எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 30, 2021

ஶ்ரீராம் கேட்ட டிஃபன் வகையறா பட்டியல்! சின்னது தான்!

 ஞாயிற்றுக் கிழமை குடும்ப உறுப்பினர்கள் அநேகமாக வீட்டில் இருப்பதால் அன்னிக்கு அடை/பூரி, கிழங்கு/சப்பாத்தி/குருமா என வைச்சுக்கலாம்.

திங்கள் கிழமை மாவு அரைத்து அன்றே தோசை வார்க்கலாம். மறுநாள் இட்லி பண்ணலாம். இட்லிக்குத் தனியாகவெல்லாம் நான் அரைப்பதில்லை.

செவ்வாய்க்கிழமை இட்லினு சொன்னாலும் வேறே ரவா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி, சேமியா கிச்சடி ஏதேனும் ஒண்ணு வைச்சுக்கலாம்.

புதன் கிழமை ரவா தோசை, உசிலி உப்புமானு பச்சரிசி+பாசிப்பருப்பு வறுத்து உடைத்த கலவையில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்துக் கடுகு+பருப்பு வகைகளோடு பமி/இஞ்சி தாளித்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கிப் பின்னர் ரவையைக் கொதிக்கும் நீரில் சேர்த்துக் கடைசியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கணும். இதற்குத் தக்காளித் துவையல், வெங்காயத் துவையல் நல்லா இருக்கும். 

வியாழக்கிழமை பலருக்கும் விரதமாக இருக்கும். ஆகவே அரிசி உப்புமா/கொத்சு, ஜவ்வரிசி உப்புமா,   னு பண்ணலாம்.

வெள்ளிக்கிழமை கோதுமை தோசை/தக்காளி தோசை/கேழ்வரகு அடை, வெஜிடபுள் ஊத்தப்பம் (ரவையும் மோரும்/அல்லது தயிரும் இருந்தால் போதும்) ரவா இட்லி னு பண்ணலாம்

சனிக்கிழமை இன்னிக்கும் பலருக்கும் விரதமாக இருக்கும். ஆகவே விரதப் பலகாரங்களான பச்சரிசி அடை, சேவை, இடியாப்பம்னு பண்ணலாம்.

இதைத் தவிர்த்துப் புளிப்பொங்கல் (அரிசிக்குருணையில் பண்ணுவது) புளி உப்புமா(அரிசி மாவில் புளி கரைத்து உப்புப் போட்டுத் தாளிதங்கள் செய்து பண்ணுவது)மோர்க்களி, பச்சைமாப்பொடி உப்புமா என்னும் மோரில் அரிசிமாவைப் போட்டுப் பண்ணும் உப்புமா, அவல் உப்புமா வகைகள், இதில் உருளைக்கிழங்கு வேகவைத்துச் சேர்த்துப் பண்ணும் ஆலூ போஹா, வெங்காயம் போட்டுப் பண்ணும் காந்தா போஹா, அதைத் தவிர்த்துப் புளி அவல், தேங்காய் அவல், ஜீரகம் சேர்த்த அவல், காய்கள் சேர்த்த அவல் உப்புமா என்று பண்ணலாம். பச்சரிசி, பாசிப்பருப்பை வறுத்துக் கொண்டு பண்ணும் பொங்கலும் விரதங்களுக்கு உகந்ததே. வறுத்து விடுவதால் அதை ஏற்கலாம் என்பார்கள். 

வாரத்தில் ஒரு நாள் எண்ணெயில் பொரித்த பக்ஷண வகைகள் பண்ணலாம். பஜ்ஜி, போண்டா, வடை, மசால் வடை, கீரை வடை, பகோடா, பஜியா எனப்படும் உ.கி.வெங்காயம் சேர்த்த தூள் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி. உ.கி. போண்டா, வெஜிடபுள் போண்டா, சமோசா, ஆலூ டிக்கி, கசோடி எனப் பண்ணலாம். அல்லது முறுக்கு, தேன்குழல், முள்ளுத் தேன்குழல், ஓலை பகோடா, ஓமப்பொடி, மிக்சர், காராபூந்தி, காராசேவு, மிளகு சேவு, தட்டை எனப் பண்ணி வைத்துக் கொண்டு ஒரு பத்து இருபது நாட்கள் ஓட்டலாம். சில நாட்கள் மாலை வேளைகளில் சாப்பிடச் சுண்டல் பண்ணிக்கொள்ளலாம். கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை, காராமணி, பட்டாணிச் சுண்டல்களில் சுண்டல் பண்ணியதும் அவற்றில் காரட், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவிக் கொண்டு எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டு சாப்பிடலாம். பேல்பூரி பண்ணியும் சாப்பிடலாம். அதற்குத் தேவையான சட்னிகள் இல்லைனாலும் பரவாயில்லை. சுகா(ஸூகா) பேலாகச் சாப்பிடலாம். முட்டைப்பொரி, ஓமப்பொடி(மெலிதாகப் பண்ணினது) காரக்கடலை, வேர்க்கடலை, கடலைப்பருப்பு வறுத்தது சேர்த்துத் தக்காளி, வெங்காயம், காரட் துருவிப் போட்டுக் கொண்டுப் பச்சைக்கொத்துமல்லிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக்கலந்து ஊற வைக்காமல் சாப்பிட்டுடணும். 

சட்னி வகைகள் இருந்தால் வீட்டில் செய்த தட்டை, முறுக்கு வகைகளை அந்த பேல் பூரி கலவையில் நொறுக்கிச் சேர்த்துப் பச்சைச் சட்னியும் புளிச்சட்னியும் சேர்த்துக் கலந்து ரொம்ப நேரம் ஊற விடாமல் சாப்பிட்டுடணும். ஒரு வருஷம் உப்பு அதிகமான கோகுலாஷ்டமி பக்ஷணங்களை நான் இப்படித்தான் தீர்த்தேன். இன்னும் எத்தனையோ இருக்கும். இப்போதைக்கு இம்புட்டுத்தேன். 

54 comments:

 1. கீசா மேடம்.... உண்மையாகவே இத்தகைய இடுகைகள்தான் என்னை மிகவும் கவருது.

  ஒரு நாள் என் பையன் சரியான டிஃபன் இல்லை என்றோ சாப்பாடு காம்பினேஷன் சரியில்லை என்றோ அல்லது ஒரு டிஃபன் ரிபீட் ஆகுது என்றோ சொன்னதற்கு நானும் ஒரு லிஸ்ட் அனுப்பியிருந்தேன். (அரிசி உப்புமா, டோக்ளா (ரவா, கமன்), சப்பாத்தி/தால், சப்பாத்தி/வட இந்திய சைட் டிஷ், புளி உப்புமா, மோர்க்கூழ்/அடை, வெரைட்டி ரைஸ்/பொரித்த பப்படம், சேவை, தோசை/சட்னி-வித வித சட்னி ஒவ்வொரு தடவையும், தோசை மி.பொடி/கோதுமை தோசை/ரவா தோசை, இட்லி சாம்பார்/சட்னி, ரவா இட்லி, ஃபிலாஃபி-சப்பாத்தி ரோல், பருப்பு கொழுக்கட்டை-கார சட்னி, தேங்காய் அடை/ராகி ரொட்டி, பூரி மசாலா, தயிர் சாதம்/சைட் டிஷ், ஸ்பெஷல் ஃபுட் (அவல் உப்மா அல்லது ஏதாவது புதுவித முயற்சி) என்று இரண்டு வார cycle. இது ஓகேவான்னு கேட்டேன்...பதிலே சொல்லலை. ஹாஹா (அப்போ போட்ட மெசேஜ்லேர்ந்து இதனை எழுதியிருக்கேன்)

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லையாரே, இதிலே நான் ப்ரெட் வகையறாக்கள், அதிலே செய்யும் உணவு வகைகளைச் சேர்க்கலை. இன்னும் அக்கி ரொட்டி, மேதி ரொட்டி, தேப்லா, தாலிபீத், பராத்தா வகைகள் என எத்தனையோ இருக்கின்றன. பொதுவாக எதுவும் திரும்ப வராமல் செய்யலாம். ஆனால் அதுவும் வீட்டிலுள்ளவர்களுக்கு அலுத்துப் போகிறது. என் மாமியார் இட்லி, தோசை, அடை, அரிசி உப்புமா தவிர்த்த மற்றவற்றை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். போனால் போகிறதுனு வெந்தய தோசை, பொங்கல் ஆகியவற்றுக்கு ஒத்துப்பாங்க.

   Delete
 2. எண்ணெயில் பொரித்த பக்‌ஷணங்கள் - இதை வெறும்ன ஒரு வேளைக்குச் சாப்பிட முடியாது. கூடவே தயிர் சாதம் வேண்டாமா (எனக்குப் பிடித்தது பஜ்ஜி/குனுக்கு அத்துடன் தயிர் சாதம்)

  ReplyDelete
  Replies
  1. நாங்க சாதத்துக்கோ/சாப்பாட்டுடனோ இதை எல்லாம் சாப்பிடுவதில்லை. மாலை வேளைகளில் காஃபி, தேநீருடன் கொஞ்சமாகக் கொரிக்கவே பண்ணுகிறோம். ஆகவே அளவாக இருக்கும். முறுக்கு, தேன்குழ்ல், ஓமப்பொடி போன்ற வகையறாக்களும் அப்படியே!

   Delete
  2. இங்கே பஜ்ஜி வடை சுட்டால் அது மட்டுமே எங்களின் இரவு உணவாக ஆகிவிடுகிறது ஒரு காலத்தில் இதை ஸ்னாக்காக சாப்பிட்டுவிட்டு இரவு உணவையும் சாப்பிடுவோம் ஆனால் இப்போது அப்படி எல்லாம் சாப்பிட முடிவது இல்லை

   Delete
  3. மதுரை சொல்வதுபோல பஜ்ஜி போண்டா போன்றவை செய்தால் முன்பு போல எங்களாலும் இரவு உணவு என்று தனியாக சாப்பிட முடிவதில்லைதான்.  கீதா அக்கா இதற்கு ஒன்றிரண்டு மட்டும் சாப்பிட்டாள்ஸ் சரியாக இருக்கும் என்று பதில் சொல்லக் கூடும்.  நான்கைந்து சாப்பிடுவேன் நான்!

   Delete
  4. நெல்லை சொல்வதுபோல நான் தயிர் சாதத்துக்கெல்லாம் எண்ணெய்ப் பண்டங்கள் தொட்டுக் கொள்வதில்லை.  ஊறுகாய், அல்லது சாம்பார், அல்லது ரசம் (!) 

   Delete
  5. வாங்க மதுரைத் தமிழரே, கொஞ்சமாய்ப் பண்ணிச் சாப்பிட்டால் இரவு உணவைத் தவிர்க்க வேண்டாம். அப்படி ஒரு வேளை நிறையச் சாப்பிடும்படி ஆகிவிட்டால் அன்று நாங்கள் கஞ்சி அல்லது காலையிலேயே ஏற்பாடாகச் சாதம் கூட வைச்சுட்டு மோர் சாதம்னு சாப்பிட்டுப்போம். தனியாக இரவு உணவு பண்ணுவதில்லை. ஶ்ரீராமுக்கும் இதான் பதில்!

   Delete
  6. சுண்டல் தவிர்த்த மற்றவற்றைத் தயிர் சாதத்துக்கு நான் தொட்டுக்கறதில்லை. நம்ம ரங்க்ஸ் சுண்டல் இருந்தால் கூட அதை முதலில் சாப்பிட்ட பின்னரே தயிர்சாதம் சாப்பிடுவார். ஊறுகாய் அல்லது காலை செய்த குழம்பு இருந்தால் அதான் தொட்டுக்க.

   Delete
 3. ஆனால் இந்தக் கிழமை இதுதான் என்று வைத்துக்கொண்டால், அது ஹாஸ்டல் போல மாறிடாதா? எனக்கு +2 ஹாஸ்டல்ல, புதன் மதிய உணவு-மோர்க்குழம்பு, வெள்ளி-பாயசம் இருப்பதால், திங்கள்-லெமென் ரைஸ் மற்றும் தயிர் சாதம் என்று ரொம்பவே பிடித்த உணவுகள். மிஸ் பண்ணிட மாட்டேன். பத்தாவது வரை இருந்த ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை காலை சப்பாத்தி குருமா, புதன் காலை பூரி செட் ஒன்று, 4 இட்லி - இதையும் மிஸ் செய்ய மாட்டேன். வீட்டிலயும் இந்தமாதிரி கிழமைக்கு இந்த உணவு என்பது ரொம்ப மொனாடனஸா ஆயிடும்

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, நெல்லையாரே, எங்க பழைய காடரர் மெனுவைக் கிழமை மாற்றாமல் அப்படியே போடுகிறார் இப்போதும். வேறொரு காடரர் இன்னிக்கு பிசிபேளா சாதம், புளியோதரை, தயிர்சாதம், என்று போடுவதாகச் செய்தி அனுப்பினார். இப்படியும் சிலர்/அப்படியும் சிலர்.ஆனால் எங்க பழைய காடரராகட்டும் மற்றவர்களாகட்டும் பீட்ரூட்டைக் கைவிடுவதே இல்லை. எதிலாவது சேர்த்துடறாங்க.

   Delete
  2. நெல்லை..   சொல்லி வைத்தது போல திங்கட்கிழமை என்றால் இதுதான், செவ்வாய் என்றால் இதுதான்  என்று வந்தால்தான் ஹாஸ்டல் போல இருக்கும்.  பொதுவாக ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டு அதை டிக் செய்து மாற்றி மாற்றி செய்யலாம்.  அப்படிதான் நாங்கள் செய்தோம்.

   Delete
  3. சரியாகச் சொன்னீர்கள் ஶ்ரீராம். நானும் அப்படித்தான் பண்ணுகிறேன். நடுவில் ஒரு மாறுதலுக்கு என அல்லது வீடு/சமையலறை சுத்தம் செய்யும் நாட்களில் காடரரிடம் சாம்பார், ரசம், கறி, கூட்டு என வாங்கிக்கிறோம் இப்போல்லாம். (சுமார் 2 மாத காலங்களாக)

   Delete
 4. எங்க வீட்டுல என் பையன், அடை, பருப்பு கொழுக்கட்டை, குனுக்கு, பருப்பு வடை - எல்லாம் ஒரே மெயின் இன்க்ரெடியன்ஸ்தான் என்று சொல்லிடுவான்.

  இருந்தாலும் உங்க லிஸ்ட் ரசனையாத்தான் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. அடை, குணுக்கு, தவலவடை போன்றவற்றில் அரிசி சேர்ப்போம் பருப்புக்களோடு. ஆனால் கொழுக்கட்டை, பருப்பு உசிலி, பருப்பு வடை போன்றவற்றில் அரிசி சேர்ப்பதில்லை.

   Delete
 5. எங்க வீட்டில் இரண்டு வாரத்திற்கு தேவையான மாவு அரைத்து வைத்துவிடுவேன் தோசை இட்லி என வேண்டும் போது செய்துவிடுவேன், ஆனால் என்ன அதற்கு தொட்டுக்க வேண்டியது மட்டும் மாறும் ஒரு நாள் தோசைப் பொடி ஒரு நாள் தக்காளி சட்னி ஒரு நாள் தேங்காய் சட்னி. கொத்தமல்லி சட்னி, மிளகாய் சட்னி, இட்லி சாம்பார், என்று மாறிக் கொண்டே இருக்கும் . ஆனியன் ரவா தோசை அடை தோசை, அடை தோசையில் ஸ்பீன்ச்சை பொடிப் பொடியாக நறுக்கி போட்டு தோசை, மேலும் ஒரு சப்பாத்தி வித் வெஜிடபுள் குருமா,பைங்கன் பர்த்தா,பண்னீர் பட்டர் மசாலா, சென்னா பொட்டடோ மசாலா பஞ்சாபி ஸ்டைல், பாம்பே சட்னி, மலாய் குஃப்த்தா,பாலக் பன்னீர், பாசிப்பருப்பு, மசாலா, பிந்தி மசாலா

  மற்றும் மெதுவடை, பஜ்ஜி, பூரி, காரவடை, பாஸ்தா, ராவியோலி, பீட்சா, தோக்ளா, ராகி புட்டு வித் வாழைப்பழம், ராகி ரொட்டிவித் உளுந்தம் பருப்பு துவையல், சமோசா சாட், ப்ரட் வெஜிடபுள் சீஸ் டோஸ்ட்,

  ReplyDelete
  Replies
  1. நானும் மாவு அரைத்து வைத்தால் 3,4 நாட்களுக்கு வரும்படி தான் வைச்சுப்பேன். நீங்க சொல்கிறாப்போல் தொட்டுக்கொள்ளும் உணவு வகைகள் மாறி வரும். ரவா தோசை, வெங்காய ரவா தோசைனு எல்லாமும் பண்ணுவேன். பிட்சா வாங்குவதும் இல்லை. பிட்சா பேஸ் வாங்கிப் பண்ணுவதும் இல்லை. டோக்ளா எல்லாம் மத்தியானம் தேநீரோடு தான். புட்டு அவருக்குப் பிடிக்கிறதில்லை. சமோசா அவர் வாங்கிச் சாப்பிடுவார். செலவு ஆகாது என்பதால் வீட்டில் பண்ணுவதில்லை. ப்ரட் பகோடா, சான்ட்விச், வெறும் டோஸ்ட், சீஸ் சான்ட்விச், பட்டாணி சான்ட்விச் என அதிலே நிறைய விதங்களில் பண்ணுவேன். ஆனால் வாங்குவது சால்ட் ப்ரட் அல்லது சான்ட்விச் ப்ரட்/ப்ரவுன் ப்ரட்!

   Delete
 6. எங்க வீட்டில் இரண்டு வாரத்திற்கு தேவையான மாவு அரைத்து வைத்துவிடுவேன் தோசை இட்லி என வேண்டும் போது செய்துவிடுவேன், ஆனால் என்ன அதற்கு தொட்டுக்க வேண்டியது மட்டும் மாறும் ஒரு நாள் தோசைப் பொடி ஒரு நாள் தக்காளி சட்னி ஒரு நாள் தேங்காய் சட்னி. கொத்தமல்லி சட்னி, மிளகாய் சட்னி, இட்லி சாம்பார், என்று மாறிக் கொண்டே இருக்கும் . ஆனியன் ரவா தோசை அடை தோசை, அடை தோசையில் ஸ்பீன்ச்சை பொடிப் பொடியாக நறுக்கி போட்டு தோசை, மேலும் ஒரு சப்பாத்தி வித் வெஜிடபுள் குருமா,பைங்கன் பர்த்தா,பண்னீர் பட்டர் மசாலா, சென்னா பொட்டடோ மசாலா பஞ்சாபி ஸ்டைல், பாம்பே சட்னி, மலாய் குஃப்த்தா,பாலக் பன்னீர், பாசிப்பருப்பு, மசாலா, பிந்தி மசாலா

  மற்றும் மெதுவடை, பஜ்ஜி, பூரி, காரவடை, பாஸ்தா, ராவியோலி, பீட்சா, தோக்ளா, ராகி புட்டு வித் வாழைப்பழம், ராகி ரொட்டிவித் உளுந்தம் பருப்பு துவையல், சமோசா சாட், ப்ரட் வெஜிடபுள் சீஸ் டோஸ்ட்,

  ReplyDelete
 7. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை.. ஆகா.. என்ன விவரிப்பு! டிபன் ஐயிட்டங்கள் அத்தனையும் சொல்லி அசத்தி விட்டீர்கள். ஆனால் இதையெல்லாம் தினமும் ஒவ்வொன்றாக செய்தும்,எங்கள் வீட்டில் "வேறே டிபனே உனக்கு தெரியாதம்மா?" என்கிறார்கள். "எங்கள் அம்மா வீட்டில் வாரத்திற்கு நான்கைந்து நாட்கள் சேர்ந்தாற் போல் இட்லி சாப்பிட்டு வளர்ந்தவள் நான்" என்றால், "போம்மா அது அந்த காலம்" என்கிறார்கள்.
  இப்போ சமீபத்தில் பச்சரிசியை குருணையாக்கி, புளி சேர்த்து வத்தல், கடுகு வெந்தயம் தாளித்து அரிசி உப்புமா செய்தேன்.கிட்டத்தட்ட புளியோதரை ருசியில் அப்போது பாட்டி கற்சட்டியில்,விறகடுப்பில் செய்து தந்து சாப்பிட்டிருக்கிறேன். எப்போதும் செய்யும் அரிசி உப்புமா மாதிரி இது இல்லை எனவும், இது அவ்வளவாக பிடிக்கவில்லை.எனவும் இப்போது குற்றச்சாட்டுக்கள்

  உங்கள் விதவித டிபன் பட்டியல்கள் நன்றாக உள்ளன. அனைவருக்கும் காலையில் உட்கார்ந்து இதையெல்லாம் ஒவ்வொரு வகை செய்து, பின் சமையலை முடிக்க மதியமாகி, சாப்பாடு முடிந்த கையோடு, அடுப்பு துடைத்து காஃபி போட்டு இரவுக்கு ஏதேனும் செய்து வார இறுதியில், பஜ்ஜி வடைகள் என என்னுடைய நாட்கள் கிச்சன் கைதியாக ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன.

  நொறுக்குத்தீனிகள் கோகுலாஷ்டமி. தீபாவளி சமயத்தில் அதிகமாக செய்வோம். மற்ற சமயத்தில் குழந்தைகளுக்கு கடையில் வாங்கியவைகளை மாலை சாப்பிடுவார்கள். தினமும் எண்ணெய் சேர்த்தாலும் உடம்புக்கு ஆவதில்லை. இப்போது நாங்கள் ஒரு வருடமாக வெளியில் சாப்பிடுவது அறவே இல்லையாததால் எல்லாமே வீட்டில்தான். தங்கள் பகிர்வு அருமையாக உள்ளது. இதைப் படிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தினம் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றியும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, நீங்க பச்சரிசிக் குருணையில் பண்ணுவது போல் நாங்களும் பண்ணுவோம். புளிப்பொங்கல் என்போம். அதுக்குக் கத்தரிக்காயைச் சுட்டுத் தயிரில் போட்டுப் பிசைந்துக் கடுகு, பச்சைமிளகாய் தாளித்து உப்புச் சேர்த்துப் பச்சடி பண்ணினால் தொட்டுக்கொள்ள நன்றாய் இருக்கும். முன்னெல்லாம் நாங்களும் கோகுலாஷ்டமி, தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகைகளின் போது நிறைய பக்ஷணங்கள் செய்து கொண்டிருந்தோம். இப்போல்லாம் சாப்பிட ஆள் இல்லை. பாராட்டுகளுக்கு நன்றி. நாங்களும் ஓட்டல்களில் எல்லாம் உணவுப் பண்டங்கள் வாங்குவது இல்லை. தெரிந்த காடரர் என்பதால் எப்போதேனும் மாதம் ஓரிரு நாட்கள் வாங்கிப்போம்.

   Delete
 8. உணவு பட்டியல் நன்றாக இருக்கிறது. நாம் செய்வதை ரசித்து சாப்பிட ஆட்கள் இருந்தால் செய்ய அலுப்பு இருக்காது.

  ReplyDelete
 9. மிக மிக சுவையான பதிவு. இங்கே பல டிபன் வகைகளுக்கு நோ .நோ:) அதனால் பல பலகாரங்கள் எனக்கும் மகள், மாப்பிள்ளைக்கு மட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, எங்க பெரிய பேத்திக்கு தோசையும், அடையும் மட்டும் போதும். வேறே எதுவும் வேண்டாம் என்பாள். அப்புவுக்கு அடையே ஒத்துக்காது. சேவை பிடிக்காது. ஆகவே அங்கேயும் யோசிச்சுத் தான் செய்யணும். பையரோ பல வருஷங்களாக இரவுக்குச் சப்பாத்தி மட்டுமே சாப்பிடுகிறார். இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சம் தோசை, அடை எனச் செய்கிறாள் மருமகள்.

   Delete
 10. நல்ல லிஸ்ட்.  நன்றி என்னைக் குறிப்பிட்டிருப்பதற்கு.  முன்பு சில வருடங்களுக்குமுன் நாங்களும் இப்படி மாற்றி செய்ததுண்டு.  ஆனால் தொடர முடியவில்லை.  பல்வேறு கரணங்கள்.  டிஃபன் வகையறா மட்டுமல்ல, சமையலும் இப்படி பிளான் செய்து சமைத்திருக்கிறோம்.  அப்போதுஎல்லாம் நாங்கள் சமைப்பதை மகன்கள் சாப்பிட்டார்கள்!

  ReplyDelete
  Replies
  1. நான் அநேகமாய்க் காலை உணவு, மதியச் சாப்பாடு ஆகியவற்றை அனுசரித்து இரவு உணவு தயார் செய்வேன். ஏனெனில் இரண்டு பேருக்கு என்னும்போது மிஞ்சக் கூடாது அல்லவா! சமையலும் அநேகமாய் மாத்தி மாத்தித் தான்!

   Delete
 11. ரவா தோசைக்கு சொல்லி இருக்கும் குறிப்புகள் சுவாரஸ்யம்.  ஆனாலும் எங்கள் வீட்டில் முன்பு வந்ததுபோல ரவா தோசை மெல்லிசாக வருவதில்லை.  உடம்புக்கு ஆகாது என்றாலும் எப்போதாவது மைதா தோசை சாப்பிடுவதுண்டு.  அதேபோல கோதுமை கார தோசை, கோதுமை இனிப்பு தோசை!

  ReplyDelete
  Replies
  1. அது ரவாதோசைக்குறிப்பு இல்லை. உசிலி உப்புமாவுக்கான குறிப்பு. ரவாதோசைக்கு நீங்க இரண்டு கிண்ணம் ரவை எனில் ஒன்றரைக்கிண்ணம் அரிசி மாவு போட்டுவிட்டு அரைக்கிண்ணம் உளுத்தமாவு சேர்த்துக் கரைத்து வார்த்துப் பாருங்கள். மெலிதாக வரும். நான் மைதாமாவு சேர்ப்பதில்லை. அப்படிச் சேர்க்கணும்னா ஒரு கரண்டி கோதுமை மாவைச் சேர்ப்பேன். நன்கு நீர்க்கக் கரைத்து விட்டு அரைமணி, முக்கால் மணி வைத்துவிட்டுப் பின்னர் வார்த்தால் தோசை மெலிதாக வரும்.

   Delete
 12. இன்னொன்று தெரியுமா?  எங்கள் வீட்டில் இட்லி கடைசியாகச் செய்தது ஆகஸ்ட் 25 ஆம் தேதி!  எப்படி அவ்வளவு சரியாய்ச் செல்கிறேன் என்றால் கொரோனாவுக்கு முன்!  மகன்கள் எதிர்ப்பால் இட்லி இடுவதில்லை.  ஆனாலும் எங்களுக்கெல்லாம் பிடிக்கத்தான் செய்கிறது.  அப்படியே விட்டுப் போகிறது.

  ReplyDelete
  Replies
  1. நாமெல்லாம்/முக்கியமாய் நாங்கல்லாம் குழந்தைகளாய் இருந்தப்போப் பெரியவங்க பண்ணுவது தான் டிஃபன். அதைத் தான் வாய் திறக்காமல் சாப்பிட்டு வந்தோம். இப்போல்லாம் குஞ்சுலு கூட அப்படிச் சாப்பிடுவதில்லை. அவரவருக்கு எனத் தனியான ருசி, கருத்து! இட்லி எங்க வீட்டில் பதினைந்து நாட்களுக்கு ஒரு தரம்/சில சமயம் 2 தரம் இருக்கும். தொந்திரவில்லாத டிஃபன்!

   Delete
  2. எனக்கெல்லாம் இட்லி பண்ணி, இ.மி.பொ. நல்லா காரமா தடவி வச்சுட்டா, நிச்சயம் சாப்பிட்டுடுவேன் (அதிகமா வச்சாலும் சாப்பிட்டுடுவேன்.. எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தது சாயந்திரம் செய்து மறுநாள் அந்த ஊறின இ.மி.பொ. இட்லி சாப்பிடுவது)

   கீசா மேடம் சொல்லியிருக்கற மாதிரி இந்தக் காலத்தவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ருசி இருந்துகொண்டு, கஷ்டமாத்தான் இருக்கு. நான்லாம் சின்ன வயசுல எந்த டிபன் கொடுத்தாலும் (கோதுமை ரவை உப்புமா தவிர) சந்தோஷமா சாப்பிடுவேன்..ஆனால் கொஞ்சம் டிபன், மீதி தயிர் சாதம்னுதான் போடுவாங்க. ஹா ஹா

   Delete
  3. வாங்க நெல்லை, எனக்கு மிளகாய்ப் பொடியே ஒத்துக்காது. உடனே 2 மணி நேரத்தில் நெஞ்செரிச்சல் வந்துடும். இன்னிக்கு இட்லிக்குப் போட்டுக்கொண்டு தயிரையும் விட்டுக் கொண்டு சாப்பிட்டிருக்கேன். இனிமேல் தான் தெரியும் அதன் பலாபலன். கோதுமை ரவை உப்புமா சின்ன வயசில் நானும் சாப்பிட மாட்டேன். இப்போல்லாம் அடிக்கடி பண்ணுகிறேன்.

   Delete
 13. இன்னொரு விஷயம் எங்கள் வீட்டில் நடப்பது என்னவென்றால் தோசையோ, இட்லியோ சப்பாத்தியோ செய்துவிடுவார் பாஸ்.  ஆனால் சட்னி, சாம்பார், தால், குருமா போன்றவை மிகுந்த இடைவெளி விட்டுதான் செய்வார்.  கேட்டால், போன மாசம் கூட சட்னி செய்து தந்தேனே. உங்களுக்கெல்லாம் விசுவாசமே இல்லை என்பார்!!!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், நான் காய்கறி என்ன இருக்கிறது என்பதற்குத் தகுந்தாற்போல் தான் சப்பாத்தியா, தோசையா, இட்லியா என முடிவு செய்துப்பேன். இட்லி மாவு இருந்தால் அதைத் தீர்க்கணுமே! அப்போப் பார்த்துக் காய்கறி நிறைய வாங்கி வந்துட்டா ஒரு நாளாவது இரவு டிஃபனை மாத்தும்படி ஆயிடும். எதுவானாலும் தொட்டுக்க வசதியாப் பண்ணினால் தானே சாப்பிட முடிகிறது. என் கணவரின் உறவினர்களில் சிலர் வீடுகளில் சப்பாத்திக்குக் காலம்பரப் பண்ணின வத்தக்குழம்பு, சாம்பார் எனத் தொட்டுப்பாங்க. இன்னும் சிலர் பூரிக்கும் சாம்பார் தொட்டுப்பாங்க. எங்க வீட்டிலே தொண்டைக்குக் கீழே அதெல்லாம் இறங்கவே இறங்காது!

   Delete
  2. பூரிக்கு சாம்பாரா..ஐயே....என்று தோன்றியது... எனக்கு தேங்காய் சட்னி பூரிக்குப் பிடிக்கும். ஆனால் சாய்ஸ் அருமையான பூரி மசாலாதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.

   சப்பாத்திக்கு சாம்பார், அதிலும் ஒரு சப்பாத்தி, அதன் மேல் கொஞ்சம் சாம்பார், அதன் மேல் ஒரு சப்பாத்தி என்று அடுக்கிவைத்துச் சாப்பிடப் பிடிக்கும்.

   Delete
  3. ஆமாம், நெல்லை, நாங்க திருப்பதி போயிருந்தப்போக் கீழத்திருப்பதி பீமவிலாஸில் மாலை பூரி கேட்டப்போத் தொட்டுக்கத் தேங்காய்ச் சட்னி, சாம்பார் எனக் கொண்டு வைத்தார் சர்வர். நான் அப்படியே திருப்பி விட்டேன். பின்னர் மசால் தோசைக்கான கிழங்கைத் தொட்டுக்கக் கொடுத்தார். சுமாராக இருந்தது.

   Delete
 14. அமர்க்களமான பட்டியல்.
  அதுவும் உடனே உடனே செய்முறையும்
  எழுதி ,வித விதமான முறையில்
  பிரமாதமாகக் கொடுத்திருக்கிறீர்கள்.
  ஸ்ரீரங்கத்தில் பக்கத்து வீடு காலியாக இருந்தால் வந்து விடுகிறேன்.

  உங்களுக்கு அஃபிஷியல் டேஸ்டராக இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, வாங்க வல்லி! வீடு காலியா இருக்கணும்னு எல்லாம் இல்லை. நம்ம வீட்டுக்கே வந்துடலாம். வாங்க வாங்க.

   Delete
  2. நன்றி கீதாமா.
   தாராள மனசு. என்னிக்கும் நன்றாக இருக்கணும்.

   Delete
 15. Good list, good ideas,thank you. I used to make such weekly list during our days in Canada, as I was working too. But now-a-days all changed, instant plan only :)

  ReplyDelete
  Replies
  1. ஏடிஎம், இந்தப் பட்டியல் எல்லோருக்கும் பொருந்தும் எந்தச் சமயத்திலும்! ஆனாலும் நமக்குத் திடீர்னு ஒரு பண்டம் சாப்பிட ஆசைன்னா அதுக்கு நீங்க சொல்றாப்போல் அதிரடித் திட்டம் தான் சரி.

   Delete
 16. வாரம் முழுவதற்குமான டிஃபன் மெனு - கலக்கல். ஸ்ரீராம் கேட்டதால் எங்களுக்கும் இப்படி ஒரு மெனு கிடைத்திருக்கிறது! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்! முடிஞ்சா இந்த மெனுப்படி செய்து பாருங்க. நேரம் ஒத்துழைக்கணுமே! இட்லி, தோசை மாவுக்கு என்ன பண்ணுவீங்க? மிக்சியில் அரைச்சாலும் குளிர்நாளில் புளிப்பே ஏறாது.

   Delete
 17. கீதாம்மா, எங்கள் வீட்டில் டைம் டேபிள் மெனு தான்.

  1.ஞாயிறு- கொள்ளு கஞ்சி (காலை). veg பிரியாணி,ரசம், பஜ்ஜி (மதியம்). இட்லி (இரவு)

  2. திங்கள் - சாப்பாடு, கத்திரிக்காய் குழம்பு, வெண்டைக்காய் பொரியல்,ரசம் (காலை and மதியம் ). தோசை அண்ட் கொத்தமில்லி சட்னி (இரவு)

  3.செவ்வாய் - சாப்பாடு , கீரை கூட்டு, பருப்பு போட்டு கேரட் சாம்பார், ரசம் .( காலை and மதியம்) சில சமயம் பீட்ரூட் பொரியலும் உண்டு. சேமியா அல்லது ரவா உப்மாவ் (இரவு)

  4.புதன் - உளுந்து அரிசி காஞ்சி( காலை). நீர் காய் அல்லது பச்சைக் காய்கறி கூட்டு, உருளை கிழங்கு fry, ரசம் (மதியம்). சப்பாத்தியுடன் சோம்பு ,முந்திரி தேங்காய் போட்டு அரைத்த குருமா இரவு)

  5.வியாழன்- மூக்கு சுண்டல் புளி போட்டு குழம்பு, வாழைக்காய் துருவி பொரியல், கீரை கூட்டு, புளி ரசம்.( காலை அண்ட் மதியம்) . ரவா தோசை(இரவு)

  வெள்ளி - பொங்கல் and தக்காளி சட்னி புளி போட்டு தேங்காய் சேர்க்காமல்.(காலை). லெமன் சாதம், or தேங்காய் சாதம், தயிர் சாதம் (மதியம்).தோசைஅல்லது பணியாரம் (இரவு)

  சனி - black பீன்ஸ் சுண்டல், அவல்(காலை) . பாசி பருப்பு சேர்த்து கூட்டு, அப்பளம் (மதியம்). அடை அல்லது கீரை தோசை.

  அமாவாசை, மாதப்பிறப்பு மற்றும் விஷேஷ நாட்களில் மாறுபடும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானம்பாடி, உங்க பட்டியலும் நல்லாவே இருக்கு. கொள்ளு எங்களுக்கு ஒத்துக்கொள்வதில்லை. முன்னெல்லாம் வறுத்துத் துவையல், ரசம்னு வைப்பேன். இப்போல்லாம் சாப்பிடுவதில்லை. நல்ல அருமையான ஆரோக்கியமான உணவுப் பட்டியலைக் கொடுத்திருக்கீங்க! வாழ்த்துகள். எங்களுக்கும் அமாவாசை, விசேஷ நாட்களிலும் விரத நாட்களிலும் மாறுபடும்.

   Delete
 18. கீதாம்மா, குழந்தைகளுக்கு evening snacks கடலை உருண்டை, கொழுக்கட்டை, சத்துமாவு உருண்டை, ராகியுடன் வெல்லம் கலந்து செய்யும் தோசை தருவடுண்டு...சிறுதானியம் உணவில் சேர்க்க வேண்டும் என்பதற்காக மாவரைக்கும் பொழுது, வரகோ, தினையோ சேர்ப்பதுண்டு. பின் கஞ்சி செய்யும் பொழுது அரிசிக்கு பதில் வருகு சேர்த்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. மீள் வருகைக்கும், விளக்கத்திற்கும் நன்றி. இங்கே குழந்தைகள் நாங்க இருவர் தானே! கடலை உருண்டை நான் அடிக்கடி பண்ணி வைச்சுப்பேன். மாவு உருண்டை எப்போதாவது தான். மற்றபடி சிறுதானியங்கள் எங்கள் உணவில் எந்த விதத்திலாவது இடம் பெற்று விடும்.

   Delete
 19. அம்மாடியோவ் லிஸ்ட் பார்த்து மயக்கம் வருது :)நாமெல்லாம் அன்னனிக்கு தோணறதை செய்வோம் :) ஒரு டவுட் அன்னிக்கே அரைச்சு உடனே எப்படி தோசை சுட வரும் ? நீர்தோசைகூட கன்னாபின்னான்னுதான் வரும் எனக்கு :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல்! அரைச்ச உடனேயே தோசை வார்ப்போம். முன்னெல்லாம் செங்கோட்டைக் கல் என உள் குழிவு இல்லாமல் சமமான தோசைக்கல் ஒண்ணும் எங்க வீட்டில் உண்டு. அம்மா அதிலே தான் அன்றே அரைச்சு அன்றே வார்க்கும் புளியா தோசை வார்ப்பார்கள். மெத் மெத்தென்று ஓரம் மட்டும் முறுகலாக நன்றாக இருக்கும். அந்தக் கல்லை என்ன செய்தாங்கனு தெரியலை. என்னிடம் இருப்பது அடைக்கல் என்று சொல்லப்படும் உள் குழிவான தோசைக்கல் தான். ஆனாலும் அதிலே தான் தோசை வார்க்கிறேன். அன்றே அரைத்து உடனேயே தோசை வார்ப்பது உண்டு. நீர்தோசை மிக நன்றாக வருமே. கொஞ்சம் கூடப் பிசகாது. நீங்க தோசைக்கல்லில் தேய்த்ததும் எண்ணெய் தடவி வைங்க. தோசை வார்க்க எடுக்கும்போது நன்கு அலம்பிட்டு அடுப்பில் போட்டு நல்லெண்ணெயைத் தாராளமாகத் தடவி தோசைக்கல்லை நன்கு காய வைங்க. அதிலிருந்து எண்ணெய் காய்ந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக ஆவி வரும். அப்போது அடுப்பைத் தணித்துவிட்டு தோசை மாவை ஊற்றலாம். நிதானமாகவே எரிய வைத்து வார்த்தால் சீக்கிரமாகவே ஆகும். முதலில் கல் நன்றாய்க் காய வேண்டும். பின்னர் பிரச்னை வராது. அப்படியும் வந்தால் எண்னெய் விட்டுக் கடுகு, உபருப்பு தோசைக்கல்லில் தாளித்து எடுத்துக் கொள்ளுங்கள். எந்தச் சட்னி அரைச்சாலும் சேர்த்துடலாம். பின்னர் தோசை வார்த்தால் நன்றாக வரும்.

   Delete
 20. சுவாரஸ்யமாகப்படித்தேன். எல்லாம் சாப்பிட நன்றாக இருக்கும்.அரைத்து அரைத்து ஓய்ந்தன கைகள் என்று என் எழுபது வயதுவரைக் கல்லுரல். இப்போது யாவும் எண்ண உரல்.அதுவும் நன்றாக இருக்கிரது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. நமஸ்காரங்கள் அம்மா. நானும் கல்லுரலுக்கு இப்போது 20 வருடங்களாக ஓய்வு கொடுத்திருக்கேன். ஆனாலும் விடாமல் தூக்கி வந்திருக்கோம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அம்மா.

   Delete
 21. நல்ல ரசனையான லிஸ்ட். டிபன் செய்வதை விட கஷ்டம், அதுக்கு தோதாக சைட்  டிஷ் செய்வது. ஸ்ரீ ராம் எப்போது லிஸ்ட் கேட்டார்? நான் ரெகுலராக வருவதில்லையோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, நான் சொல்வதும் அதே தான். நீங்கள் எல்லாப் பதிவுகளையும் பார்ப்பதில்லை. எங்கள் ப்ளாக் சைட் பாரில் பார்த்துவிட்டுத்தலைப்பு உங்களைக் கவர்ந்தால் வருகிறீர்களோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு! :))))) முடிஞ்சப்போ வாங்க, பரவாயில்லை. போன பதிவில் தன்னுடைய கருத்துரையில் ஶ்ரீராம் அவருடைய பாஸுக்குத் தினம் தினம் என்ன டிஃபன் செய்வது என்ற குழப்பம் என்றார். ஆகவே பட்டியல் கொடுத்தேன்.

   Delete