தட்டை மாவு பிசைந்தது. அதன் மேல் ஒரு பெரிய பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைச்சிருக்கேன்.
தட்டை செய்ய முடியாமல் மாவு கலந்ததை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென அக்கி ரொட்டி நினைவில் வந்தது, அக்கி ரொட்டி பற்றிப் பல்லாண்டுகள் முன்னரே அம்பத்தூரில் எங்க வீட்டில் குடி இருந்த மாமி மூலம் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் பண்ணும்போது எல்லாம் அந்த மாமியும் கொடுத்தது இல்லை. அநியாயமா இல்லையோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நானும் சுவாரசியமாகப் பண்ணும் முறை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கலை. இணையத்துக்கு வந்த பின்னரே அதைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நேர்ந்தது. ஆகவே அக்கி ரொட்டி செய்முறை பற்றித் தேடும்போது தி/கீதா அவர்கள் எ.பி.யில் "திங்க"க்கிழமைக்கு எழுதினது கண்களில் பட்டது. அதில் அவர் அரிசி மாவோடு கொஞ்சம் சமைத்த சாதமும் சேர்க்கச் சொல்லி இருந்தார். நமக்கு அது சரிப்படாது, சாதம் என்னமோ இருந்தது தான். அதைச் சேர்த்துப் பிசைந்து விட்டால் பின்னர் குளிர்சாதனப்பெட்டியில் மாவை வைக்க முடியாது. ஆகவே யோசித்தேன்.
மாவு பைன்டிங்கிற்காக/அதாவது சேர்ந்து வந்து தட்டும்போது பிரியாமல் வருவதற்காகத் தானே சாதம் சேர்க்கிறார். நாமோ மாவில் உளுந்த மாவு//பொட்டுக்கடலை மாவு எல்லாம் சேர்த்திருக்கோம். அதற்குத் தகுந்த காரமும் இருக்கு. போதாக்குறைக்கு ஊற வைச்ச கடலைப்பருப்பு/தேங்காய்க்கீற்று எல்லாமும் சேர்ந்திருக்கு. இனி! மேல் அலங்காரங்கள் தானே தேவை. கொத்துமல்லியைக் கழுவி நன்கு பொடியாக நறுக்கிக் கொண்டேன். 2,3 பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். ஒரு பச்சை மிளகாயைக் கீறி உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். இஞ்சி ஒரு துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கினேன். எல்லாவற்றையும் தட்டைக்காகப் பிசைந்த மாவில் சேர்த்து நன்கு கலந்தேன். வாசனை தூக்கியது. இஃகி,இஃகி, இஃகி.
பச்சைக் கொத்துமல்லி
வெங்காயம்
எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்த மாவு
ப்ளாஸ்டிக் பேப்பரில் முதலில் தட்டினேன். பின்னர் பையர் சாப்பிடும்போது வெங்காயத்தின் நீர் சேர்ந்து கொண்டு மாவு தளர்ந்து விட்டதால் அப்படியே எடுத்து உருட்டித் தோசைக்கல்லிலே போட்டு நேரடியாகக் கையாலேயே தட்டிக் கொடுத்துவிட்டேன். இது இன்னமும் நன்றாக வந்தது. மெலிதாகத் தட்டவும் முடிந்தது.
அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் அக்கி ரொட்டி. ஒரு பக்கம் வெந்திருக்கு என்றாலும் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்த படம் என்னமோ சொதப்பல்! வழக்கம் போல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ராத்திரிக்கு என்னனு கேட்ட ரங்க்ஸுக்கும்/பையருக்கும் அரிசி மாவு அடைனு மட்டும் சொல்லி இருந்தேன். இரண்டு பேருமே பயந்துட்டு இருந்தாங்க. நம்மவர் சாதம் இருக்கோனு கேட்டுச் சந்தேகத்தையும் தீர்த்துக் கொண்டார். சாப்பிடும் நேரமும் வந்தது. தொட்டுக்க என்ன? காலையில் காடரிங்கில் கொடுத்த மணத்தக்காளி வத்தக்குழம்பு இருந்தது. பொதுவாக அடைக்கு எங்க வீட்டில் வத்தக்குழம்பே தொட்டுப்போம். ஆகவே அது போதும்னு நினைச்சேன். வெண்ணெய் வேறே முதல்நாள் தான் எடுத்து வைச்சிருந்தேன். அதையும் எடுத்து வெளியே வைச்சேன்.
முதலில் வாழை இலையில் தான் தட்டணும்னு நினைச்சேன். ஆனால் வாழை இலையே இல்லை. ஆகவே சர்க்கரை வந்த ப்ளாஸ்டிக் கவரை எடுத்து நன்கு அலம்பித்துடைத்து நெய்/எண்ணெய் தடவி வைத்துக் கொண்டேன். ஒரு சின்ன ஆரஞ்சு அளவுக்கு மாவை எடுத்துக்கொண்டு தண்ணீரும், எண்ணெயுமாகத் தொட்டுக் கொண்டு பின்னர் அதைக் கையில் எடுத்துத் தோசைக்கல் காய்ந்ததும் அதில் போட்டேன். சிறிது நேரம் வேகவிட்டுப் பின்னர் எண்ணெய் ஊற்றித் திருப்பிப் போட்டு மறுபடி எண்ணெய் ஊற்றி நன்கு வேக விட்டேன். முதலில் நம்ம ரங்க்ஸ் தான் சாப்பிட்டார். வெண்ணெய் போதும்னு சொல்லிட்டார். சாப்பிட்டதுமே நன்றாகவே இருக்குனு சான்றிதழும் கொடுத்தார். அப்பாடானு இருந்தாலும் பையர் என்ன சொல்லப் போறாரோனு நினைச்சேன். அவரும் தொட்டுக்க என்னனு கேட்டுட்டு வெண்ணெய் மட்டும் போதும்னு சொல்லிட்டார். பின்னர் சூடாகத் தட்டில் போட்டதைச் சாப்பிட்டதும், நன்றாகவே இருக்கு. இதுக்குத் தொட்டுக்கவெல்லாம் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம் எனச் சான்றிதழும் கொடுத்தார்.
அப்பாடா! உருப்படியாக மாவைத் தீர்த்த நிம்மதி எனக்குக் கிடைத்தது. அதே சமயம் நல்லா இருக்குனு பாராட்டும் கிடைச்சது. இப்படியாகத் தானே அக்கி ரொட்டி சாப்பிடணும்/பண்ணணும் என்னும் என் நீண்ட கால ஆசை பூர்த்தி ஆனது.
பிள்ளையாரப்பா! இதே மாதிரி எல்லாக் கஷ்டங்களையும் நிவர்த்தி பண்ணிடுப்பா!
சின்னதாக தட்டி எண்ணையில் பொரித்தால் தட்டை. அதையே பெரிதாக தட்டி தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் அடை.
ReplyDeleteWhat a discovery!!
Jayakumar
உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஜேகே அண்ணா! இது ஒரு கண்டுபிடிப்பு என எங்கேயும் சொல்லவே இல்லை.
Deleteபடம் அழகாக இருக்கிறது.
ReplyDeleteபையர் ?
வந்து இருக்காங்களா ?
அவங்க ஒரு சில மாதங்களா இருப்பதால்தான் கீசா மேடம் அதிசயமாத்தான் இணையத்துக்கு வருவாங்க. ரொம்பவே பிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸிஸிஸிஸிஸி.. ஹாஹா
Deleteஹாஹாஹா கில்லர்ஜி, முன்னாடியே ஒருதரம் கு.கு. வந்திருக்கானு கேட்டீங்க. மறந்துட்டீங்க. டிசம்பரில் இருந்து இங்கே தான் இருக்காங்க. நைஜீரியா என்பதால் சலுகை! பெப்ரவரி பத்து தேதி வரை இருப்பாங்க. இதுவே அம்பேரிக்கான்னால் டிசம்பரில் வந்துட்டு டிசம்பரிலேயே போயிருக்கணும். இல்லைனா ஜனவரி ஐந்து தேதிக்குள் போயாகணும். :(
Deleteகண்ணு வைக்காதீங்க நெல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போத் திரும்பிப் போனப்புறமா எப்போ வராங்களோ! :(
Deleteசூப்பர் போங்க!! கீதாக்கா ஜமாய்ச்சுட்டீங்க! ஆமாம் சாதம் கலப்பது அது கொஞ்சம் சாஃப்டாக வரும் பைண்டிங்க் உம் செய்யும் நுதான்..இது பெருங்காயம், உளுத்தமாவு எல்லாம் போட்திருப்பதால் செம டேஸ்டா மணமா இருந்திருக்கும்!!
ReplyDeleteபாராட்டுகள்!!
கீதா
வாங்க தி/கீதா, சாதம் கலப்பது எனக்கு மனசுக்கும் ஒத்துவரலை. உண்மையில் நல்ல ருசியாகவே இருந்தது. மேலே மொறுமொறு! உள்ளே ஸ்பாஞ்ச் போல்! தொட்டுக்க எதுவும் தேவை இருக்கவில்லை.
Deleteஅந்த பகக்த்துவீட்டு மாமிக்கு நானும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிக்கிறேன். பின்னே அட்லீஸ்ட் ஒரு அக்கி ரொட்டியாச்சும் தரக்கூடாதோ!!!
ReplyDeleteஅக்கி ரொட்டி பொதுவா பச்சரிமாவுலதானே செய்யறாங்க ஆனா புழுங்கலரிசி மாவுல செஞ்சாலும் நல்லா வருது ஸாஃப்டா..டேஸ்டும் அந்த மணம் நன்றாக இருக்கிறது
கீதா
நீங்க வேறே தி/கீதா! இது நடந்தது எண்பதுகளில்! அப்போ இருந்து சாப்பிடணும்னு நினைச்சு அதன் பின்னர் லட்சம் தரம் "பெண்"களூர் போயும் அக்கியாவது/ரொட்டியாவதுனு சாப்பிட வாய்ப்பே கிடைக்கலை. இப்போத் தான் சரியா வராத தட்டை மாவு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது.
Deleteவீட்டில் பாராட்டு கிடைச்சுட்டா அப்புறம் வேறு என்ன வேண்டும்?!!
ReplyDeleteகுட்டிக்குஞ்சுலு என்ன சொல்லியது?!!!!!
கீதா
கு.கு.வையும் அவ அம்மாவையும் போன திங்களன்று தான் மடிப்பாக்கம் தாத்தா வீட்டுத் தாத்தா வந்து கூட்டிச் சென்றார். அது இருந்தாலும் சுத்த ஆசாரம். கருகப்பிலை, கொ.மல்லி கூடக் கூடாது. கடுகு தெரியக்கூடாது. அதுக்கு வேறே ஏதேனும் தான் பண்ணிக் கொடுக்கிறாப்போல் இருந்திருக்கும்.
Deleteஒரு வழியா மாவை தீர்த்து ஆயிற்று... திப்பிசம் செய்து கிடைத்த உணவும் சுவையாக இருக்க மகிழ்ச்சியே!
ReplyDeleteவாங்க வெங்கட், நன்றிப்பா.
Deleteபடங்கள் ஜோராக வந்திருக்கின்றன. பார்க்க ஆசையாக இருக்கிறதுதான்! இதுவரை அக்கி ரொட்டி செய்ததில்லை, சாப்பிட்டதில்லை.
ReplyDeleteம்ம்ம்ம், ஒரு ஞாயிற்றுக்கிழமை வரிஞ்சு கட்டிக் கொண்டு களத்தில் குதிங்க ஶ்ரீராம்!
Deleteநன்றாக இருந்தாலும் ஒன்றிரண்டுக்குமேல் சாப்பிட முடியாது என்று நினைக்கிறேன். சரியா? பார்க்க வழக்கமான அடை போலதான் தெரிகிறது! எபி கீதா போஸ்ட் மறுபடி பார்க்கவேண்டும்!
ReplyDeleteஆமாம், சின்னதாகத் தட்டியதே 2 தான் சாப்பிட முடிந்தது. வழக்கமான அடை வாசனையும் வந்தது. அதே போல் நானும் தே.எண்ணெயில் தட்டி எடுத்திருந்தேன். தேங்காயும் நிறையப் போட்டிருந்தேன்.
Deleteஉங்கள் திப்பிசம் எப்பொழுதும் சுவைத்திடுகிறதே.
ReplyDeleteநன்றி மாதேவி. இப்படித்தான் போன வருஷம் ஒரு தரம் மோர்க்குழம்பு மிஞ்சிப் போக உ.கியை வேக வைத்து தஹி ஆலூ பண்ணி ராத்திரிக்குச் சப்பாத்தி பண்ணிட்டேன். செலவு ஆயிடுத்து. அதுவும் நன்றாக வந்திருந்தது.
Delete//பிள்ளையாரப்பா...இதே மாதிரி எல்லாக் கஷ்டங்களையும்...// ஹா ஹா. நீங்க திப்பிச வேலையில் இறங்கி, நீங்களே தீர்வு காண முயற்சிக்கிலைனா அவரே வந்து எல்லாக் கஷ்டங்களையும் போக்கிடுவார். அதுனால கவலைப்படாதீங்க
ReplyDeleteபிள்ளையாரப்பா தான் துணை எப்போவுமே! எல்லாக் கஷ்டங்களையும் நீக்க வேண்டிக் கொண்டே இருக்கேன்.
Deleteமுதல் படத்தைப் பார்த்த உடனேயே... அட என்ன இது... உப்புமா ரெசிப்பியா என்று நினைத்தேன். கர்நாடகா காவிரி நீர் ஸ்ரீரங்கத்தில் வந்து, அதையே பருகி... கர்நாடகா அக்கி ரொட்டியைச் செய்துபார்க்கும்படியாக ஆயிற்று. ஆனால் எனக்கு அக்கி ரொட்டி பிடிப்பதில்லை.
ReplyDeleteநெல்லை, நம்ம ரங்க்ஸும் அப்படித் தான் சொல்லப் போறார்னு நினைச்சேன். ஆனால் வாயில் போட்டதுமே நன்றாக வந்திருக்கு என்று சொன்னார். பையரும் சாப்பிடும்போதே அப்படியே சாப்பிடலாம் போலவே இருக்கு. தொட்டுக்கவே வேண்டாம்னு சொன்னார்.
Deleteதிப்பிசமோ என்னவோ. கீதா செய்தால் எல்லாமே நன்றாகத் தான் இருக்கும்.
ReplyDeleteமாமாவும் ,பையரும் ரசித்து சப்பிட்டதுதான் மகிழ்ச்சி.
உடல் நலத்தோடு இருங்கள்
கீதாமா.
அக்கி ரொட்டி சூப்பர்.
யார் செய்தாலும் நன்றாகவே இருக்கும் வல்லி. நீங்க சொல்றாப்போல் அவங்க இருவரும் ரசித்துச் சாப்பிட்டது தான் மனதுக்கு நிறைவு.
Deleteகல் காய்வதற்குள்ளாகவே,கீழேயே தட்டி,பின் அடுப்பில் வைத்துச் செய்தால்மிகவும் ஸரியாக வரும். அதற்குள் வேறு ஒரு கல்லில் எண்ணெய்தடவித் தட்டி தயாராகவைத்துச் செய்தால் ஸுலபமாக இருக்கும். முதல்க் கல்லை அலம்பி அடுத்ததை அதில்த் தயார் செய்வது என மெல்லியதாகச் செய்யலாம்.கதம்ப அக்கிரொட்டி தயார்.அன்புடன்
ReplyDeleteநமஸ்காரங்கள் அம்மா. நீங்க சொல்றாப்போலவும் செய்திருக்கலாம். தோணலை. மெலிதாக வரலை. கொஞ்சம் கனமாகவே வந்தது. பின்னர் ஒருமுறை முயன்று பார்க்கிறேன்.
Deleteவழக்கம்போல திப்பிசம் நன்றாகவே இருக்கிறது! இந்த ஃபியூஷன் அக்கி ரொட்டியும் நன்றாகவே வந்திருக்கிறது! பாராட்டுக்கள்!!
ReplyDeleteநன்றி மனோ! எப்போவுமே திப்பிசம் நன்றாக வந்துடுது. :))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஎப்படியோ வேறு மாதிரி யோசித்து தட்டைக்கு கலந்து வைத்த அரிசி மாவை அக்கி ரொட்டி ஆக்கி விட்டீர்கள். அதுவும் தங்கள் கணவரிடமும் பையரிடமும் பாராட்டுக்கள் வாங்கியது மனதுக்கு மகிழ்வாக உள்ளது. இப்படித்தான் சரியாக வராத ஒன்றை வேறு மாதிரியாக செய்து சாப்பிட்டவுடன்தான் மனதுக்குள் அதைப்பற்றி இருக்கும் கவலை குறையும். எனக்கும் இப்படித்தான். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, அது தீரும்வரைக்கும் மனதில் ஓர் பாரம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி,
Deleteஅக்கி ரொட்டி பத்தி சமீபமாக தான் தெரிஞ்சுகிட்டேன், ஃப்ரெண்ட் ஒருத்தங்க செஞ்சு குடுத்தாங்க. செம்ம டேஸ்ட்
ReplyDeleteநீங்க இட்லி செய்வதை விடச் சுலபமாகச் செய்யலாம் ஏடிஎம். இஃகி,இஃகி,இஃகி! :)))) செய்து பாருங்க.
Deleteஇருவரும் விரும்பி சாப்பிட்டது மகிழ்ச்சி.
ReplyDeleteபிப்ரவரி வரை இருப்பார்கள் மகன் என்று கேட்டு மகிழ்ச்சி.
வாங்க கோமதி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Delete//பிள்ளையாரப்பா!.. இதே மாதிரி எல்லாக் கஷ்டங்களையும் நிவர்த்தி பண்ணிடுப்பா!..//
ReplyDeleteபிள்ளையாருக்கு அடை கொடுத்தீங்களா அக்கா!...
பிள்ளையாருக்கு இல்லாததா? அவருக்கும் கொடுத்தேன்.
Deleteஇது மாதிரி எல்லாம் செய்வதற்கு ஆசைப்பட்டிருக்கின்றேன்.. ஆனால் செய்தது இல்லை..
ReplyDeleteஅடுத்த சில நாட்களில் பார்க்கலாம்...
நலமே வாழ்க..
செய்து பாரூங்கள் தம்பி. ஒரு நாளைக்கு மாறுதலாகச் செய்யலாமே!
Deleteநகைச்சுவையையும் சேர்த்து செய்திருக்கின்றீர்கள்..
ReplyDeleteநறுமணத்துடன் நன்றாக வந்திருக்கின்றது...
நன்றிப்பா!
Delete