எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 15, 2021

மார்கழித் திங்கள் நினைவுகள்! மீள் பதிவு!

மதுரையும் மார்கழி மாதமும்

மீள் பதிவு!

 மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தை  2007 ஆம் ஆண்டு டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.



உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.


பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார்.


மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.


எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம்.

சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதுவும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! :(( கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((


இப்போவும் மதுரை மீனாக்ஷி கோயிலில் கிட்டத்தட்டப் பனிரண்டு வருடங்கள் கழித்தும் இதே நிலைதான். ஆனால் இப்போ மதுரைக்குப் போயே மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எப்போ வாய்க்குமோ! இந்தப் பதிவு "மதுரை மாந்கரம்" என்னும் வலைப்பக்கத்தில் மதுரைக்கார நண்பர்கள் அனைவருமாகச் சேர்ந்து அவரவர் அனுபவங்களை எழுதி வந்தோம். இம்மாதிரிக் குழுமப் பதிவுகள் இன்னும் சிலவும் இருந்தன அப்போது. மதுரை மாநகரம் தவிர்த்து "ப்ளாக் யூனியன்"  "ஆசார்ய ஹ்ருதயம்" என்னும் வலைப்பதிவுகளும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எழுதி வந்தோம். இப்போ அந்த நண்பர்களில் யாருமே வலைப்பக்கம் எழுதவில்லை. குழுமப் பதிவு தவிர்த்து சொந்த வலைப்பக்கங்களிலும் இப்போதெல்லாம் யாரும் எழுதுவதில்லை. பல நண்பர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. :( அநேகமாக நான் மட்டுமே பதினாறு வருடங்களாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். 

43 comments:

  1. கீதாக்கா எனக்கும் மார்கழி என்றாலே எங்கள் ஊர் என் சிறு வயது நினைவு வந்துவிடும். நம் வீட்டிலும் தினமுமே காலை 4 மணிக்கு எழுந்துவிடும் வழக்கம். அப்போதிலிருந்தே இதோ இப்போது வரை தொடர்கிறது.

    கிராமத்தில் இருந்த வரை எழுந்ததும் பாட்டியுடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயில் வாசல் தெளித்து பெருக்கு மற்றும் கொடிமரத்தின் கீழ் பெருக்கிக் கழுவி விட்டுக் கோலம் போட வேண்டும். இது தினமுமே.

    மார்கழி வைகுண்ட ஏகாதசி என்றால் ஒரு நாள் முன்னரே நம் வீட்டில் பச்சரிசி ஊறப் போட்டு விடுவார்கள் வைகுண்ட ஏகாதசிக்கு இரு நாள் முன்பு கோயிலைக் கழுவு துடைத்து காய வேண்டுமே அதனால் அப்புறம் அரைத்து கோயிலுக்கு எடுத்துக் கொண்டு சென்று கோயில் முழுவதும் மாக்கோலம் போட வேண்டும். ஊரில் உள்ள பெண்களையும் யாருக்கெல்லாம் முடிகிறதோ வரச் சொல்லிவிடுவார் பாட்டி. பாட்டிக்குப் பின்னர் நான் தொடர்ந்தேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, கோயிலில் போய்க் கோலம் எல்லாம் போட்டதில்லை. எல்லாக்கோயில்களிலும் அதற்கு எனத் தனி ஆட்கள் இருப்பாங்க. அவங்களை மீறிக்கொண்டு நாம் போக முடியாது. ஒவ்வொரு சமயம் கோலாட்டத்திருநாள் சமயம் மீனாக்ஷி வீதி உலா வரும்போது கூடவே கோலாட்டம் அடிக்கும் பெண்களுடன் போயிருக்கேன்.

      Delete
    2. ஆமாம் கீதாக்கா, எங்கள் ஊர்க் கோயில் மலையாளத்து பக்கக் கோயிலாக இருந்து பின்னர் தமிழ்நாட்டோடு இணைந்தது இல்லையா...மட்டுமல்ல மீனாட்சி கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. எனவே நீங்கள் சொல்வது போல. எங்க ஊர்க்கோயில் சின்ன கோயில் அதனால் போட முடிந்தது. அது போல நவ திருப்பதி கோயில்கள் மற்றும் சிறிய சிறிய கோயில்களில் கோலம் போட அனுமதிக்கிறார்கள்.

      ஆஹா கோலாட்டம்!! நல்ல இனிமையான நினைவுகள்

      ஆடிச்செவ்வாய் களில் அப்போது கோலாட்டம் போட்டதுண்டு.

      கீதா

      Delete
  2. என் பாட்டிக்கும் பாட்டு என்றாலே பிடிக்காது. பாட்டு சோறு போடாது என்று சொல்லி என்னைப் பாட்டு கற்க விடவில்லை. எனவே கற்கும் சான்ஸ் இல்லாமல் போனது. மற்றொரு பாட்டி இவருக்கு நேர் எதிரே!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என் அம்மா வழியில் அம்மா, சித்தி எல்லாம் நன்றாகப்பாடுவார்கள். அங்கே சொல்லிக் கொடுக்கலைனாலும் அவங்களாகப் பாடுவதற்கோ அல்லது எங்கானும் கற்றுக் கொடுத்தால் போவதற்கோ தடை இல்லை. எல்லாத்துக்கும் மேலே புத்தகங்கள் நிறையப் படிக்கலாம். எங்க வீட்டில் அப்பாவுக்குத் தெரியமால் தான் எல்லாம்! :(

      Delete
  3. என் மற்றொரு பாட்டிதான் எனக்கு 4 வயதிருக்கும் போதே திருப்பாவை கற்றுக் கொடுத்து மனப்பாடம் ஆகிவிட்டது.

    பள்ளிக்கல்வி படித்த போது என் மூன்றாவது மாமி எனக்கு வாரணமாயிரம் பாடலை ராகத்துடன் சொல்லிக் கொடுத்தார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் திருப்பாவை வகுப்புக்குப்போனதோடு சரி. அநேகமாகப்பத்து வருடங்களுக்கு மேலாகப் போயிருக்கேன்.

      Delete
  4. மார்கழியில் எங்கள் ஊரில் காலையில் பஜனை பாடிக் கொண்டே தெருவில் வருவார்கள். அப்புறம் ஒவ்வொருநாளும் ஒரு வீட்டு உபயமாகப் பிரசாதம் வழங்கப்படும். கிராமத்துவீடு என்று இருக்கும் அங்குதான் பஜனை தொடங்கும். அது பொதுவீடு. அங்கு ராதா கல்யாணம் எல்லாம் நிகழ்த்துவார்கள். இப்போதும் தொடர்கிறது. ஆனால் பஜனை இல்லை என்று தெரிகிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் பஜனை கோஷ்டியும் வரும், வீடுகளிலும் நடக்கும். பெரியப்பாவின் நண்பர்கள் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் ஒவ்வொருத்தர் வீட்டில் பஜனை வைச்சுப்பாங்க. அந்தக் காலமே இப்போல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாத ஒன்று.

      Delete
  5. அப்போதைய நினைவுகள் இனிமையான நினைவுகள். இப்போதெல்லாம் நீங்கள் சொல்லியிருப்பது போல் எதுவுமில்லை. எங்கள் ஊர் உட்பட! இன்னும் காசுமயமாகவில்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இனிமையான பசுமையான நினைவுகள்.

      Delete
  6. இனிய மதுரை நினைவுகள். ஜி எஸ் மணி அவர்கள் வீடு அங்குதான் இருந்ததா? ஹரிதாஸ் கிரி பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ஶ்ரீராம், ஜி.எஸ்.மணி வீடு இப்போவும் அங்கே அப்படியே மாற்றங்கள் இல்லாமல் இருக்கு. அவர் மனைவி தான் இறந்துவிட்டதாய்க் கேள்விப் பட்டேன். அவர் தம்பி (கடைசி) என்னுடன் படித்தவர். ஒரு தங்கை என் அண்ணாவின் வகுப்புத் தோழி.

      Delete
    2. இது நேற்று சொல்ல விடுபட்டுவிட்டது. மதுரை ஜி எஸ் மணி அவர்கள் நன்றாகப் பாடுவார்.

      அட அவர் தம்பி தங்கை எல்லாம் உங்களுக்கும் அண்ணாவிற்கும் பரிச்சயமா அதுவும் வகுப்பி நட்புகளாக!!!

      கீதா

      Delete
    3. ஆமாம், என்னோடு படித்தவர் பெயர் கிருஷ்ணா! அண்ணாவுடன் படித்தவர் சந்திரா. திருமணம் ஆகிச் சென்னை அபிராமபுரத்தில் இருந்தார் எனக் கேள்விப் பட்டேன். கடைசியாக ஒரு திருமணத்தில் ஜி.எஸ்.மணி அவர்களைச் சந்தித்தேன். அப்போது அனைவரையும் விசாரித்தார்.

      Delete
    4. அவர் வீடு ஒண்ணாம் நம்பர் வீடு (அப்போது) எங்க வீடு 7 ஆம் நம்பர்.

      Delete
  7. ஆம், பாஸிடமும் நான் இப்போதும் சொல்வது என்னவென்றால் அவர்களாக எழுந்திருக்க பழக்கி இருந்தால் இப்போதும் ஆபீஸ் போகும் வயதிலும் எழுப்பி விடும் கலாச்சாரம் வந்திருக்காது என்று..  ஒத்துக்கொள்ள மாட்டார்.

    ReplyDelete
    Replies
    1. என் மாமியார் வீட்டிலும் எழுப்பி விடக் கூடாது. அவங்களுக்குத் தெரியாதா? எப்போ எழுந்திருக்கணுமோ அப்போ எழுந்திருப்பாங்க. எழுப்பி விட்டுத் தூக்கத்தைக் கெடுக்காதேனு மாமியார்/மாமனார் இருவருமே சொல்லிடுவாங்க.

      Delete
    2. நான் சொல்ல வந்தது இப்படிப் பழக்கிப் பழக்கி அவர்களுக்கு தானாய் எழுந்திருக்கும் பழக்கமே இல்லாமல் போச்சு!

      Delete
    3. ம்ம்ம்ம்ம், இரவு படுக்கும்போது மனதில் காலை இந்த நேரம் எழுந்திருக்கணும்னு அலாரம் வைச்சுட்டுப் படுத்தால் காலை அலாரம் அடிக்காமலேயே விழிப்பு வந்துடும். :))))))

      Delete
    4. நான் அப்படிதான். ராத்திரி டைம் நினைச்சுட்டு படுத்தா முழிப்பு தானா வந்துடும்! நான் சொல்வது மகன்களை!

      Delete
    5. அதே கீதாக்கா பயோ க்ளாக்!!!!

      ஸ்‌ரீராம் பழக்கப்படுத்துதல் ஓகே தான் என்றாலும் (என் பிறந்த வீட்டில் அப்படி) ஆனால் மாமியார் வீட்டில் கீதாக்கா சொன்னது போலத்தான்.

      என் மகனையும் எழுப்பி விட்டுத்தான் பழக்கம். (அவன் குறையும் அதுதானாக இருந்தது. அவனால் இரவு முழித்தும் படிக்க முடியாது. காலையில் எழுப்பி விட்டால் எழுந்துவிடுவான் ஆனால் அவனாக எழுந்திருக்க முடியாமல்...படிக்கவும் முடியாமல்...என்று) ஆனால் அவன் கல்லூரி படிக்கும் போது அப்பொறுப்பு தானாகவே வந்துவிட்டது. என்னை எழுப்பி விடச் சொல்லுவான் ஆனால் அவனாகவே எழுந்துவிடுவான். க்ளினிக்கல் சமயம். வேலைக்குப் போகத் தொடங்கியதும் அப்படி இரவு முழிப்பு காலை எழுதல் எமர்ஜென்சி என்று பழகி இதோ இப்போது அங்கு தனியாகச் ச்மாளிக்கிறான்.

      அதற்கான சூழல் வரும் போது எழுந்துவிடுவாங்க பசங்க, ஸ்ரீராம் அதனால் குறை ஒன்றுமில்லை.

      கீதா

      Delete
    6. உங்க மகன்களும் பழகிக்கலாம் ஶ்ரீராம். இரண்டு, மூன்று நாட்கள் கொஞ்சம் தடுமாறினாலும் சின்ன வயசு என்பதால் விரைவில் பழகி விடும்.

      Delete
  8. பழைய நண்பர்களுக்கு பிளாக் அலுத்து விட்டது என்று நினைக்கிறேன்.  உங்களுக்கு அலுக்கவில்லை.    அவ்வப்போது எழுதி வருவதே சிறப்பு.  முன்னர் இருந்த கூகுள் ப்ளஸ் குழுமங்களும் இப்போது கலைந்து விட்டன.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் ஶ்ரீராம். பலரும் இருக்கும் இடமே தெரியவில்லை. எல்லோரும் ரொம்பச் சின்ன வயசு என்றாலும் அவங்களுக்குச் சமமா நான் பேசிப் பழகியதால் அனைவருக்குமே என்னிடம் மரியாதை கலந்த அன்பு இருந்தது. கூகிள் + குழுவினரில் பலரும் இப்போ முகநூலில்.

      Delete
    2. இப்போது நாடாளுமன்றத்தில் தி மு க சார்பில் ஏதோ முக்கியஸ்தராய் இருக்கும் (நியமன உறுப்பினர்?) எம் எம் அப்துல்லா நம் பழைய பிளாக்கர் தானே?

      Delete
    3. அப்படியா? எனக்கு இது புதுத் தகவல். ஆனால் அப்துல்லா என்னும் பெயரில் ஒரு ப்ளாகர் அரபு நாடுகளில் குறிப்பாக அமீரகத்தில் இருந்தார் என நினைவு. வல்லியைக் கேட்டால் தெரியும்.

      Delete
  9. அந்த கோடி அர்ச்சனை நாமாவளியில், கனிமொழி வாழ்க, தயாளு அம்மையே வாழ்க என்றெல்லாம் இருந்ததா? ஆண் தெய்வத்துக்கு தமிழக அரசு கொடுத்த நாமாவளியில், கருணாநிதியே வாழ்க என்றெல்லாம் இருக்கு போலிருக்கே

    ReplyDelete
    Replies
    1. நீங்க பாட்டுக்கு ஏதாவது எழுதிட்டு அதுக்கு பதில் சொல்லி நான் மாட்டிக்கத் தயார் இல்லை.

      Delete
  10. வணக்கம் சகோதரி

    மார்கழி மலரும் நினைவுகள் அனைத்தும் அருமை.மிகவும் சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள். இந்தப் பதிவை ஏற்கனவே எனக்கு படித்த நினைவு வருகிறது. இருப்பினும் புதுப்பதிவாக படிக்கையில் உணர்ந்தேன். எனக்கும் பாட்டு கற்க ஆசையிருந்தது. நாங்கள் இருந்த இடத்தில் அப்படிப்பட்ட வசதிகள் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும்,எங்கள் அப்பாவும் தனியே எங்கும் போக விட மாட்டார்.
    இப்போது பேத்திகளையாவது கற்க வைக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. நடக்க வேண்டும். பார்க்கலாம்.

    நீங்கள் உங்கள் மார்கழி நினைவுகளை பகிர்ந்த போது, எனக்கும் சிறு வயது மார்கழியின் நினைவுகள் வந்து போயின. அப்போது அந்த மாதத்திற்காகவே காத்திருப்போம். சிலுசிலுவென்ற பனியில் எழுவதும், கோலங்கள் போட்டு பூசணி பூக்களை வைப்பதும், இறை வழிபாடுமாக அதன் நினைவுகள் சுகம் தருபவை.

    அதன் பின் சென்னையிலும் திருமணத்திற்கு பின் மார்கழியில் கோவில்களுக்கு காலையில் போவது என நடுவில் ஒரிரு வருடங்கள் கூடி வந்தது. அதுவும் ஒரு சமயத்தில், ஒரு வீட்டில் குடியிருக்கும் போது, அந்த வீட்டு ஓனருடைய பெண்ணின் (அவள் அப்போது என் வயதை ஒத்தவள். என்னை வறுப்புறுத்தி தினமும் மார்கழி முழுக்க கோவில்களுக்கு அழைத்துப் போனது இன்னமும் பசுமையாய் நினைவுக்குள் இருக்கிறது.) தயவால் நடந்தது. அந்த புண்ணியங்கள் கண்டிப்பாக அவளைத்தான் சாரும். பிறகு எங்கே? வீடே கோவிலாக, மாமியாருக்கும், வேலைக்குச் செல்லும், கணவருக்கும்,மைத்துனருக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், மற்றும் வீட்டிலிருப்பவர்களுக்கும் காலை டிபன், சமையல் என செய்வதே வழிபாடாகவும் அமைந்து போயிற்று. இப்போதும் "கடபலு கைலாசம், வாயிலி வைகுண்டமுமாக" பொழுதுகள் பறக்கின்றன. பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. பழைய நினைவுகளை மீட்டின. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. இந்தப் பதிவை நீங்கள் படித்த நினைவு இருக்கா? !!!!!!!!!!!!!!!! எனக்கே ஆச்சரியமா இருக்கே. எங்க அப்பாவுக்குப் பாட்டே பிடிக்காது. அவர் வீட்டில் இல்லாத சமயம் தான் அம்மா வாய்விட்டுப் பாடுவார். :( நான் அக்கம்பக்கம் சின்னச் சின்னக் கோயில்களைத் தவிர்த்துப் பெரிய கோயில்களுக்கெல்லாம் மார்கழியில் போனதே இல்லை. மதுரையில் இருந்தவரை ஒரு திருவிழா பாக்கிவிடாமல் மீனாக்ஷி கோயிலுக்குப் போயிடுவோம். ஹரிதாஸ்கிரி சொற்பொழிவு, கிருபானந்த வாரியார், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், வாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர், புலவர் கீரன்னு ஒருத்தர் பாக்கிவிடாமல் எல்லாக் கதாகாலக்ஷேபங்களுக்கும் போயிடுவோம். இதைத் தவிர்த்து சிருங்கேரி மடப் பீடாதிபதிகள், காமகோடி மடத்தில் இளையாத்தங்குடியில் நடந்த வித்வத் சபைனு எல்லாமும் போவோம்.

      Delete
    2. கல்யாணம் ஆகிவந்து இங்கே இவங்களுக்கெல்லாம் அவ்வளவு பிடித்தம் இல்லாமல் இருந்ததால் மெல்ல மெல்லக் குறைந்து விட்டது. மேலும் மதுரையில் நாங்கள் குழுவாகக் குடியிருப்பவங்க எல்லோருமே சேர்ந்து போவோம். ஆண்கள் தனிக்குழுவாகப் போவார்கள். நாங்கள் பெண்கள் தனிக்குழுவாகப் போவோம்.ஶ்ரீராம நவமிக்கு நடக்கும் பத்து நாள் ராம நவமி உற்சவத்திற்கு வெளியே இருந்தெல்லாம் பெரிய பெரிய பாடகர்கள் வந்து கச்சேரி செய்வார்கள். காக்காத்தோப்புத் தெரு என்னும் ஒரு தெருவில் நடக்கும். அதே போல் நவராத்திரியில் மீனாக்ஷி கோயில் கல்யாண மண்டபத்திலும் பத்து நாட்களும் கச்சேரி நடக்கும். வீட்டில் இருந்தே கேட்கலாம் என்றாலும் கோயிலுக்கும் போய் ஆடி வீதியில் உட்கார்ந்து கேட்டுவிட்டு வருவோம். இத்தனையும் செய்து கொண்டு பள்ளிக்கும் போய்க் கொண்டு பின்னர் சிறப்பு வகுப்புகளுக்கும் போய்க் கொண்டு வீட்டு வேலைகளும் செய்து கொண்டு இருந்திருக்கேன். இப்போ என்னடான்னா கணினியில் ஒரு மணி நேரம் சேர்ந்தாற்போல் உட்கார முடியலை. :(

      Delete
    3. வணக்கம் சகோதரி

      ஆமாம்.. இப்போது இந்த பதிவை படிக்கையில் ஏற்கனவே படித்த நினைவு வந்தது. ஒரு வேளை முன்பு இதே பதிவை மீள் பதிவாக போட்டிருந்தீர்களோ.? அதுவும் சரியாக நினைவில்லை.

      மதுரையிலேயே இருந்ததினால், உங்களுக்கு நல்ல நல்ல பழக்க வழக்கங்கள், வாய்ப்புகள் என வந்திருக்கிறது. கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.அத்தனை சிறு வயதில்,பள்ளிக்கும் சென்று கொண்டு, நல்லபடியாக படிப்பிலும் கவனங்கள் செலுத்திக் கொண்டு, இந்த மாதிரி பாட்டு கிளாஸ், பாட்டு கச்சேரிகள், பஜனை. கதாகாலஷேபம் போன்ற தெய்வீக விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனக்கும் உங்கள் சிறு வயது அனுபவங்களை கேட்க சந்தோஷமாக உள்ளது. இத்தனை நல்ல பண்புகள் நிறைந்த உங்களுடன் இப்படி பேசி பழகுவதே எனக்கு பெருமையாக உள்ளது. இறையருள் அப்போதிலிருந்தே உங்களுடன் வந்திருக்கிறது. என்றும் அது நீடித்து இருக்க நானும் உங்களுடன் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொண்டு கணினியில் அமருங்கள். அதுதானே முக்கியம்... உங்கள் பேத்தி நலமாக உள்ளாளா? அங்கு உங்கள் வீட்டுக்கு பேத்தியும், மருமகளும் எப்போது வரப் போகிறார்கள்.? அனைவருடனும் சந்தோஷமாக நாட்களை கழிக்க எனது வாழ்த்துகள். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. மார்கழி மாதம் போலவே அந்த நினைவுகளும் இனிமைதான். மீண்டும் மீண்டும் படித்தாலும் அலுக்காது.

    ReplyDelete
  12. மார்கழி மாதத்து உங்கள் இனிய நினைவுகள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன.

    9 ஆம் வகுப்பு முடியும் தருவாயிலேயே நான் தனியாக ஒரு சிறு வீட்டில் இருக்க வேண்டிய சூழல். நானே சமைத்துச் சாப்பிட்டு என்று பழகிவிட்டதால் நானே பொறுப்புடன் இருக்கும் பழக்கம் வந்தது. நான் இரவுப்பட்சி. சாதாரணமாகக் காலையில் எழுவது லேட் தான். ஆனால் மனதில் நேரம் குறித்துக் கொண்டால் சூழலுக்கு ஏற்ப எழுந்துவிடும் பழக்கம் உண்டு.

    மீனாட்சி கோயில் பற்றி சொன்னதும் எனது பழைய நினைவுகள், மதுரை நினைவுகள் எழுந்தன.

    மிக்க நன்றி

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் இருந்திருப்பதாக நீங்க சொன்ன நினைவு இருக்கு. சமைத்துச் சாப்பிட்டீர்களா? அப்போச் சமையல் நன்றாக வரும் எனச் சொல்லுங்கள். உங்கள் மதுரை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நேரம் இருக்கையில்.

      Delete
  13. அருமையான மார்கழி நினைவுகள்.
    எனக்கும் மார்கழி நினைவுகள் வந்து போகிறது.
    சிறு வயது முதல் இப்போது வரை நினைவுகள் வந்து போகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, திருமணம் ஆனதும் எனக்குப் பெரிசா மார்கழி மாத நினைவுகள்னு ஏதும் இல்லை. காலை நாலு மணிக்கு எழுந்து ஸ்வாமி விளக்கேற்றி வாசலிலும் விளக்கேற்றி வைத்துவிட்டுக் கோலம்போடுவேன் பெரிதாக. அதுக்கே ஐந்து மணி ஆகிவிடும். பின்னர் தொடர்ந்த வீட்டு வேலைகள்.

      Delete
  14. பழைய நினைவலைகளை சொல்லிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி.

      Delete
  15. மார்கழி சிறுவயது நினைவுகள் இனிமை.

    எங்களுக்கும் அம்மம்மாவுடன் அதிகாலை ஒரே நாளில் மூன்று,நான்கு கோவில்கள் தரிசனம் பிரசாதங்கள் என இருந்த சிறுவயது நாட்கள் அவை.

    ReplyDelete
  16. மார்கழி நினைவுகள் அருமை.

    இப்போது நினைத்துப் பார்க்க மட்டுமே முடியும்.

    ReplyDelete