எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 11, 2020

மஹாகவியின் பிறந்த நாள்!

 



துச்சா தனன்எழுந்தே -- அன்னை

துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.

‘அச்சோ தேவர்களே!’ -- என்று

அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.

பிச்சேறி யவனைப்போல் -- அந்தப்

பேயனுந் துகிலினை உரிகையிலே,

உட்சோதி யிற்கலந்தாள்; -- அன்னை

உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்.   


‘ஹரி, ஹரி, ஹரிஎன்றாள்; -- கண்ணா!

அபய மபயமுனக் கபயமென்றாள்.

கரியினுக் கருள்புரிந்தே -- அன்று

கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,

கரியநன்னிற முடையாய், -- அன்று

காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!

பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!

பேசரும் பழமறைப் பொருளாவாய்!  


‘சக்கர மேந்திநின்றாய், -- கண்ணா!

சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!

அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!

அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!

துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!

தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!

தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்

சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய்.  


‘வானத்துள் வானாவாய்; -- தீ

மண்நீர் காற்றினில் அவையாவாய்;

மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ

முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!

கானத்துப் பொய்கையிலே -- தனிக்

கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,

தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்

தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்!  


‘ஆதியி லாதியப்பா, -- கண்ணா!

அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,

சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!

மாதிக்கு வெளியினிலே -- நடு

வானத்திற் பறந்திடும் கருடன்மிசை

சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!

சுடர்ப்பொருளே பேரடற்பொருளே!  


‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!

காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!

வம்புரை செய்யுமூடா” -- என்று

மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,

செம்பவிர் குழலுடையான், -- அந்தத்

தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!

நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை

நாணழியா திங்குக் காத்தருள்வாய்.  


‘வாக்கினுக் கீசனையும் -- நின்றன்

வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,

ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்

அன்புடை எந்தை, என் னருட்கடலே,

நோக்கினிற் கதிருடையாய், -- இங்கு

நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,

தேக்குநல் வானமுதே! -- இங்கு

சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்!  


‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!

மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!

ஐய, நின் பதமலரே -- சரண்.

ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.

பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல

புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,

தையலர் கருணையைப்போல், -- கடல்

சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,  


பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த

பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,

கண்ணபிரா னருளால், -- தம்பி

கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை

வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!

எண்ணத்தி லடங்காவே; -- அவை

எத்தனை எத்தனை நிறத்தனவோ!  


பொன்னிழை பட்டிழையும் -- பல

புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,

சென்னியிற் கைகுவித்தாள் -- அவள்

செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,

முன்னிய ஹரிநாமம் -- தன்னில்

மூளுநற் பயனுல கறிந்திடவே,

துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு

தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்.  


தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்

ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.

ஆவலோ டெழுந்துநின்று -- முன்னை

ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.

சாவடி மறவரெல்லாம் ‘ஓம்

சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.

காவலின் நெறிபிழைத்தான், -- கொடி

கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான்.  

என்னோட மனக்குழப்பத்திலே இன்னிக்கு பாரதியின் பிறந்த நாள் என்பதை மறந்துட்டேன். அதனால் தாமதமாகப் பதிவு! மஹாகவியின் தீர்க்கதரிசனக் கவிதைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

28 comments:

  1. மகாகவியின் புகழ் வாழ்க!...

    ReplyDelete
  2. இங்கு மட்டும் என்ன!.. விழித்தும் விழிக்காமல் இருந்து விட்டேன்..

    அடா!.. ஈதென்ன பேருறக்கம்..
    அக்கினிக் கொழுந்தின்
    அவதார நன்னாளில் ஆகுமோ
    உனக்கும் மனக்கலக்கம்?..

    - என்று என்னை நானே எழுப்பிக் கொண்டு காலதாமதமாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. துரை, இன்னிக்கு எப்படி மறந்தேன் என்பதே புரியலை! ஒரு மாதமாகவே பெருங்குழப்பம். சமாளித்துக் கொண்டு இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக ஒண்ணும் முடியலை! :( உங்கள் மனக்கலக்கங்களும் விரைவில் தீர்ந்து நன்மையே நிகழப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  3. // சூத்திரனுக்கு ஒரு நீதி-தண்டச்
    சோறு உண்ணும் பார்ப்புக்கு
    வேறொரு நீதி
    சாத்திரம் ஏதும் உரைப்பின் -அது
    சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் //


    அடுத்தவன் முதுகில் ஏறி
    பெண்மையைக் கேவலப்படுத்தி
    முதுகு சொறிவதற்கு
    ஒரு பூ நூல் போட்டு
    அதுவே ஆண்மை எனப்
    பல்லாண்டுகளாக ஏச்சி பிழைக்கும்
    தொழில் கொண்டிருக்கும்
    தண்டச் சோறுகளையும்
    இந்த பூமி
    தாங்கிக் கொண்டிருப்பது
    ஏன்...?

    காரணம்
    பொறை
    விரைவில்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி திரு தனபாலன் அவர்களே!

      Delete
  4. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. மஹாகவியின் நினைவுகளை மறக்காமல் போற்றுவோம். அருமையாக உள்ளது. உங்கள் பதிவே தாமதமென்றால், நான் இன்றைய தினம் வெளியிட வேண்டுமென சாதரண பதிவுடன் கூடிய என் பதிவு எவ்வளவு தாமதமாக இருக்குமென யோசிக்கிறேன்.இந்த சாக்கிலாவது இரண்டு வரி கிறுக்குவோம் என ஆரம்பித்து வைத்தவளுக்கு இன்னமும் முடிக்க நேரமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நான் எப்போதுமே குறைந்தது ஒரு வாரம் முன்னரே பாரதியார், தமிழ்த்தாத்தா ஆகியோருக்கான பதிவுகளை ஷெட்யூல் செய்து வைப்பேன். இம்முறை அந்த உணர்வே இல்லாமல் இருந்திருக்கேன். அதைத் தான் சொன்னேன்.உங்கள் பதிவையும் வெளியிடுங்கள். வரேன்.

      Delete
  5. இங்கேயும் அதே பல்லவி.. சரணம் தானா!.

    ஏதோ ஒன்று நிகழ இருக்கிறது..
    பொறுத்திருந்து பார்ப்போம்!..

    ReplyDelete
    Replies
    1. துரை, மனிதர்கள் பலவிதம். ரசனைகள் பலவிதம்!

      Delete
  6. நான் கூட சில துணுக்குகள் எடுத்து வைத்திருந்தேன்.  பத்தாம் தேதி வியாழன் பதிவில் சேர்க்க எண்ணி இருந்து, மறந்தே போச்சு!  மஹாகவி பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. போன வருஷம் போட்டிருந்தீங்க. நினைவு இருக்கு. இதெல்லாம் நினைவில் இருக்கும். மறக்காமல் இருக்க வேண்டியவை மறந்து போயிடும்.

      Delete
  7. பாரதியின் நினைவினை போற்றுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி. நன்றி.

      Delete
  8. எத்தனையோ மனக் குழப்பங்கள்,
    உடல் வருத்தங்கள் எல்லாவற்றையும் வென்றே
    வர வேண்டி இருக்கிறது.
    மஹாகவியின் வார்த்தைகள் நம்மை விழிப்படையச் செய்யும். நீங்கள் மறக்கவே
    மாட்டீர்களே கீதாமா. உங்களை விட யார் போற்று வார்கள்.
    அருமை பாரதி என்றும் நம்முடன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. ஆமாம், கொஞ்ச நாட்களாகவே மனக்குழப்பங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. உடல் வருத்தங்கள் எப்போவும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றோடு வாழ்ந்தாகணும். பாராட்டுக்கு நன்றி.

      Delete
  9. வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!

    மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!

    ஐய, நின் பதமலரே -- சரண்.

    ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’....


    இன்றைய காலத்திற்கும் சேர்த்தே எழுதிய வரிகள்....

    வருடங்கள் ஓடினாலும் கவியின் வரிகள் என்றும் புதுமையை...

    வளர்க கவியின் புகழ் என்றும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு ப்ரேம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  10. சொற்களில் எளிமையும், கருத்துக்களில் நெருப்பையும் கட்டி தமிழ் கவிதை உலகை மடை மாற்றியவர் பாரதி. இந்நாளில் புதிய பாரதிகள் பெருகுக.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கடைசி பெஞ்ச், முன்னால் வந்திருக்காப்போல் நினைவு வருது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  11. பாரதியின் பெருமையை நினைவுகூர்ந்தது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நன்றி.

      Delete
  12. பாரதியின் பிறந்த நாளன்று மட்டும்தான் அவரை நினைத்துக் கொள்ள வேண்டுமா என்ன? எப்படியோ பாரதியாரின் கவிதையை படிக்க ஒரு வாய்ப்பு. நன்றி. 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, தமிழை மறக்க முடிந்தால் தான் பாரதியை மறக்க முடியும்! இந்தப் பதிவு சிறப்புப் பதிவு!

      Delete
  13. சே சே அதெப்பூடி மறந்தீங்க கீசாக்கா...:))... இருந்தாலும் கரெக்ட் ரைம் க்குப் போட்டுவிட்டீங்கள் பாடலை.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் இல்லை, நிறையக் குழப்பங்கள் அதிரடி! அதிலே மறந்திருக்கேன்!

      Delete
  14. கீதாம்மா, பாரதியாரை நினைக்க வைக்கும் எழுச்சி மிகுந்த கவிதை. கலங்காதிருங்கள் அம்மா...அன்னை பராசக்தி நமக்கெல்லாம் மனவுறுதி அளிக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வானம்பாடி. சோதனைகள் மிகுந்தால் அன்னை பராசக்தி தான் காப்பாற்றணும். தாங்கிக் கொள்ளும் மன வலிமையையும் அவளே கொடுக்கணும்.

      Delete