எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 22, 2022

எல்லாம் "திங்க'ற விஷயம் தான்!

இல்லைனா நான் என்ன உபயோகமா ஏதேனும் எழுதப் போறேனா என்ன? ஹிஹிஹி, அதெல்லாம் மறந்து போய் ஒரு வருஷத்துக்கும் மேலே ஆச்சு! பல நாட்கள் பதிவே போடுவதில்லை என்பதோடு போடும் பதிவுகளும் திங்கற விஷயம் தானே! ஆகவே இன்னிக்கும் அதான்.

நம்மவருக்கு இந்த சமையல் யூ ட்யூபெல்லாம் பார்க்கச் சொல்லி யார் சொன்னாங்களோ தெரியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதைப் பார்த்துட்டு ஏதானும் அதே மாதிரிப் பண்ணுனு சொல்லிடுவார். அப்படித் தான் இந்தத் தக்காளி தோசையும். நான் எப்போவும் அடைக்கு ஊறப்போடுகிறாப்போல் கொஞ்சம் கொஞ்சம் பருப்புக்கள் சேர்த்து அரிசி நிறையப் போட்டுத் தக்காளி, தேங்காய்த் துருவலோடு மி.வத்தல், பெருங்காயம் உப்புச் சேர்த்து அரைத்துத் தான் பண்ணுவேன். ஆனால் இந்த யூ ட்யூபில் புதுசாக ரவையில் பண்ணச் சொல்லி இருக்காங்க. அதுவும் தக்காளி, மி.வத்தல் எல்லாவற்றையும் வதக்கி அரைத்துக் கொண்டு. கூடவே மிளகு, ஜீரகமும் வறுத்துச் சேர்க்கச் சொல்லி இருக்காங்க. எனக்கென்னமோ அது அவ்வளவாப் பிடிக்கலை. ஆனாலும் அப்படியே செய்து பார்ப்போம்னு எல்லாவற்றையும் எண்ணெயில் வதக்கி அரைத்துக் கொண்டு செய்து பார்த்தேன். தோசை மாவு ரவா தோசை பதத்துக்குக் கரைச்சுக்கணுமாம். ரவா தோசை ஊற்றுகிறாப்போலவே வீசி ஊற்றவும் வேண்டும். மெலிதாக நன்றாகவே வந்தாலும் அந்த மிளகு ஜீரம் வாசனை கொஞ்சம் படுத்தியது. 

வெங்காயம் சேர்க்கலாம் என்றாலும் நேத்திக்கு எங்க அம்மாவின் ச்ராத்தம் என்பதால் நான் சேர்க்கவில்லை. அவருக்கு மட்டும் தனியாகப் போட்டுக் கொடுக்கணும் என்றால் எனக்கு முதலில் வார்த்து எடுத்துட்டுப் பின்னர் சேர்க்கணும். ஆகவே இரண்டு பேருமே வெங்காயம் இல்லாமல் சாப்பிட்டுக்கலாம். இன்னொரு நாள் இது சரியா வந்தால் வெங்காயம் சேர்க்கலாம்னு இருந்துட்டேன். மற்றபடி படங்கள் கீழே. போதும் போதும்னு ஆகி விட்டது. அப்போத் தான் தொலைபேசி அழைப்பு. வாசலில் கூரியர் அரிசி எடுத்துண்டுனு ஒரே தொந்திரவு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்




 மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், இஞ்சி

மிளகு ஜீரகம், பெருங்காயத்தோடு 

 தக்காளிகள் நான்கு எடுத்துக் கொண்டேன்.

 மிளகு ஜீரகம், மி.வத்தல், பெருங்காயம், இஞ்சி எல்லாம் வதக்கியது/வறுத்தது


அதே எண்ணெயில் தக்காளித்துண்டங்களைப் போட்டு நன்கு சுருள வதக்கினேன்.

வதக்கியவற்றை மிக்சி ஜாரில் போட்டு நல்ல நைசாக வெழுமூண அரைச்சேன்.


அரைச்ச விழுது



ஒரு தம்பளர் ரவை


 ஒரு தம்பளர் அரிசி மாவு. சேர்ந்து வரதுக்காகக் கொஞ்சம் போல் கோதுமை மாவும், உளுத்த மாவும் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொண்டேன். கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கிச் சேர்த்தேன்.  தக்காளிக் கலவையை அரைக்கும்போதே உப்புச் சேர்ப்பது எனில் சேர்த்துடலாம். நான் கொஞ்சமாக அப்போ உப்புச் சேர்த்துவிட்டு மாவுக்கலவையை உப்புச் சரி பார்த்துக் கொண்டு தேவையானதைச் சேர்த்தேன். கீழே கலந்த மாவு தோசைக்கல்லில் ஊற்றத் தயாராக.


கலந்த மாவு


தோசைக்கல்லில் ஊற்றி இருக்கேன். ரவாதோசைக்கு ஊற்றுகிறாப்போல் ஊற்ற வேண்டும். கொஞ்சம் சின்னதாகவே ஊற்றினேன். எடுக்க வரணுமே. பின்னர் வார்த்ததெல்லாம் கொஞ்சம் பெரிதாகவே வார்த்தேன்.


தோசையைத் திருப்பிப் போட்ட பின்னர். பரவாயில்லை. மெலிதாக முறுகலாக நன்றாகவே வந்தது. ஆனால் மாவு மிஞ்சி இருக்கு. அதை என்ன செய்யலாம் என யோசிக்கிறேன். யோசனை கொடுக்கிறவங்க கொடுங்கப்பா! 


கடைசியிலே கூகிளில் தக்காளி தோசைனு தேடிப் பார்த்தால் ஹெப்பார்ஸ் கிச்சனில் இதே முறைதான் போட்டிருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதலிலேயே பார்க்க மாட்டேனோ? அவசி.

38 comments:

  1. தக்காளி தோசையா...வருகிறேன்....இந்த சுவரசியமான அவந்திகா மித்ரா ரொம்ப என் மண்டைய குடைந்தார்களா...சாப்பாடு கூட மறந்து போச்சு ஹாஹாஹாஹா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே மண்டைக்குடைச்சலாத் தான் இருக்கு! என்ன செய்யறது!!!!!!!!!!!

      Delete
  2. அக்கா தோசை நல்லா வந்திருக்கு.

    நானும் ரவையில் இப்படிச் செய்வதுண்டு. நாம் வழக்கமாக ரவா தோசை செய்வது போல் தக்காளியும் இப்படிச் செய்து கலந்துகொண்டு ரவா தோசைப் பக்குவத்தில் வீசி விடுவது. அதுவும் இங்கு சிரோட்டி ரவை கிடைப்பதால் நன்றாக வ்ருகிறது. மிளகு ஜீரகம் அரைக்காமல் அப்படியே கொஞ்சம் போட்டுவிடுவது பொடித்துச் சேர்த்தால் கொஞ்சமே கொஞ்சம் இல்லை என்றால் அது டாமினேட் செய்யும். வெங்காயம் சேர்த்தும் வெங்காயம் சேர்க்காமலும்..

    கொத்தமல்லி சேர்த்தால் அது ஒரு சுவை.

    நானும் கோதுமை துளியூண்டும், உ மாவு கொஞ்சமும் சேர்ப்பதுண்டு ரவா தோசைக்கு...நல்ல மெலிதாகக் கொஞ்சம் க்ரிஸ்பியாவும் வரும்.

    உங்கள் தோசை ஈர்க்கிறது....பார்சல் வேண்டாம் நேரடியாகவே !! ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முன்னே ஒரு தரம் பச்சைத்தக்காளியை அரைச்சுச் சாறெடுத்து ரவை+அரிசிமாவில் கலந்து பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வார்த்துப்பார்த்தேன். சுமாராகத் தான் வந்தது.

      Delete
  3. யூடியூப் பார்க்கச் சொன்னது அதிரா வேலையாக இருக்கலாம்.

    நான்கு தக்காளி சேர்க்கச் சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் புகைப்படத்தில் மூன்றரைதான் இருக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, தக்காளி கீழே விழுந்ததில் அந்தப் பக்கம் கொஞ்சம் அடி பட்டிருந்தது, ஆகவே அதை மட்டும் மெதுவாக நீக்கினேன். :)))))

      Delete
  4. உங்கள் மெத்தடிலும் அதான் பருப்பு போட்டு அரைத்து அப்படியும் செய்வதுண்டு!!!

    அது போல நார்மல் தோசை மாவிலும் செய்வதுண்டு. வெந்தயம் வறுத்து சேர்த்து அரைத்தால் தக்காளியும் வெந்தயமும் சேர்ந்து ஒரு நல்ல மணம்!! அதில் மிளகு ஜீரகம் எதுவும் சேர்ப்பதில்லை.

    மாவு நிறைய மீந்திருக்கா?

    கொஞ்சமாக என்றால் பருப்பு ஊற வைத்து அடையாக்கிடுங்க் உங்கள் ஸ்டைலில்!! இல்லைனா கொஞ்சமே கொஞ்சம் அரிசியும் உளுந்தும் போட்டு மிக்ஸியில் அரைத்து இதோடு சேர்த்து தோசை!!! கூடவே வெந்தயக் கீரை கிடைத்தால், முடிந்தால், (நிறைய ஆல் போட்டுக்கோங்க ஹிஹிஹிஹி) நேரமிருந்தால், கட் பண்ணி மாவோடு கலந்து....தோசை.

    இல்லைனா இருக்கவே இருக்கு மேலதிகமாகக் கொஞ்சம் மாவுகள் அல்லது பருப்புகள் ஊற வைத்து அரைத்துக் கலந்து பக்கோடா, போண்டா...வெங்காயம் போட்டு போடாமல் என்பது அந்த நாளின் படி. இதோடு வெந்தயக் கீரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும் பக்கோடாவோ போண்டாவோ...உங்கள் வயிற்றுக்கும் பிடிக்கணுமே!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பருப்புப் போட்டு அரைச்சுத் தான் எப்போவும் பண்ணி இருக்கேன். மிச்ச மாவையும் ஏதேனும் பண்ணணும். பார்ப்போம். இப்போ மனசே சரியில்லை. :(

      Delete
  5. கடைசி ரிசல்ட் பார்க்க நன்றாய் இருந்தாலும் கலர் கொஞ்சம் கம்மியாய் இருக்கிறதோ...   சௌமியா கார்த்திக் கூட தக்காளி தோசை, தக்காளி அல்லது பீட்ரூட் பூரி எல்லாம் செய்து பகிர்ந்திருக்கும் நினைவு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், தக்காளி போறலையோ? சௌம்யா கார்த்திக் நிறையப் போடுகிறார். பீட்ரூட் எல்லாம் நாங்க வாங்குவதே இல்லை. எங்க காடரர்(வாடிக்கையானவர்) பீட்ரூட்டை வாரம் ஏழு நாட்கள் விதம் விதமாய்க் கொடுப்பார். அதனாலேயே வாங்க முடியறதில்லை. :( ரசத்தில் கூட பீட்ரூட் ரசம்.

      Delete
  6. நான்  தக்காளி சேர்த்து, பீட்ரூட் சேர்த்தெல்லாம் செய்திருக்கிறேன்.  இந்திட வகையில் செய்ததில்லை.  எடுக்க வரவேண்டும் என்பதுதான் டென்ஷன்!  ஒட்டிக்கொண்டு கழுத்தறுத்தால் கடுப்பாய் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ரவா தோசைக்குப் புளித்த மோர்+ஜலம் சேர்த்துக் கரைப்பதில்லையா? அதே போல் தான். தக்காளி விழுதோடு +ஜலம் சேர்த்துக் கரைக்கணும். அவ்வளவே!

      Delete
  7. வெங்காயம் சேர்க்கலாம் என்றால் எந்த இடத்தில் சேர்ப்பீர்கள்?  தக்காளியோடு சேர்த்து வதக்கி அரைத்துவிடவேண்டுமா?  ஏனென்றால் வெங்காயம் நறுக்கிப் போட்டால் தோசை தடித்து விடுமே!

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம், அப்படியும் செய்யலாம். பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம். ஆனியன் ரவா தோசை வீட்டில் பண்ணுவதில்லையா? அதே போல் தான்.

      Delete
  8. மிளகு சேர்த்தாலும் சேர்ப்பேன்.  சீரகம் சேர்க்க மாட்டேன்.  அதைச் சேர்த்து தோசை வார்த்தால் ரசம் சாதம் சாப்பிடுவதுபோல் இருக்கும்!  இரண்டு டம்ளரிலும் ரவைதான் தென்படுகிறது!  அரிசி மாவைக் காணோம்!

    ReplyDelete
    Replies
    1. @ஶ்ரீராம், சீரகம் போட்டு கோதுமை தோசை வார்த்தால் நன்றாக இருக்கும். ரவாதோசைக்கும் போனால் போகிறதுனு போடலாம். ஆனால் இதில் சகிக்கவே இல்லை. :(

      Delete
    2. ஹிஹிஹி, ஶ்ரீராம், படங்களைப் போடும்போது தப்பாய்ப் போட்டிருக்கேன். :)

      Delete
  9. தக்காளி தோசை குறிப்பு நன்றாக இருக்கிறது. வித்தியாசமாகவும் இருக்கிறது.
    இரண்டு கீதாவும் மாறி மாறி சொல்லியிருக்கும் டிப்ஸ் எல்லாம் மிகவும் சுவாரஸ்யம்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க, மனோ நன்றி. எனக்கும் இந்த முறையில் பண்ணலாம்னு தெரியாது.

      Delete
  10. நானும் யாராவது பார்த்து எழுதியிருப்பாங்களான்னு பார்க்கிறேன். படங்கள் போடலைனா, ஐயையோ..படங்கள் போட்டிருக்கலாமே என்று எழுதுவாங்க.

    இங்க கீசா மேடம், படிக்கறவங்க படங்களைப் பார்க்கறாங்களான்னு செக் பண்ண, ரவைக்கும் அரிசி மாவுக்கும் ரவை படத்தையே போட்டிருக்காங்க. ஒருத்தரும் பார்த்தமாதிரித் தெரியலையே

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நெல்லை, அதான் ஶ்ரீராம் ஏற்கெனவே சொல்லிட்டாரே! நீங்களும் தான் மறுபடி மறுபடி நீங்க சரியாப் படிக்கிறதில்லைனு நிரூபிக்கிறீங்க! இது எப்பூடி இருக்கு? இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  11. நன்றாக இருக்கிறது தக்காளி ரவை தோசை .

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இதெல்லாம் ஒன்றும் புதியதில்லை. எப்படி வந்தாலும் ஏதாவது திப்பிசம் பண்ணி அட்ஜஸ்ட் செய்து அதையும் ஒரு பதிவாகப் போட்டு விடலாம். ஆனால் நன்றாகவே வந்துள்ளது. கீ.சா என்றால் சும்மாவா?அன்புடன்

      Delete
    2. வாங்க கோமதி. உங்க கருத்தையும் காமாட்சி அம்மா கருத்தையும் பார்க்கவே இல்லை. இப்போத் தான் கவனிச்சேன். பாராட்டுக்கு நன்றி.

      @காமாட்சி அம்மா, உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. ஹிஹிஹி, எல்லோரையும் போல் நீங்களும் கீ.சா. என அழைப்பது மகிழ்ச்சியாகவே இருக்கு. :))))

      Delete
  12. தக்காளி தோசை - நானும் செய்ததுண்டு. ஹெப்பர்ஸ் கிச்சன் குறிப்புகள் நன்றாகவே இருக்கின்றன.

    மீதி மாவு - திப்பிசம் தயாரா? :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இல்லை இன்னும் திப்பிசம் தயாராகலை. அநேகமா நாளைக்கு இருக்கும். உங்களை இங்கே பார்த்தால் உடனே எனக்குள் குற்ற உணர்ச்சி வருது. உங்க வலைப்பக்கமெல்லாம் வரவே முடியறதில்லை. படிக்க நிறைய இருக்கு. எப்போ முடியுமோ தெரியலை. :))))

      Delete
  13. எங்கள் ப்ளாகில் இன்றைய ஶ்ரீராமின் பதில் இந்தக் கருத்தைக் கொடுக்கப் போனால் ரோபோ அட்டகாசம் தாங்க முடியலை. அது கேட்கும் காப்ட்சாக்களை எல்லாம் செய்த பின்னரும் மறுத்து விட்டது. ஆனால் அந்தப் பதிவில் திரும்பத் திரும்ப நான் எழுதின கருத்துரை வந்து கொண்டே இருக்கு. அதை நீக்கினாலும் போவதில்லை. வெளியிடச் செய்தாலும் வெளியாகவில்லை. இது என்ன புதுப் பிரச்னை????????????

    இதான் நான் போட்ட கருத்துரை.

    எல்லாப் பாடல்களுமே அருமையானவை. எனக்குப் பிடிச்ச மற்றொரு பாடல், "மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்!" இந்தப் பாடலிலே நடுவில் வரும் இந்த வரியை நினைத்துப் பார்த்துக்குவேன். "வைக்கலாலே கன்னுக்குட்டி மாடு எப்போ போட்டுது? கக்கத்திலே தூக்கி வைச்சாக் கத்தலையே என்னது? கெட்டுப் போன புள்ளீஹளா? வாழப் பட்டினத்தில் வந்தீஹளா?" அது சரி, இந்தக் கடைசி 2 வரிகளும் சரிதானே???????????

    ReplyDelete
  14. ஹை தக்காளி தோசை இப்படி வதக்கி செஞ்சதில்லை .செஞ்சிடுவோம் சீக்கிரமே .மாவு மிஞ்சினா தக்காளி ஊத்தப்பம் ஆக்கிடுங்க .
    இல்லன்னா இன்னும் ரவா சேர்த்து ரவா தக்காளி தோசை ஆக்கிடுங்க .
    இந்த தோசை ஊற்றும்போது குறிப்பா ரவா தோசை வகையறாக்கு குட்டி டம்ளரில் எடுத்து ஊற்றணுமாம் !!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், அதிசயமான வருகை. எங்கே உங்க தலைவி? நீங்க வந்தால் பின்னாடியே வருவாங்களே!மிச்சம் மாவை அப்படியே சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டுத் தோசையாகவே செய்தேன். நல்லா இருக்குனு சொல்லிட்டார். தொட்டுக்கக் கூடத் தேவை இல்லைனூ அப்படியே சாப்பிட்டார். :)))))

      Delete
  15. சரி சரி விஷயத்துக்கு வரேன். இப்போ திடீர்னு விசிட் கொடுத்திருக்கேன்னு ஆச்சர்யப்பட்டிருப்பீங்க .அதுக்கு என்ன ரீஸன் என்றால் ..இன்னிக்கு ஹாலிலிருந்து மேல் ரூமுக்கு போகும்போது படியேறும்போது திடீர்னு மன  அலையில் காதில் கேட்டாற்போல் ரெண்டு வார்த்தை விழுந்தது /// குலதெய்வம் கோவில் ,பரவாக்கரை //இதை கேள்விப்பட்ட இடத்துக்கு ஓடுன்னு மனசு சொல்லுச்சு அதான் ஓடி வந்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இல்ல! போயிட்டு வந்திருக்கேனே! படமும் போட்டிருக்கேனே! உங்களையும் உங்க தலைவியையும் நினைச்சுட்டே போட்டேன் அந்தப் பதிவை. வருவீங்கனு எதிர்பார்த்தேன். வரலை. :(

      Delete
    2. https://sivamgss.blogspot.com/2022/02/blog-post.html இங்கே பாருங்க ஏஞ்சல், பரவாக்கரை போயிட்டு வந்த பதிவை.

      Delete
  16. தக்காளி தோசை நன்றாகவே வந்துள்ளது.

    ReplyDelete
  17. வணக்கம் மேடம்! இன்னும் அந்த க்ர்ர்ர்ர்ஐ நீங்க மறக்கலை போலிருக்கு. அதே மாதிரி அடியேனை நியாபகம் வச்சிருப்பீங்கன்னு நெனைக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. அட, அட, அட, அட! ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி! என்ன சொல்லலாம்னு யோசிக்கிறேன். என்னையும் நினைவிலே வைச்சு இங்கே வந்து பார்த்து விசாரிச்சிருக்கீங்களே, நன்னியோ நன்னி. கடைசியா உங்களை முகநூலில் பார்த்தப்போ (எத்தனை வருஷங்களுக்கு முன்?) நீங்க லண்டனிலோ/அல்லது இங்கிலாந்தில் எங்கேயோ இருப்பதாகச் சொல்லி இருந்தீங்க. இப்போ எங்கே? நாகை சிவா/சூடான் புலி எப்படி இருக்கு? கடைசியா அவர் குறித்த தகவல் அவருக்குப் பையர் பிறந்திருப்பதாகவும், "நரேந்திரன்" எனப் பெயர் வைச்சிருப்பதாகவும் சொன்னாங்க. நாகப்பட்டினம் போயிருக்கிறச்சே அவங்க வீட்டைத் தேடோ தேடுனு தேடி! ம்ஹூம், யாருக்கும் தெரியலை.

      Delete
    2. ஆஹா! மேடம் இன்னும் என்னை மறக்கலை. 5 வருஷமா சென்னையில் தான் இருக்கேன்.‌ இன்னைக்கு திடீர்னு உங்க நினைவு வந்தது...அதான்.

      Delete
    3. ஹாஹாஹா, போன ஜன்மத்து நினைவுகளே மறக்கலை. இப்போப் பத்து வருஷங்கள் முன்னால் (உத்தேசமாக) பார்த்த உங்களை மறப்பேனா? சில நாட்கள் முன்னர் கூட உங்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து எழுதி இருந்தேனே! உங்க மாமனார் இன்னமும் அம்பத்தூரில் தான் இருக்காரா? இரண்டு பெண்களும் நல்லா வளர்ந்திருப்பாங்க. முதல் பெண் பெயர் அர்ச்சனா. இல்லையா? அடுத்தவள் பிறந்தது போன முறை நீங்க சொல்லித் தான் தெரியும். பெயரைச் சொன்னீங்களா இல்லையானு நினைவில் இல்லை. :)))))

      Delete