெஸ் யெஸ் அதே அதே கீதாக்கா அரைச்சுவிட்ட வ கு ந்னு...
Deleteஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறைல செய்யறாங்க..
கீதா
மாமா வித்தியாசமாய் ஏதாவது செய்து சுவைக்க எண்ணுகிறார் போல. இந்தப் பெயர் எல்லாமே வித்தியாசமாய்தான் இருக்கிறது.
ReplyDeleteகுருகுலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு சாப்பாட்டில் ருசி உண்டாகக்கூடாது என்பதற்காக சாதத்திற்கு வேப்பெண்ணெய்தான் விடுவார்களாம். எப்போ மாணவன், என்ன நெய் விட்டால் நல்லா இருக்குமே என்று கேட்டால், உனக்கு மாணவப் பருவம் முடிந்துவிட்டது, இனி திருமணமாகி குடும்பம் நடத்து என்று அனுப்பிவிடுவார்களாம்.
Deleteமாமா..பாவம்... வித விதமா யூடியூபில் பார்த்து செய்யச் சொல்லும் உணவை, தன் முறையிலேயே கீசா மேடம் செய்துபோட்டால்..வெறுத்துப்போகாதோ? ஹா ஹா
ஸ்ரீராம், அந்தக் காலத் திருநெல்வேலி மக்களுக்குத் தெரிந்திருக்கும். மனோ சாமிநாதன் கூடச் சொல்றாங்க பாருங்க, மங்கையர் மலரில் வந்ததாக! வித்தியாசமான சுவைக்குனு இல்லை. தினம் ஒரே மாதிரிப் பண்ணி அலுத்துப் போகாமல் இருப்பதற்கு.
Deleteஎன் மாமியார் திருநெல்வேலிதான். பத்தமடை. ஆனால் அவரைக் கேட்டால் தெரியவில்லை என்கிறார்!
Deleteஸ்ரீராம் இதெல்லாம் எங்க வீட்டுல செய்வதுதான். கேரளம் ப்ளஸ் திருனெல்வேலி சமையல் குறிப்புகள்தான்.
Deleteகீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteசமையல் செய்முறைகள் பிரமாதம். மணத்தக்காளி வற்றல் குழம்பு இந்த மாதிரி அரைத்து செய்தால்தான் ருசியாக இருக்கும். வெறும் வெந்தய குழம்பும் கூட இப்படித்தான் வறுத்தரைத்துச் செய்வேன். இந்த பருப்பில்லாத வறுத்தரைத்த குழம்புகளுக்கு ப. துவையல்தான் பொருந்திய ஜோடிப் பொருத்தம். துவரம் பருப்புத்துவையலும் வித்தியாசமாக புளி சேர்த்து நன்றாக உள்ளது. நான் புளிக்கு பதிலாக தேங்காய் பூ சேர்த்து அரைப்பேன்.
குறிப்பாக இதன் பெயர்கள் அம்சமாக உள்ளது. தேடித்தேடி வித்தியாசமாக சமைத்துப் பார்க்கும் போது பழைய நினைவுகளுடன் அன்றைய சமையலும் ருசியாகத்தான் அமையும் இல்லையா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்களுக்கும் தெரியுமா? புளி துவையலுக்கு நீங்க சேர்க்க மாட்டீங்களா? பெரும்பாலோர் புளி சேர்த்து அரைப்பதை ஆச்சரியமாகச் சொல்கின்றனர். நாங்க இட்லிக்குச் செய்யும் தேங்காய்ச் சட்னிக்குக் கூடப் புளி கொஞ்சம் வைப்போம். முன்னாடியே ஒரு சுண்டைக்காய் புளி எடுத்து ஊற வைத்துவிடுவேன்.
Deleteமுன்பு அக்கம் பக்கத்தில் பேசும் போது ஒருவருக்கு ஒருவர் என்ன சமையல் என்று கேட்டுக் கொள்வார்கள், அப்புறம் செய்முறையை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வார்கள். உணவுகளும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கி கொள்வார்கள்.
ReplyDeleteஇப்போது அடுக்குமாடி குடியிருப்பில் சேம நலன் விசாரிப்போ, என்ன சமையல் எப்படி செய்தீர்கள் என்று கேட்க யாரும் இல்லை. அதனால் அவர் அவர்கள் சமைத்தவைகளை யூட்யூப்பில் போட்டு லைக் வாங்கி மகிழ்ந்து கொள்கிறார்கள்.
நமக்கும் போர் அடித்தால் மாற்றி செய்யலாம் என்று பார்க்கிறோம். உங்கள் கணவர் ஆர்வமாய் கேட்பது மகிழ்ச்சி.
நீங்களும் செய்து கொடுத்து விட்டீர்கள். எங்கள் வீட்டில் பருப்பு துவையல் உண்டு. சவரன் துவையல் என்று கேள்வி பட்டது இல்லை.
வறுத்து அரைத்த குழம்பு என் மாமியார் வீட்டில் அதுவும் அம்மியில் அரைத்தால் தான் தனி ருசி என்று சொல்வார்கள் அத்தை.
வாங்க கோமதி, அம்பத்தூரில் வெகு காலம் அப்படித்தான் அக்கம்பக்கம் இருந்தது. ஒவ்வொருவராக வீட்டை விற்று விடவே நாங்க தனியாக மாட்டிக் கொண்டோம். யாருமே இல்லாமல் போனது. நீங்க சொல்றாப்போல் அம்மியில் அரைத்தால் ருசி தான். இங்கே அம்மியும் இருக்கு. ஆனால் அரைக்கத் தான் முடியலை.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteநகைக் கடையே வந்துவிட்டதே என்று பார்த்தேன்.
என் நாத்தனார் ஹேமா தான் 86 வயதாகிறது:)1934 இல் வைத்த பெயர்.
கும்பகோணம் ஹேமாம்புஜத் தாயாரின் பெயர்.
இந்த மணத்தக்காளி மிளகுக் குழம்புக்குப்
பருப்புத் துகையல் தான் பொருத்தம். நினைத்தாலே சுவைக்கும்.
அம்மா புளி சேர்த்துதான் செய்வார்.
புக்ககத்தில் தான் பருப்புத் துகையலுக்குத் தேங்காய்.
அருமையான பெயருடன் சமையல்.
வைரக் கறியமுதும், ரத்தின சலாடும் வரப் போகின்றன:)
வாங்க வல்லி, எனக்கும் அம்பிகையின் பெயர் ஹரிணி, ஹேமமாலினி என்றெல்லாம் இருப்பது தெரிந்தது தான். நெல்லை பிடிவாதமாக அந்த மாமி பெயர் சேமா இல்லைனு சொன்னதால் அந்த பதிலைக் கொடுத்து அவர் வாயை அடைத்தேன். இஃகி,இஃகி,இஃகி/ மற்றபடி எங்க வீட்டிலேயும் அந்தக் கால ஹேமாக்கள் உண்டு அப்பாவின் உறவிலே.
Deleteநீங்களாவது பருப்புத் துவையலுக்குப் புளி சேர்ப்பது உண்டு என்கிறீர்களே! மத்தவங்க எல்லாம் ஆச்சரியமாப் பார்க்கிறாங்க. நான் தேங்காய் சேர்த்துப் பருப்புத் துவையல் எனில் சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடப் பண்ணுவேன். இது தொட்டுக்க என்பதால் வெறும் பருப்பு மட்டும்.
முத்துக்குழம்பு, சவரன் துவையல் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். அருமை.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா. நன்றி.
Deleteஅக்கா இது நம்ம ஊர்ப்பக்க வகையறாக்களாச்சே!!! என் கொச்சிப்பாட்டி பருப்புத் துவையலை சவரன் துவையல்னு சொல்லுவாங்க கோல்டன் கலர்னு இருப்பதால...அதே போல முத்துக் குழம்பு மணத்தக்காளிக் குழம்பு தானே? இருங்க பார்த்துவிட்டு வரேன்..
ReplyDeleteகீதா
வாங்க தி/கீதா, துவரம்பருப்பு அந்தக் காலச் சவரன் போல் இருப்பதால் இதற்குச் சவரன் துவையல் எனக் கேள்விப் பட்டிருக்கேன்.
Deleteஇதேதான்......இதில் சுண்டைக்காயும் போட்டுச் செய்வாங்க எங்க வீட்டுல. மி வ உ ப, மிளகு போட்டு வறுத்து அரைத்து விட்டு..
ReplyDeleteதிருவனந்தபுரத்தில் இருக்கும் என் தங்கை கொஞ்ச நாட்களுக்கு முன், ஒரு மாமி இங்கேயோ அல்லது திருனெல்வேலிலயோ இருக்காங்க போல அவங்க நம்ம வீட்டுல செய்யறாப்ல வீடியோ போடுறாங்க. ஏண்டி நீயும் நம்ம பக்கத்து சமையல் எல்லாம் வீடியோ போடேன்" என்று சொல்லி சேவை வீடியோ அனுப்பியிருந்தாள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சேவை எல்லாம் நம்ம வீட்டுல ரெகுலர். இன்னொரு மாமி அவங்க கல்லிடைக்குறிச்சி. அவங்க் என் தூரத்து உறவு அத்தை ஒருவரின் நல்ல நட்பாம். அவங்களும் வீடியோ போடுறாங்க.
அக்கா இதே துவையல்தான். செய்வாங்க நம்ம வீட்டுலயும் இந்தக் குழம்புக்கு. இதே பருப்புத் துவையலை இன்னொரு முறையிலும் செய்வாங்க. அதுக்குப் புளி வைக்காம து ப வை நன்றாக வறுத்துக் கொண்டு ஒரே ஒரு மிளகாய், நிறைய தேங்காய், கொஞ்சம் உப்பு வைத்து கெட்டியாக அரைத்தும் செய்வாங்க. நம் வீட்டில் செய்வந்துண்டு.
அதுவும் ஒவ்வொரு நாளும் வேறு வேறு என்றுதான். உங்களைப் போல. அப்படிக் கற்றதுதான் பல சமையல் குறிப்புகள்.
இந்தத் தொகையல் குழம்பு நல்ல காம்பினேஷன். எங்கள் பிறந்த வீட்டில் மழைககாலம் என்றால் இது கண்டிப்பாக இருக்கும் கூடவே மிளகு ரசமும். அதுவும் திருவனந்தபுரத்தில் இருந்த என் மாமா வீக் எண்ட் வந்துவிட்டால் ராத்திரி இதைச் செய்ய சொல்லிவிடுவார். அவர் வீட்டில் தான் நாங்கள் கிராமத்தில் ஒன்றாக எல்லோரும் இருந்தோம்.
இப்போது நிறைய வீடியோக்கள் வந்துவிட்டன.
கீதா
தி/கீதா, என்னிடம் மணத்தக்காளி இல்லை என்பதால் நானும் சுண்டைக்காய் தான் போட்டேன். அதனாலேயே படம் எடுக்கவில்லை. இதுக்கு மணத்தக்காளி தான் போடுவார்கள். வீடியோ போடலாம் போலனு எங்க பெண் என்னிடம் சொல்லுவாள். எனக்கு இதில் ஆர்வம் இல்லை. நானும் இப்போத் தான் சனிக்கிழமை அன்னிக்குப் பச்சரிசியை அரைத்துக் கிளறி உருண்டை பிடித்து வேக வைத்துச் சேவை பண்ணினேன். சாதாரணமாகப் புழுங்கலரிசிச் சேவையே செய்வேன். அன்னிக்கு ஓர் மாறுதலாக!
Deleteகீதாக்கா பெயர் தான் வித்தியாசமா இருக்குமே தவிர எல்லாம் நீங்கள் ஏற்கனவே செய்திருப்பதாகத்தான் இருக்கும். ஒரு சிலது மாறுபடலாம்.
ReplyDeleteஅப்புறம் இந்த தண்ணி சட்னி வெங்கடேஷ் பட்டும் போட்டார் என்று நினைக்கிறேன்.
என் சித்தி (கொச்சிப்பாட்டியின் பெண். என் அம்மாவுக்குச் சித்தி பெண்) இங்கு கேட்டங்கிங்க் செய்து கொண்டிருந்தார். மிக நன்றாகச் சமைப்பார். அவர் எனக்குக் கல்யாணம் ஆன புதிதில் ஒரிஜினல் கர்நாடகா பிசிபேளாஹூலி அன்னா ரெசிப்பி சொல்லிக் கொடுத்தார். கப்/கிராம் அளவோடு. அதே போன்றுதான் நம்ம வெங்கடேஷ் பட் சமீபத்தில் போட்டிருந்தார். வெ ப வந்து எல்லாம் கையாலேயே அளந்து போட்டார் ஆனால் அதே ரெசிப்பி செய்முறை. அவரும் பிசிபேளா பாத்திற்கு வெங்காயம் போடக் கூடாது, காய்களும் என்று சொல்லியிருந்தார். என் சித்தியும் அதேதான் சொன்னார். அந்த அளவுப்படிதான் நான் செய்வது. அதற்கான மசலா பொடியும் செய்து வைத்துக் கொண்டு விடுவேன். சித்தி சொன்ன அளவுப்படி. அதில் பட்டையும் லவங்கமும், பே லீஃபும், கச கசாவும் கண்டிப்பாக உண்டு. மற்ற மசலா ஐட்டம்ஸ் ஏலம் சோம்பு எதுவும் சேர்க்கக் கூடாது என்று.
திங்கவுக்கு அனுப்பவே இல்லை. ஃபோட்டோ எடுக்க முடியாமல் போனதால்.
கீதா
நானும் பல சமையல் குறிப்புகள் படங்கள் இல்லாமல் போடுவதில்லை. இது உடனே போடணும்னு தோன்றவே போட்டேன். முக்கியமாய்ப் பெயருக்காக!
DeleteVery impressive that your blog is still active and you are very active.
ReplyDeleteknown stranger. ( once we used to interact regularly )
வருக, வருக, வருக, தெரிந்த அந்நியரே! என்னோட பயணப்பதிவுகள், ராஜஸ்தான், குஜராத் பதிவுகளிலே நீங்க கொடுத்த கருத்துகள் எல்லாம் நினைவில் இருக்கு. திடீர்னு நீங்களும் உங்களைப் போல் சிலரும் காணாமல் போனீங்க! நான் முன்போல் தினம் இரண்டு பதிவு, மூன்று பதிவெல்லாம் போடுவது இல்லை இப்போ! என் இருப்பைத் தெரிவிக்க அவ்வப்போது ஒன்றிரண்டு வாரத்துக்கு 2 என்று சில சமயங்கள் போடுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அதே பெயரில் தொடருவதும் மகிழ்ச்சி.
Deleteகுறிப்புகள் நன்று. செய்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.
ReplyDeleteநன்றி வெங்கட், முடிஞ்சப்போ பண்ணிச் சாப்பிட்டுப் பாருங்க.
Deleteமுத்துக்குழம்பு - பெயர் கவர்ச்சியாக இருக்கிறது. நான் இப்படியும் செய்வதுண்டு. பருப்புத் துகையலுக்கு புளி சேர்க்க மாட்டேன்.
ReplyDeleteநன்றி பானுமதி. பலரும் பருப்புத்துவையலுக்குப் புளி சேர்ப்பதில்லை என்கின்றனர். ரேவதியைத் தவிர.
DeleteSuper recipes :)
ReplyDelete