இங்கே யோசனைகளில் பல்வேறு விதமான குழம்பு பற்றி வந்திருக்கு. அது கிடக்கட்டும். நேற்று நான் பல நாட்கள் (நாட்கள் தான்) கழித்துக் கொஞ்சம் போல் தட்டை சாப்பிடப் பண்ணலாம்னு நம்ம ரங்க்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்த அரிசிமாவை எடுத்துக் கொண்டேன். அரிசியை ஊற வைச்சு மாவு அரைக்க இப்போதெல்லாம் முடிவதில்லை. புழுங்கலரிசியை ஊற வைத்து கிரைண்டரில் அரைத்துப் பண்ணவும் நேரம் இல்லை. ஒரே ஓட்டமாக இருந்து வருகிறது. ஆகவே கடையில் அதுவும் எப்போதும் வாங்கும் கடையில் அரிசி மாவு வாங்கிக் கொண்டு வந்தாச்சு. இந்த மாவில் தேன்குழல், முள்ளுத்தேன்குழல் எல்லாம் பண்ணி இருக்கேன். கொஞ்சம் போல் மிக்சரும் தேய்க்க ஓமப்பொடி, காராபூந்தி எல்லாமும் பண்ணி இருக்கேன். ஆகவே தைரியமாக மாவைத் தாம்பாளத்தில் கொட்டிப் பொட்டுக்கடலையைச் சூடு பண்ணி வறுத்து அரைத்து அதோடு உளுத்தமாவும் சேர்த்துக் கொண்டேன். எப்போதும் காரத்துக்கு மி.வத்தல் ஊற வைச்சுப் பெருங்காயம் உப்பு, தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கலப்பேன். கொஞ்சமாக வெண்ணெய் போடுவேன்.
நேற்று மி,வத்தல் எல்லாம் ஊறவைக்கலை. திடீர்த்திட்டம் என்பதால் மி.பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கொண்டு தேங்காயைக் கீற்றாக்கி ஊற வைச்ச கடலைப்பருப்பும் சேர்த்து மாவைப் பிசைந்து கொண்டேன். மாவு என்னமோ நிறைய இருக்கிறாப்போல் தெரிந்தது. பரவாயில்லை, பண்ணிடலாம் கூடவே ஒரு பத்து நாள் வைச்சுக்கறாப்போல் இருக்கும்னு நினைச்சு எண்ணெயை வைத்துக் காய வைத்து அது காய்ந்ததும் தட்டைகளைத் தட்டிப் போட்டேன். முதல் ஈடு எடுத்ததும் உம்மாச்சிக்குக் காட்டிட்டு ரங்க்ஸிடம் ருசி பார்க்கக் கொடுத்துவிட்டு நானும் கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டேன். காரம் அவ்வளவா இல்லை என்பதைத் தவிர்த்து வேறே குறை தெரியலை. இரண்டு, மூன்று ஈடுகள் நல்லச் சிவக்க விட்டு எடுத்த தட்டைகளைச் சற்று நேரம் கழித்து எடுத்துப் பார்த்தபோது "வெடக்" வேகாதது போலத் தெரிந்தது. ஆகவே மறுபடியும் கொதிக்கும் எண்ணெயில் போட்டு இன்னும் சிவக்க எடுத்து வைத்தாலும் கடினமாகவே இருந்தது. என்ன காரணம்னு புரியலை. மாவு என்னமோ ருசி நன்றாகவே இருந்தது. ஆனால் தட்டைகள் கரகரவென வரவில்லை. அழுத்தமாக வந்தாலும் பரவாயில்லை. பல்லுக்கு வேலை கொடுக்கும் போல் இருந்தன. இனி இந்த விஷப் பரிட்சை வேண்டாம்னு வைச்சுட்டு மாவை எடுத்து மூடி வைச்சுட்டேன்.
இன்னிக்கு அந்த மாவை ஒரு வழி பண்ணியாகணும். என்ன செய்யலாம்? நேற்றே யோசித்து முடிவுக்கு வந்தாச்சு என்றாலும் அதைச் செயலாக்கி விட்டுப் படங்களுடன் (முடிந்தால்) போடறேன். என்ன பண்ணி இருக்கலாம்/இருப்பேன் என நீங்க நினைக்கிறீங்க?
Dear Geethamma, seeing your blog after long time...I hope you would have tried a new tasty recipe! take care ma.
ReplyDeleteவாங்க வானம்பாடி. நிஜமாகவே நல்ல ருசியானதாக அமைந்து விட்டது. உங்களுக்கு என் நன்றி.
Deleteமாவில் கோளாறு இருக்கலாம். இப்போதெல்லாம் கடலை மாவெல்லாம் கடலை மாவல்ல என்பது போல சமயங்களில் மைசூர்பாகு சரியாய் வராமல் பிரிந்து ஓடிவிடுகிறது. மைதா மாவு வாங்கி வந்து போளி செய்ய ஆரம்பித்தால் சரியாகவே வராமல் பிரிந்து போனது...
ReplyDeleteஇல்லை. இதே மாவில் தான் குஞ்சுலுவுக்காகத் தேன்குழல் 2,3 முறை செய்து கொடுத்தேன். அப்புறமாக மிக்சருக்கு ஓமப்பொடியும் , பூந்தியும் தேய்த்திருக்கேன். ஓட்டு (ரிப்பன்) பகோடா பண்ணினேன். எல்லாமே நன்றாக வந்தது, இதான் சொதப்பல்.
Deleteமோர்க்களி மாதிரி ஏதும் செய்தீர்களோ? இல்லை காயப்போட்டு வடகம்?!
ReplyDeleteஹிஹிஹி, நேத்திக்கு ஶ்ரீரங்கத்தில் வானம் மூடி இருந்தது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? ஆனால் வடாம் பிழியறதுன்னா மாடிக்கு ஏறணுமே! :))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஉ. மாவு கொஞ்சம் அதிகமானல்தான் வெடுக்கென ஆகும். எப்போதுமே பட்சணங்கள் உங்கள் கைப் பக்குவத்திறகு வசப்பட்டு பிரமாதமாகி விடுமே.. ஏன்? என்னாச்சு.? இந்த தடவை வாங்கிய அரிசி மாவு சரியாக அமையவில்லையா? முன்பெல்லாம் வெளியில்,அரவை மிஷினில் அரிசி மாவு அரைக்கப் போகும் போது, அதற்கு முன் அதில் வேறு எவரேனும், ராகி, கம்பு, கோதுமை மாவு அரைத்திருந்தால் நமக்கு சரியாக வராது. அதனால்தான் கொஞ்சம் நம்முடைய அரிசிமாவை முதலில் போட்டு அரைக்கச் சொல்லி எடுத்துக் கொண்டு விட்டு பின் பட்சணத்திற்கான மாவை அரைப்போம். இப்போதெல்லாம் வீட்டில் மிக்ஸியில்தான் தயாரித்துக் கொள்கிறேன். எதற்கும் மிஷினுக்கே போவதில்லை. ஆனால் நீங்கள் எப்போதும் போல் பழக்கமான கடையில் வாங்கிய அரிசி மாவு என்கிறீர்கள். அதுவும் சமயத்தில் எனக்கும் இப்படி காலை வாரி விடும். அரிசி மாவு உப்புமா தயாரிக்கும் போது சில சமயம் சீக்கிரம் உதிராமல் ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டு அடம் பண்ணி படுத்தும்.
நீங்கள் தட்டைக்காக தயாரித்த அந்த மாவை அந்த மாதிரி புளி கரைத்து விட்டு எப்படியோ அரிசி மாவு உப்புமா பண்ணினீர்களா? இல்லை கொஞ்சம் துவரம் பருப்பு, கொஞ்சம் கடலை பருப்பு ஊறவைத்து கரகரவென அரைத்து அத்துடன் கலக்கி (பிடித்தால் வெங்காயம் சேர்த்து) அடைகளாக வார்த்தீர்களா? எனக்கு தோன்றியதை சொன்னேன். வேறு ஏதாவது வித்தியாசமான திப்பிசமாக நீங்கள் தயாரித்திருப்பீர்கள். நாளை அதை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, இது "வெடுக்"என்று இருந்தால் உளுந்து மாவு அதிகம் எனக் கொள்ளலாம். ஆனால் பார்த்தால் மேலே சிவந்து நன்கு வெந்திருப்பது போல் இருந்தது. வாயில் போட்டால் அரை வேக்காடு. சரினு திரும்பப் போட்டு எடுத்தால் உடைக்கவே முடியலை. விசித்திரமானதொரு ருசியில் வந்திருக்கு, நல்லவேளையா நிறுத்திட்டேன்.
Deleteசெய்து விட்டு தனியாக சாப்பிடாதீங்கோ... தேவகோட்டைக்கு சின்ன பார்சல் அனுப்பி வைங்க... ருசி பார்த்து சொல்றேன்.
ReplyDeleteஹிஹிஹி! ரொம்ப லேட் நீங்க கில்லர்ஜி. நேற்றுச் செய்த பண்டம் நேற்றே பாஸ் மார்க் வாங்கி விட்டது, பையர் அப்படியே சாப்பிட நல்லா இருக்குனு சொல்லிட்டு எதுவும் தொட்டுக்காமல் சாப்பிட்டார் :)
Delete!
ஆஹா remake recipe இன்னும் better I guess...😀
ReplyDeleteஆமாம், ஏடிஎம், நீங்க தான் தாமதமா வந்தீங்க. கிடைச்சதா இல்லையா?
Deleteதிப்பிசம் இல்லா சமையல் இல்லை - ஹாஹா... என்ன செய்து இருப்பீர்கள் என படிக்க காத்திருக்கிறேன்! :)
ReplyDeleteஹாஹாஹா, வெங்கட், உங்க வலைப்பக்கம் நிறைய அரியர்ஸ் வைச்சிருக்கேன். சாவகாசமா வரணும்.
Deleteஅடை அல்லது உப்புமா செய்து கொண்டீர்கள்?
ReplyDeleteவாங்க மாதேவி. ஒரு பாதி சரி. நீங்க சொன்னாப்போல் தான்.
Delete