எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 06, 2020

(அசோகமித்திரன்) சித்தப்பாவை விட்டு விடுங்கள்! :(

 சபாஷ் சாரு!

நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்:

அன்புத் தம்பி சூர்யாவுக்கு…

சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை; விமான நிலையத்தில் அற்பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள்; செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார்.  உங்கள் தந்தை சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாததாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரம்.  இது பற்றி உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் நேரம் இல்லை.  தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய்.  ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா?  வெறும் 6000 ரூ.  அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?

தமிழ்நாட்டில் சினிமாதான் மதம்.  நீங்களெல்லாம் கடவுள்கள்.  எம்ஜியார் ஒரு கடவுள்.  சிவாஜி ஒரு கடவுள்.  கமலை மட்டும் ஆண்டவர் என்று சொல்லுவோம்.  ஏனென்றால் அவர் நாஸ்திகர்.  ரஜினி கடவுள்.  விஜய் கடவுள்.  அஜித் கடவுள்.  நீங்கள் கடவுள்.   உங்கள் தம்பி கார்த்தி கடவுள்.  ஏன், முன்பு அப்பாஸ் என்று ஒரு நடிகர் இருந்தாரே அவர் கூட கடவுள்தான்.  அப்படித்தான் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.  நீங்கள் நினைத்தால் முதல்மந்திரியிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்கலாம்.  ஒரு தமிழ் எழுத்தாளனால் முடியுமா?  நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  என் சகாக்கள் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் 200 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.  இவர்களுக்குத் தமிழ் சமூகத்தில் என்ன அடையாளம்?

தம்பி, அசோகமித்திரன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார்.  அவரையெல்லாம் உங்கள் தந்தை சிவகுமார் கரைத்துக் குடித்திருப்பார்.  சிவகுமார் என்னுடைய 20 ஆண்டுக் கால நண்பர்.  என் வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார்.  அவருடைய சித்திரங்கள் என் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன.  அவர் வரைந்த காந்தியின் ஓவியம் என் மேஜை மேல் இருக்கிறது.  ஏன் தெரியுமா?  சிவகுமார் இலக்கியத்தின் வாசகர்.  அதனால்தான் என் வீடு தேடி வருவார்.  ஆனால் நீங்கள் அடுத்த தலைமுறை.  என் மகன் தலைமுறை.  அவனுக்கும் இலக்கியம் தெரியாது.  அவனுக்கும் அசோகமித்திரனைத் தெரியாது.  இதையெல்லாம் நான் அவன் வாயில் புட்டிப்பாலைப் போல் ஊற்ற முடியாது.  நீங்களாகவேதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.  சரி, அந்த அசோகமித்திரன் நம் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த எழுத்தாளர்.  நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளர்களையும் விட சிறப்பான எழுத்தை நம் தமிழுக்குக் கொடுத்திருப்பவர்.  வீட்டில் எழுதுவதற்கான வசதி இல்லாமல் தி. நகர் நடேசன் பூங்காவில்தான் தன் நாவல்கள் பெரும்பாலானவற்றை எழுதினார்.  அவர் 18 ஆண்டுகள் வாசன் ஸ்டுடியோவில் பி.ஆர்.ஓ.வாக இருந்தார்.  அசோகமித்திரனின் தந்தையும் வாசனும் அடாபொடா நண்பர்கள்.  அதனால் தந்தையில்லாத அசோகமித்திரனை ஹைதராபாதிலிருந்து அழைத்துத் தன் சினிமா கம்பெனியில் வேலை கொடுத்தார் வாசன்.  18 ஆண்டுகள் கழித்து ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.  அன்று வாசன் அசோகமித்திரனை அழைத்துத் தன் காரைத் துடைக்கச் சொன்னார்.   இதெல்லாம் சினிமா கம்பெனியில் சகஜம்தானே?  ஷூவைத் துடைக்கச் சொன்னாலும் துடைக்கணும் இல்லையா?  ஆனால் அசோகமித்திரன் அப்படிப்பட்டவர் இல்லை.  எழுத்தாளர் ஆயிற்றே?

”சார், நான் ஒரு எழுத்தாளன்.  என்னைப் போய் இந்த வேலையையெல்லாம் செய்யச் சொல்கிறீர்களே?” என்றார் வாசனிடம் அசோகமித்திரன்.  அதற்கு வாசன் சொன்ன ஒரு பதிலால் அசோகமித்திரனின் ஒட்டு மொத்த வாழ்க்கையே திசை மாறியது.  அப்போது அசோகமித்திரனுக்கு 35 வயது என்று நினைக்கிறேன்.  “ஏம்ப்பா, நீ எழுத்தாளனா இருந்தா இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டியேப்பா?”

அவ்வளவுதான்.  அந்தக் கணமே வேலையை ராஜினாமா செய்து விட்டு அடுத்த 20 ஆண்டுகள் ஏழ்மையில் உழன்றார் அசோகமித்திரன்.  இதெல்லாம் அசோகமித்திரனே எழுதினது.  சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடவில்லை என்று சொல்லியிருக்கிறார்.  எனக்கே தெரியும்.  அவருக்கு ஆஸ்துமா.  மூச்சு விட சிரமப்படுவார்.  மாத்திரை மருந்து வாங்கக் காசு இருக்காது.  தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத வல்லவர்.  ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்தால் இந்நேரம் நோபல் பரிசு பெற்றிருப்பார்.  ஆனால் தமிழில்தான் எழுதுவேன் என்று உங்களுக்கும் எனக்கும் தாய்மொழியான தமிழைத் தேர்ந்தெடுத்தார்.  பட்டினி கிடந்தார்.  அவர் பிள்ளைகள் தலையெடுத்த பிறகுதான் அவரால் சாப்பிட முடிந்தது.  ஆனால் வயிறு சுருங்கி விட்டது.  ஒரே ஒரு மொளகா பஜ்ஜி போதும்ப்பா என்பார்.

அவர் தன் மகன் வீட்டில் இருந்தார்.  அவருடைய அறையில் புத்தகங்களே இல்லை.  எங்கே உங்கள் லைப்ரரி என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன்.  என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு இந்த அறையில் எங்கே புத்தகங்களை வைப்பது?  எல்லாவற்றையும் நண்பர்களிடம் கொடுத்து விட்டேன் என்றார்.

அவர் வீட்டுக்கு எதிரே ஒரு அரண்மனை இருக்கிறது.  அங்கேதான் உங்கள் இசைஞானி வாழ்கிறார்.

தம்பி சூர்யா, பாப்லோ நெரூதா என்று ஒரு கவிஞர் இருந்தார்.  சீலே தேசத்தின் தேசியக் கவி.  அவருக்கு சீலேவின் தலைநகர் சந்த்தியாகோவில் ஒரு மாளிகையும் அவர் பிறந்து வாழ்ந்த வால்பரய்ஸோ என்ற நகரில் ஒரு மாளிகையும் இருக்கிறது. அந்த வால்பரய்ஸோ இப்போது ஒரு டூரிஸ்ட் சொர்க்கமாக விளங்குகிறது.  உலகமெங்கிலும் இருந்து வால்பரய்ஸோவுக்குப் போய் நெரூதா வாழ்ந்த வீட்டைப் பார்த்து மகிழ்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள்.  அதே சீலே தேசத்தில் நிகானோர் பார்ரா (Nicanor Parra) என்று ஒரு கவிஞர் இருந்தார்.  சில மாதங்களுக்கு முன்புதான் இறந்தார். 103 வயது வரை வாழ்ந்த அவரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு சீலே அதிபரே மாதக் கணக்கில் காத்திருப்பார்.  இன்னும் பல தென்னமெரிக்க அதிபர்களும் அவருடைய அப்பாய்ண்ட்மெண்ட்டுக்காகக் காத்துக் கிடந்தனர்.  அவர் நடிக்கும் பால் விளம்பரத்துக்கு அவர் வாங்கும் தொகை ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகை வாங்கும் தொகைக்குச் சமம்.

இதையெல்லாம் இவர் ஏன் உளறுகிறார் என்று உங்களுக்குத் தோன்றும்.  அசோகமித்திரன் சென்ற ஆண்டு மரணம் அடைந்த போது அவருக்குக் கூடிய கூட்டம் 25 பேர்.  அதில் 15 பேர் அவரது உறவினர்.  மற்ற பத்துப் பேர் அவரது ஆயுட்கால நண்பர்கள்.  இப்படிப்பட்ட தேசத்தில் கடவுள்களைப் போல், சுல்தான்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் – அவர்களை அப்படி வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஜனங்கள் எப்பவாவது செல்ஃபி எடுத்துக் கொள்ள முனைந்தால் அது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது.

தம்பி சூர்யா… உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரிந்தால் கொஞ்சம் அசோகமித்திரனின் கதைகளைப் படித்துப் பாருங்கள்.  கரைந்த நிழல்கள் என்ற நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம்.  ஏனென்றால், அது அவருடைய சினிமாக் கம்பெனி அனுபவங்களை வைத்து எழுதியது.

இன்னொரு விஷயம் தம்பி.  இன்று காலை வேந்தர் டிவி என்ற தொலைக்காட்சியிலிருந்து ஒரு பெண் போன் செய்தார்.  சாரு நிவேதிதா மேடம் இருக்காங்களா என்றது குரல்.  குரலுக்கு உரியவருக்கு 25 வயதுதான் இருக்கலாம்.  மேடம் இல்லீங்க, நான் தான் சாரு நிவேதிதா என்றேன்.  ஓ அப்டியா சார்.  சரி சார்.  நாஸ்டிரடாமஸின் predictions பற்றி ஒரு நிகழ்ச்சி பண்றோம்.  அதில் உங்கள் கருத்துக்களைச் சொல்லணும் என்றார்.

எல்லாமே ஓசி சூர்யா.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் எங்களுக்கு ஒரு நாள் போய் விடுகிறது.  ஆனால் காசு கொடுப்பதில்லை.  கேட்டால், நடிகர் சூர்யா போன்றவர்களுக்குக் கூட காசு தருவதில்லை சார்.  அவர்களும் கேட்பதில்லை என்கிறார்கள்.  நான் எதுவும் பதில் சொல்வதில்லை.  உங்கள் சம்பளம் கோடிகளில்.  எங்கள் சம்பளம் ஒரு கட்டுரைக்கு 1000 ரூபாய்.  தொலைக்காட்சிக்கு ஓசி.

நான் அந்தப் பெண்ணிடம் எனக்கு ரொம்ப வேலை இருக்குங்க ஸாரி என்று சொல்லி விட்டேன்.

சாரு நிவேதிதா மேடம்.  எப்படி இருக்கு பாருங்க.  நீங்க என்னடான்னா செல்ஃபி எடுத்து டார்ச்சர் பண்றாங்கங்க்றீங்க!!!

அன்புடன்,

சாரு நிவேதிதா


இது முகநூலில் நண்பர் ஒருவரால் பகிரப்பட்ட பகிர்வு. சாரு நிவேதிதா அவர்கள் நடிகர் சூர்யாவுக்கு எழுதின கடிதமாம். தமிழ் இந்து/ஹிந்து? அல்லது தமிழ் த ஹிந்துவில் வந்திருக்கிறது. இதற்கு அன்றே அங்கேயே பதில் சொல்லி விட்டேன். ஆனால் இன்று மீண்டும் நண்பர் ராம்ஜி யாஹூ மஹாதேவன் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கார். கீழே உள்ளது ராம்ஜி யாஹூ மஹாதேவன் சொல்லி இருப்பது. அசோகமித்திரன் வறுமையில் வாடினார் என்பதாக இவரும் சொல்லுகிறார். என்னமோ கிட்டே இருந்து பார்த்தாப்போல்! 

அசோக மித்திரன் மட்டுமல்ல,  ஜெயமோகன் , எஸ் ரா கூட சினிமா வசன வருமானம் இல்லாவிடில் 

வறுமையாகத் தான வாழ்வை நடத்திக் கொண்டு இருக்க வேண்டும். 

மனைவியர்  சம்பள வருமானம் அடிப்படை செலவுகளுக்கு மட்டுமே சரியாக இருக்கும். 

விமானப் பயணம், முதல் வகுப்பு ரயில் பயணம்  எல்லாம் சாத்தியம்  இல்லை. 

சாரு  சொல்லும் முழு நேர எழுத்தாளர் வறுமை இப்போதும்  இருக்கிறது .


இது நான் ராம்ஜி யாஹூ மஹாதேவனுக்குக் கொடுத்திருக்கும் பதில்!

சித்தப்பா வறுமையில் வாடினார் என்பதெல்லாம் பொய்யான செய்தி. ஏற்கெனவே  ஜெயமோகனுக்குப் பதில் கூறும்போது இதைச் சொல்லி இருக்கேன். அவர்  20 வயது வரைக்கும் ஹைதராபாத்-செகந்திராபாத் வாசம். அவர் தந்தை நிஜாம் ரயில்வேயில் வேலை செய்து வந்தார். இள வயதில் வறுமை சாப்பாட்டுக்கு இல்லை என்பதெல்லாம் முற்றிலும் பொய்யான செய்திகள். அவருக்கு 20 வயதில் தான் சென்னை வந்தார். அதுவும் சொந்த வீடு தி.நகர் தாமோதர ரெட்டித் தெருவில் வாங்கிக் கொண்டு வந்தார்கள். அவர் திருமணம் என் தந்தை ஏற்பாடு செய்தது தான். திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது. சித்தப்பாவின் அம்மா அப்போது இருந்தார். சித்திக்கு அவர் தன்னுடைய வைரத்தோட்டைக் கொடுத்தார். திருமணம் ஆகிப் பெண்ணை அழைக்கையில் சித்திக்கு அவங்க மாமியார் டிஷ்யூ புடைவை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்தக் காலத்திலேயே இது 500 ரூபாய்க்கு மேல் இருக்கும். நான் சொல்லுவது 1963 ஆம் ஆண்டில்.  இவங்க வறுமையில் வாடினார் என்பதெல்லாம் பொய் என நிரூபிக்கவே இதைச் சொல்லும்படி ஆயிற்று. சித்தப்பாவுடன், சித்தி, அவங்க 3 பிள்ளைகள், சித்தப்பாவின் மூத்த அக்கா,சித்தப்பாவின் தம்பி,  இருந்தனர். தம்பிக்குத் தான் என் நாத்தனாரைக் கொடுத்தது. அந்தத் திருமணம் 70 ஆம் ஆண்டு நடந்தது. வறுமையில் வாடுபவர்கள் வீட்டில் யாரும் பெண்ணைக் கொடுப்பார்களா? ஜெயமோகனில் ஆரம்பித்துச் சாரு நிவேதிதா வரை சொல்லும் ஆண்டுகளில் தான் சித்தப்பா வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள்.  சித்தப்பாவின் கல்யாணம், அவர் தங்கை கல்யாணம் (இது அம்மா இறந்த பின்னர் சித்தப்பா நடத்தி வைத்தது) அதன் பின்னர் அவர் தம்பியின் திருமணம். இதற்கு நடுவில் சித்தப்பாவிற்கு 3 பிள்ளைகள் பிறந்தனர். 

எனக்குப் பத்து வயதில் இருந்து சித்தப்பாவைத் தெரியும். நீங்கள் சொல்லும் வறுமையை அவர் அனுபவித்ததாகச் சொல்லப்படும் கால கட்டமும் அது தான். ஆனால் 20 வயது வரை ஹைதராபாதில் இருந்து விட்டுச் சென்னைக்கு வந்தவர் உடனே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார். எங்கிருந்து வந்தது வறுமை? வறுமையில் உழல்பவருக்கா அவர் அம்மா பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்? பேத்தலாக இல்லையோ?   சித்தி எந்த வேலைக்கும் போகவில்லை. வீட்டில் தான் இருந்தார். மனைவியரின் வருமானம் எனக் குறிப்பிட்டிருப்பது சரியல்ல. மாடியும் கீழுமாக உள்ள வீடு. பின்னால் கொல்லைப்புறத்தில் வீட்டை ஒட்டியே இரண்டு ஓடு போட்ட போர்ஷன்கள். ஒன்றில் சித்தப்பாவின் தங்கையும் இன்னொன்றில் வேறொருத்தரும் இருந்தார்கள். கிணற்றடியை ஒட்டி ஓர் ஓட்டு வீடு சின்னதாக இருக்கும். அதிலும் யாரோ குடி இருந்தனர். சித்தப்பா இருந்த வீடு அந்தக் கால மெட்ராஸ் டெரஸ். கீழே மாதிரி மேலே ஒரே மாதிரியான அமைப்பு. படியேறியதும் மேலே இருக்கும் வராந்தாவில் தான் அவர் எழுது பொருட்கள், டைப்ரைடிங் மிஷின் போன்றவை இருந்தன. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த வண்ணம் கூட நடு இரவில் குத்திட்டு உட்கார்ந்து யோசித்துக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பதைப் பல முறை பார்த்திருக்கேன். 

மேலும் அந்த அறுபதுகளில் தான் அவர் கணையாழியின் அசோசியேடட் எடிட்டராகவும் இருந்தார். கணையாழி புத்தகம் ப்ரஸ்ஸிலிருந்து வந்ததும் அனுப்ப வேண்டியவர்களுக்கு விலாசங்களைத் தட்டச்சி அனுப்பும் வேலையைப் பல மாதங்கள் நான் செய்திருக்கேன். வண்டி வைத்துக் கொண்டதில்லை. சைகிள் தான். ஆனால் அதற்காக வறுமை என்றே இருந்ததில்லை. வாசலில் மாடு கட்டிக் கறந்து தான் பால் வாங்கி இருக்காங்க. தினம் தினம் காஃபிக் கொட்டையை வறுத்து அரைத்துத் தான் காஃபி சாப்ப்பிட்டிருக்காங்க. எனக்கு நல்ல காஃபி என அறிமுகம் ஆனதே சித்தப்பா வீட்டில் தான். நான் மட்டுமில்லாமல் என் அண்ணா, சித்தி பிள்ளைகள், பெண்கள், மாமா பெண் எனப் பலர் அந்த வீட்டில் இருந்திருக்கோம். இப்போவும் சொல்கிறேன். அந்த வீடு ஓர் ஆலமரம். விழுது விட்டுப் படர்ந்து அனைவருக்கும் நிழல் தான் கொடுத்திருக்கிறது. வறுமை எனப் பட்டுப் போகவெல்லாம் இல்லை. பிள்ளைகள் சம்பாதித்துத் தான் அவர் சாப்பிடவே ஆரம்பித்தார் என்பதை அவர் பிள்ளைகளான என் தம்பிகளே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரவர் விருப்பப் படிப் படித்தார்கள். அவர்கள் விருப்பமான படிப்புப் படிப்பதில் சித்தப்பாவின் தலையீடு இருக்கவில்லை. மற்றபடி படிக்க வைக்க முடியலைனு எல்லாம் சொல்ல முடியாது. இதைத் திரும்பத் திரும்ப எழுத எனக்கு வெட்கமாக இருக்கிறது. இனியாவது சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொண்டு இப்படி எல்லாம் எழுதுங்கள்! 

நடிகர்களை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். சித்தப்பாவை இதோடு விட்டு விடுங்கள். சித்தப்பாவின்  " பதினெட்டாவது அக்ஷக்கோடு"  படித்தால் உண்மை புரியும். அதில் அவர் சிகந்திராபாதில் இருந்தப்போ நடந்த விஷயங்களையும் நிஜாமின் ராணுவத்தை இந்திய ராணுவம் எதிர்த்ததும், கல்லூரி வாழ்க்கை பற்றியும் பகிர்ந்திருப்பார். அவற்றில் பலவும் உண்மைச் சம்பவங்களே

38 comments:

  1. நேரிலிருந்து பார்த்த மாதிரியே பலரும் சொல்வது, உண்மை தெரிந்த உங்களுக்கு மனதுக்குக் கஷ்டம் தரும்படியாகவே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட். சுமார் பத்து வருடங்கள் முன்னரே ஜெயமோகன் எழுதி இருந்தார். அப்போதும் கண்டனம் தெரிவித்தேன். ஆனால் கருத்துரை வெளியாகவில்லை. அப்போச் சித்தப்பா இருந்தார் என்பதால் நானும் விட்டு விட்டேன். :(

      Delete
  2. யாஓஎழுதிய தவறான செய்திஉங்க ளை சங்கடப்படுத்தி விட்டது போலும் போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும் என்று விடுவதே சிறந்தது

    ReplyDelete
  3. இதை ஒரு இடுகையாக எழுதியது நல்லதுதான். தலைப்பில், சித்தப்பா அசோகமித்திரனை விட்டுவிடுங்கள் என்று போடுங்க. எதிர்காலத்தில் யாரேனும் தேடினாலும் இந்த இடுகை கண்ணில் படும் (சித்தப்பா எழுத்தாளர் அசோகமித்திரனை விட்டுவிடுங்கள் என்பதுபோல).

    அவரின் இரத்த சொந்தங்கள் உண்மை நிலையை எழுதுவதுதான் பிற்காலத்தில் யாரேனும் சாருவை quote பண்ணி ஏதேனும் எழுதினாலும், மற்றவர்கள் refer பண்ணுவதற்கு உரிய ஆவணமாக இருக்கும்.

    சாரு எழுதியதை அப்போதே படித்திருந்தேன். நீங்க ஏதேனும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. முன்னர் எழுதினதை எல்லாம் படிச்சதில்லை போல! இந்த மறுப்புத் தெரிவிக்கும் பதிவு மட்டும் 2,3 போட்டிருக்கேன். சாரு எழுதியது எனக்குத் தெரியாது. நண்பர் ஒருத்தர் முகநூலில் பகிர்ந்திருந்தார். அங்கேயும் மறுப்புத் தெரிவிச்சிருக்கேன்.

      Delete
  4. இப்படி முரணாக எழுதுவது உங்களது மனதை நிச்சயம் காயப்படுத்தும்.

    இதை சம்மந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எங்கே! கில்லர்ஜி! அவங்களுக்கெல்லாம் எழுத்தாளர்கள், அதிலும் தமிழ் எழுத்தாளர்கள் வறுமையில் வாடுவதாகச் சொல்வதே பெருமையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து வறுமையில் வாடியவர்கள் எனப் பார்த்தால் ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் இருக்கும்.

      Delete
  5. பாரதியார் இந்தியமண் என்று திருப்பி புழுதியை எடுத்து பூசிக்கொண்டார் என்று ஒரு செய்தி வந்து பொழுது அவருடைய மகள் சகுந்தலா பாரதி, "எங்கள் அப்பாவுக்கு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அழுக்கு இருந்தால் கூட பிடிக்காது அப்படி இருக்க, அவர் எப்படி தெருவில் விழுந்து புரண்டிருப்பார்?" என்று கூறியிருந்தார். அதுதான் நினைவுக்கு வருகிறது.  

    ReplyDelete
    Replies
    1. சகுந்தலா பாரதியை நான் சித்தப்பா வீட்டில் பார்த்திருக்கேன். ஆவேசமாகப் பேசுவார். அவர் இந்த மாதிரிச் சொன்னது நினைவில் இல்லை.

      Delete
  6. அங்கேயே படித்து விட்டேன்.  இங்கே வலைத்தளத்தில் கொடுத்திருப்பதுபோல அங்கேயும் பேஸ்புக்கில் தனிப்பதிவாக ஒன்று சுருக்கமாகப் போட்டு வலைத்தளத்துக்கு லிங்க் கொடுத்து விடுங்கள்.  அல்லது விளக்கத்தை மட்டும் தனிப்பதிவாக பேஸ்புக்கில் கொடுத்து விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், வலைப்பக்கத்துக்கு லிங்கைத் தான் அங்கே கொடுத்திருக்கேன். நீங்க அதைப் பார்க்கவில்லை போல!

      Delete
  7. தொடர்புடைய பலர் விளம்பரத்திற்காகக் கூட இவ்வாறு செய்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் ஒரு கோணம் இருக்கா?

      Delete
  8. திரு அசோகமித்திரன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் , சாரு எழுதியது தவறு என்று
    அவருக்கு எடுத்துரைக்கலாம் . தமிழ்நாட்டில் ஊடகங்கள் தான்
    இப்படி நேரில் கண்டது போல பல பொய்களை பரப்புகின்றன. எழுத்தாளர்களும்
    அதே பாணியை கடைபிடிப்பது வருத்தம் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுப்ரமணியன். முதல் வரவு? தமிழக ஊடகங்கள் பொய்யைத் தவிர்த்து எதையும் சொல்லுவது இல்லை. சித்தப்பாவின் பிள்ளைகள் மறுப்புச் செய்திகளை வெளியிட்டார்கள். யாரும் அதை எல்லாம் கவனிச்சுக்கவே இல்லை. அவங்களுக்கு இதில் உள்ள சுகம் உண்மை பேசுவதில் இல்லையே!

      Delete
  9. உங்கள் சித்தப்பாவின் எழுத்தை அணுஅணுவாக ரசித்து எழுதியிவர்களின் எழுத்துக்களைப் பகிர்ந்து கொள்வது இதை விட மேலான காரியம். அதுவே ஒருவிதத்தில் உங்களின் பணிகளில் ஒன்று என்று கூடக் கருதுகிறேன். என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். என்னைத் தெரிந்த உங்களுக்கு அவர் படைப்புகள் பற்றி நான் எழுதியிருப்பதை வாசித்திருப்பீர்களா என்பதே சந்தேகம்.

    சாரு, ஜெயமோகன் எல்லாம் புகழ் பெற்றவர்கள். அதனால் அவர்கள் முனகினால் கூட உங்கள் பார்வையில் பட்டு விடுகிறது.

    பசு பதிவுகள் என்று கர்மயோகம் மாதிரி எழுதி வரும் பசுபதி ஸார் பற்றி அறிவீர்கள் என்று நினைக்கிறேன். அவர் பதிவுகளை யாராவது வாசித்து பின்னூட்டம் போட்டிருந்தால் அதுவே அதிசயம். அவர் அமரர் அசோகமித்திரன் பற்றி பகிர்ந்து கொண்டவைகளை வாசித்திருக்கிறீர்களோ?.. ஒரு கருவூலம் மாதிரி அத்தனை மேதைகளின் தகவல்களையும் சேமித்து வைத்திருக்கிறார் அந்தப் பெரியவர். ஒன்று சொல்வேன். எழுத்தாளர்களுக்கு அவரது உறவினர்களை விட அவரது அருமை வாசகர்களே நெருக்கமானவர்கள். இதனை மிகவும் உணர்ந்து சொல்கிறேன்.

    இதோ பசுபதி ஸார்:

    http://s-pasupathy.blogspot.com/2020/12/1714-6.html

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார். நீங்கள் சொல்லி இருப்பது சரி அல்ல. சித்தப்பா படைப்புக்கள் பற்றி நீங்கள் எழுதியவற்றிற்கு நான் கொடுத்த கருத்துரை இன்னமும் அங்கே தான் இருக்கும். அதற்கு நீங்கள் கொடுத்த பதிலும் எனக்கு நினைவில் இருக்கிறது. சாரு, ஜெயமோகன் மட்டுமல்ல பலரும் விமரிசித்திருக்கின்றனர். யாருடையது எனக்குத் தெரிகிறதோ அவர்களுக்கு மறுப்புச் சொல்கிறேன். ஜெயமோகனின் கருத்துரை கொண்ட வீடியோ எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது 2,3 நண்பர்களால்.அதற்கு முன்னரே என் தம்பியூம், சித்தப்பாவின் கடைசி மகனுமான ராமகிருஷ்ணன் தியாகராஜன் அதற்குக் கடுமையாக மறுப்புத் தெரிவித்திருந்தார். மூத்த இருபிள்ளைகளும் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் மறுப்புத் தெரிவித்திருந்தார்கள். சாரு அவர்கள் இப்படி எழுதி இருப்பதே எனக்கு முகநூல் நண்பர் ஒருத்தர் பகிர்வினால் தெரியும். அங்கேயும் மறுப்புத் தெரிவித்தேன். அதன் பின்னரும் இது தொடரவும் தான் பதிவாகப் போட்டிருக்கேன்.

      Delete
    2. கனடா வாழ் தமிழன்பர் பசுபதி அவர்களின் அறிமுகம் எனக்கு எப்போவோ ஏற்பட்டிருக்கிறது. அதோடு சந்த வசந்தம் குழுமத்திலும் அவர் கவிதைகளைத் தொடர்ந்து ஏழெட்டு வருடங்களுக்கும் மேல் படித்து வருகிறேன். சித்தப்பா பற்றி அவர் எழுதியவை மட்டுமல்ல, தேவன், கல்கி, எஸ்விவி, விந்தன், துமிலன் என அந்தக்கால/இந்தக்கால எழுத்தாளர்கள் பற்றி எழுதியவற்றைப் படிப்பதோடு அல்லாமல் சில குறிப்பிட்டனவற்றிற்குக் கருத்துரைகளும் பதிந்துள்ளேன். எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. சொல்லப்போனால் என்னுடைய மின்னூல்களே பனிரண்டுக்கும் மேல் வந்தும் நான் இன்றுவரை அதிகம் சொன்னதில்லை. எப்போதேனும் ஏதானும் கருத்துரை வந்திருந்தால் மட்டுமே சொல்லுவேன். மின்னூல் இந்தச் சுட்டியில் இருக்கு, பார்க்கவும் என்று.

      Delete
    3. சித்தப்பாவின் எழுத்தை விமரிசித்துக் காணொளிகள், கருத்தரங்கங்கள் என என் தம்பியர் மூவரும் சேர்ந்து ஏற்பாடு பண்ணிக் கடந்த 3 வருடங்களாக அவர் பிறந்த நாள்/நினைவு நாளில் நடந்து வருகிறது. யாரும் சும்மாவானும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, முகநூலில் என்னோட பதிவுக்குக் கடைசித் தம்பி சொல்லி இருப்பதை முடிந்த போது போய்ப் படித்துப் பாருங்கள். புரியும். ஜெயமோகன் புகழ்ந்து விமரிசித்திருப்பதால் அவர் சொல்லும்/சொன்ன/சொல்லப்போகிற பொய்கள் அனைத்தும் உண்மையாகிவிடுமா என்ன? அவர் 20 வயதுக்கும் மேல் தான் சித்தப்பாவையே பார்த்திருக்கார். பள்ளி/கல்லூரி நாட்களில் இரண்டாம் உலகப் போர் சமயம் இருந்த இந்தியாவெங்கிலும் உணவுப் பொருள் பற்றாக்குறை சிகந்திராபாதில் இருந்த இவர்கள் வீட்டிலும் இருந்தது. அதைப் பற்றிக் கூட நகைச்சுவையாகவே எழுதி இருப்பார் பதினெட்டாம் அக்ஷக்கோடு புத்தகத்தில். அப்போதும் அரிசியைத் தெரியாமல் அதிக விலை கொடுத்து வாங்குவது பற்றியும் குறிப்பிட்டிருப்பார். சரியான சாப்பாடு இல்லை என்றால் அந்த நாலைந்து ஆண்டுகள் தான். ஆனால் அது அவருக்கு மட்டுமல்லாமல் உலகெங்கும், முக்கியமாய் இந்தியாவில் கல்யாணங்களில் கூட விருந்தினர்கள் வரவைத் தடுக்கும் விதமாக இருந்தது. அல்லது முக்கிய விருந்தினர்கள் தஙக்ள் ரேஷன் கார்ட் மூலம் உணவுப் பொருள் வாங்கிக் கொடுத்ததாகச் சொல்ல வேண்டி வந்தது.

      Delete
    4. ராஜம் கிருஷ்ணன், சூடாமணி ஆகியோர் பற்றிய உங்கள் பதிவுகளிலும் என் கருத்துரை பகிரப்பட்டது.

      Delete
    5. உங்கள் பதிவில் போய்த் தேடினேன். சித்தப்பா குறித்த அந்தப் பதிவை. கிடைக்கவே இல்லை. ஆனால் "தனித்துத் தெரியும் அசோகமித்திரன்!" என்றோ "தனியாக இருக்கும் அசோகமித்திரன்!" என்றோ தலைப்பு இருந்த நினைவு. சித்தப்பா பற்றிய விபரங்களை என்னிடம் கேட்க நினைத்ததாகவும் அதில் என் கருத்துரைக்கு பதிலாகச் சொன்ன நினைவு. தேடி எடுத்துப் போட நினைத்தேன். கிடைக்கவில்லை.

      Delete
    6. பசுபதிவுகளில் சூடாமணி பற்றிய பதிவில் என்னோட கருத்துரையைக் காணலாம். உங்கள் பதிவிலும் சூடாமணி பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் கருத்துரை சொல்லுவதில்லை. அவ்வளவே!

      Delete
  10. கேக்கவே சங்கடமா இருக்கு. இது போல வர்ற பொய்யான செய்திகள் தான் எல்லார் கண்ணிலும் படுது.உங்கள் ஆதங்கம் புரிகிறது,இனியேனும் யாரும் இப்படி எழுதாமல் இருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் நடக்காது ஏடிஎம். எல்லோரும் திரும்பத் திரும்பச் சொல்லியாயிற்று. எல்லோரும் அவருக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு சிறுமை செய்கின்றனர்.

      Delete
  11. கேக்கவே சங்கடமா இருக்கு. இது போல வர்ற பொய்யான செய்திகள் தான் எல்லார் கண்ணிலும் படுது.உங்கள் ஆதங்கம் புரிகிறது,இனியேனும் யாரும் இப்படி எழுதாமல் இருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா, ஒருதரத்துக்கு 2 தரம்

      Delete
  12. அன்பு கீதாமா,
    இதோடு இரண்டு முறை உங்கள் மறுப்புப் பதிவுகளைப்
    படித்திருக்கிறேன்.
    திரு அசோகமித்திரனைப் போல உயர்ந்த மனிதர்களை ஏன் இப்படி
    வறுத்தெடுப்பார்களோ தெரியவில்லை.

    சுய விளம்பரத்துக்காகத் தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. என்ன சொன்னால் என்ன. அவங்க சொல்வதைத் தான் சொல்லிக் கொண்டு இருக்காங்க.

      Delete
  13. நேற்றே ஒன்றைச் சொல்லியிருந்தேன். அது எங்கேயோ போய் விட்டது போல!...

    ReplyDelete
    Replies
    1. துரை, ட்ராஷில் கூடத் தேடிட்டேன். ஒருவேளை கவனிக்காமல் போடலையோனு. ஸ்பாமிலும் இல்லைப்பா!

      Delete
  14. எழுத்தாளர் என்றாலே வறுமையில் வாடுபவராகத்தான் இருக்க வேண்டும்!... - என்று, இவர்கள் தீர்மானித்திருக்கின்றார்களோ என்னவோ?..

    ReplyDelete
    Replies
    1. ஆமா, இல்ல, இப்படித்தான் ஏதோ சொல்லி இருந்தீங்க. அதுக்கு நான் பல எழுத்தாளர்கள் வறுமையில் வாடவில்லை என்றும் சொல்லி இருந்தேனே! இப்போ நினைவில் வருது! அந்தக் கருத்துரை எங்கே? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  15. வல்லிம்மா! அசோகமித்திரன் அவர்களை தன் முன்னோடி ஸ்தானத்தில் அமர்த்தி ஜெயமோகன் எவ்வளவு உயர்வாக அவர் படைப்புகளை சிலாகித்து எழுதியிருக்கிறார் என்று யாரே அறிவார்?. அது பற்றியெல்லாம் நாம் அறியாதிருப்பது ஜெமோவின் குறையல்ல.

    சுஜாதா மறைந்த பொழுது கூட வயது மூப்பு தள்ளாமையுடன் அ.மித்தரன் தனியாகத் தான் வந்து சுஜாதா வீட்டு வாசல் வெளியில் அமர்ந்திருந்தார். பார்க்க பாவமாக இருந்தது. யாராவது குடும்ப உறுப்பினர் துணைக்கு வந்திருக்கக் கூடாதா என்று கூட நினைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜெயமோகன் உயர்வாக எழுதியபோதெல்லாம் அந்தக் கட்டுரைகள்/பதிவுகளில் சித்தப்பாவின் ஏழ்மையையும், அவர் வீட்டில் உட்காரவே இடம் இல்லாமல் நடேசன் பூங்காவுக்குப் போய் எழுதினார் என்றும் எழுதிக்கொண்டே இருந்த பொய்யுரைகளையும் படித்து அங்கேயே கண்டனங்கள் செய்திருக்கேன். வெளியிடவில்லை. சுஜாதா மறைந்தபோது சித்தப்பாத் தனியாகவெல்லாம் போகவில்லை. கடைசிப் பிள்ளை கொண்டு விட்டு விட்டுத் திரும்ப வந்து அழைத்துச் சென்றார்.

      Delete
    2. அவர் வீட்டிலேயே அவர் எழுதவென மாடி வராந்தா, கீழ் வராந்தா என இரு இடங்கள் இருந்தன. அம்மா வந்தாள், ஆங்கில மொழிபெயர்ப்பை மாடியில் உட்கார்ந்து தான் செய்தார். அதைத் தட்டச்சியது நான் தான். அம்மா வந்தாள் நாவலை அப்போது தான் நான் முதல் முதலாகப் படிக்கவும் படித்தேன். நடேசன் பூங்காவிற்குப் போயிருப்பார். அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தபோது தோன்றிய எண்ணங்களைக் குறிப்பாக எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் எழுதுவதற்கு என நடேசன் பூங்காவுக்கெல்லாம் போனதில்லை.

      Delete
  16. கீதாம்மா, உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. இப்பொழுதெல்லாம் கருத்துத் திருட்டு மற்றும் கருத்துத் திரிப்பு அதிகரித்து விட்டது. எனக்கு John Dryden எழுதிய "Mac Flocknoe" என்னும் நையாண்டி கவிதை நினைவுக்கு வருகிறது. படைப்புக்களுக்கு காபி ரைட்ஸ் போல, படைப்பாளிகளின் வாழ்வின் உண்மை தன்மையை காக்கவும் ஏதாவது செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானம்பாடி, சித்தப்பாவே தன் சுய சரிதையை ஓர் நாவலாக எழுதி இருக்கார். அதுக்கு மேல் என்ன வேண்டும்? ஆனால் இவங்களுக்கெல்லாம் இப்படிச் சொல்லத் தான் பிடிக்கிறது.

      Delete