எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 16, 2020

மனம் விட்டுப் பேசுகிறேன்!

 சமீப காலமாகவே கொலை, தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. மனதில் வலிமை இல்லாததே காரணம்.  வளர்க்கும்போதே மனோபலத்தை ஊட்டி வளர்ப்பது இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. முக்கியமாக நீதி போதனைகள், இது தப்பு செய்யக் கூடாது, இது செய்யலாம், என்பதை எல்லாம் பெற்றோரோ, பள்ளிகளோ சொல்லிக் கொடுப்பதில்லை, பள்ளிப் பாடங்களில் நீதி போதனைகளே இருப்பதில்லை. கடவுள் வாழ்த்திலிருந்து எல்லாவற்றையும் நீக்கிய போதனைகளே அதிகம். ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றிலிருந்து அவற்றின் நீதிகளையும், அது சொல்லும் கருத்துக்களையும் யாரும் பார்ப்பதில்லை. தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் போன்றவை போதிக்கப்படுவதே இல்லை. இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் ஆண்டாள் யார் என்றே தெரிந்திருக்காது. தேவார, திருவாசகங்களை எங்கே இருந்து அறியப் போகின்றனர்1 திருப்பாவை, திருவெம்பாவையின் முக்கியமும் திருப்பள்ளி எழுச்சி பற்றிய அறிவும் நிச்சயம் இருக்காது. 

இது போதாது எனத் தொலைக்காட்சிகள் தங்கள் நெடுந்தொடர்களில் பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைத்து வருகின்றன. பிரபலமான தொலைக்காட்சியில் தினம் மாலை ஆறரை மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் மூன்று குழந்தைகள்! இரண்டு ஆண்! ஒரு குழந்தை பெண்! அந்தப் பெண் குழந்தையை இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் பிடிக்காதாம். அதற்காக அந்தப் பெண் குழந்தைக்கு எந்த எந்த வகையில் எல்லாம் துன்பம் கொடுக்க முடியும் என்பதை இந்தச் சின்ன வயதிலேயே யோசித்து யோசித்துச் செய்கிறார்களாம் இந்தச் சிறுவர்கள் இருவரும். அதில் ஒரு சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கு தினம் ஒரு காரணம் கண்டு பிடிக்கிறானாம். பள்ளிக்கே போக மாட்டானாம். அதற்கு அவன் பாட்டி ஆதரவாம். பேரன் மேல் மிகுந்த பாசமாம். இந்தப் பாசத்தை வைத்துக் கொண்டு அந்தச் சிறுவன் முன்னுக்கு வந்துவிட முடியுமா? இதைப் பார்க்கும் இந்தத் தலைமுறைக் குழந்தைகள் தாங்களும் அப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் வரும் காலம் என்ன ஆகும்? நாளைய இந்தியாவை இந்த மாதிரிக் குழந்தைகளா முன்னுக்குக் கொண்டு வரப் போகிறார்கள்? ஒண்ணும் புரியலை. நான் உட்கார்ந்து பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது காதில் விழும் வசனங்கள்! நல்லவேளையா நம்ம வீட்டில் குழந்தைகளே இல்லைனு நினைத்துக் கொண்டேன்.  அந்தக் குறிப்பிட்ட தொடரைத் தடை செய்ய வேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் என் நினைப்பெல்லாம் என்ன ஆகப் போகிறது! இந்த மாதிரித் தொடர்கள் எடுப்பவர்கள், கதை எழுதுபவர்கள் போன்றோரால் தான் கொடுஞ்செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதை அவங்களே உணர்வதில்லை. 

**********************************************************************************

சனிக்கிழமை அன்று கண் பிரச்னைக்காகக் காலையே மருத்துவரிடம் போக இருந்தேன். ஆனால் மறுநாள் தம்பி குடும்பம் வருவதால் காய்கறிகள் வாங்கப் போக வேண்டி இருந்தது. ஆகவே மாலை போனோம். நாலே முக்காலுக்கே போய்த் திரும்பி வீட்டுக்கு வரும்போது ஏழரை மணி ஆகிவிட்டது. நல்ல கூட்டம். எனக்கு முன்னாடியே 5 பேர் இருந்தனர். கண் சோதனைகள் எல்லாம் முடிந்து மருத்துவர் பார்க்கும்போதே ஏழு மணி. எல்லாச் சோதனையும் முடித்து விட்டு ஆறு மாதங்களுக்குள்ளாக இரண்டு கண்ணுக்கும் அறுவை சிகிச்சை செய்துடணும் என்று சொல்லி விட்டார். மூன்று மாதங்களுக்குள்ளாக ஒரு கண்ணுக்கான சிகிச்சைக்கு ஆயத்தமாகத் திட்டம் போட்டுக் கொண்டு வரச் சொல்லி இருக்கார். அறுவை சிகிச்சை செய்யும் நிலைமைக்குப் போகாது என நினைத்திருந்தேன். நம்ம ரங்க்ஸோ நீ கணினியில் உட்காருவதால் உனக்குக் கண் புரை வந்திருக்கு என்கிறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுக்கு முன்னால் எல்லாம் உட்கார்ந்ததை விட இப்போக் குறைவு தான். ரொம்பக் குறைச்சுட்டேன். ஆனாலும் எப்படியோ வந்து விட்டது! ஆகஸ்ட் மாதம் போனப்போக் கூட ஒண்ணும் இல்லைனு சொன்னாங்க!  ஐந்து மாதங்களுக்குள்ளாக எல்லாம் மாறி விட்டது. எனக்கு அறுவை சிகிச்சையை விட அதுக்குப் போடும் ஊசி பற்றித் தான் கவலை, பயம் எல்லாம். என்னமோ போங்க, வந்தாச்சு! இனி மற்றவை நடந்து தானே தீரணும்!

***********************************************************************************

ஞாயிறன்று தம்பி குடும்பம் வந்துவிட்டுத் திங்களன்று கிளம்பி விட்டார்கள். இப்போச் சில நாட்களாகவே வீட்டில் வேலை அதிகம் ஆனாப்போல் ஒரு எண்ணம். சாப்பிடுவதற்கே பனிரண்டரை, ஒரு மணி ஆகிவிடுகிறது. அதுக்கப்புறமாக் கணினியில் ஒரு மணி நேரம் உட்கார்ந்துவிட்டுக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பின் திரும்ப நாலு மணிக்கு வருவேன். சில நாட்கள் அதுவும் முடியறதில்லை.  நாட்கள் ஓடுகின்றன. ஆனால் எந்த வேலையும் நடக்கவில்லை போல் ஓர் எண்ணம். மழை வேறே! விட்டு விட்டுப் பெய்து கொண்டிருக்கிறது, இந்த வருஷம் மழை அதிகம் தான்!  

 

40 comments:

  1. உண்மை தான் மாமி, இள வயது தற்கொலைகள் கேட்க ரெம்ப வருத்தமா இருக்கு. ஒரு நிமிஷம் பெத்தவங்கள நெனச்சா செய்யத் தோணாது. நீங்க சொன்னது போல் மீடியா தப்பான போதனை நிறைய செய்யுது 

    கண் சிகிச்சை தள்ளிப் போட வேண்டாம், எங்க அம்மா உங்களை போலவே ஊசிக்கு பயந்துட்டு தள்ளிப் போட்டு கொஞ்சம் சிரமப் பாத்தாங்க. ஒண்ணும் பயமில்லை, இப்ப ரெம்ப அட்வான்ஸ் ஆய்டுச்சு. டேக் கேர் 

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏடிஎம். கருத்துக்கு நன்றி. ஊசி விஷயம் தான் இப்போப் பெரிசாத் தெரியுது! ஆனால் எப்படியும் பண்ணிக் கொண்டே ஆகணும் என்னும்போது முன்னாலேயே எதிரியை எதிர்கொண்டுவிடுவது நல்லது தானே! ஜனவரி கடைசியில் ஒரு கண்ணின் வேலையை முடிக்க எண்ணம். இறைவன் சித்தம்! இறைவன் நல்லபடியாக நடத்திக் கொடுப்பார் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

      Delete
  2. திருக்குறளும் தொல்காப்பியமும் முதலில்...

    பிறகு - பிறகு...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன் அவர்களே!

      Delete
  3. வணக்கம் சகோதரி

    தங்கள் கருத்து உண்மைதான். நிறைய பேருக்கு எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள மனோதிடம் இல்லாததே காரணம். அவசரமான முடிவுகளை எடுக்கிறார்கள். அதனால் பெற்றோர்,மற்ற சுற்றங்களை நினைத்துப் பார்ப்பதேயில்லை. என்னவோ இதை கேள்விப்படும் நமக்குத்தான் மனக் கஸ்டங்கள் அதிகரிக்கிறது.

    தங்களின் கண்புரை அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். கவலை வேண்டாம். உங்களுக்கு தைரியம் சொல்கிறேனே தவிர்த்து எனக்கு இதையெல்லாம் சந்திக்க நிறைய பயம். என்ன செய்வதோ தெரியவில்லை. இதைதான் மனக் குழப்பம் என்று பதிவுகளில் கூறி வந்தீர்களா? ஆமாம்.. பிரச்சனைகள் என்று வரும் போது, மனக்கலக்கங்கள், குழப்பங்கள் ஏற்படுவது சகஜந்தானே...! மனம் விட்டு இந்த மாதிரி பேசுவது உங்களுக்கும் ஒரு சமாதானமாக இருக்கும். உங்கள் நலனுக்கு எங்களின் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.

    பருவநிலை வேறு மாறி மாறி வந்து அனைவரின் உடல்நலனையும் பாதிக்கிறது. இந்த தடவை மழையும்,பனியும் அதிகந்தான். வெயிலும் அதிகமாகத்தான் இருக்கப் போகிறது. இறைவன் தரும் எல்லாவற்றையும் தாங்கித்தான் ஆகவேண்டும். அவனிடம் நாம் வேண்டும் பிராத்தனைகள் மட்டுமே நம் மனச் சமாதானத்திற்கு மருந்து. இல்லையா? பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ஆறுதலான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. எப்படியும் அறுவை சிகிச்சை செய்து கொண்டே ஆகவேண்டும் என்னும்போது அது முந்தி இருந்தால் என்ன? ஆகவே அடுத்த மாதம் விரைவில் முடிவு எடுத்தாகணும். குடும்பம் எனில் மனக்கலக்கங்கள், குழப்பங்கள் சகஜமான ஒன்று தானே! இங்கே இன்று காலையிலிருந்து வெயில் இல்லை. தூறிக்கொண்டே இருக்கு. பெரிசா இல்லாட்டியும் நனையும் அளவுக்குத் தூறல்.

      Delete
  4. ஹ்ம்ம் என்னத்தை சொல்லா இப்போல்லாம் நியூஸ் பார்க்கவே பிடிக்கலை .
    தொலைக்காட்சி நிகழ்சி நாடகங்கள் பெரும்பாலானவற்றை பார்ப்பதில்லை .ஸ்மார்ட் டிவியில் யூ டியூப்  கனெக்ஷனில் எப்பவாச்சும்  பார்ப்பேன் .அப்படி ஒரு பாடலை தேடும்போது நடன நிகழ்வொன்றில் பார்த்த பெண்   ஒரு ட்ராமாவில் நடித்தவராம் அவரும் தற்கொலைன்னு படிச்சேன் :( என்ன நிர்பந்தம் என்ன அவசரம் இவர்களுக்கெல்லாம் புரியலை தோல்வியை ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இவங்களுக்கு இல்லியோ :( இன்னிக்கு லண்டனிலும் ஒரு வட இந்தியப்பெண் குழந்தையுடன் :((( முடியலைக்கா .. வாழ்க்கையின் அர்த்தம் பற்றி இவங்களுக்கு பாடம் எடுக்கணும் .உயிரின் அருமை இவங்களுக்கு புரியலை .
    அக்கா எங்க ஸ்கூல் கத்தோலிக்க பள்ளி அதில் moral இன்ஸ்ட்ரக்ஷன் இருந்தது நான் படிக்கும்போது முதல் பீரியட் அதுதான் இந்து முஸ்லீம் ப்ராட்டஸ்டண்ட் மாணவர்களுக்கு .கத்தோலிக்கருக்கு அவங்க பாடம் .இத்துடன்தான் ஆரம்பிப்பாங்க .அதுவும் தமிழ் பாடத்தில் டீச்சர்ஸ் அவ்ளோ அழகா புராண கதைகளை விளக்கமா சொல்வாங்க.  ,இப்போ எப்படின்னு தெரில .கண் ஆபரேஷன் மருத்துவர் அறிவுரைப்படி செஞ்சுக்கோங்க .கண்ணுக்கும் கணினிக்கும் தொடர்பில்லைக்கா கேட்டராக்ட் விஷயத்தில் ..எனக்கு தெரிஞ்சு டிவியை மூடி வச்சிட்டு அந்த வீட்டுக்கு வந்த வெட்டுக்கிளியோட பேசுங்க :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், நீண்ட நாட்கள் கழிச்சு வந்ததுக்கு நன்றி. நியூஸிலே பொய்யான செய்திகளே அதிகம். அதிலும் பிரபலமானவர்களை அகௌரவப்படுத்தும்படியான செய்திகளைக் கற்பனை செய்து சொல்லிவிடுகிறார்கள். தற்கொலைகள் அதிகம் ஆகிக் கொண்டு தான் வருது. நான் படிச்சப்போவும் எங்க பள்ளியில் நீதி போதனை வகுப்புகள் உண்டு. எங்கள் தமிழாசிரியையும் அது சீறாப்புராணமென்றாலும் சரி, பெத்லஹேம் குறவஞ்சியானாலும் சரி, வில்லி பாரதமானாலும் சரி ஒரே மாதிரியான ஆர்வத்துடன் சொல்லிக் கொடுத்தாங்க. கண்ணுக்கும் கணினிக்கும் தொடர்பில்லைனு சொன்னதுக்கு நன்றி. நம்ம ரங்க்ஸிடம் சொல்லிக்கலாம். ஹாஹாஹா! வெட்டுக்கிளி தானே பறந்து விட்டது. :)))) இரண்டு நாட்களாய் இங்கே குடித்தனம் பண்ணியாச்சு!

      Delete
  5. அன்பு கீதாமா,
    கண் சரியாகப் போகும் மா.
    நாங்க எல்லாம் செய்து கொண்டோம். ஊசி வலிக்கவே வலிக்காது.

    நம்ம ஊரில் தற்கொலை என்றால் இந்த ஊரில் மற்றவர்களைப் போட்டு விடுக்கிறார்கள்.

    சின்னக் குழந்தைகளை வைத்து சீரியலா. கொடூரம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. ஊசி வலிக்கிறதோ இல்லையோ போட்டுக் கொண்டு தானே ஆகணும். அங்கே உள்ள நிலைமை எங்களுக்கும் கலவரத்தைத் தரும். சின்னக் குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்கவிடுவதில்லை. :((((

      Delete
  6. தொலைக்காட்சி சீரியல்கள் - சித்தி ஓரிரு வாரம் பார்த்ததோடு சரி. எந்த சீரியலும் பார்த்ததில்லை.

    நீதிபோதனை வகுப்புகள்ல, ஆசிரியர் பசங்ககிட்ட மனம்விட்டுப் பேசுவார். நீதிபோதனை வகுப்பு இல்லாத்து குறைதான்.

    கண் பிரச்சனை விரைவில் சரியாகப் ப்ரார்த்தனைகள்.

    நேற்று இரு காணொளிகள் பார்த்தேன். தண்ணீர் எப்படி எவ்வளவு குடிக்கணும் என்று. உணவு எப்போ சாப்பிடணும் என்று. இரண்டின் பிரகாரம் நடக்கவில்லை என்பது கலவரமாகத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நீங்களும் யூ ட்யூப் ரசிகரா? அதில் சொல்லுவதை எல்லாம் கேட்காதீர்கள். உங்களுக்கு எது வழக்கமோ, எது ஒத்துக்குமோ அதை மட்டுமே சாப்பிடுங்கள். அந்த வழக்கத்தை மட்டுமே பின்பற்றுங்கள். ஆயுர்வேதப்படி தாகம் எடுக்கையில் மட்டும் தண்ணீர் குடித்தால் போதும். அவங்க எல்லாம் சொல்றாப்போல் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடித்துச் சிறுநீரகத்திற்கு அதிக வேலை கொடுக்க வேண்டாம். நான் இதை எல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காது வழியா வெளியேற்றிடுவேன். கேட்கும்போதே தெரியும் இன்னொரு காது வழியா வெளியே போவது! :))))

      Delete
    2. //சிறுநீரகத்துக்கு அதிக வேலை// - ஐயோ.... எனக்கு இந்தப் பயம் எப்போதுமே உண்டு. ஒருத்தன் சொல்றான், 2-3 லிட்டர் தண்ணீராவது குடிக்கணும்னு. இன்னொருத்தன் சொல்றான், மடக்கு மடக்காக வாயில் தண்ணீர் விட்டுக்கொண்டு குடிக்கணும்னு. இன்னொருத்தன், இரவு 8 மணிக்கு மேல தண்ணீர் குடிக்காதே...சிறுநீரகம் ரெஸ்ட் எடுக்கும் நேரத்தைக் கெடுக்காதேங்கறான். இன்னொருத்தன், தண்ணீர் ஜாஸ்தி குடித்தால் அதிகமா சிறுநீரகம் வேலை செய்து டபக்குனு ஒரு நாள் படுத்துக்கும்கறான்.

      என்னதான் செய்யறது சொல்லுங்க?

      Delete
    3. இதை எல்லாம் ஒரு காதில் வாங்கிக் கொண்டு இன்னொரு காதால் வெளியிலே விட்டுவிடுவதே மேல். நல்லவேளையாக எனக்கு இந்தப் பைத்தியம் எல்லாம் இல்லை. கணினியில் உட்கார்ந்தாலோ மொபைல் பார்த்தாலோ குறிப்பிட்ட வேலைகளுக்கு மேல் எதையும் பார்ப்பதில்லை. கணினி எனில் பதிவுகள், வந்திருக்கும் அனுப்பவேண்டிய இ மெயில்கள், ஃபேஸ்புக். மொபைலில் வாட்சப். எப்போவானும் ஃபேஸ்புக். அத்தோடு சரி. நம்ம ரங்க்ஸ் சொல்லி வெங்கடேஷ் பட்டின் சில சமையல் குறிப்புக்களைப் பார்ப்பது உண்டு.

      Delete
    4. நீங்களாக விதம் விதமான யூட்யூப் பார்த்துக் கேட்டு "என்ன தான் செய்யறது?" என்றால் அதில் பொருளே இல்லை. ஒண்ணு பார்க்கிறதைப் பொழுதுபோக்காகப் பாருங்க/அல்லது பார்ப்பதை நிறுத்துங்க. சாப்பிடும்போது தேவையானால் நீர் குடிக்கலாம். காலைவேளையில் வெறும் வயிற்றில் 2,3 தம்பளர் தண்ணீர் குடிக்கலாம். சாப்பாட்டுக்குப் பின்னர் அரைமணியில் கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம். ஜீரணத்துக்கு உதவும். மற்றபடி தாகம் இருந்தாலோ தேவை இருந்தாலோ தான் தண்ணீர் குடிக்கணும்.

      Delete
    5. நான் காலை எழுந்து பல்விளக்கியதும் ஒரு சொம்பு தண்ணீர் (இப்போதெல்லாம் வெதுவெதுப்பான நீர்) குடித்து விடுவேன்.  அதிலேயே பி பி மாத்திரை போட்டுக்கொண்டு விடுவேன் (மருத்துவர் சொன்னதுதான்)  அப்புறம் அவ்வப்போது தேவைக்கேற்றபடி கொஞ்சம் தண்ணீர்.

      Delete
  7. நீங்கள் கடைசி பாராவில் சொல்லி இருப்பது போலதான் எனக்கும் தோன்றும்.  எல்லோருக்கும் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், ஒரு மாசத்துக்கும் மேலாகச் சாப்பிடும்போதே பனிரண்டரை மணி, ஒரு மணினு ஆகிவிடுகிறது. விடாமல் வேலை துரத்துக்றது! :) கொரோனா வந்ததில் இருந்தே இப்படித் தான்!

      Delete
    2. எங்க வீட்டிலும் (எனக்கு) இப்படித்தான் ஆகுது. காலேஜ் இருந்தால் ஏதாவது சீக்கிரம் ஆகும். எனக்குமே என் வேலையை முடித்துவிட்டு சாப்பிடலாமா என்று நினைக்கும்போது 10 மணி ஆயிடுது. ஆனால் சமையல் 11-11:30ன்னு ஆயிடுது. எனக்கோ இரண்டாவது வேளை 6 மணிக்கு முன்னால சாப்பிடணும். இந்த கொரோனா எல்லாத்தையும் மாத்திடுச்சு.

      Delete
  8. தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் நல்லவேளையாக பார்ப்பதே இல்லை எங்கள் வீட்டில்.  எனினும் பார்ப்பவர்கள் வீடுகளை எண்ணிக் கவலையாய்த்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நல்லதாப் போச்சு. பார்க்காதவரை நல்லதே! பைத்தியமாய்ப் பார்ப்பவர்களை எண்ணிக் கவலையாத் தான் இருக்கு!

      Delete
  9. கண் அறுவை சிகிச்சையை நல்ல படியாக செய்துகொள்ளுங்கள்.  எல்லாம் நல்லபடி நடக்கப் பிரார்த்தனைகள். நான் கூட நீண்ட நாள் டியூ.  என் இடது கண்ணில் ஒரு புள்ளி இருப்பதாக மருத்துவர் இரண்டு வருடங்களுக்குமுன் சொல்லி நுங்கம்பாக்கம் சங்கர் நேத்ராலயா செல்லச் சொன்னார்.  இன்னமும்தான் செல்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், இரண்டு வருடங்களாகச் சும்மா இருப்பது சரியில்லை. கண் விஷயத்தை உடனே கவனிக்கணும். சங்கர நேத்ராலயாவில் எல்லாம் எளிதாக நடக்கும் என்றும் கூட்டம் அதிகம் என்றும் கேள்விப்படுகிறேன். பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      Delete
  10. தொடர்கள் உண்டாக்குகின்ற எதிர்மறைத் தாக்கங்கள் அதிகமாக உள்ளன. (தொடர்களே பெரும்பாலும் எதிர்மறையாகவே அமைந்துள்ளதை நண்பர்கள் மூலமாக அறிகிறேன்) எங்கள் இல்லத்தில் எந்த தொலைக்காட்சித் தொடரும் பார்ப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா! நீங்கள் சொல்லுவது சரியே!

      Delete
  11. இதை வெளிப்படையாக பேசுபவர்களைத்தான் குற்றம் சொல்கிறார்கள். என்ன செய்வது ?

    ஊடகங்களால்தான் சமூகம் நாசமாகி கொண்டு போகிறது.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச நஞ்சம் இல்லை கில்லர்ஜி! சர்வ நாசம் ஆகிக் கொண்டு வருகிறது.

      Delete
  12. தொலைக்காட்சி தொடர்கள் - தொலைக்காட்சியே பார்ப்பதில்லை. ஆனால் பல சீரியல்கள் இப்படி எதிர்மறை எண்ணங்கள் கொண்டதாகவே இருக்கின்றன. பார்க்காமல் இருப்பது நல்லது.

    கண் சிகிச்சை - செய்து கொண்டு ஓய்வு எடுங்கள். கணினிக்கு பின்னர் வரலாம்!

    வேலை அதிகமாகவே இருக்கிறது இங்கேயும். பதிவுகள் பக்கம் வர இயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், எல்லோருக்குமே வேலைப்பளு அதிகம் தான். கண் சிகிச்சை எப்படியும் அடுத்த மாசம் தான். மாமியார் ச்ராத்தம் எல்லாம் முடிந்து பொங்கலும் முடிந்து பின்னர்! மெதுவா வாங்க பதிவுகளுக்கு. அவசரம் ஏதும் இல்லை.

      Delete
  13. Geethamma, take care of you.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானம்பாடி நன்றிம்மா.

      Delete
  14. கீசாக்கா எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகோணும் ஞ்ஞாஆஆமி:)).. மனத்தை எங்கு விட்டுப்போட்டு இங்கு வந்து பேசுறீங்கள்?:)..//மனம் விட்டுப் பேசுகிறேன்/// ஹா ஹா ஹா...

    எல்லாம் விதிதான் கீசாக்கா ஆரைக் குறை சொல்வது ஆனாலும் பல இடங்களில் பெற்றோரின் குறைபாட்டினால்தான் பிள்ளைகள் தவறாகி விடுகிறார்கள்... படங்களில், நாடகங்களில் என்ன போட்டாலும்.. கெட்டுப்போவோர்தான் கெட்டுப் போவார்கள்... ஏனையோர் அதை ஒரு பொழுதுபோக்காகவே எடுத்துச் செல்கின்றனர்...
    “பாலையும் தண்ணியையும் பிரித்துப் பார்க்கப் பழகோணும்” என இதுக்காகத்தானே அப்பவே சொன்னார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆட்டோமாடிக் அதிரடி! அதென்ன உங்களுக்குனு ஓட்டமெற்றிக்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னவோ போங்க. இப்போதைய குழந்தைகளை நினைத்தால் கவலை தான் வருது.

      Delete
  15. கண் விசயத்தில் பயப்பிடாதையுங்கோ கீசாக்கா, அதெல்லாம் இக்காலத்தில் ஒரு சின்ன விசயம்... உடனேயே சரியாகிடும்... எங்கட கெள அண்ணனும் செய்திட்டாரெல்லோ:)..

    அது கொம்பியூட்டர் பார்ப்பதால் வரும் என்றில்லை.. அது வயசாகும்போது பலருக்கு வரும்.. இயற்கையாக வயோதிப நோய்களில் அதுவும் ஒன்றாகி இருக்குது இப்போ.

    ReplyDelete
    Replies
    1. பயமெல்லாம் இல்லை. எங்க வீட்டிலும் அப்பா, மாமியார், நம்ம ரங்க்ஸ் (மாமா) எல்லோரும் செய்து கொண்டிருக்காங்க. கம்ப்யூட்டர் பார்ப்பதால் வருதுனு நம்ம ரங்க்ஸோட முடிவு! :)))))

      Delete
  16. நீங்கள் சொல்லியிருக்கும் கடசிப்பந்தி எனக்கும் பொருந்துது கீசாக்கா.. காலமும் கடகடவென ஓடுது, நேரம் எதுக்குமே கிடைக்குதில்லை, சனி ஞாயிறுகளில் நன்கு நித்திரை கொண்டு ரெஸ்ட் எடுக்கோணும் என நினைப்பேன், ஆனால் இருக்கக் கூட பல சமயம் நேரம் கிடைக்காது.

    எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் ரீ குடிக்கும்போது மட்டும், ஒரு இடத்தில் இருந்து கதைத்துப் பேசிக் குடிப்போம்... அந்நேரம் மட்டுமே நான் இருக்கிறேன், மற்ற நேரமெல்லாம் நிற்கிறேனே என நினைச்சு.. என்னை நானே நினைச்சு.. புல்லாஆஆஆஆஆஅ அரிச்சுப்போயிடுறேன் ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நீங்க சொல்வது சரியே! நாள் ஓட்டமாக ஓடிவிடுகிறது. செய்யாமல் பல வேலைகள். ஆனால் வீட்டில் இரண்டு பேருக்கு எப்போவும் வேலை. இன்னிக்குக் காலம்பர ஆரம்பிச்ச வேலை. நடுவில் மத்தியானம் ஒரு மணி நேரம் கண்ணில் மருந்து விட்டுக் கொண்டு படுத்ததோடு சரி. மறுபடி இரண்டரையிலிருந்து இப்போ வரை வேலை! :(

      Delete
  17. சீரியல்கள் பார்ப்பதேயில்லை. தற்போதய தலைமுறை நொய்மை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
    கண்ணுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதை தள்ளிப்போட வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, உங்க பிசியான நேரத்திலும் வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி. தள்ளிப் போடவில்லை. அவங்களே 3 மாசம் நேரம் கொடுத்திருக்காங்க. எனக்கும் மாமியார் ச்ராத்தம், சங்கராந்தி எல்லாம் முடிஞ்சு போக எண்ணம்.

      Delete
  18. செய்திகள், தொடர்கள் எதுவும் பார்ப்பதில்லை. வீட்டில் டிவியும் கிடையாது.

    கணினியில் தேவையான செய்திகள் மட்டுமே பார்க்கிறேன் கீதாக்கா..

    பெற்றோர் வளர்ப்புதான் முதலில் அதன் பின் தான் பள்ளி. மனோதிடம் வேண்டும் வாழ்க்கையை எதிர்க்கொள்ள என்று வளர்க்க்ப்பட வேண்டும். நிறைய இருக்கு இது பற்றி சொல்ல...

    அக்கா கண் சிகிச்சை இப்ப எல்லாம் எளிதாகிவிட்டது. பயம் வேண்டாம் அக்கா. எல்லாம் நல்லபடியா முடியும். எங்கள் எல்லாரது பிரார்த்தனையும்...கணினி பார்ப்பதால் கண் புரை ஏற்படாது பொதுவாக வயதானவர்கள் பலருக்கும் வரும். கொஞ்ச நாள் முன்னரே நீங்க சொன்னீங்க ஃப்ளோட்டர்ஸ் நு. இதன் தொடக்கமா கூட இர்ந்திருக்கும்...பயப்படாம தயார்படுத்திக்கோங்க. ஆப்பரேஷனும் டக்குனு முடிச்சுடுறாங்க. கவனமா இருங்க அக்கா..

    கணினி படுத்தல். மௌஸ் ஓடுது. இப்ப நிக்குது அதனால் அது ஸ்டேபிளா நிக்கும் வரை மத்த தளங்களும் போய் கருத்து போடனும்...

    கீதா

    ReplyDelete