நேற்று சங்கடஹர சதுர்த்தி அதோடு தைமாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை. ஆகவே பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்தேன். அந்தப் படங்கள். கிண்ணங்களில் கொழுக்கட்டைகள். வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம். கற்பூர ஹாரத்தியைப் படம் எடுக்கலை. ராகுகால விளக்கேற்றிப் பலகையில் வைச்சிருக்கேன்.
உம்மாச்சி அலமாரியில் விளக்கேற்றி வைச்சிருக்கேன், பின்னால் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பெருமாள், குடும்பச் சொத்து. இவரோடு சிவன், பார்வதி, ரிஷபாரூடராக இருந்திருக்கார். சிவன், பார்வதியைக் காணவில்லை. ரிஷபம் மட்டும் இருக்கு. நாங்க கயிலையிலிருந்து கொண்டு வந்த ஒரு விக்ரஹத்தை அதில் வைத்துள்ளோம். சோமாஸ்கந்தராக விக்ரஹம் தேடிக்கொண்டிருக்கோம், கிடைக்குமா தெரியலை. பிள்ளையாரும், தவழ்ந்த வெண்ணைக் கிருஷ்ணனும் உண்டு. இவங்க இரண்டு பேரும் தான் பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்திக்கு இப்போல்லாம் பக்ஷணம் சாப்பிட வராங்க.
ஶ்ரீராமர். அங்கே தெரிவது பிள்ளையாரும் (குடும்பச் சொத்து) ராமரின் இன்னொரு பக்கம் தவழ்ந்த கிருஷ்ணரும். சரியாக விழலை கிருஷ்ணர். இன்னொரு படம் இருக்கு. அதைப் போட்டிருக்கணும். ஶ்ரீராமர் படத்தில் மாலை போல் தொங்குவது சிதம்பரம் ஶ்ரீநடராஜரின் குஞ்சிதபாதம். தூக்கிய திருவடியில் மாலையாகச் சார்த்துவார்கள். வெட்டிவேரால் செய்யப்பட்டது. இப்படிப் பிரசாதமாகக் கட்டளைக்காரங்களுக்குக் கொடுப்பாங்க. ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் கிளியைக் கொடுப்பது போல். எங்களுக்கு இது போல் நிறையத் தரம் வந்திருக்கு. இது சமீபத்தில் தீக்ஷிதர் வந்தப்போக் கொடுத்தது. பழசைக் களைந்து விட்டோம்.
இந்த வருஷம் கீழே உட்கார முடியாததால் ப்ளாஸ்டிக் டீபாயையே அலம்பித் துடைத்துக் கோலம் போட்டுக் கொடுத்தேன். அதிலேயே பூஜை பண்ணி விட்டார்.. மறுநாள் கனுப்பிடி படம் எடுக்க மறந்துட்டேன்.
ஆ... கொழுக்கட்டை... ஓடி வந்திருப்பேனே...
ReplyDeleteஹாஹாஹா! நினைச்சால் கொழுக்கட்டை தானே! :)))
Deleteஒரே ஒரு படம் தவிர மற்ற அனைத்துப் படங்களும் நன்றாகவே வந்திருக்கின்றன.
ReplyDeleteஶ்ரீராமர்? அவரை மட்டும் இந்த வெளிச்சப் பிரதிபலிப்பு இல்லாமல் யாரானும் எடுப்பாங்களானு தான் நானும் பார்க்கிறேன். வெங்கட் சொன்னார் இது தவிர்க்க முடியாதது என.
Deleteபடங்களை தரிசித்தேன்.
ReplyDeleteநானும் வலையுலகில் இருக்கிறேன்.
வாங்க கில்லர்ஜி, நானும் உங்க வலைப்பக்கம் உலாத்திட்டுத் தானே இருக்கேன்.
Deleteபடங்கள் அழகு.. பதிவின் விவரங்களும் அழகு..
ReplyDeleteஎங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்.. நன்றி.
வாங்க தம்பி. உலக க்ஷேமத்துக்காகவே பிரார்த்தனைகளும், வழிபாடுகளும்
Deleteஅன்பின் கீதாமா.
ReplyDeleteஎல்லோர் நலனுக்கும் பிரார்த்தனைகள்.
படங்கள் அனைத்தும் மிகச் சிறப்பு. உங்கள்
பக்தியும் உழைப்பும் பிரமிக்க வைக்கின்றன.
குழந்தைகள் ஊருக்குக் கிளம்பி விட்டார்களா.
பிரசாதம் அனைத்தும் அமிர்தம்.
இவ்வளவு பாத்திரங்களையும் எப்படித்தான் காப்பாற்றுகிறீர்களோ!!!
பிரமிப்பாக இருக்கிறது.
ஒவ்வொரு வியாழக் கிழமையும்
அத்தனை வெள்ளி சமாசாரங்களையும், வ்க்கிரகங்களையும் தேய்த்து வைப்பதே
பெரிய வேலையாக இருக்கிறது.
மாமா நாற்காலியில் உட்கார்ந்து பூஜை செய்வதும் அருமை. கோலங்களும், தீபங்களும் மனதை நிறைக்கின்றன.
பல்லாண்டு ஆரோக்கியத்துடன் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.
வாங்க வல்லி, வேலை என்னமோ பெரிது தான். உழைப்பும் இப்போல்லாம் கொஞ்சம் சிரமமாகவே தெரிகிறது. இருந்தாலும் நாம் இருக்கும் வரை தானே இதெல்லாம் என்னும் நினைப்பு இன்னமும் தீவிரமாக ஈடுபடச் சொல்கிறது.
Deleteகொழுக்க்ட்டை ஆஹா!! ரொம்பப் பிடித்தது...
ReplyDeleteஎப்படியோ நல்லபடியாக முடித்துவிட்டீர்கள்! உங்கள் உடல் நல அசௌகரியங்களுக்கிடையிலும்...ஒரே ஒரு படம் தான் கொஞ்சம் டல்லாக இருக்கு மற்றவை நன்றாக வந்திருக்கின்றன கீதாக்கா
உலக நலனுக்குப் பிரார்த்திப்போம்
கீதா
எங்க வீட்டுக்கு வந்து ஶ்ரீராமரை இந்த வெளிச்சம் இல்லாமல் எடுத்துக் கொடுத்தால் மிகவும் நன்றி உடையோளாக இருப்பேன். :)
Deleteகொழுக்கட்டை பிரசாதங்கள் என உங்கள் விழாக்கள் சிறப்புறுகின்றன.
ReplyDeleteநன்றி மாதேவி.
Deleteதட்டில் வைத்த கொழுக்கட்டைகள் எல்லாவற்றையும் சாப்பிடும் ஆசை வருகிறது.
ReplyDeleteரொம்ப நன்றாகவே (சிறப்பாகவே) கொண்டாடியிருக்கீங்க.
ராமர் படத்தைப் பார்த்த பிறகுதான், இது கீசா மேடம் பதிவுன்னு நல்லாவே தெரியுது.
இருவரையும் நமஸ்கரிக்கிறேன். வாழ்க வளமுடன்
ஹாஹாஹா, விரைவில் ஶ்ரீரங்கம் வந்து ராமரை வெளிச்சம் பிரதிபலிக்காமல் எடுத்துக் கொடுக்கும்படி வேண்டுகிறேன். அம்பத்தூர் வீட்டில் எடுத்த ராமர் படங்களைப் பார்த்தால் ஒரு வேளை புரியலாம்.
Deleteவிநாயகர் வினை எல்லாம் தீர்க்கட்டும்.
ReplyDeleteநானும் வலையில் இருக்கிறேன் ஆனால் தாமதமாகத்தான் தலையை காட்ட முடிகிறது
கீதா
ஆமாம், ரொம்பவே தாமதம் ஆகின்றது. சில நாட்கள் உட்காரவே முடிவதில்லை.
Deleteவிநாயகர் வினை எல்லாம் தீர்க்கட்டும்.
ReplyDeleteநானும் வலையில் இருக்கிறேன் ஆனால் தாமதமாகத்தான் தலையை காட்ட முடிகிறது
துளசிதரன்
(அக்கா, துளசி அனுப்பும் கருத்தை தட்டச்சு செய்து இங்கு போடும் போது பழக்க தோஷத்தில் என் பெயரைப் போட்டு அனுப்பிவிட்டேன்..சாரிக்கா..இதை வெளியிடவும்...கீதா.)
ஓ,அதனால் என்ன! துளசிதரன் ஆயிரம் வேலைகளுக்கு நடுவே வருவதே பெரிய விஷயம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவும்,படங்களும் அழகாக உள்ளது. அழகிய ராமரை தரிசித்துக் கொண்டேன். தை வெள்ளிதோறும் கொழுக்கட்டைகள் பண்ணுவீர்களா ? பொங்கல் நிவேத்திய படங்கள், பூஜை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பொங்கல் சிறப்பாக கழிந்தமைக்கு என் வாழ்த்துகள். இந்த வருடம் மகன், மருமகள், பேத்தி குழந்தை அனைவருடனும் சேர்ந்து பொங்கல் கொண்டாடியதற்கு பெரும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, ஒவ்வொரு ஆடி மாத முதல் வெள்ளி. தை மாத முதல் வெள்ளி. இந்த வருஷம் 14 ஆம் தேதி மாசப்பிறப்பன்றே வெள்ளியாகவும் சங்கராந்தியாகவும் அமைந்து விட்டது. ஆகவே இந்த வாரம் செய்தேன். அனைவரும் இன்னும் ஒரு மாதமாவது இருப்பார்கள் என நினைக்கிறேன். திருநெல்வேலிக்காரங்களுக்கு இந்த வெள்ளிக்கிழமை, கொழுக்கட்டை/மாவிளக்குப் பழக்கம் இல்லைனு நினைக்கிறேன்.
Deleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் மகன் குடும்பம் இன்னும் ஒருமாதம் இருப்பதற்கு மகிழ்ச்சி. உங்களுக்கு உங்கள் பேத்தியுடன் சேர்ந்து இருக்க வாய்ப்பு தந்த இறைவனுக்கும் நன்றி.
உண்மைதான்.. அம்மா வீட்டில் நானிருக்கும் வரை செய்ததாக நினைவில்லை. ஆனால் சர்க்கரை பொங்கல், அல்லது வெல்லப் பாயாசம் தை,ஆடி வெள்ளிகளில் கண்டிப்பாக உண்டு. நான் திருமணமாகி சென்னை வந்த பின், அக்கம் பக்கம் (நம்மவர்கள்) குடியிருப்பவர்கள் செய்வதைப்பார்த்து, நானும் ஆடி, தை மாத முதல் அல்லது கடைசி வாரங்களில் கொழுக்கட்டை செய்து அம்பாளுக்கு நிவேதனம் செய்து தாம்பூலத்துடன் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் கொடுத்துள்ளேன். திருமணமான முதல் ஐந்து வருடங்கள் தை வெள்ளியில் தை வெள்ளி நோன்பு எடுத்து கொள்வது எங்களுக்கு கட்டாயம். அதிலேயே எடுத்துக் கொள்ள முடியாத ஒரு வருடத்திற்கும் சேர்த்து ஆறு வருடங்கள் என கழிந்து விட்டது. இப்போதும் இந்த தடவை கடைசி வெள்ளியில் கொழுக்கட்டை பண்ண வேண்டுமென நினைக்கிறேன். ஆண்டவன் சித்தம் எப்படி உள்ளதோ பார்க்கலாம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நேற்றுத்தான் பேத்தியையும் அவள் அம்மாவையும் இன்னொரு தாத்தா வந்து அழைத்துச் சென்றிருக்கிறார். அவங்க அம்மா வீட்டில் இருக்கவே இல்லை என்பதால் அங்கே சென்றிருக்கிறார்கள். பையர் இங்கே இருப்பார். வீட்டிலிருந்தே வேலை செய்வதால் இணைய வசதி இங்கே தான் நன்றாகக் கிடைக்கும். ஆகவே கிளம்பும் வரை இங்கே இருப்பார். வீடே வெறிச்சென இருக்கிறது.பக்கத்துத் தோட்டத்துக் காக்கைகள், குயில்கள், கிளிகள் குஞ்சுலு எங்கே எனக் கேட்கின்றன.
Deleteவணக்கம் சகோதரி
Deleteகுழந்தைகளின் பிரிவு என்பது மனதை வருத்தும் கஸ்டந்தான்.. என்னத்தான் ஸ்கைப்பில் பார்த்துப் பேச முடியும் என்ற விஞ்ஞான மாற்றங்கள் வந்தாலும், உடனிருப்பது போன்று வராது. கொஞ்ச நாட்கள் உங்கள் பேத்தி இங்கு வந்து இருந்த போது உங்கள் மனதுக்கு மகிழ்வாக, உற்சாகமாக இருந்திருக்கும். அந்த உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்ன செய்வது?
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
சற்று இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. தகவல்கள் நன்று. படங்களும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி வெங்கட், இதிலேயே சில/பல படங்கள் போட விட்டுப் போய்விட்டன. என்னவோ உட்கார்ந்து வேலை செய்யவே முடியவில்லை. கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் போய்ப் படுத்துடறேன். அவ்வளவு அலுப்பாக இருக்கு! :))))
Delete