எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 05, 2022

வெள்ளிக்கிழமை விடியும் வேளை கிளம்பினோம்!


அலங்காரம் முடிந்து அம்மன் காட்சி கொடுக்கிறாள். வெளியே மாவிளக்குப் போட்டது கீழே!


நேற்றுக் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று தை மாத மாவிளக்குப் போட்டு விட்டு வந்தோம். ஏற்கெனவே மருமகள், மகன், பேத்தியோடு போன மாதம் போனோம். அப்போ மாவிளக்குப் போடவில்லை.  இந்த வருடம் ஆடி மாதம் முழுவதும் நான் படுத்துவிட்டதால் கோயிலுக்கு மாவிளக்குப் போட ஏற்பாடுகள் செய்து வைத்து விட்டுப் பின்னர் போக முடியாமல் போனது மனதில் ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தி விட்டது. அதன் பின்னர் செப்டெம்பரில் /புரட்டாசி மாதம் கோயிலுக்குப் போய் அபிஷேஹம் செய்து தரிசித்து விட்டு வந்தோம். அப்போவும் புரட்டாசி மாதம் என்பதால் மாவிளக்குப் போடவே இல்லை. அதன் பின்னர் போன மாதம் போனோம்.  மார்கழி மாதம் என்பதால் போடவில்லை.



பொங்கல் கழிந்ததும் எல்லோருமே போகலாம் என நினைச்சிருந்தது பல்வேறு காரணங்களால் கிளம்ப முடியலை. மருமகளையும் அவள் அப்பா வந்து குழந்தையோடு அழைத்துச் சென்று விட்டார். வரும் வாரம் அவங்க மறுபடி நைஜீரியா கிளம்ப வேண்டும் என்பதால் நாங்களும் சரினு இருந்துட்டோம். கடைசியில் மாவிளக்குப் போட நாள் பார்த்ததில் நேற்று நாலாம் வெள்ளியும் அடுத்த வாரம் கடைசி வெள்ளியும் தான் மிஞ்சியது. வெள்ளியன்று கோயிலில் கூட்டம் தாங்காது என்பதால் மாவிளக்குப் போட இடம் கிடைக்கணுமேனு கவலையாயும் இருந்தது. ஞாயிறு பரவாயில்லை என நாள் பார்த்தால் அரசு அப்போ ஞாயிறில் முழு ஊரடங்கு என அறிவித்திருந்ததோடு வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில் தரிசனம் கூடாது என்றும் சொல்லி இருந்தார்கள். பூசாரியிடம் பேசியதில் வெள்ளிக்கிழமை வெளியூர்களில் இருந்து வருவதாகச் சொன்னார்.

சரி, பரவாயில்லை, மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று போக முடியவில்லை. நான்காம் வெள்ளியான நேற்றுப் போகலாம்னு நினைச்சுப் பூசாரிக்குத் தகவல் தெரிவித்திருந்தோம். அதற்குள்ளாகத் தேர்தல் புண்ணியத்தில் அரசும் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டது. என்றாலும் தேதியை மாற்றவில்லை.  நான்காம் வெள்ளியான நேற்றே போகலாம்னு முடிவு செய்தோம். பூசாரியிடம் மறுபடி பேசினதில் கோயிலில் குழந்தைக்கு மொட்டை போட்டுக் காது குத்துவதற்காக ஒரு குடும்பம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவங்க பெரிய இடம் எனவும் மிகப் பெரிதாகக் கொண்டாடப் போவதாகவும் தகவல் சொன்னார். அதோடு நிறைய மக்களும் வெளி ஊர்களிலிருந்தும் உள்ளூர்க்காரர்களும் அன்று அபிஷேஹ ஆராதனைகளுக்கும் மாவிளக்குக்கும் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்.

கவலையாக இருந்தது. பின்னர் பூசாரியிடம் நாங்கள் இங்கிருந்து சீக்கிரம் கிளம்பிக் கோயிலுக்கு வருவதாகவும் எங்களுக்குப் பத்தரை மணிக்குள் எல்லாமும் முடித்துக் கொடுக்க முடியுமா எனவும் கேட்டோம். அவரும் ஒத்துக் கொண்டார். பையரை அழைத்துப் போவதாக இருந்தது. ஆனால் அவருக்கு அலுவலகத்தில் முக்கியமான 2,3 மீட்டிங்குகள் இருந்ததால் கலந்துக்க முடியாதுனு சொல்லி  விட்டார். ஆகவே பையர் குடும்பம் இல்லாமலேயே நாங்க இருவர் மட்டும் கிளம்பிப் போனோம். நேற்றுக் காலை ஐந்தரைக்கே கிளம்பிட்டோம்.  வண்டி தான் மிக மிக மிக மெதுவாகச் சென்றது. ஓட்டுநரிடம் கொஞ்சம் வேகம் தேவைனு சொல்லியும் அவர் 35 கி.மீக்கு மேல் வண்டியை ஓட்டவில்லை. ஆகவே போகும்போது ஒன்பது மணி ஆகிவிட்டது. பூசாரி தயாராக இருந்தார்.

காதுகுத்துக் குடும்பமும் அங்கே எங்களுக்கு முன்னாடியே வந்திருந்தாங்க. அவங்க குடும்பம் எல்லாம் அங்கேயே வெளிப் பிரகாரத்தில் நாற்காலி, டேபிள் போட்டுக் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தனர். பூஜை சாமான்களுடன் நம்ம ரங்க்ஸ் பூசாரியுடன் முன்னால் செல்ல நான் கொஞ்சம் மெதுவாகச் சென்றேன். வாசலில் டேபிள் போட்டு வரவேற்றுக் கொண்டிருந்த பெண்கள் என்னையும் வரவேற்க நான் கோயிலுக்கு வந்திருப்பதைச் சொல்லப் பரவாயில்லை, குங்குமம், பூ எடுத்துக்குங்கனு சொல்லிட்டு டிஃபன் சாப்பிடவும் உபசரித்தார்கள். மாவிளக்குப் போடும் வரை எதுவும் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு உள்ளே சென்றேன், 

பூசாரி அபிஷேஹத்திற்கான ஏற்பாடு செய்ய நான் மாவைக் கலந்து தயார் செய்தேன். அபிஷேஹம் ஆகி அலங்காரம் முடிந்ததும் மாவிளக்கை ஏற்றினேன். இம்முறை உள்ளே போடவில்லை. படி ஏறணுமே. ஆகவே வெளியேயே அம்மனுக்கு நேர் எதிரே இலை போட்டு மாவிளக்கை வைத்து அலங்கரித்துக் கொண்டு விளக்கையும் ஏற்றினேன்.

மாவிளக்குப் படத்தைப் போடும்போது அதிரடி நினைவு வந்தது. ஒரு தரமாவது நீங்க படம் போட்டால் தான் நம்புவேன் என்றெல்லாம் வம்பு பண்ணுவார். எப்போதும் உள்ளே போட்டதினால் படம் எடுத்தாலும் பளிச்சென வராது. ஒரே ஒரு முறை மின் தமிழ்க் குழுமத்திற்காகப் படம் போட்டிருந்தேன். அதன் பின்னர் படங்கள் எடுத்திருந்தாலும் போட முடியாமல் இருந்தது. இம்முறை வெளியே மாவிளக்குப் போட்டதால் எடுத்துட்டேன்.

பத்தேகால் மணிக்குள்ளாக அனைத்தும் முடியப் பின்னர் நாங்களும் அங்கிருந்து கிளம்பி மற்றக் கோயில்களுக்கோ, பெருமாள் கோயிலுக்கோ, கருவிலிக்கோ செல்லாமல் நேரே ஶ்ரீரங்கம் கிளம்பிட்டோம். கையில் இட்லி கொண்டு போயிருந்ததை வண்டியிலேயே சாப்பிட்டோம். வழியெல்லாம் நிலங்களில் அறுவடை முடிந்து இருப்பதைக் காண முடிந்தது. என்றாலும் ஏனோ அதைப் படம் எடுக்கும் மனோநிலை இல்லை. ஓட்டுநர் ஓட்டிய விதத்தில் பத்தரைக்குக் கிளம்பி சுமார் ஒரு மணிக்குள்ளாக ஶ்ரீரங்கம் வ்ந்திருக்கணும். இரண்டே காலுக்கு வந்து சேர்ந்து பின்னர் சாப்பாடு சாப்பிட்டோம்.

44 comments:

  1. நாம் நினைத்தாலும் தெய்வம் நினைக்கும் நாளில்தான் செல்ல முடியும் போலும்.  ஒரு வழியாய் நல்லபடியாக சென்று வேண்டுதலை நிறைவேற்றி வந்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ சரிதான் ஶ்ரீராம். மருமகளும் மாவிளக்குப் போடணும்னு சொல்லிக் கொண்டிருந்தாலும் நடக்கவில்லை. :(((( இது வேண்டுதல்னு எல்லாம் இல்லை. வருஷா வருஷம் ஆடி, தை மாதங்களில் அம்மனுக்கு மாவிளக்குப் போடுவது குடும்ப வழக்கம்.

      Delete
  2. மாவிளக்கு உள்ளே வைக்காமல் வெளியே வைத்ததில் உங்களுக்கு மனக்குறை உண்டா?  எங்கள் கோவிலில் மாவிளக்கு வெளியே வைத்தபோது கமெண்ட்ஸ் எழுந்தன.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் படிகள் என்னால் ஏற முடியாது ஶ்ரீராம். வருத்தமோ/மனக்குறையோ எனக்கு இல்லை. ஏனெனில் இந்தப் பூசாரியின் அப்பாப் பூசாரி இருந்தப்போ உள்ளே கருவறையில் நாங்க போகவே முடியாது. விடவே மாட்டார். வரிசையாக வெளியே தான் போட்டிருக்கோம். 2002 அல்லது 2003 க்குப் பின்னரே இந்தப் பையர் பூசாரிப் பொறுப்பை ஏற்றார். எங்களை உள்ளேயும் அனுமதித்திருக்கிறார். இவர் அப்பா ஃபோட்டோக்களும் பிடிக்க அனுமதித்தது இல்லை. :)))))

      Delete
    2. ஆனால் அந்த ஊர்க்கார அம்மா ஒருத்தர் மாவிளக்குக்குக் கொஞ்சம் முன்னால் நின்றுகொண்டு அம்மனை மறைச்சதோடு உள்ளே போய்ப் போடவேண்டியது தானேனு கேட்டுக் கொண்டே இருந்தார் ஒரு பெரியவர் தான் பார்த்துட்டு அவங்க நிக்கக் கூட முடியாம இருக்காங்க. அவங்களை உள்ளே போய்ப் போடச் சொல்றியேனு சத்தம் போட்டார்.

      Delete
  3. ஒரே நேரத்தில் இன்னொரு குடும்பமும் வந்து அதனால் கூட்டமும் இருந்திருந்தால் சமாளித்து வருவதற்குள் போதும் போதுமென்று இருக்கும். காலை முதல் வேலையாக முடித்தது சரி.

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேட்கறீங்க? இன்னொரு குடும்பம்னு எல்லாம் இல்லை. காதுகுத்துக்கு வந்திருந்த குடும்பங்கள் எல்லாமும் நாங்க அபிஷேஹம் முடிச்சு கற்பூர ஆரத்தி பார்த்தப்போ சாரி சாரியா வர ஆரம்பிச்சுட்டாங்க. என்ன ஒண்ணுனா மாவிளக்குக்கு ரசிகர்கள் பலர். :)))) ஆனால் இவங்க எங்கேயானும் மிதிச்சுடப் போறாங்கனு மலை ஏற அவகாசம் கொடுக்காமலேயே நிவேதனம் பண்ணி ஆரத்தி எடுத்துக் கற்பூரம் காட்டும்படி ஆச்சு.

      Delete
  4. திருமணம் முடிந்து நாங்கள் புது மருமகளுடன் குலதெய்வம் கோவில் சென்றிருக்க வேண்டும். செல்ல முடியவில்லை. அது ஒரு குறை

    ReplyDelete
    Replies
    1. விரைவில் போயிட்டு வாங்க. இப்போப் போக முடியலைனால் பங்குனி உத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம். மிகவும் விசேஷம். குட்டிக்குஞ்சுலுவுக்கு அப்போத் தான் மொட்டை அடிச்சுக் காதும் குத்தினோம்.

      Delete
  5. அதிரடி ஆளையே காணோம்.  யு டியூப் பக்கமும் கொஞ்ச நாட்களாய் காணோம்.  அதுபோலவே ஏஞ்சலையும் காணோம்!  அவர்களுக்குள்ளாவது பேசிக்கொண்டு தொடர்பில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இருப்பாங்க தான். என்னவோ இம்மாதிரிப் பலரும் திடீர்னு காணாமல் போகிறார்கள். நான் தான் விடாமல் வரேனோ என்னமோ!

      Delete
    2. ஏதேனும் கமெண்ட் போட்டால், அதுக்கு பதில் போட்டுடறாங்க.

      ஆரம்ப ஜோர்ல நிறைய காணொளிகள் வெளியிட்டுட்டாங்க. இனி அவங்க பண்ணற வெந்நீர் போடறது ஒண்ணுதான் பாக்கின்னு நினைக்கிறேன்.

      Delete
    3. நான் அவங்க யூ ட்யூப் சானலுக்கே போக முடியலை. சுமார் ஆறு மாதங்கள் உடம்பு படுத்தியதில் எதுவுமே சரியாப் படிக்கலை/பார்க்கலை.

      Delete
  6. Replies
    1. பல மாதங்கள் கழித்து வருகை தந்ததுக்கு நன்றி. என்னால் இப்போது தொடர்ந்து எங்கேயும் அதிகம் வரமுடியலை. :(

      Delete
  7. வணக்கம் சகோதரி

    நல்லபடியாக நீங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று மாவிளக்கு போட்டு வந்தமைக்கு மகிழ்ச்சி. அம்மன் படமும், மாவிளக்குமா படங்களும் அழகாக உள்ளது. உங்கள் மகன், பேத்தி மருமகளுடன் சென்று மாவிளக்கு போட்டிருந்தால், இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால்,எது நடக்க வேண்டியதோ, அதை நடத்தி வைப்பது தானே இறைவனின் திருவிளையாடல். அன்றைய தினம் பார்த்து காது குத்து குடும்ப கூட்டமும் சேர்ந்திருப்பதால், உங்களுக்கு ஒரளவு ஒரே டென்ஷனாக இருந்திருக்கும். (அதுவும். இந்த காலகட்டத்தில்...ஆனால் நாம்தான் இப்படி பார்த்து, பார்த்து பயப்படுகிறோமோ எனவும் தோன்றுகிறது. மக்கள் எப்போதும் போல் கும்பலுக்கு அஞ்சாமல் இயல்புடன் இருப்பது போலவும் நினைக்க வைக்கிறார்கள்.)

    நாங்கள் எங்கள் குலதெய்வ வழிபாட்டு போகும் போது அபிஷேகத்திற்கு ஏற்பாடுகள், மற்றும் அம்மனுக்கு கட்டி விட புடவை முதலியன வாங்கி கொடுப்போம். மாவிளக்கு போட்டதில்லை. அம்மா வீட்டில்,சங்கர நயினார் கோவில் கோமதி அம்மனுக்கு நேர்ந்து கொண்டால் மாவிளக்கு போடுவார்கள். எங்கள் வீட்டில் எப்போதும் கடைசி புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு மாவிளக்கு போடும் பழக்கம் உண்டு. அதுவும் கொலு ஒட்டி வருவதால் விஜயதசமியன்று விளக்கு ஏற்றி விடுவேன். ஆனால் இப்படி தெய்வத்திற்கு நம் வழக்கப்படி செய்யும் போது ஏற்படும் மனத்திருபதி எதிலும் வராது. தங்களது தெய்வ வழிபாடுகள் ரொம்ப மகிழ்வாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. உங்கள் மகன்,மருமகள் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த ஆசிகளும் திருமண நாள் வாழ்த்துகளும். ஆமாம், குழந்தை இருக்கும்போதே மார்கழி மாதம் இல்லைனா மாவிளக்குப் போட்டிருப்போம். முடியாமல் போச்சு. நேற்று நல்லபடியாக எந்தவிதமான பிரச்னைகளோ/தடங்கல்களோ இல்லாமல் அம்மன் முடித்துக் கொடுத்து விட்டாள். காது குத்து விழாவில் வந்தவர்களுக்கு மாஸ்க் நிறையவே வைச்சிருந்தாங்க. ஆனால் யாருமே எடுத்துப் போட்டுக்கலை. போதாக்குறைக்கு ஒருத்தர் அவரோட செல்லத்தை சந்நிதி உள்ளே அழைத்துக் கொண்டு வந்து பிடிவாதமாக நின்று கொண்டிருந்தார். எத்தனை முறை சொன்னாலும் போகலை அப்புறமா யாரோ கூப்பிடவே செல்லத்தை அழைத்துக் கொண்டு சென்றார் அரை மனதாக. என் அப்பா வீட்டில் வெங்கடாசலபதி தான் குலதெய்வம் என்றாலும் மாவிளக்கெல்லாம் போட்டதில்லை. விஜயதசமிக்கு நீங்க மாவிளக்குப் போடுவது அம்பிகையையே சாரும்.ஆனால் இருவரும் ஒருவர் தானே! என்றாலும் புரட்டாசி மாவிளக்கு எனில் அது சனிக்கிழமை தான்.

      Delete
    2. அதே போல் ஐப்பசி மாதம் எது செய்தாலும் அது காவிரி அம்மனுக்கு என்பார்கள்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      எங்கள் மகன் மருமகளுக்கு திருமண நாள் வாழ்த்துகள் சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி. உங்கள் ஆசிகள் அவர்களின் வாழ்வை என்றும் நலம் பெற காக்கும். அவர்களிடமும் தங்கள் வாழ்த்துகளையும்,ஆசிகளையும் கூறுகிறேன்.

      கோவிலுக்குச் செல்லங்களை அழைத்து வருவது சரியா? அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும், உடன் தரிசிப்பவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுமே..!

      மாவிளக்குமா விளக்கங்கள் பற்றி தெரிந்து கொண்டேன். கொலுவில் அனைத்து தெய்வங்களும் இடம் பெறுவதால், விஜய தசமி அன்றே அந்த வழிபாட்டை வைத்துக் கொண்டு நீண்ட வருடங்களாக அப்படியே பழக்கமாகி விட்டது. நீங்கள் சொல்வது போல் அரங்கனும் அம்பிகையும், ஒன்றுதானே..! இந்த தடவை அதற்கு மறுநாள் கடைசி சனிக்கிழமை வருகிறது என்று அன்றுதான் மாவிளக்குமா வைத்தேன். (இந்த வருடம் கொலு வைக்க இயலவில்லை) எப்படியோ நடுவில் ஏற்பட்ட சிற்சில வருட தடங்கல்கள் தவிர்த்து, ஒரு வருடத்திற்கு ஒரு முறை வைக்கும் பேற்றை இறைவன் அளித்து வருகிறான். இப்படியே தொடரும் வாய்ப்பை அவன் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. உங்களுக்கு உடல் நலமில்லை எனச் சொல்லி இருந்தீர்கள். இப்போது எப்படி இருக்கு? பரவாயில்லையா? முடிஞ்ச வரை ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.

      Delete
  8. //தேர்தல் புண்ணியத்தில் அரசும் கட்டுப்பாடுகளை நீக்கி விட்டது//

    இருந்தாலும் மோடிஜியை இப்படி நக்கல்ஸ் பண்ணுவதற்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்

    ReplyDelete
    Replies
    1. கடவுளே! கில்லர்ஜி, என்ன இப்படித் தடுமாற்றம். தமிழ்நாட்டில் ஊரடங்கு, கோயில்களுக்குப் போகக் கூடாதுனு எல்லாம் தடைகள் போட்டது மோதி இல்லை. அவராவது கோயிலுக்கெல்லாம் போகாதீங்கனு சொல்வதாவது! எல்லாம் உங்க தலைவர் தான் சொன்னார். நல்லவேளையாக உள்ளாட்சித் தேர்தல் வந்ததோ எல்லாத்தையும் நீக்கினார்.

      Delete
    2. //உங்க தலைவர்தான் சொன்னார்//

      ஹா.. ஹா.. எனக்கு தெரியாமல் என் தலைவனா ?

      Delete
  9. மாவிளக்கு போடும்படி உத்தரவு ஆனது மிக்க மகிழ்ச்சி. எந்த விக்னமும் இல்லாமல் சென்றுவர முடிந்ததே.. ரொம்ப சந்தோஷம்.

    படங்களும் நல்லா வந்திருக்கு

    ReplyDelete
    Replies
    1. உண்மை நெல்லை. விக்ன விநாயகன் கை கொடுத்தான். எப்போதும் போல் ஊர் எல்லையில் இருக்கும் பொய்யாப் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை (நெய்க்கொழுக்கட்டை) பண்ணி எடுத்துச் சென்றேன்.

      Delete
  10. அவங்களும் வரமுடிந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஆனால் மாட்டுப் பெண் அவங்க அப்பா வீட்டிலும் கொஞ்ச நாள் இருக்கணும் இல்லையா? அதற்கு முன்னால் கோயிலுக்குப் போக நாள் கிடைச்சாலும் மருமகளுக்கு அசௌகரியம். :(

      Delete
  11. அன்பின் கீதாமா,
    அருமையாக மாவிளக்கு ஏற்றி வைத்துக்
    குடும்ப க்ஷேமத்திற்கு நன்மை செய்திருக்கிறீர்கள்.

    எங்களுக்கு எல்லாமே முண்டகக் கண்ணி அம்மாதான்.
    அதுவும் எங்கள் ராணி மனம் வைத்தால் தான் நடக்கும்.

    அவள் தான் பொங்கல் வைத்து விட்டு வரவேண்டும்.

    மாவிளக்குப் படமும் அம்மன் தரிசனமும்
    மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. முண்டகக் கண்ணி அம்மன் கோயிலுக்கு நானும் போயிருக்கேன். சித்தியோடு. அதே போல் முப்பாத்தம்மன் கோயிலுக்கும் போயிருக்கேன். நாங்கள் பூசாரியைப் பொங்கல் வைக்கச் சொல்லிடுவோம். அரிசி, பருப்பு, வெல்லம், நெய், ஏலக்காய், முபருப்பு எல்லாம் கொடுத்துடுவோம்.

      Delete
  12. மகனும்,குட்டிக் குஞ்சுலுவும், மருமகளும் வந்திருந்தால்
    நன்றாகத் தான் இருந்திருக்கும்.

    எல்லாம் கூடி, நாளும் சரியாக அமைய வேண்டுமே.
    நீங்கள் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையும் செய்து,
    உடம்பு முடியாத தருணத்திலும் பயணம் செய்து
    அம்மனுக்கு மாவிளக்கு போட்டிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    உங்கள் உடல்னிலை சீராக அவளே
    வழி வகுப்பாள்.
    நலமுடன் இருங்கள் கீதாமா.
    மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லி. அதிலும் இப்போக் கொஞ்ச நாட்களாகத் திடீர் திடீர்னு ஏதாவது பிரச்னை. மனக்கலக்கம். இத்தனைக்கும் நடுவே அம்பிகையின் துணையோடு குலதெய்வ வழிபாடு சிறப்பாக முடித்துக் கொடுத்தாள் அம்பிகை நேற்றுத் திடீர்னு வேலை செய்யும் பெண் இன்னிக்கு வர முடியாதுனு சொல்லிவிட்டாள், நிறையப் பாத்திரங்கள். முன்னாடியே சொன்னால் வந்து தேய்ச்சுக் கொடுத்துடுனு சொல்லுவேன் என்பதாலோ என்னமோ சொல்லவே இல்லை. சாயந்திரமா ஏழு மணிக்குச் சொல்கிறாள் பேருந்துப் பயணத்தில் இருக்கேன் என. என்னிக்கு வருவாளோ! காலையிலேயே எழுந்து பாத்திரங்களைத் தேய்த்து வைச்சுட்டுக் காஃபி முடிஞ்சதும் கணினியில் உட்காரலாம்னு வந்தேன். ஆனால் இது ஒரு வகையில் வசதியாகவும் இருக்கு. அவள் வரமாட்டாள் என்பதினாலே வேலைகளைப் போட்டு வைக்காமல் உடனுக்குடன் ஆகி விடுகிறது. :))))))

      Delete
  13. மாவிளக்கு ஏற்றி வைத்த
    மங்கலங்கள் வாழ்க..
    மனையிருந்து திருவிளக்கு
    பொன் கதிர்கள் சூழ்க..
    ஒளி தவழும் அன்பினிலே
    சுடர் விளக்கு வாழ்க..
    ஐஸ்வர்யம் அணி திகழ்ந்து
    அவள் அருளே சூழ்க!..

    ReplyDelete
    Replies
    1. அருமையான பாடலுக்குக் கொடுத்து வைச்சிருக்கேன். அம்மன் அருள் கிடைச்சாலே போதுமே! அதை விட வேறே என்ன வேண்டும்.

      Delete
  14. அன்பின் அக்கா அவர்களுக்கு,
    தை வெள்ளி 4 - எனும் பதிவுக்கு தாங்கள் அவசியம் வருகை தரவேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்..

    இது தங்கள் அன்பின் கவனத்திற்கு மட்டுமே...

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. @ துரை செல்வராஜூ, வந்தேன், மெய் சிலிர்த்தேன். உங்கள் அன்புக்கும் அழைப்புக்கும் மிக்க நன்றி.

      Delete
    2. அன்னை அவள் அருகிருக்க
      அல்லல் என்று ஏதுமில்லை
      பின்னை வரும் வினை அகலும்
      அன்னை பதம் போற்றி.. போற்றி..

      Delete
  15. குட்டிக் குஞ்சுலுவும் மகன் மருமகள் வரமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமாக இருந்திருந்தாலும் எப்படியோ கடைசியில் மாவிளக்கு போட முடிந்து எல்லாருக்காகவும் பிரார்த்த்னை செய்ய முடிந்ததே. கண்டிப்பாக நல்லது நடக்கும் கீதாக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா. ஆமாம், முக்கியமாய் மருமகள் எப்போவோ வரா, மாவிளக்குப் போடும்படி அமையவில்லையே என்ற வருத்தம் உண்டு. என்ன செய்ய முடியும்.

      Delete
  16. அம்மை அவள் சோதனைகள் காலத்திலும் எப்போது உங்களுடன் துணையிருப்பாள்! தடங்கல்கள் பல வந்தாலும் உங்கள் பிரார்த்தனை நல்லபடியாக நடந்திட அம்பாளின் அருள் கிடைத்ததே!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. உண்மை துளசிதரன். பல இக்கட்டுகளில் இருந்து அன்னை எங்களைக் காப்பாற்றியே வந்திருக்கிறாள்/ இன்னமும் காப்பாற்றுகிறாள்.

      Delete
  17. குலதெய்வம் கோவிலுக்குச் சென்று நல்லபடியாக மாவிளக்கு போட்டு வரமுடிந்ததில் மகிழ்ச்சி. நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  18. மாவிளக்கு நல்லபடியாக போட்டு வந்தது மகிழ்ச்சி.

    ReplyDelete