ஹிஹிஹி, ராத்திரி பதிவு போட்டிருக்கேன்னு எல்லோருக்கும் ஆச்சரியமா இருக்குமே! முன்னெல்லாம் போடுவேன்.
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Sunday, February 06, 2022
தேன்குழல் சாப்பிட வாங்க!
அன்னிக்குத் தட்டைக்குப் பிசைந்த அதே அரிசி மாவு தான். இன்னிக்குக் குஞ்சுலுவுக்குக் கொடுத்தனுப்ப என்று தேன் குழலாகப் பிழிந்தேன். அதுக்கு இந்தத் தேன்குழல் தான் பிடிக்கிறது., அருமையா வந்திருக்கு. ஒவ்வொரு முறையும் நன்றாகவே வருது. முள்ளுத் தேன்குழலும்/ரிப்பன் பகோடாவும் கூடப் பிழிஞ்சிருக்கேன். நன்றாக வருது. ஆனால் தட்டை ஏன் தட்டிப் போச்சு? தெரியலை.
தேன்குழல் சாப்பிட வாங்க எல்லோருமா!
Subscribe to:
Post Comments (Atom)
சுடச்சுட தேன்குழல்.... பார்த்ததில் சாப்பிட்ட திருப்தி. தொடரட்டும் பதிவுகள்.
ReplyDeleteஹாஹாஹா, நன்றி.
Deleteபோன வாரம்தான் நான் தேங்குழல் பண்ணினேன் ஹீஹீ
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரைத்தமிழரே!
Deleteராத்திரி பதிவு போட்டது ஆச்சர்யம் இல்லை. படங்கள்லாம் பளிச்சுனு வந்திருக்கே... அதுதான் ஆச்சர்யம்.
ReplyDeleteஹிஹிஹி, நெல்லை, டாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
Deleteதேன்குழல் அருமையாக வந்திருக்கிறது. தொட்டுக்கொள்ள கறிவேப்பிலைத் துவையல் இருக்கா?!!
ReplyDeleteஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! தேன்குழலை அப்படியே சாப்பிடலாமே. கறிவேப்பிலைத் துவையல் எதுக்காம்? புதுசா இருக்கே!
Deleteஎங்கப்பா கேட்பார். அதைத் தொட்டுக்கொண்டுதான் சாப்பிடுவார்.
Delete@ஶ்ரீராம், அப்படியா? என்னோட ஒரு பெரியப்பா சர்க்கரைப் பொங்கலுக்கு நார்த்தங்காய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார். அதுவானாலும் உங்களுக்கு இனிப்பைச் சாப்பிட உதவும். இது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு. :)
Deleteஅழகாக இருக்கிறது ஆனாலும்...
ReplyDeleteஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.
இங்கே வாங்க கில்லர்ஜி. நேரிலே பார்த்துச் சாப்பிட்டுக்கலாம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதேன்குழல் ரொம்ப அருமையாக வந்துள்ளது. பார்க்கவே மொறுமொறுவென்று அதன் சுவையை நாக்கு உணர்கிறது. இதற்கு கறிவேப்பிலை துவையல் தொட்டு சாப்பிட்டால் எப்படி இருக்குமென அதையும் யோசித்துப் பார்க்கிறேன். (இதுவரை அப்படி ஏதும் இதற்கு தொட்டு சாப்பிடததால்.. ) இதையே முன்பு மதியம் சாப்பிடும் போது சாம்பார் சாதத்திற்கு இல்லை மோர் சாதத்திற்கு காய் ஏதும் பண்ணாத பட்சத்தில் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுள்ளோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. கறிவேப்பிலைத்துவையல் மோர் சாதத்துக்குத் தொட்டுக்கலாம். தேன்குழல் எல்லாம் அப்படியே சாப்பிடுவோம். நான் சாப்பிடும்போது தொட்டுக்கப் போட்டுக்கும் ஒரே பக்ஷணம் மிக்சர் மட்டுமே. மற்றபடி ஊற வைச்ச ரசவடை தொட்டுப்பேன்.
Deleteகீதாக்கா ஆஹா ஸ்பா எனக்கு ரொம்பப் பிடித்த தேங்குழல்...ரொம்ப நன்றாக வந்திருக்கிறது!! பார்சல் ப்ளீஸ்!!! நானும் உளுத்தம் பொடி பண்ணி அரிசி மாவும் செய்து வைத்திருக்கிறேன் தேங்குழல் தான் பிழியவில்லை இன்னும்!
ReplyDeleteகீதா
வாங்க தி/கீதா, இந்தத் தேன்குழல் எப்போவுமே எங்களுக்குப் பிடித்தமானது. முள்ளுத் தேன்குழலும் பிடிக்கும் என்றாலும் இதான் விருப்பமானது.
Deleteகீதாக்கா கை கொடுங்க...படங்கள் அசத்தல் போங்க!!! நல்லா வந்திருக்கு!!
ReplyDeleteகீதா
நன்றி. என்னமோ திடீர்னு எடுத்தேன். நல்லா வந்திருக்கிறதாச் சொல்றீங்க.
Deleteரொம்ப ஆங்கிள் பார்த்து, சைடுல வளைஞ்சு ன்னுல்லாம் மெனெக்கெட்டீங்கன்னா ஒருவேளை படங்கள் சரியாக வராதோ? ஒரு நாள் டக்னு இராமர் பட்டாபிஷேகப் படத்தை படம் எடுங்க. நல்லா வந்தாலும் வரும்
Deleteநெல்லை, ராமர் படத்தை நீங்க இங்கே வரச்சே வெளிச்சப் பிரதிபலிப்பே இல்லாமல் எடுத்து எனக்கும் அனுப்பி வைங்க. அம்பத்தூர் வீட்டிலே எடுத்ததைத் தேடிக் கண்டு பிடிச்சு எடுத்து ஒரு நாள் போடறேன். அப்போ உங்களுக்குப் புரியும்.
Delete// ராத்திரி பதிவு போட்டிருக்கேன்னு எல்லோருக்கும் ஆச்சரியமா இருக்குமே.. //
ReplyDeleteஇத விட ஆச்சரியம் - ராத்திரியில பயப்படாம இருந்தது.. :)
அதெல்லாம் பேய், பிசாசு வந்தால் கூடப் பயப்பட மாட்டோமுல்ல. உட்கார முடியணும். நேரம் அமையணும். அதான்.
Delete:)
Deleteதேன்குழல் - படங்கள் அழகு..
ReplyDeleteஆஹா, தேங்குழல் மிக அருமையா வந்திருக்கே.
ReplyDeleteகுஞ்சுலுவுக்குப் பிடிப்பதில் அதிசயமே இல்லை.
இத்தனை அழகாச் செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.
படம் பொன்னிறமாக அழகாக இருக்கிறது.
பாட்டிக்கு வாழ்த்துகள். குழந்தை ஊருக்குக்
கிளம்பி விடுவாள். பரவாயில்லை. அவரவர் இடத்தில் நன்றாக
இருக்கட்டும்.
தட்டைக்கு என்னம்மா. இன்னோரு நாளைக்கு
செய்தால் போச்சு.
உடல் நலம் சிறக்க நீங்கள் இன்னும் நிறைய
பட்சணம் செய்து படம் போடுங்கள்.
வாங்க வல்லி. பையர் இன்னிக்குச் சென்னை கிளம்பிட்டார். நாளைப் பரிசோதனைக்கு 3 பேரும் போகணும். நல்லபடியா ரிசல்ட் வந்து அவங்க ஊருக்குக் கிளம்பிப் போய்ச் சேரும் வரைக்கும் கவலை தான். வீடே வெறிச்சென்று ஆகிவிட்டதோடு ஏதோ மனபாரமாயும் இருக்கு. இம்முறை சுமார் 2 மாதங்களுக்கும் மேல் இருந்தாங்க இல்லையா! அதான் ஒரே தவிப்பு. :(
Deleteபஹ்ரைன்ல இருக்கும்போது, வெகேஷனுக்கு இவங்களை ஒரு வாரம் முன்னால் அனுப்பிடுவேன். சில சமயம் இவங்க மட்டும் சில வாரங்கள் வெகேஷனுகுப் போவாங்க. ஃப்ளைட்ல ஏத்திட்டு வீட்டுக்கு வந்தால், அவ்வளவு சந்தோஷமாவும் கொஞ்சம்கூட சப்தம் இல்லாமலும் இருக்கும். 2 நாள் ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்புறம்தான் நாளைக் கடத்துவது கஷ்டப்படும். வீட்டெல்லாம் ரொம்ப சுத்தமா பளிச்சுனு சரி செய்வேன்.
Deleteஆனால் இந்த மாதிரி வெகேஷனுக்கு வந்துட்டு, பசங்க கிளம்பினாங்கன்னா, ரொம்பவே கஷ்டமாயிருக்கும் இல்லையா?
ஆமாம், நெல்லை. என்னதான் இருந்தாலும் தனிமை மிகக் கொடுமை இல்லையோ? வீடு கொஞ்சம் கொஞ்சம் குப்பைனு இல்லாமல் ஆங்காங்கே துணிகள், குழந்தையோட பொம்மைகள்னு கலைஞ்சு இருப்பது ஒரு தனி அழகு. குஞ்சுலுவோட பொம்மைகள், அதோட பாஷையில் பேபீஸ் எல்லாம் திடீர்னு இங்கே ஹாலுக்கு வந்து சோஃபாவில் உட்காரும். திடீர்னு அவற்றிலே ஒண்ணை மட்டும் எடுத்துட்டுப் போகும். மற்றவை இங்கேயே கிடக்கும். ராத்திரி படுத்துக்கும்போது நினைவா எல்லாவற்றையும் படுக்க வைச்சுட்டுப் போர்த்திட்டு இதிலே நாம் போர்த்தினா அதுக்குப் பிடிக்காது. கையைத் தட்டிவிட்டு அதுவே போர்த்தி விடும். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு பொசிஷனில் படுக்க வைச்சுட்டு "அப்பாடா"னு அதுவும் படுத்துக்கும். :)))))
Deleteகீசாக்கா வந்திட்டேன்:)).. தட்டை மாவில முறுக்குச் சுட்டு, அதனைத் தேன் குழல் எனக்கொடுத்துக் குட்டிக் குஞ்சுலுவைப் பேய்க்காட்டி விட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அடுத்த தடவை ஒழுங்கா தேன் குழல் செய்து போடுங்கோ:))
ReplyDeleteதப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! தேன்குழலுக்கான மாவில் தான் தட்டை செய்தேன். சரியா வரலை. அதில் அப்புறமா அக்கி ரொட்டி பண்ணிச் சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. அவசரம் அவசரமா வந்துட்டு அதை விட அவசரமாகப் படிச்சுட்டுத் தப்புத் தப்பாய்க் கருத்துச் சொல்லிக் கொண்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteதேன்குழல் நன்றாக இருக்கிறது .
ReplyDeleteவாங்க மாதேவி நன்றிங்க.
Delete