என்ன நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்? நேற்றிரவு, (இன்றைய அதிகாலை 1.30 இல் இருந்து 2.00 மணிக்குள்ளாக மறுபடி செக்யூரிடி எச்சரிக்கை மணி. பின்னர் விடிகாலை 3.30 / 4.00 மணி அளவில் எல்லாம் சரியாகி விட்டது எனச் செய்தி வந்தது. இப்போ இது வரை ஒண்ணும் இல்லை. ஆனாலும் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை எனச் செய்திகள், இன்னொரு பக்கம் விட்டேனா பார் என்னும் செய்திகள், மொத்தத்தில் குழப்பமாகவும் கவலையாகவும், பயமாகவும் இருக்கு. பயணம் செய்வதும் குறிப்பா விமானப் பயணம் செய்வதும் இப்போதைய நிலையில் ஆபத்தானதே. என்னவோ பார்ப்போம், என்ன நடக்கும் எனப் புரியவில்லை. என்னோட கவலை எல்லாம் முக்கியமாக இது நீட்டித்துக் கொண்டே இருக்கும் எனவும் செப்டெம்பர் தாண்டும் எனவும் சொல்கிறார்கள். ஜூன் மாதம் மாமாவின் ஆப்தீகம் வருது. அதுக்கு இந்தியா வர முடியுமா என்ற கவலை. பையர் போயிடலாம், அதுக்குள்ளே முடிஞ்சுடும் என்கிறார். பார்க்கலாம். எல்லாம் கடவுள் விட்ட வழி. நேற்றுச் சாயங்காலம் ஆறரை மணி அளவில் பையர் முக்கியமான பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது பல ட்ரோன்கள் வருவதும் போவதுமாக இருந்தன என்றார். கடைகளில் கூட்டம் அதிகமில்லை என்றாலும் ஓரளவு மக்கள் காணப்பட்டனர் என்றும் சொன்னார்.
நல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteஅமைதியும் சமாதானமும் நிலவட்டும்.
ஜூன் மாதம் சாரின் ஆப்தீகம் நல்லமுறையில் நடைபெறும் இறைவன் அருளால்.
இன்று கூட்டுப்பிராத்தனையில் துன்பங்களை நீக்கி இன்பம் தந்தருளும் பதிகங்கள் படித்தோம்.
நம் இடர்களை களைவார் இறைவன்.
டிரம்ப் நினைத்த மாதிரி இதனை எளிதாக முடிக்க முடியவில்லை. ஈரான் ஒரு பக்கம் கங்கணம் காட்டுகிறது. சம்பந்தமில்லாமல் இந்தியாவில் ஈரானுக்காக உணர்ச்சி வசப்படுகிறார்கள். இவர்களே பங்களாதேஷில் இந்தியர்கள் கொல்லபப்ட்டபோது வாளா இருந்தார்கள்.
ReplyDeleteசீக்கிரமே சரியாகும் என்று நம்புவோம். பிரார்த்திப்போம். இது நீடித்தால் எரிபொருட்கள் தட்டுப்பாடு வரலாம் என்றும் சொல்கிறார்கள்.
ReplyDeleteஅவ்வளவு நாள் போர் யாருக்கும் தாங்காது. நேரடியான போர் சாத்தியமில்லை.
ReplyDeleteவளைகுடா நாடுகளில் உணவுப் பிரச்சனையும் வராது.
மிகவும் கவலை தரும் சூழல்தான். எல்லாம் விரைவில் சரியாக பிரார்த்திக்கிறோம்.
ReplyDeleteமிகவும் இக்கட்டான சூழலில் உலக மக்கள்.
ReplyDeleteவாகன எரிபொருள் ரெயிஸ்ரேசன், சமையல்வாயு தட்டுப்பாடுகள் என இங்கு முன் பதிவில் செல்கிறது.
விரைவில் அமைதி வர வேண்டுவோம்.