புத்தாண்டுக்கு வாழ்த்துப் பதிவு போடலையேனு சிலரோட எண்ணம். முன்னெல்லாம் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போல்லாம் நண்பர்களின் பதிவுகளில் போய் வாழ்த்துவதோடு சரி.
பல படங்கள் எடுத்திருந்தேன். ஆனால் அவற்றைக் கணினியில் ஏற்றும்போது ஏதோ பிரச்னைகளால் அழிந்து விட்டன. வந்த வரைக்கும் போட்டிருக்கேன். தலைப்பைப் பார்த்துட்டுப் பப்படம் எங்கே என நினைக்காதீங்க. சும்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு கவர்ச்சிக்கு/தலைப்பு ஈர்க்கணும் இல்லையோ, அதுக்குப் போட்டேன். :)
மார்கழி மாதப் பதிவுகள் எதுவும் நான் போடவில்லையா இந்த வருஷம்னு பலரும் கேட்கின்றனர். ஏற்கெனவே 2,3 முறைகள் ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு மாதிரியாகப் போட்டு அதில் குறிப்பிட்ட ஒரு வருஷம் போட்டவற்றை மின்னூலாக்கி 2 வருடங்கள் முன்னர் வெளியிட்டேன். அப்போல்லாம் அமேசானில் வெளியிடத் தெரியாது. ஆகவே Freetamilebooks மூலம் வெளியிட்டேன். அதன் சுட்டியை இங்கே கொடுக்கிறேன். தேவைப்பட்டால் படித்துக்கொள்ளலாம்.
திருவெம்பாவைப் பதிவுகள் என்னோட இன்னொரு வலைப்பக்கமான "என் பயணங்களில்" வெளியிட்டிருக்கேன். அதை இப்போது எல்கே அவருடைய "பாகீரதி" மின்னிதழில் வெளியிட்டுக் கொண்டிருக்கார்.
இங்கே நீங்கள் திருவெம்பாவை விளக்கங்களை முடிஞ்சப்போப் பார்க்கலாம்.
தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு தனபாலன்.
Deleteதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteசுட்டிக்கு பிறகு செல்கிறேன்...
மெதுவாப் போய்ப் பாருங்க கில்லர்ஜி. அநேகமா நீங்க பதிவுகளிலேயே படிச்சிருப்பீங்க.
Deleteபடங்கள் நன்று. கருவிலி பயணத்தில் எடுத்தது போலிருக்கு.
ReplyDeleteஆமாம். வண்டியின் வேகம் படம் எடுக்கையில் சிரமமாக இருந்தது. :(
Deleteவயலும் வீடுகளும், பச்சையும் மனதை இதமாக்குகின்றன கீதாக்கா. பார்க்கும் போதே மனம் மகிழ்கிறது.
ReplyDeleteபடங்கள் அழகாக இருக்கிறது
கீதா
நல்லவேளையாக நான் நினைவு தெரிந்து பார்க்கும் இம்மாதிரி கிராமங்கள் எல்லாம் பசுமையை இன்னும் தொலைக்கவில்லை. தி/கீதா! அதிலும் காவிரிக்கரையின் பசுமை கண்களைக் குளிர்விக்கும்.
Deleteஅட 4,5 தினமாக நம்ம கருத்து எல்லாம் நல்லா போய்க்கொண்டிருக்கிறதே என்று நினைத்துவிடக் கூடாது போல!!! காலையில் எபி க்குப் போடும் போது கூட ரோபோ வரவில்லை. இப்போது மீண்டும் ரோபோ வந்துவிட்டார்!!!
ReplyDeleteகீதா
ஹாஹாஹா!
Deleteபடங்கள் குஞ்சுலு எ டுத்த படங்கள் போன்று உள்ளன.
ReplyDeleteபடமும் பப்படமும் என்று தலைப்பு பார்த்தவுடன் எங்கள் ஊர் பப்படத்திற்கும் உங்கள் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்தது. இது போன்று பப்படத்தை கேலி செய்வதை கண்டிக்கிறேன்.
Jayakumar
@ஜேகே அண்ணா, குஞ்சுலு இன்னமும் நன்றாக எடுத்துடுமே! அது தெரியாதா உங்களுக்கு? :)))
Deleteவயலும் வயல் சார்ந்த இடமுமாக படங்கள் பசுமை.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteபடங்கள் நன்று. தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் பதிவுகளும் மின்நூல்களும்.
ReplyDeleteநன்றி வெங்கட்! எங்கே! தொகுத்துப் பிழை திருத்தம் செய்ய நேரமே வாய்ப்பதில்லை! :(
Deleteபடமும் பப்படமும்!..
ReplyDeleteஇதுவும் சுவைதான்.. குறையொன்றும் இல்லை..
வாழ்க நலம்..
ஆமாம், துரை, அதிலும் மிளகு ரசத்தோடு பப்படம் சுவையோ சுவை! :)))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? பதிவு அருமை. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் புதுவருட வாழ்த்துகள். இப்போது குலதெய்வ வழிபாட்டிற்கு சென்ற போது எடுத்த படங்கள் நன்றாக உள்ளது. பசுமை மிகுந்த வயல்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
முன்பு, போன வருடத்திற்கு முன்பு என நினைக்கிறேன். தாங்கள் மார்கழி திருப்பாவை பாடல்கள், அதன் விளக்கங்களுடன் அருமையாக எழுதியதை ஒன்று விடாமல் படித்திருக்கிறேன். இப்போதும் நீங்கள் தந்துள்ள சுட்டிகளில், "ஆதியும், அந்தமும் இல்லா" பதிவுக்குச் சென்று மாணிக்கவாசகரின் எல்லையில்லா பக்தியை வியந்து படித்து போற்றியபடி அங்கு ஒரு கருத்துரை தந்திருக்கிறேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். இன்னுமொரு சுட்டிக்கு பிறகு செல்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, சுட்டி கொடுத்த உடனே அங்கே சென்று பார்த்துப் பதிவுக்குக் கருத்துரையும் கொடுத்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அதைத் தொடர்ந்து வரும் மற்றப்பதிவுகள் திருவெம்பாவை/திருப்பள்ளி எழுச்சிக்கான விளக்கவுரைகளுடன் கூடிய பதிவுகள். இதே தலைப்பில் காணலாம். நேரம் இருக்கையில் இன்னொரு சுட்டியையும் போய்ப் பாருங்கள். மிக்க நன்றி.
Deleteவயலும் பசுமையும் கண்டாலே மகிழ்ச்சிதான். வாழட்டும் உழவர்கள்.
ReplyDeleteபப்படம் இல்லாத விருந்தா :) சுவையான தலைப்பு.
வாங்க மாதேவி, பசுமையைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் தான்!
Deleteகுட்டி குஞ்சுலு ஊருக்கு போயாச்சா?
ReplyDeleteஇது வரை போட்ட கருத்துகள் போகவில்லை, உங்களுக்காவது போகிறதா என்று பார்க்கலாம்
குஞ்சுலு பொங்கலுக்குப் பின்னர் அவளோட இன்னொரு தாத்தா/பாட்டி வீட்டுக்குப் போகும். அதன் பின்னர் மாசக்கடைசியில் நைஜீரியா திரும்புகிறார்கள். காலை எழுந்ததும் பல் தேய்ப்பதில் இருந்து பால் குடித்தல், குளித்தல், சாப்பிடப் படுத்தல்னு எல்லோரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அது ஊருக்குப் போன பின்னர் வெறிச்சோ வெறிச்! :(
Deleteகருவிலி பயணத்தில் எடுத்த படங்கள் அருமை.
ReplyDeleteமகனுக்கு இங்கு உள்ள முடிக்க வேண்டிய வேலைகளே நிறைய இருப்பதால் குலதெய்வம் கோவில் போக முடியவில்லை, கோவிலில் குமபாபிஷேக விழா வேறு நடை பெறுகிறது.
இந்த மாத கடைசியில் போகிறார்களா? என் மகனும் இந்த மாத கடைசியில்தான். பேரன் அந்த பாட்டி வீட்டுக்கு போய் இருக்கிறான்.
நீங்கள் சொல்வது போல் வீடு வெறிச் என்று இருக்கிறது.