எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 04, 2026

கோகுலாஷ்டமி வாழ்த்துகள். சோதனைப் பதிவு

 Checking my post.




அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள். என்னால் இன்னிக்கு மத்தவங்க யாரோட பதிவிலும் கருத்துச் சொல்ல முடியலை. அதான் இங்கே என்னோட வலைப்பக்கம் வந்து பழைய பதிவுகளிலும் இன்னிக்கு இந்தப் பதிவைப் போட்டுட்டு இதிலேயும் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக் கொண்டேன். இது 2024 ஆம் வருடம் நம்ம ரங்க்ஸ் இருக்கையில் கொண்டாடியது. இதுக்கப்புறமாக் கொண்டாடலை. இந்த வருஷம் தான் இங்கே முதல் முதலாகக் கிருஷ்ண ஜயந்தியுடன் ஆரம்பிக்கும் பண்டிகைக் காலம்.   இங்கே இன்னிக்கு கோகுலாஷ்டமி கொண்டாடினாலும் இந்தியாவில் பண்ணுவது போலெல்லாம் பண்ண முடியாது. சும்மாக் கொஞ்சம் போல் ஏதானும் இனிப்புச் செய்துட்டுப்ப் பால், பழம், தயிர், மோர், அவல் வைத்து நிவேதனம் பண்ணணும். அவ்வளவு தான் முடியும். முன்னர் போலெல்லாம் பக்ஷணங்கள் பண்ணவோ, அல்லது தின்னவோ உடல்நிலையோ மனநிலையோ இடம் கொடுக்காது. எனினும் குழந்தைகளின் க்ஷேமத்துக்காகப் பண்டிகையைக் கொண்டாடணும். இது என் அப்பா முன்னெல்லாம் அடிக்கடி சொல்லுவார். அப்பாவிடம், "நீ பண்டிகை கொண்டாடிட்டா நாங்க க்ஷேமமா இருந்துடுவோமா?" எனக் கிண்டல் செய்திருக்கேன். ஆனால் இப்போ அதன் உள் அர்த்தம் புரிகிறது. எல்லோரும் நல்லா இருக்கணும். உலக க்ஷேமத்தை வேண்டியும் இன்னிக்குக் கிருஷ்ண ஜயந்தியை அனைவரும் நல்லபடியாக் கொண்டாடணும். ஒண்ணும் முடியாட்டியும், பால், சர்க்கரையாவது வைச்சுக் கிருஷ்ணனை வணங்குவோம்.


அனைவருக்கும் இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்.

19 comments:

  1. ஜென்மாஷ்டமி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    நீங்கள் சொன்னது சரிதான் குழந்தைகள் நலமோடு இருக்க மற்றும் எல்லோர் நலனுக்கும் பண்டிகை கொண்டாட பட வேண்டும்.
    எனக்கும் கணினியிலிருந்து பின்னூட்டம் போட முடியவில்லை ஐபேடில்இருந்து பதில் கொடுத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு. இதோ அடுத்துப் பிள்ளையார் வரார். முன் போலெல்லாம் கொழுக்கட்டை பண்ண முடியாது. என்ன செய்வதுனு யோசிக்கிறேன். முடிஞ்சால் பிடி கொழுக்கட்டை போடணும்.

      Delete
  2. நேற்று நெடிய கருத்து எழுதி பப்ளிஷ் செய்ய இயலவில்லை.

    உங்களுக்கு ஜென்மாஷ்டமி வாழ்த்துகள். நல்லவேளை சீடைலாம் எப்படிச் செய்யணும்னு எழுதி வைச்சிருக்கீங்க. இல்லைனா உங்களுக்கே மறந்திருக்கும் ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. என்ன என்ன எழுதி இருந்தீங்களோ? கொஞ்சமானும் இங்கே மறுபடி எழுதி இருக்கலாமே.. அதெல்லாம் செய்முறை மறக்காது. நான் எழுதி வருவது வருங்காலத் தலைமுறையினர் இப்படி ஒரு சமையல் செய்முறையும் பண்டிகைகளுக்கான பக்ஷணங்கள் வீடுகளிலேயே செய்யப்பட்டதையும் தெரிஞ்சுக்கணும் என்பதற்காகவே.

      Delete
  3. மனதால் கண்ணனை நினைத்துக்கொண்டாலே போதும். இடமும் எல்லாமும் சரியாக அமைந்தால் பண்ணாமலா இருக்கப் போகிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. கண்ணனை மறப்போமா என்ன? என்றாலும் இப்போதெல்லாம் நின்னுண்டு எதுவும் அதிக நேரம் பண்ணுவது சிரமமாகவே இருக்கே என்பதில் வருத்தமாக இருக்கு. :(

      Delete
  4. இரண்டு மருமகள்களுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடியது சந்தோஷம் தந்தது.  அடுத்த வருடம் ஒரு பேரனோ பேத்தியோ கூட இருப்பார்கள்  என்பதும் சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த வாழ்த்துகள்.

      Delete
    2. மனமார்ந்த ஆசீர்வாதங்கள் ஸ்ரீராம். பிரசவம் சென்னையில் தானா? கும்பகோணமா? அனைவரும் சுகசௌக்கியத்துடன் இருக்கப் பிரார்த்தனைகள். மாமி எப்படி இருக்கார்? நடமாட்டம் இருக்கா?

      Delete
    3. நன்றி.  மாமி தேவலாம்.  படிப்படியாக முன்னேறுகிறார்.  25% வேலை செலுத்த இதயம் இப்போது 40% வேலை செய்கிறது.  பிரசவம் சென்னையில்தான்.  சம்பந்தி மாமா காலமானதால் மாமி மட்டும் குடந்தையில்.  அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. 

      Delete
  5. என்ன ஆயிற்றோ ப்ளாக்கருக்கு இரண்டு நாட்கள் படுத்தி விட்டது.  நலல்வேலை..  சரியானது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ரொம்பவே படுத்தல்.

      Delete
  6. நம் வீட்டு பழக்கங்களை, வழக்கங்களை விடாமல் கைக்கொண்டு கடைப்பிடிக்க குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்று நினைப்பேன்.  அப்படியே விட்டுப்போய் விடக் கூடாது என்று தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். என் பெண் என்னிடம் எல்லாத்தையும் எழுதிக் கொடுத்துடுனு சொல்லிண்டே இருக்கா. இப்போவே உனக்கு வயசாச்சு, நேரம் கடத்தாமல் எல்லாத்தையும் எழுதி வைனு சொல்லிட்டு இருக்கா.

      Delete
    2. நியாயமான கோரிக்கை. நிறைவேற்றி வையுங்கள்.

      Delete
  7. சிறு வயதில் பெற்றோர்களை கேலி செய்யும் விஷயங்களின் அர்த்தம் நான் பெரியவர்களாகும் பொழுதுதான் புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இப்படிப்பல விஷயங்களைச் சொல்ல முடியும்.

      Delete
  8. வணக்கம் சகோதரி

    என் கருத்துக்கள் (நேற்று பகிர்ந்தது) என்னவாயிற்று எனத் தெரியவில்லையே.? முடிந்தால் தேடிப் பார்க்கவும். சகோதரி. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்கள் கருத்துகள் ஸ்ரீராமுக்கு வாழ்த்துச் சொல்லி ஒன்றும் இதோ இந்தக் கருத்தும் தான் வந்திருக்கு. எனக்கு இன்னிக்கும் கூட இணையம் தகராறு செய்து கொண்டிருக்கு. தொடர்ந்து தொந்திரவு இல்லை என்பதால் அதிகம் கண்டுக்கலை. அது மாதிரி நேத்திக்கு நீங்க கருத்துக் கொடுத்தப்போக் காணாமல் போச்சோ என்னமோ தெரியலை. ஸ்பாமில் கூட இல்லை.

      Delete