எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 14, 2006

61. அனுபவம் புதுமை.

My thoughtsகாண்ட்வா ஸ்டேஷனில் வண்டி நிற்கும். அங்கே சாப்பாட்டுக்கு ஏதும் ஏற்பாடு செய்யலாம் என்று நினத்தது என்னமோ வாஸ்தவம் தான். ஆனால் இது மாதிரி இஞ்சினைக் கழட்டிக் கொண்டு போவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கீழே இறங்கி விசாரித்தால் ரெயில் டைம் டேபிளை எடுத்துக் காட்டினார்கள். இஞ்சின் மாற்றி இன்னும் சில பெட்டிகள் வட மாநிலங்களில் இருந்து வந்து இணையும் என்றும் தெரிந்தது. அதற்கு எத்தனை நேரம் பிடிக்கும் என்று கேட்டால் "ஆராம் ஸே ஜாயேங்கே, ஸாப், சிந்தா மத் கீஜியே" என்று பதில் வந்தது. சரி, பார்ப்போம் என்று என்னை அங்கேயே பெட்டியில் விட்டு விட்டு என் கணவர் மட்டும் பால் வாங்கி வரப் போனார். அதற்குள் மற்றவர்கள் கீழே இறங்கி சமையல், குளியல் என்று நடைமேடையிலேயே குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்கள். வெளியே போன என் கணவர் ஊருக்கு உள்ளேயே போய் எங்களுக்குத் தேவையான பால், தயிர், பழங்கள் என்று வாங்கி வந்தார். கடைத்தெருவில் மளிகைக்கடை, துணிக்கடை என்று எல்லாம் இருந்ததாம். எல்லாம் வாங்கி வந்தால் ரெயிலிலேயே குடித்தனம் பண்ணலாம். கிட்டத்தட்ட நாங்களும் அந்த ரெயிலில் முதல் நாள் காலையில் இருந்தே இருக்கிறோம். எங்களுக்குள் ஒரு பாசப் பிணைப்பு ஏற்பட்டு விட்டது. பின்னே? அந்த ரெயிலில் வந்த எல்லாரும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் டி.டி.ஆர், கண்டக்டர், டிரைவர் கூட 8 மணி நேரத்திற்கு ஒரு தரம் மாறி விடுகிறார்கள். அந்த ரெயில் கிளம்பினதில் இருந்து, (அஜ்மேருக்கும் நசீராபாத்துக்கும் கிட்டத்தட்ட 10 அல்லது 15 கிலோ மீட்டருக்குள் தான்) நாங்கள் தான் மாறவில்லை. இதே மாதிரி போனால் ஒருநாள் டிரைவருக்கும் சிக்னல் கொடுப்பவருக்கும் வழி நாங்கள் காட்ட ஆரம்பிப்போம் என்று மனதுக்குள் ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அப்படியே கிட்டத்தட்ட 4 மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். எங்களை எந்த vendor-ம் சீண்டவே இல்லை. இப்படி ரெயிலே கதி என்று உட்காருவது பார்த்து அவனுக்கும் சீச்சீ இது சாவுக் கிராக்கி என்று தோன்றி இருக்கும். மறுபடி வெளியில் போய்ச் சாப்பாடு வாங்கி வந்தார். எல்லாம் முடிந்து வண்டி சாவகாசமாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பும்போது 11 ஆகி விட்டது. அன்றைய தினம் "அகோலா" ஸ்டேஷன் வரும்போதே வண்டி லேட். மத்தியானம் போக வேண்டியது சாயந்திரம் தான் போனது. மஹாராஷ்டிரா முழுக்கமுழுக்கமுழுக்கமுழுக்கமுழுக்கப் போய் வண்டி ஆந்திராவை நெருங்கும் போது கிட்டத்தட்ட மறுநாள் காலை ஆகி விட்டது. சரியான நேரத்துக்குப் போனால் காலை 10-30-க்குக் காச்சிகுடாவை அடைய வேண்டும். அதற்கு முன்னால் சிகந்திராபாத். சிகந்திராபாத்திற்குக் குறந்தது 9-30 மணிக்காவது போனால் நல்லது. ஆனால் இது மத்தியானம் 2-30 க்குத் தான் போகும் என்று சொன்னார்கள். நாங்கள் பிடிக்க வேண்டிய இணைப்பு வண்டி சென்னைக்கு 3-15க்கோ என்னவோ போட்டிருந்தது. சரி, நாம்பள்ளியெல்லாம் போக வேண்டாம் சிகந்திராபாத்திலெயே ஏறலாம் என முடிவு செய்தோம். சென்னை வண்டி எல்லாம் சிகந்திராபாத்தில் இருந்து ஹைதராபாத்துக்குப் போகும் வழியில் உள்ள "நாம்பள்ளி" என்ற ஸ்டேஷனில் இருந்து கிளம்பும்.

அது போல ரெயில் மத்தியானம் 2-45க்கு சிகந்திராபாத் ஸ்டேஷன் போனது. நாங்கள் ரெயிலில் இருந்து இறங்கி நாங்கள் சென்னை வண்டியைப் பிடிக்க வேண்டிய நடைமேடைக்குப் போக ஒர் போர்ட்டரை அழைத்தோம். அவனும் வந்தான். நடைமேடை வெறிச்சோடிக்கிடந்தது. போர்ட்டரிடம் காரணம் கேட்டதற்கு ரெயில் வர இன்னும் நேரம் இருக்கிறது என்றான். அதற்குள் அங்கே சார்ட் ஒட்டி இருப்பதைப் பார்த்து விட்டு நான் உடனே போய் எங்களுக்கு முன்பதிவு ஆகி விட்டதா என்று பார்க்கப் போனேன். இப்போது மாதிரி கணினி வழி டிக்கெட் இல்லையே. முன்பதிவு இணைப்பு வண்டிக்குத் தந்தி கொடுக்க வேண்டும். நாம் டிக்கெட் வாங்கும் ஸ்டேஷன் மாஸ்டர் இதை நமக்காகச் செய்ய வேண்டும். அது மாதிரி செய்து அவருக்கு முன் பதிவு செய்யப்பட்டு விட்டது என்று பதில் வரும். அதன் ஒரு காப்பியை நாங்கள் வைத்திருந்தோம். அதை எடுத்துக் கொண்டு போய்ப் பார்த்தேன். முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. பெட்டி நம்பர், வண்டி நம்பர் எல்லாம் ஒத்துப் போனது. போர்ட்டர் என்னை விசித்திரமாகப் பார்த்தான். "ஏன் அதைப் போய்ப் பார்க்கிறே" என்றான். ஏன் கேட்கிறாய் என்றதற்கு "அது ஹைதரபாத் மெயில் வண்டியின் சார்ட், நீங்கள் போக வேண்டிய "சார்மினார் எக்ஸ்பிரஸுக்கு" இனிமேல் தான் ஒட்டுவார்கள்." என்றான். என்னனனனன்னன்னனனனன்னனன என்று நாங்கள் அலறினோம். போர்ட்டர் பயந்து விட்டான். "நாங்கள் போக வேண்டியது ஹைதராபாத் மெயில் தான். அதற்குத்தான் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது." என்று சொன்னதும் இப்போது அலற வேண்டிய முறை போர்ட்டருடையது. அவன் "என்ன்ன்னனனன்னனனன்னன்னன்' என்றான். "ஸாப், அந்த வண்டி டைம் மாற்றி விட்டார்கள். 2-20க்கே போய் விட்டது" என்றான். தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தோம்.

பிளாக்கர் போட மாட்டேன் என்று ஒரே தகராறு. அதைத் தவிர, இந்த TATA INDICOM BROADBAND CONNECTION வெறுப்பு ஏத்துகிறது. ஒரு நிமிஷத்திற்கு ஒருமுறை re-connection pending என்று error report வருகிறது. இந்த ப்ளாக் வந்தால் என் அதிர்ஷ்டம், வராவிட்டால் உங்கள் அதிர்ஷ்டம். பார்ப்போம் யார் ஜெயிக்கிறாங்கனு, ப்ளாக்கரா? நானா?

7 comments:

 1. அப்பாடா, வந்து விட்டது. நான் ஜெயிச்சேன். ஒரு 1/2 மணி நேரம் முயற்சி செய்ய வேண்டி வந்தது. இது சோதனைப் பின்னூட்டம்.

  ReplyDelete
 2. அப்பாடா வந்து விட்டது. உமா எகொச்பிரின். ரொஸ்வாஸ் மத்திரையை குறைத்துவிடு இன்றுமுதல் இதயப்படபடப்பு கொஞ்சம் அடங்கி விட்டது.ஆந்திரா வந்தாச்சு இனி பயமில்லை. தி ரா ச

  ReplyDelete
 3. Hello TRC Sir, Apology is a big word. I did not expect an apology from you. After all it is my mistake. But that day I was totally upset due to the continuous powercut and the blogger's strike. So I write like that. Actually, I have to ask an apology from you. Shame on me, Sir.Please do not mistake me. Even yesterday the blogger refuse to publish from the explorer. Normally it will happen with the mozilla firefox only.I have to do something to come out from this. Thank you Sir.
  Geetha Sambasivam.

  ReplyDelete
 4. ஆந்திரா வந்தால் போதுமா? அப்புறம் சென்னை போய் அங்கிருந்து ஊர் போக வேண்டாமா? அதுவும் மூட்டை, முடிச்சைத் தூக்கிக் கொண்டு. எங்களோட மூட்டை, முடிச்சை எல்லாம் பார்த்திருந்தா பிரயாணம் எத்தனை சுகம் என்று புரியும்.

  ReplyDelete
 5. என்ன கீதா, வெற்றி பெற்று வீட்டிர்க்கள் போல......

  ReplyDelete
 6. எதிலே, புரியலியே? சிவா? என்ன ஆச்சு? ஆஃபீஸுலே நிஜமான வேலை பார்த்ததிலே ஏதோ ஆயிடுச்சுனு நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. My God! epdi thaan avalavu porumaiyaa antha trainla travel pannineengaloo?
  vazhakkam pola kalakkal post..
  oru naalaikku 2 postaaa? nadathunga, nadathungaa.. :)

  ReplyDelete