குட்டி அம்மாவின் பாப்பாக்களில் சில. இவை மேல் அன்னிக்குக் குட்டி அம்மாவுக்கு ஏதோ கோபம் என்பதால் இவற்றை வெளியே கொண்டு வந்து வைத்து விட்டார்கள். :) மற்றவை குட்டி அம்மாவுடன் மெத்தையில் சுகமாகப் படுத்துக் கொண்டன. சுமாராகப் பத்துப் பாப்பாக்கள் இந்தியா வந்திருக்கின்றன. இவற்றில் அம்மா வெளியே செல்லும்போது அன்னிக்கு யார் கூட வரணும்னு தேர்வு செய்து தூக்கிப்பார். :))))))
திருவாதிரைக்கு அம்பிகை புறப்பாடு கண்டருளி இருக்கிறாள். அந்த அலங்காரம் கலைக்காமல் இருந்தது. ஒரு படம் எடுத்துக் கொண்டேன். இவள் உற்சவர்.
பரவாக்கரை பெருமாள் கோயில் வெங்கடேசப் பெருமாள். 2011 ஆம் வருடம் கும்பாபிஷேஹம் சுமார் 40 வருடங்கள் கழித்துக் கண்டருளினார். பெருமாள் அருளால் கைங்கரியம் செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. எங்க புக்ககத்துக் குடும்பப் பூர்விகக் கோயில் என்பதோடு இவங்க தான் அறங்காவலர்களாக 1977 வரை இருந்தனர். பின்னர் அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டு அவங்க நியமிக்கும் நபர் தான் அறங்காவலர் என்றானது.
கருவிலி சற்குணேஸ்வரர். கிட்டப் போய் எடுக்க மறந்துட்டேன். கைபேசியில் ஜூம் செய்ய வரலை. சரியாக இல்லை. ஆகவே ஏதோ ஒரு மாதிரி (வழக்கம் போல்) எடுத்தேன்.
மற்றப்படங்கள் தரவிறக்கும்போது பிரச்னை ஆகிவிட்டதால் மெதுவாய்ப் போடுகிறேன்.
சமீபத்தில் குல தெய்வம் கோவிலுக்குச் மகன் மருமகள்,பேத்தியோடு சென்றிருந்தீர்களா? குழந்தையோடு பயணம் செய்வது செளகரியமாக இருந்ததா?
ReplyDeleteவாங்க பானுமதி, விரைவில் வருகை தந்தமைக்கு நன்றி. அவங்களுக்கெல்லாம் கஷ்டமாக இல்லை. எனக்குத்தான் வழக்கம்போல் ஏறுவதும் இறங்குவதும்! :( பெரிய வண்டி! படி மேல் ஏற முடியாமல் வீட்டில் இருந்தே ஸ்டூல் எடுத்துக் கொண்டு போனோம். :(
Deleteகீதாக்கா....குகு வின் பாப்பாக்கள் பற்றிய முதல் பாரா வை ரொம்ப ரொம்ப ரசித்து வாசித்தேன். நீங்கள் விவரித்த விதமும் செம...ரசித்து சிரித்து வாசித்தேன் குகு வை நினைத்துக் கொண்டே!!! யார் கூட வர வேண்டும். குஅ வுடன் வந்த 10 பாப்பாக்கள், நீங்கள் சொன்ன விதம் மேலும் மேலும் ரசித்து வாசிக்கத் தோன்றுகிறது!!! குகு வுக்கு என் அன்பு ஹக்ஸ்!!!! என் அன்பையும் சொல்லிவிடுங்கள் குஅ வின் செல்ல கோபத்தையும் விளையாட்டையும் ரசிக்கிறேன் என்று
ReplyDeleteகீதா
வாங்க தி/கீதா! ஆமாம், கு.கு.விற்குப் பாப்பாக்களின் மேல் கோபம் என்றால் அதைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும். வெளியே கிளம்பும்போது தேர்ந்தெடுக்கும் பாப்பாவை அது தயார் செய்யும் விதம் இருக்கே! காணக் கண் கோடி வேண்டும். அது கார்ட்டூன் சானல் பார்க்கையில் அதில் கூடப் பெண் குழந்தைகளுக்கு பேபி டால்ஸ் (Baby dolls) பராமரிப்புப்பற்றிச் சொல்லிக் கொடுக்கும் கார்ட்டூனாகப் பார்க்கும். :)
Deleteவெளியே கிளம்பும் போது தேர்ந்தெடுக்கும் பாப்பாவை தயார் செய்யும் விதம்...ஆஹா பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது கீதாக்கா.
Deleteபேபி டால்ஸ் பராமரிப்பு கார்ட்டூன் பார்க்கும்//
லவ்லி!! சமத்து.
குழந்தைகள் நம்மையும் வெகுவாகக் கவனிப்பார்களே. கூடவே நாம் செய்வதைத்தான் பெரும்பாலும் அவர்களும் செய்ய முனைவார்கள்.
சமத்து குகு!!!!
கீதா
படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. உற்ச்வர் அம்பிகை படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது.
ReplyDeleteஅலங்காரம் ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறார்கள். அழகு!!!
நல்ல தரிசனம்!
கீதா
தி/கீதா பரம்பரைப் பூசாரிகள் இவங்க குடும்பம் தான். சின்ன வயசில் இருந்தே கோயில் பணி! நன்றாக ஈடுபாட்டுடன் செய்வார். இவர் குழந்தைகளுக்கு நாங்க ஒவ்வொரு வருஷமும் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டிருக்கோம்.
Deleteஓஹோ!! ஆமாம் அவங்கதான் நன்றாகச் செய்வார்கள்.
Deleteஅவர் குழந்தைகளுக்கு படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகள் கீதாக்கா. நல்ல விஷயம். சக்தி உங்கள் எல்லோருக்கும் துணை இருப்பார்!!
கீதா
நன்றி.பல இக்கட்டான சமயங்களில் இவள் தான் துணையாகக் கூடவே இருக்கிறாள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅனைத்து படங்களும் அருமையாக எடுத்துள்ளீர்கள். தங்கள் பேத்தியின் பொம்மைகள் அழகாக உள்ளது. இருப்பினும் அவைகளுடன் குழந்தைக்கு என்ன கோபமோ? அவைகளுக்கு குழந்தையின் பாஷைதான் புரியும். அதன்படி அவள் பேச்சு கேட்டு நடக்கும். உங்களுக்கும் குழந்தையுடன் அவள் விளையாட்டுகளை பார்த்து சந்தோஷபடடுவதற்கே நேரம் சரியாக இருக்கும்.
பரவாக்கரை மாரியம்மன், வெங்கடேச பெருமாள், கருவிலி சற்குணேஸ்வரர், அம்பிகை சர்வாங்க சுந்தரி என கடவுளார்கள் அனைவரையும் பக்தியோடு தரிசித்து கொண்டேன்.
அம்பிகை வீதி உலா படம் அழகாக உள்ளது. சர்வாங்க சுந்தரி தாயாரை பார்த்து கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு. கருவிலி சற்குணேஸ்வரர் படம் மேல் விதானம், அழகிய தூண்களோடு நன்றாக வந்துள்ளது அருகில் சென்று எடுத்திருந்தால் கூட கருவறை மட்டுந்தான் புகைப்படத்தில் விழுந்திருக்கும். நீங்கள் வரும் வழியில் எடுத்த மற்ற படங்களையும் காணும் ஆவலோடிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹாஹாஹா, கமலா! குழந்தைகளுக்குக் கோபம் என்ன? நம்மைப் பார்த்துத் தானே அவையும் செய்கின்றன! ஆகவே அது அம்மா என்பதால் அதோட குழந்தைகளைக் கோவிச்சுக்கும். எப்போவுமே அதுக்கு ஒரு பாப்பா போதாது. நாலைந்து வேண்டும். அதோடு மிக்கி மவுஸ் பிடிக்காது. இந்தப் படத்தில் இருக்கும் மினி மவுஸ் தான் பிடிக்கும். மிக்கி ஊரிலேயே இருக்கு தனியா! :)
Deleteதிருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் கருவிலி. என் மாமனார் நிலங்கள் அங்கே இருந்ததால் அங்கேயும் ஒரு வீடு இருந்ததால் அங்கே தான் இருந்தார். 81 ஆம் ஆண்டில் தான் நிலங்கள், தென்னந்தோப்புக்கள், வீடு எல்லாவற்றையும் விற்றார்.
கருவிலி கோயில் ஆயிரம் வருஷங்களுக்கும் மேல் ஆனது.
அன்பின் கீதாமா, நலமுடன் இருங்கள்.
ReplyDeleteகுட்டிம்மாவின் பாப்பாக்கள் மிக அழகு.
அவளின் தோழிகள் அவைதானே.
எங்கேயும் மறக்காமல் கொண்டு போக வேண்டும்.
ஒண்ணை விட்டால் கூட அதகளம் தான்:)
இதெல்லாம் இங்கிருக்கும் பேரங்களோடு கண்ட அனுபவங்கள்.!!
பரவாக்கரை கோவிலும், சர்வாங்க சுந்தரி
அம்பாளும் மிக அருமை.
பழைய பதிவுகள் நினைவுக்கு வருகின்றன.
எல்லோரும் வளமாக இருக்க வேண்டும்.
ஆஹா! @ரேவதி! உங்க பேரன்களும் அப்படித் தானா? குழந்தைகளின் கோப, தாபங்கள் இனிமையாக ரசிக்கத் தக்கவை. ஆமாம், முன்பெல்லாம் அடிக்கடி கருவிலி, பரவாக்கரை பற்றி எழுதி இருக்கேன். :)))) அதான் நினைவில் வந்திருக்கும்.
Deleteகுட்டி குஞ்சுலு இந்தியா வந்து இருக்கிறார்களா ?
ReplyDeleteநானும் தரிசித்து கொண்டேன்.
ஆமாம், கில்லர்ஜி! ஜனவரி கடைசி வரை இருப்பாங்க! நன்றி.
Deleteபடங்கள் ரசிக்க வைத்தன. பரவாக்கரை அம்மனின் தரசினம் கிடைத்தது. வெண்காட்ச பெருமாள்ஸ் சன்னதி பெரிதாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இந்தப் பெருமாளின் உற்சவர் தான் யாராலோ தூக்கிச் செல்லப்பட்டுப் பின்னர் திலகவதி (காவல் துறை) அவர்களின் உதவியால் மீட்டோம். பெருமாளின் சங்கு, சக்கரம் தாங்கும் கைகளில் ஒன்று உடைந்து இருக்கிறது. அதைச் செப்பனிட்டுவிட்டு கருட சேவை நடத்தும் எண்ணம் இருந்தும் அறநிலையத்துறை விக்ரஹம்செப்பனிடப் போடும் நிபந்தனைகளால் தாமதம் ஆகிறது. யாரும் முன்னெடுத்துச் செய்வார் இல்லை. கருடசேவை எங்க குடும்பத்தால் வருஷா வருஷம் நடக்கும் என மாமியார்/மாமனார் சொல்லி இருக்காங்க.
Deleteஇந்த் அநிகழ்வு பற்றி முன்னார் சொல்லியிருந்த நினைவு இருக்குகீதாக்கா
Deleteகீதா
ஆமாம், மறுபடியும் மஹா சம்ப்ரோக்ஷணம் பண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கு. எப்படி நடக்குமோ? பெருமாள் தான் நடத்திக்கணும்.
Deleteகுட்டிக்குஞ்சுலுவின் பொம்மைகளை இந்தியா எடுத்து வந்திருப்பது சிரிப்பு/ சிறப்பு. குழந்தைகள்! அவர்கள் அந்த போமாமிகளுடன் பேசுவதும், அதற்கு அலங்காரம் செய்வதும், ஊட்டி விடுவதும்...!
ReplyDeleteஆமாம் ஶ்ரீராம், அவங்களோட கோப, தாபங்களே ரசிக்கும்படி இருக்கும். இதுவும் எல்லாம் செய்யும்.
Deleteதங்கள் செல்லக் குகு வின் வருகை அறிந்து மகிழ்ச்சி! மழலையின் குறும்பும், கோபமும், அன்பும் என்றென்றும் அழகு! Enjoy கீதாம்மா!
ReplyDeleteநன்றி வானம்பாடி!
Deleteஉங்கள் பேத்தி குட்டி குஞ்சுலு உங்கள் மகன் மருமகள் என்று மகிழ்வான நேரம் அதுவும் பேத்தியோடு உங்களுக்கு நேரம் செல்வதே தெரியாமல் இருக்கும். மனதும் சந்தோஷம் என்றால் உடம்பு வலியும் தெரியாது.
ReplyDeleteகுட்டிக் குஞ்சுலுவின் விளையாட்டுகள் ரசிக்க வைக்கின்றன. பொம்மைகளைக் குழந்தைகளாக நினைத்துக் கொண்டு செய்வது எல்லாமே வேடிக்கையாகவும் ரசிக்கவும் வைக்கும்.
பொன்னான நேரங்கள். பொக்கிஷமான நேரங்கள்.
துளசிதரன்
ஆமாம் ! குழந்தையின் கோப, தாபங்கள், விளையாட்டுகள் என அனைத்துமே ரசிக்கத்தக்கவை.
Deleteஉங்கள் பேத்தி குட்டி குஞ்சுலு உங்கள் மகன் மருமகள் என்று மகிழ்வான நேரம் அதுவும் பேத்தியோடு உங்களுக்கு நேரம் செல்வதே தெரியாமல் இருக்கும். மனதும் சந்தோஷம் என்றால் உடம்பு வலியும் தெரியாது.
ReplyDeleteகுட்டிக் குஞ்சுலுவின் விளையாட்டுகள் ரசிக்க வைக்கின்றன. பொம்மைகளைக் குழந்தைகளாக நினைத்துக் கொண்டு செய்வது எல்லாமே வேடிக்கையாகவும் ரசிக்கவும் வைக்கும்.
பொன்னான நேரங்கள். பொக்கிஷமான நேரங்கள்.
துளசிதரன்
ஆமாம்.
Deleteகுஞ்சுலுவின் குட்டிப் பாப்பாக்கள் எல்லாம் அழகு. பேத்தியுடன் மகிழ்ந்திருங்கள்.
ReplyDeleteஎங்கள் வீட்டிலும் ரெடியும், ரெயின்டீயும் மாற்றி மாற்றி நித்திரைக்கு வருவினம். வெளியில் கொண்டு வரமாட்டார். :)
இப்போவும் ஒரு வேலையாக ஊருக்குக் கிளம்புகிறது குட்டிக் குஞ்சுலு. எல்லாப் பாப்பாக்களும் வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கு. :))))
Deleteஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteஇப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்!
ReplyDeleteதுளசிதரன்
நன்றி துளசிதரன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteஅனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்க நலம்..
துர்க்கா பாப்பாவின் பாப்பாக்கள் அழகு.
ReplyDeleteஅம்மாவுடன் வெளியே வர போட்டி இருக்குமா பாப்பாக்களுக்கு இடையே!
கோவில் சுவாமி படங்கள் எல்லாம் அருமை.
கருவிலி கோவில் அடிக்கடி ஆலய தரிசன நிகழ்ச்சியில் பார்த்து இருக்கிறேன்.
உங்கள் பதிவிலும் கண்டு களித்தேன்.
கடவுள் அருள்புரியவேண்டும் எல்லோரும் நலமாக வாழ.