எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 19, 2021

செந்தமிழ் நாடென்ற போதினிலே!

 பல்லாண்டுகளாக சம்ஸ்கிருதத்தில் செய்தி வாசிப்பது வானொலி மட்டும் இருந்த நாட்களில் இருந்தே உண்டு. அப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி தான். அதே போல் கேந்திரிய வித்யாலயா துவங்கப்பட்டதில் இருந்து (அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் தான்) அங்கே ஹிந்தி, சம்ஸ்கிருதம்(எட்டாம் வகுப்பு வரை), ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி திவஸ்/எல்லோரும் நினைக்கிறாப்போல் தமிழில் அர்த்தம் கொள்ளப்படும் ஸ்ராத்தம் அல்ல! திவஸ் என்றால் நாள். சம்ஸ்கிருத திவஸ் இரண்டுமே அந்தப் பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வந்தன. ஹிந்திக்கான நாள், சம்ஸ்கிருதத்துக்கான நாள் என்று தான் பொருள். தமிழில் ஆசை என்பது கொடுக்கும் அர்த்தம் ஹிந்தி/சம்ஸ்கிருதத்தின் 
ஆஷா" கொடுக்காது. அங்கெல்லாம் "ஆஷா" என்றால் நம்பிக்கை என்னும் பொருள். இப்படிப் பல வார்த்தைகளுக்கே பொருள் மாறுபடும். ஆனால் நாம் புரிஞ்சுக்கறது தப்புத் தப்பாய்! 

எங்க பெண்/பையர் எல்லோரும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கேந்திரிய வித்யாலயாவில் படித்தவர்களே! அப்போதே மாநில மொழி எந்த மாநிலத்தைச் சேர்ந்து பள்ளிகள் இருக்கின்றனவோ அங்கே உள்ள மாநில மொழி கற்பிக்கப்படும். தமிழ்நாட்டில் தமிழ் என்பது போல் கேரளத்தில் மலையாளம். இதுவே வட மாநிலங்கள் எனில் அங்கே மாணவர்களின் பெரும்பான்மையையும், கற்பிக்கக் கிடைக்கும் ஆசிரியரையும் பொறுத்து மொழி தேர்ந்தெடுக்கப்படும். எங்க பையர் ராஜஸ்தான் கேந்திரிய வித்யாலயாவில் படித்தபோது மலையாளம் கற்றார். மலையாள மாணவ, மாணவிகள் 20 பேர் இருந்ததோடு ஆசிரியரும் மலையாள மொழிக்குத் தான் கிடைத்தார். இவங்க எல்லாம் நிரந்தர ஆசிரியர் அல்ல/ தொகுப்பு ஊதிய அடிப்படையில் வருடா வருடம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதே நவோதயா பள்ளி எனில் எந்த மாநிலத்தில் உள்ளதோ அந்த மாநில மொழி கட்டாயம் கற்பிக்கப்படும். கேரளத்தில் மலையாளம், கர்நாடகாவில் கன்னடம் என்று சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் ஹிந்தி/சம்ஸ்கிருதமும் உண்டு. அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். ஒரு மாணவன் ஆங்கிலம் கட்டாயம் கற்கவேண்டும். அதன் பின்னர் தாய் மொழி. அதற்குப் பிறகு எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி அல்லது சம்ஸ்கிருதம் இரண்டில் ஒன்று.  கர்நாடகத்தின் உள்ளே மலைக்கிராமங்களில் கூட மக்கள் ஹிந்தி பேசுகின்றனர். எல்லாம் நவோதயாப் பள்ளியின் காரணத்தால். மாநில மொழி கேந்திரிய வித்யாலயாவில் கற்க வேண்டுமெனில் அதற்கும் 20 அல்லது 25 மாணவ, மாணவிகள் கற்க விருப்பம் தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அந்தப் பள்ளியில் மாநில மொழி கற்பிக்கப்படாது. இதெல்லாம் கேந்திரிய வித்யாலயா ஆரம்பித்த நாட்களில் இருந்தே நடைபெற்று வருபவை.

அதே போல் தான் தூர்தர்ஷனில் சம்ஸ்கிருதச் செய்தியும். எப்போவும் உண்டு. புதுசாக இப்போது வரவில்லை.என்னமோ இந்த மொழிகளை எல்லாம் மோதி அரசு வந்து தான் கேந்திரிய வித்யாலயாவிலும்/தூர்தர்ஷனிலும் திணித்தாற்போல இங்கே தனித்தமிழ் ஆர்வலர்கள் போட்டி போட்டுக் கொண்டு போராடினார்கள். வழக்கும் தொடர்ந்தார்கள். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளை உங்களுக்கு அந்தச் செய்தியைக் கேட்கப் பிடிக்கவில்லை எனில் தொலைக்காட்சியை அணையுங்கள். அல்லது சானலை மாற்றிக் கொள்ளூங்கள். இதில் எல்லாம் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டது. சின்ன விஷயம்! நமக்குப் பொறுமை என்பதே இல்லை. அப்படி என்ன தமிழைத் தவிர்த்து வேறே மொழியை நாம் கேட்காமலேயே இருக்கிறோமா என்ன? தமிழே ஒழுங்காப் பேசவரலை பலருக்கும் என்பது தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பவர்கள்/நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள்/நெடுந்தொடர்களில் நடிப்பவர்கள் ஆகியோரிடமிருந்து தெரிய வருகிறது.

ஐம்பெரும் காப்பியங்களில் சீவகசிந்தாமணி வடமொழியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டது. குண்டலகேசியும் பௌத்த சமய நூல். சம்ஸ்கிருதமே வேண்டாம் என்பவர்கள் ஐம்பெரும் காப்பியங்களையும் வேண்டாம்னு சொல்லணும். முடியுமா? சீவக சிந்தாமணி எழுதிய திருத்தக்க தேவர் அதை வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்ததாகவே சொல்லப்படுகிறது. தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகத்தின் சீவக சிந்தாமணி பற்றிய முன்னுரையில் சொல்லப்படுவது என்னவெனில்!

இச் சீவக சிந்தாமணி வடநாட்டு வேந்தனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டு அமைகிறது. காப்பியக் கதை, கதை மாந்தர்கள், கதைக்களம் முதலானவை தமிழ் மண்ணுக்குச் சொந்தமல்ல; இவை வடவர் மரபு; வடநாட்டார் மரபு; என்றாலும் காப்பிய ஆசிரியர் தமிழர்; தமிழ் நாட்டைச் சார்ந்தவர். தம் சமயச் சார்பு காரணமாக தன் சமயம் சார்ந்த வடமொழிக் கதையை எடுத்துக் கொண்டு, கதைப் போக்கை மாற்றாமல், அதே நேரத்தில் தமிழர் மரபு பிறழாமல் காப்பியத்தைப் புனைந்திருக்கின்ற திறன் அருமையினும் அருமை. இதனால்தான் இக்காப்பியம், சோழர் காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததாகச் சேக்கிழார் புராணம் குறிப்பிடுகின்றது.

இந்த ஆசிரியருக்கு வடமொழி தெரியாமல் இருந்திருந்தால் இத்தகைய அருமையான காப்பியம் ஒன்று நமக்குக் கிடைத்திருக்காது அல்லவா? இது மட்டுமா? வடமொழி தெரியவில்லை எனில் கம்பருக்கு ராமாயணம் எழுதவோ வில்லிபுத்தூராருக்கு பாரதம் எழுதவோ முடிந்திருக்குமா? அந்தக் காலங்களில் இத்தகைய சண்டை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. என் அம்மா நல்லவள் என்பதற்காகப் பிறரின் தாயைப் பழிக்கலாமா? தப்பல்லவா? எல்லா மொழிகளும் அவரவருக்குத் தாய் போன்றதே! அவரவர் மொழியை அவரவர் பேசிக் கற்று வந்தாலே போதுமானது.  இது குறித்துத் தொல்பொருள் ஆய்வாளரானா பெரியவர் நாகசாமி தெலுங்கு நாயக்கர் சாம்ராஜ்யத்தில் கூட தமிழ் மொழி அழியவில்லை எனவும், மாறாகப் பல தெலுங்கு பேசும் பாளையக்காரர்கள் தமிழ் பேசி தமிழுக்குத் தொண்டாற்றித் தம்மைத் தமிழறிஞர்கள் எனக் கூறிக் கொள்வதில் பெருமை அடைந்ததாகவும் தெரிவிக்கிறார். அதற்கான கல்வெட்டுகள் இதற்கெல்லாம் சான்றாக இருப்பதாகவும் சொல்கிறார்.

உண்மையில் தமிழுக்குப் பின்னடைவு எனில் அது ஆங்கிலேய ஆட்சி தொடங்கப்பட்ட காலத்தில் தான். ஆங்கிலேயப் பாதிரிகளான கால்ட்வெல், ஜி.யூ.போப் , பாதர் லெசராஸ் போன்றவர்கள் தமிழைக் கற்று பைபிளைத் தமிழிலும் திருக்குறளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வந்தாலும் ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்ட பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார். தமிழைப் பற்றி ஆங்கிலேயே அரசின் கெசட்டியரில் எந்தவிதமான சிறு குறிப்புக்கூடக் கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார். கிறித்துவ மதத்துக்கு மக்களை மாற்றியது குறித்தும், ஆங்கிலேயப் பள்ளிகளில் படித்தவர்களைத் தங்கள் ஆட்சியின் நிர்வாகத்திற்காக ஊழியர்களாகத் தேர்ந்தெடுத்த விபரங்களுமே இருப்பதாகச் சொல்கிறர்.

அதையும் மீறித்தான் உ.வே.சா.ஆறுமுக நாவலர், வள்ளலார், சுப்ரமணிய பாரதி, மு.ராகவ ஐயங்கார், மஹா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் இருந்து வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்றிச் சென்றிருக்கிறார்கள். தமிழ் மன்னர்களும் தெலுங்குப் பாளையக்காரர்களும் ஆதரித்த தமிழை ஆங்கிலேயர் ஆதரிக்காவிட்டாலும் அந்தக் காலகட்டத்தில் தான் உ.வே.சா.அவர்களின் பெரு முயற்சியால் பல தமிழ்நூல்கள் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சுப் பதிப்பைக் கண்டது. ஆகவே தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் நினைக்காமல் தமிழில் பேசிப் படித்து, எழுதி வந்தாலே போதும். தமிழ் தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ளும். அழிவெல்லாம் கிடையாது.


24 comments:

 1. /// தமிழ் தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ளும்!..///

  அப்படியெல்லாம் நிலைநிறுத்திக் கொள்ள நாங்கள் விட்டுடுவோமா!...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை! அதானே! :))))

   Delete
 2. தமிழுக்கு மேடை கட்டுவோம்..
  இந்திக்குப் பாடை கட்டுவோம்!..

  என்று அப்போது (1967 ல்) திமுக வினர் சுவரெல்லாம் எழுதி வைத்தார்கள்..

  தலை விரி கோலமான பெண் ஒருத்தியை (தமிழ்) கோரப் பற்களுடைய அரக்கி (இந்தி) துரத்துவது போன்ற படங்களால் மக்களை மடையர்களாக்கினார்கள்..

  ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து தமிழை மேம்படுத்தவில்லை..

  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் கூட அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் துரை, இதன் தாக்கம் எங்க வீட்டிலும் தனிப்பட்ட முறையில் எதிரொலித்திருக்கிறது. ஆகவே இந்தச் சம்பவங்கள் பசுமரத்து ஆணி போல் மனதில் பதிந்துள்ளது.

   Delete
 3. இதுபோன்ற விவரங்களை உங்களைப்போல யாரும் கொடுக்க முடியாது.  குறிப்பாக சீவகசிந்தாமணி, மஹாபாரதம், ராமாயணம் போன்ற விவரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தமிழறிஞர்கள் பலரும் சொல்லுவதைத் தான் நான் எடுத்துக்காட்டி இருக்கேன் ஶ்ரீராம். சீவகசிந்தாமணி, மஹாபாரதம், ராமாயணம் போன்றவற்றைப் பற்றிப் படிக்கும் நாட்களிலேயே ஆசிரியர்கள் கற்பித்ததைத் தான் சொல்லி இருக்கேன்.

   Delete
 4. மொழியைப் பற்றி யாருக்கும் பிரச்சனை இல்லை. (5% கூட ஒழுங்கான தமிழ் பேசத் தெரியாது) உடையைப் பற்றிப் பிரச்சனை இல்லை. (தமிழன் உடையை அம்போன்னு விட்டுட்டு ஆங்கிலேய உடை அணிவதில் பெருமை). அவங்களுக்குப் பிரச்சனை பாஜக. அதனால்தான் எதிர்ப்பு. அவங்களுக்கு ஊழல், கொள்ளை என்பதைப் பற்றிக் கவலை இல்லை.

  அதனால இதனைக் கண்டுகொள்ளக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லையாரே! நீங்க சொல்வது உண்மை தான். ஆனாலும் எதிர்ப்போ/போராட்டமோ அது கொஞ்சமானும் நியாயமா இருக்கணுமே! இப்போப் பாருங்க விவசாயிகள் போராட்டம்னு தில்லியில் நடப்பதை! ஏதோ அரசாள வந்த மன்னர்கள் பொதுமக்களின் கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போல் சிறுவர்களின் கபடி ஆட்டம், மற்ற விளையாட்டுகள்னு பார்த்து மன ஓய்வு கொள்கிறார்களாம். எல்லோரும் திண்டுகளில் சாய்ந்து உட்கார்ந்து ரசிக்கின்றனர். உண்மையான விவசாயி இப்படி ஓய்வாக ஒரு நிமிடம் உட்காருவானா? ஐயோ, நிலத்தை விட்டுட்டு வந்துட்டோமே! என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ? எனப் பரிதவிக்க மாட்டானா? இங்கே இவங்க ஜாலியாகப் பொழுது போக்கிக் கொண்டு விதம் விதமாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டுப் பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டு, குளிருக்குச் சூடு தரும் ஹீட்டர், குளிக்க வெந்நீருக்கு கீசர் எனப் போட்டுக்கொண்டு (மின்சாரம் எங்கே இருந்து வருகிறது? அதற்குக் கட்டணம் யார் கட்டறாங்க?) உட்கார்ந்திருக்கின்றனர். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? எந்தவிதமான சமரசத்துக்கும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் என்ன சொல்லுவது?

   Delete
  2. எங்க வீட்டிலும் மாமனாருக்கு ஒன்றரை வேலி நிலம் இருந்து சொந்தப் பண்ணையாக விவசாயம் பார்த்தவர் தான். அப்போதும் மழை வந்திருக்கிறது. பயிர்கள் நீரில் மூழ்கி இருந்திருக்கின்றன. வெள்ளம்/புயல் எல்லாம் அப்போதும் உண்டு. ஆனால் இதற்கெல்லாம் அரசாங்கம் தான் காரணம்/நிவாரணம் அளிக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் போராடியதாகத் தெரியலை. எங்காவது கல்யாணம், காட்சி என வெளி ஊருக்கு வந்தால் கூட மாமனார் 3 நாட்களுக்கு மேல் தங்க மாட்டார். மாமியார், குழந்தைகளைத் தங்கச் சொல்லிட்டுத் தான் மட்டும் திரும்பி விடுவார். இங்கே?

   Delete
  3. போராடினால் வளைந்து கொடுக்கும் அரசாங்கங்களையே பார்த்த மக்கள். இப்போது அவர்களுக்குப் பொறுக்கவில்லை. இத்தனைக்கும் அம்பானி/அதானி நாங்க இதில் சம்பந்தப்படவில்லை என்று வெளிப்படையான அறிவிப்பே செய்தாச்சு. இந்தியா முழுவதும் மற்ற மாநில விவசாயிகளுக்குப் பாதகம் இல்லையா? அவங்க எல்லாம் போராட்டமா அறிவிச்சாங்க? பார்க்கப் போனால் மஹாராஷ்ட்ர விவசாயிகள் தான் முதல் முதலாக இதற்கு முழு ஆதரவு தெரிவிச்சு அறிக்கை வெளியிட்டாங்க.

   Delete
  4. ஆம், மொழியைப் பற்றி பிரச்னை இல்லை. ஜாதிவெறி, தனிமனித துவேஷம்தான் அதிகம்.

   Delete
 5. அரசியல் - வேறொன்றும் சொல்வதற்கில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நன்றி.

   Delete
 6. Replies
  1. நன்றி திரு தனபாலன்.

   Delete
 7. //எல்லா மொழிகளும் அவரவருக்குத் தாய் போன்றதே//

  ஸூப்பர் உண்மை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, உண்மைதான். ஆனால் தமிழர்(ளர், லர்)கள் தங்களுக்குக் கொம்பு முளைத்திருப்பதாய் எண்ணிக்கிறாங்களே! :(

   Delete
 8. ஆரிய ஜந்துகள் புகும் காலம் என்றோ...?

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு தனபாலன்.

   Delete
 9. எல்லாம் பதவி மோகம் படுத்தும் பாடு. இவங்களுக்கு குறை சொல்ல எதாச்சும் வேணும். Moreover, they want to be in limelight, just for that they will keep on finding fault in others.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏடிஎம், கருத்துக்கு நன்றி. பதவி மோகம் மட்டும் இல்லை. இன்னும் என்னென்னவோ!

   Delete
 10. கீதாம்மா, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" , என நம் முன்னோர்கள் வாழ்ந்ததால் தானே தமிழின் சிறப்பும் மற்ற மொழிகளின் இலக்கியமும் நமக்கு கிடைத்தது. இந்தப் புவியே "வாசுதேவ குடும்பகம்" என உணர்த்திய அந்த வாசுதேவனே துணை என நம்புவோம். பிரித்து பேசி பிரிவினை உருவாக்கும் மனிதர்களை , சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம் என்று அவனிடமே விட்டுவிடுவோம். தங்கள் பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் உண்மைகளை தெளிவாக உரைக்கிறது. நன்றி கீதாம்மா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வானம்பாடி. எல்லோருமே அப்படித்தான். வசுதேவ குடும்பம் தான். ஆனாலும் சிலர் அதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர்.பாராட்டுகளுக்கு நன்றிம்மா.

   Delete
 11. இப்போது தமிழகத்தில் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேருக்கு  தமிழில் தப்பில்லாமல்  எழுதவும், படிக்கவும் தெரியும் என்பது மில்லியன் டாலர் கேள்விதான். நீங்கள் சொல்லியிருக்கும் மற்ற விஷயங்களும் உண்மைதான். ஆனாலும் சமஸ்கிருதத்தில் செய்திகள் அவசியமில்லாத ஒன்று என்றுதான் தோன்றுகிறது. செய்திகள் ஒளிபரப்புவதன் நோக்கமே பெருவாரியான மக்களை அது சென்றடைய வேண்டும் என்பதுதான், சம்ஸ்கிருதம் எத்தனை பேருக்கு தெரியும்,புரியும்?    

  ReplyDelete