எல்லோர் வீட்டிலும் பொங்கல் கொண்டாடி முடிச்சிருப்பீங்க. சிலர் நாளை மாட்டுப் பொங்கலுக்குத் தயாராகிக் கொண்டிருப்பீங்க. சிலர் நாளைக்காலை கனுப்பிடி வைப்பது பற்றித் தயார் செய்ய நினைத்துக் கொண்டிருப்பீர்கள். சகோதரர்களுக்காக வைக்கும் இந்தக் கனுப்பிடியில் வைக்கும்போது நம் இணையத்து சகோதரர்கள் அனைவரையும் நினைத்துக் கொள்வேன். எல்லோர் வாழ்விலும் சுபிக்ஷம் பெருகவும், அமைதி நிலவவும் பிரார்த்திக்கிறேன். நான் இத்தனை பிரார்த்திக்கொண்டும் ஒன்றும் நடக்கவில்லை என்றும் கொரோனா 3.0 வந்துவிட்டதாகவும் நெல்லை கூறுகிறார். இதற்கு முன்னரும் வியாதிகள் வரவில்லையா என்ன?
நினைவு தெரிஞ்சதில் இருந்து அம்மைப் பால் வைக்க, காலரா ஊசி போட, பிசிஜி ஊசி போட என யாரானும் வந்து போட்டுட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். பின்னர் நம் குழந்தைகள் காலத்தில் தடுப்பு ஊசிகள், போலியோ சொட்டு மருந்து என ஏதானும் கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள், கொஞ்ச காலத்துக்குக் கான்சர் பயம் எல்லோரையும் பிடித்து ஆட்டியது. பின்னர் அது பழகிவிட்டது. இப்போதும் அது கடுமையான நோயாக இருந்தாலும்முன்னளவு பயம் யாருக்கும் இல்லை. பல வீரியமான மருந்துகள் வந்துவிட்டதால் எதிர்கொள்ளும் மனோபலம் வந்து விட்டது. பின்னர் எய்ட்ஸ் என்னும் நோய் வந்தது. எல்லோரையும் பயமுறுத்தியது. அதன் பலன் ஊசி போடும் சிரிஞ்சை உடனடியாகக் கழித்துக் கட்டும் முறை வந்துவிட்டது. இப்போது நமக்கு ஒரு ஊசி போட்டால் அந்த சிரிஞ்சை வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது என்று ஆகிவிட்டது. ஆகவே இப்போது வந்திருக்கும் இந்தக் கொரோனாவுக்கும் அப்படி ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படலாம். காத்திருக்கணும். காத்திருப்போம். நல்லதே நினைப்போம்.
எங்க வீட்டில் இந்த வருஷம் பண்டிகைகள் கொண்டாட முடியாத சூழ்நிலை. என்றாலும் நாளைக் கனுப்பிடிக்காகக் கொஞ்சம் போல் பொங்கலும் எங்க புக்ககத்து வழியில் செய்யும் தனிக்கூட்டும் பண்ணி வைத்து இருக்கேன். நாளைக் கனுப்பிடிக்கு அவை தேவைப்படுமே! மற்றபடி பண்டிகையாகக் கொண்டாடவில்லை.
பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் "மாஸ்டர்" என்னும் படத்தைப்பார்க்க ஒரு நபருக்கு 3000 ரூபாயெல்லாம் செலவு செய்து டிக்கெட் வாங்கிச் சென்றிருக்கின்றனர். ஒரு 3 மணி நேரப் பொழுது போக்குக்கு ஒரு குடும்பத்தின் ஒரு மாத மளிகை சாமான் செலவு! இது அடுக்குமா? இன்னொரு பக்கம் அரசு கொடுத்த பொங்கல் பணத்தைச் செலவு செய்து கொண்டு டாஸ்மாக்கிற்குச் செல்லும் மக்கள்! இந்தப் படத்தை வெளிவந்த அன்றே பார்க்கவில்லை எனில் என்ன ஆகும்? கொரோனா பரவுவது தடுக்கப்படுமா? அல்லது கொரோனாவிற்குப் புது மருந்து கண்டு பிடிச்சிருப்பதாக அந்தப் படத்தில் சொல்றாங்களா? இந்தத் திரைப்பட நடிகர்கள் எல்லாம் புரட்சி செய்வதும், அரசைத் தட்டிக் கேட்பதும் அந்தப் படங்களில் இயக்குநர் சொல்படி நடித்து, வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததை டப்பிங் குரலில் பேசியவை தான். அதற்கே கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கிறாங்க. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ஏதேனும் சமூக சேவையா செய்யறாங்க? எதுவும் இல்லை. கட்சி ஆரம்பித்து அரசியலுக்குப் பிள்ளையைக் கொண்டு வந்தே தீரணும்னு அவர் அப்பா பாடுபட்டுக்கொண்டு இருக்கார். அப்படியே அரசியலுக்கு வந்தாலும் எல்லாவற்றையும் மாற்றி விடப் போகிறார்களா? முடியுமா? இந்தத் திரைப்பட மோகம் என்று ஒழியும்? மக்கள் மனம் எப்போது மாறும்?
இதிலே இன்னும் சிலருக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரணும் என்று பிடிவாதம். வேறு சிலரோ ரஜினி வந்தால் நடப்பதே வேறே என எச்சரிக்கை. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்னும் வழக்குச் சொல் உண்மையாக ஆகிக் கொண்டிருக்கிறது. அரசியலில் நுழைவதே இப்போதெல்லாம் கௌரவமானதாகத் தெரியவில்லை. ஆனாலும் வரும் தேர்தலில் யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பதில் பெரிய போட்டியே நடக்கிறது. யார் ஜெயிக்கப் போறாங்களோ!
எல்லோருக்கும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் பற்றிய கட்டுரைகள் சஹானா.காம் இலும், மின் நிலாவிலும் வந்திருப்பதால் நான் தனியாக ஏதும் எழுதி என்னோட வலைப்பக்கம் பகிரவில்லை. எல்லாம் முன்னாடியே நிறைய எழுதிவிட்டதால் இந்த வருஷம் எதுவும் இல்லை
.சஹானா.காம் இங்கே பார்க்கவும்! பொங்கலோ பொங்கல்!
மின் நிலா இந்தச் சுட்டிக்குப் போனால் அங்கே பொங்கல் மலரின் பிடிஎஃப் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் தரவிறக்கிக் கொண்டு படிக்கலாம்.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடட்டும்..
ReplyDeleteபொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன்..
நன்றி துரை. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
Deleteகாலையில் வருவதற்குத் தவறி விட்டேன்.. மன்னிக்கவும்...
ReplyDeleteஎப்போ முடியுமோ அப்போ வாங்க. அதனால் என்ன?
Deleteவழமை போல் இருந்தால்
ReplyDeleteஅன்புக்குரிய ஸ்ரீமதி கோமதிஅரசு அவர்களிடமிருந்து இனிய பதிவு ஒன்று மலரும் நினைவுகளுடன் கிடைத்திருக்கும்...
அவர்களுக்காக இறைவனை வேண்டிக் கொள்வோம்...
ஆமாம், நானும் இன்று காலையிலிருந்து அவர்களையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். காலம் அவர்கள் மனதை மாற்றட்டும்.
Deleteபொங்கல் வாழ்த்துக்கள் கீசாக்கா..
ReplyDeleteஉண்மைதான் சில மக்களைத் திருத்தவே முடியாது, வசதி உள்ளோர் உசாராகவே இருக்கின்றனர், வசதி குறைந்தோர்தான் இப்படி அடிபட்டுப் படம் பார்ப்போராக இருக்கின்றனர்.. தம் ஹீரோவின் படம் எனச் சொல்லிப் போய்ப் பார்க்கின்றனர், இதனால இவர்களுக்கு என்ன நன்மை.. எடுத்துச் சொன்னாலும் திட்டினாலும் ஒரு சிலர் திருந்துவதே இல்லை.. இதுவும் ஒரு போதைதான்.
வாங்க ஸ்கொட்டிஸ்! அதென்ன சுனாமி? உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். இந்த இளைஞர்கள் அபாயகரமான வேலைகளை எல்லாம் செய்கின்றனர். கட் அவுட்டுக்குப் பாலபிஷேஹம், ஃப்ளெக்ஸ் பானர் கட்டுவது என! :( அவங்க பெற்றோர் பார்த்தால் மனம் வருந்ததா>
Deleteநேற்று வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கலுடன் தனிக்கூட்டும் செய்து சுவைத்தோம்! இன்று கணு! சகோதரிகள் வருவார்கள். அவர்கள் பெண்களும் வருவார்கள். தங்கையின் பேத்தியும் வருவாள்! இன்று கலந்த சாதங்கள் எய்வோம். நான் பணிக்குச் சென்று திரும்ப வேண்டும்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், தனிக்கூட்டு செய்தீங்களா? எந்த முறையில்? பிடிச்சிருந்ததா? இன்று சகோதரிகள் வந்துட்டுப் பண்டிகை மகிழ்வோடு கொண்டாடிட்டுப் போயிருப்பாங்கனு நினைக்கிறேன். என் பிறந்த வீட்டிலும் கலந்த சாதம் எனப்படும் பிசைந்த சாதங்கள் தான். அங்கே இருந்தவரை வருஷா வருஷம் மன்னி கொடுத்து விடுவார். நான் அன்று சமைக்க மாட்டேன். அப்பா இருந்தவரை அங்கே போய்த் தான் சாப்பிடுவேன். எல்லாம் இப்போ நினைவுகள் மட்டும். இங்கே புக்ககத்தில் கலந்த சாதம் இல்லை. துவையல், பொடி, சாம்பார், பாயசம்னு பண்ணுவாங்க.
Deleteதனிக்கூட்டு என்று நான் சொல்வது சரியான்னு தெருயவில்லை. ஏழு தான் கூட்டு. இன்று அவியல். புளியோதரை, தேங்காய் சாதம், சர்கரை சாதம், எல்லாமே டாப். அனைவரும் வந்து சென்றனர்.
Deleteதனிக்கூட்டு முற்றிலும் வேறு. ஏழுதான் கூட்டு வேறே! படம் காட்டி இருந்தீங்களே சாத வகைகள் எல்லாம். பார்த்தேன். நங்கைநல்லூர் போகாமலே புளியோதரை கிடைத்துவிட்டது போல!:)
Deleteமாஸ்டர் படத்தை சில தியேட்டர்காரர்கள் 100% இருக்கைகளை நிரப்பி பார்க்க விட்டார்களாம். அவர்களுக்கு தண்டனை என்ன தெரியுமா? ஐயாயிரம் ரூபாய் அபராதம்!!!!! உதாரணமாக சென்னை காசி தியேட்டர்.
ReplyDeleteஆமாம், பத்திரிகைகள், தொலைக்காட்சி சானல்கள் செய்திகளில் பார்த்தோம். என்ன நடந்தாலும் திருந்த மாட்டார்கள்.
Deleteஐயாயிரம் ரூபாயெல்லாம் ஒரு ஃபைனா? இரண்டு டிக்கெட் காசு.
Deleteவேறே விதத்தில் கொடுத்திருப்பாங்க. அதனால் குறைந்த அபராதத் தொகை போல!
Deleteமின்நிலா சுட்டி தந்திருபப்தற்கு நன்றி. எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி அருமையாய் இரு கட்டுரைகளும் அனுப்பி இருப்பதற்கு நன்றி.
ReplyDeleteஹாஹாஹா, ஶ்ரீராம், கௌதமன் சார் அதை 3 ஆக்கிப் போட்டிருக்கார் போல! இன்னும் முழுசாப் படிக்கலை. எல்லோரும் நெல்லையின் ஃபோட்டோக்கள் பத்திச் சொல்றாங்க. பார்க்கணும். எங்கே நேரமே கிடைக்கவில்லை! :(
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான பதிவு. உங்களின் மன ஆதங்கத்தை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நாங்களும் அனைத்தையும் உணர்கிறோம். என்ன செய்வது? எப்போதுமே நடப்பது அது பாட்டுக்கு நடந்து கொண்டுதான் உள்ளது. மக்கள் உணர்ந்து தங்கள் தவறுகளை சரி செய்ய முயற்சித்தால் நன்று.
தாங்கள் கொடுத்த சுட்டிகளுக்கு சென்று பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. நிதானமாகச் சுட்டிகளுக்குப் போய்ப் பாருங்க. அவசரமே இல்லை. சினிமா மோகம் நம் இளைஞர்களிடையே அதிகமாகவே இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நடிகர் தனக்காகத் தான் சம்பாதித்துச் சொத்து சேர்த்துக்கொள்கிறார். ரசிகர்களுக்கோ/பொதுமக்களுக்கோ எதுவும் செய்வதில்லை. ஆனாலும் ரசிகர்கள் உயிரையே விடுகின்றனர்.
Deleteஇந்த மோகம் குறையாது. அது வேதனையே.
ReplyDeleteஅது குறைந்தால் தமிழ்நாடு மொத்தமாக மாறிவிடும்! ஆனால் அது நடக்காது.
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துகள்...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் திரு தனபாலன் ஐயா!
Deleteபொங்கல் வாழ்த்துகளும் தாமதமாக.... இன்று கனுப்பொடிக்கு கலவை சாதமா?
ReplyDeleteஶ்ரீராமுக்குச் சொல்லி இருக்கும் பதிலைப் படியுங்க நெல்லை. பண்டிகை இருந்தாலே கலந்த சாதம் பண்ணுவதில்லை. பண்டிகையே இல்லை இந்த வருஷம்! சாதாரணமாக சாம்பார் வைத்து வாழைக்காயை வறுத்து வைத்தேன். இன்னிக்கு ரசம் வைக்கக் கூடாது என்பார்கள். அப்படியும் என் பிறந்த வீட்டில் அப்பா ரசம் இல்லாமல் சாப்பிட மாட்டார். ஆகவே வைப்பாங்க. இங்கே கட்டாயமாகக் கிடையாது என்றால் கிடையாது தான்!
Deleteசினிமா பார்ப்பவர்கள், டாஸ்மாக்குக்குச் செலவு செய்பவர்கள் - கொண்டை இருக்கிறவர்கள் முடிந்து கொள்கிறார்கள். வேறு என்ன சொல்ல?
ReplyDeleteஅது சரி, எல்லோரிடமும் பணம் அப்படிச் செழிப்பாக இருக்கிறதா என்ன?
Deleteகொரோனா போய்விடும், தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள் என்று நினைத்தால், புதிது புதிதாக கொரோனா 2.0, கொரோனா 3.0 என்று பயமுறுத்துகிறார்கள். இந்த வருடமும் இப்படியே கழிந்துவிடப்போகிறதே என்ற கவலைதான் கீசா மேடம்.... ஊரடங்கு, ஆன்லைன் வகுப்பு என்று பல விதத்தில் பசங்க படிப்புக்குக் குந்தகம். பெரியவங்க, வெளில சுத்த முடியலை என்பதில் பெரும் பாதகம் இல்லை. பசங்களுக்கு அவங்க எதிர்காலம்னு ஒண்ணு இருக்கே..
ReplyDeleteஆமாம், அடுத்த மாதம் முதல் தேதியில் இங்கேயே சிருங்கேரி மடத்தில் ஒரு கல்யாணம். போகலாமா/வேண்டாமா எனச் சீட்டுப் போட்டுப் பார்க்கிறோம். போகக் கூடாது என்று என் கட்சி. பிள்ளை வீட்டுக்காரங்க அனைவரும் சென்னைவாசிகள். ஆகவே கொஞ்சம் கலவரமாகவே இருக்கிறது. அவங்களும் மனிதர்கள் தான். இல்லைனு எல்லாம் சொல்லலை. ஆனால் அவர்களில் யாருக்கு எந்தக் கொரோனா இருக்குனு தெரியாதே! முன்னர் ஒரு கல்யாணத்தில் ப்யூட்டி பார்லர் பெண்மணி மூலம் கொரோனா இங்கே திருச்சியில் பரவியதாகச் சொல்லுவார்கள். அதான் பயம்!
Deleteநானும் பாஸும் நாளை மாலை ஒரு ரிஸப்ஷன், ஞாயிறு ஒரு திருமணம், செவ்வாய் ஒரு சஷ்டியப்தபூர்த்தி, அடுத்த சனி ஒரு பிறந்தந்நாள் பார்ட்டி, பிப்ரவரி ஏழு ஒரு ரிஸப்ஷன் போயே ஆகணும்.
Deleteஎன் பெர்சனல் அனுபவத்தில் சொல்கிறேன். இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யம் காட்டவேண்டாம். சமீபத்தில் நாங்களும் ஒரு event வைத்து உறவினர்கள் (இங்க உள்ளவங்கதான் பசங்களோடு) மதிய உணவுக்கு எங்களில் சிலர் சமைத்தோம். ஒரு வாரம் கழித்து ஒருவருக்கு கொரோனா என்றதும் பலரும் தங்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு டெஸ்ட் கொடுத்து, அதன் ரிசல்ட் எதிர்பார்த்து.... எதுக்கு வம்பு?
Deleteஉண்மை தான் நெல்லை. எங்க பையர் வற்புறுத்திக் கொண்டே இருக்கார், போகாதீங்கனு! அநேகமாய்ப் போக மாட்டோம்.
Deleteஜாக்கிரதையாய்த் தான் இருக்கணும் ஶ்ரீராம்! ஏற்கெனவே இரண்டு பேரும் நிறையப் பட்டூட்டீங்க. கவனம்!
Deleteஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு வியாதி மனித மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறது. கொரோனா பரவிய வேகத்தால் அதன் பாதிப்பு அதிகமாகி விட்டது. சினிமா மோகம் குறையுமா?
ReplyDeleteமனித குலத்தை மிரட்டினாலும் இது உலகளாவிய அளவுக்குப் பிரபலமாக ஆகியும் விட்டது. இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் 2 முறை 3 முறை என ஊரடங்கை அமல் செய்து கொண்டிருக்கிறார்களே!
Deleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள் - சற்றே தாமதமாக!
ReplyDeleteமாஸ்டர் - திருத்த முடியாத ஜென்மங்கள். ஒன்றும் செய்வதற்கில்லை.
வாங்க வெங்கட், திருத்த முடியாத தமிழர்கள்! :( என்ன சொல்லுவது!
Deleteதாமதமான பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDeleteதிருந்தாத ரசிகர்களைத்தான் நாம் குறை சொல்லணும் கூத்தாடிகள் என்ன செய்வார்கள் ? காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளணும்
அரசியல் நிலவரம் பார்த்தால் இனி தமிழ்நாடு விளங்காது
.
தங்களது பதிவுகள் எனது டேஷ்போர்டில் வரவில்லை தற்போது தாங்கள் சொன்னதால் வேறு வழியில் வந்தால் ??? நிறைய பதிவுகளை படிக்கவில்லை என்பது புரிகிறது இதோ பின்னோக்கி செல்கிறேன்.
நானும் வலைவரவு சற்று குறைவுதான் கணினியை தொட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது. எனது பதிவுகள் செட்யூல்ட்.
அலைபேசி வழியாகத்தான் தற்போதைய வரவு
வாங்க கில்லர்ஜி, டாஷ்போர்டில் வரலைனா என்ன? எ.பியில் பாருங்க, அங்கே இருக்கும். உங்க வேலைகளை முடித்துக் கொண்டு வந்து கருத்துச் சொன்னால் போதுமானது!
Deleteகீதாம்மா , தாங்கள் சொன்னது போல இது போன்ற கிருமிகளை கடந்தே நாம் வந்துள்ளோம். இதுவும் கடந்து போகுமென்றே நினைப்போம். திரைப்படம் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே என வெகுஜனம் உணரவேண்டும். மிக தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள்! நான்கு நாட்கள் வலைப்பூவிற்கே வரவில்லை...
ReplyDeleteஆமாம், பலவற்றைக் கடந்துள்ளோம். திரைப்படம் பொழுதுபோக்கு அம்சமாக எங்கே நினைக்கிறாங்க! அவங்க தான் வந்து ஆட்சி செய்து திரைப்படத்தில் இயக்குநர் சொல்லிப் பண்ணியதை எல்லாம் நிஜத்தில் பண்ணுவாங்க என்னும் எதிர்பார்ப்பில் அல்லவோ இருக்காங்க! ரஜினி வந்தால் எல்லாம் சரியாகும் என்பவர்களை என்னனு சொல்லுவது?
Delete