எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 22, 2006

70. மறுபடி சித்தப்பா

நேத்திக்கு ஒரே நாள் மூன்று பதிவு போட்டதாலே இன்னிக்கு ஒண்ணும் எழுத வேண்டாம்னு இருந்தேன். தற்செயலாக மனுவின் "நாச்சியார்" பதிவிற்குப் போனபோது சித்தப்பா என்ற பெயர் கண்ணில் பட்டது. அவங்க சித்தப்பாவைப் பத்தி எழுதி இருக்காங்க. உடனே என்னோட சித்தப்பாவைப் பத்தி எழுதணும்னு ஆசை வந்தது. இவர் எங்க அப்பாவோட தம்பி இல்லை. அம்மாவோட தங்கை கணவர். நான் முதல் முதல் அவரைப் பார்த்தபோது சின்னப்பெண்ணாக இருந்தேன். இப்போவே சின்னப் பெண்தானே? அப்போ இன்னும் சின்னப் பெண். எங்க வீட்டிலே வச்சுத்தான் சித்தியைப் பெண் பார்த்தார். அன்னிக்கு மதுரை மீனாக்ஷி கோவில் கும்பாபிஷேஹம். ரொம்ப வருஷம் கழிச்சு நடந்தது. எங்க வீடு கோவிலுக்குப் பக்கத்தில் என்பதால் நிறைய உறவினர்களும், வெளி ஊர் ஆட்களுமாக இருந்தார்கள். சித்தப்பா வந்தது முதலில் தெரியாது. அவர் அத்தை வீடு எதிர்ப்பக்கம் இருந்த காரணத்தால் அவரும் அவருடைய அம்மாவும் அங்கே தங்கி இருக்கிறார்கள். ஆனால் அங்கே எங்க வீடு மொட்டை மாடி மாதிரி உயரமான மாடி கிடையாது. எங்க வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் தங்க கோபுரத்தில் இருந்து நன்றாகத் தெரியும். ஆகவே கிட்டே இருந்து கும்பாபிஷேஹம் பார்ப்பதற்காக எங்க வீட்டுக்கு வந்தார். சித்திக்கு ஏற்கெனவே அப்பா மூலம் வரன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இவர் அங்கே வரவும் என் அப்பா பேசி முடிக்க அன்று சாயங்காலமே சித்தியைத் தாத்தா வீட்டில் இருந்து அழைத்து வந்து பெண் பார்த்துப் பிடித்து நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது அவர் அவ்வளவு பிரபலம் அடைய வில்லை. ஜெமினியில் தான் வேலை செய்து கொண்டிருந்தார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு வெளி நாடு சென்று வந்த பின் முழு நேர எழுத்தாளராக மாறினார். அவர் முதலில் என்னைப் பார்த்த போது நான் நிறையப் புத்தகம் படிப்பேன் என்றதும் இந்த அளவு படித்திருப்பேன் என்று நினைக்கவில்லை. அதற்குப்பின் நான் அவர் வீட்டில் தங்கி இருந்த காலங்களில் அவருடைய புத்தக சேமிப்பு முழுதும் திரும்பத் திரும்பப் படித்தேன். முதலில் சித்தப்பா எழுதி நான் படித்த கதை தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாளின்" ஆங்கில மொழி பெயர்ப்பு. அதற்குப் பின் அவருடைய கதைகளின் கையெழுத்துப் பிரதிகளைப் படிப்பேன். சித்தி வீட்டில் இருக்கும் அந்தக் காலங்களில் நான் பார்க்க விரும்பிய எழுத்தாளர்களில் ஒருவரான திரு நா.பார்த்தசாரதியை அடிக்கடி பார்ப்பேன். நா. பார்த்தசாரதிக்கு மதுரை என்பதில் எனக்கு அப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அவருடைய "தீபம்" இதழ்கள் ஒன்று விடாமல் படிப்பேன். வாசகர் வட்டம் கோபால், பாரதியாரின் இரண்டாவது பெண்ணான சகுந்தலா பாரதி என்று நிறையப் பேரைப் பார்த்து அவர்கள் பேசுவது எல்லாம் ஒரு ஓரமாக உட்கார்ந்து கேட்பேன். அதிலும் சகுந்தலா பாரதியைப் பார்த்தால் ஏனோ மனது ரொம்ப வேதனைப் படும். "கணையாழி" புத்தகத்தின் பொறுப்பாசிரியராக அவர் இருந்த போது "கணையாழி" புத்தகங்களைச் சந்தாதாரர்களுக்கும் மற்றும் சில எழுத்தாளர்களுக்கும் விலாசம் எழுதித் தபாலில் போடுவேன். இது எல்லாம் செய்யும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

அதிலும் திரு "தி.சா.ராஜூ" விற்கு அனுப்பும்போது இனம் புரியாத சந்தோஷம் வரும். அவர் கதைகள் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலே "கால்காவிற்குச் செல்லும் கடைசி ரெயில்" என்ற கதை விகடனில் வந்தது என்று நினைக்கிறேன். அதுவும் "திருமல்கிரி போஸ்ட் ஆஃபீஸ்" (தினமணி கதிரில் சாவி ஆசிரியராக இருக்கும்போது வந்தது) என்ற கதையும் இன்றளவும் எனக்கு மறக்க முடியவில்லை. அவர் ராணுவத்தில் இருந்த காரணத்தால் கதைக்களம் அதைச் சுற்றியே அமைந்திருக்கும்.பின்னால் நானும் இந்த மாதிரி ராணுவம் சம்மந்தப்பட்டவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாலோ என்னவோ அதை எல்லாம் படிக்க ரொம்ப ஆவலாக இருக்கும். ஒரு கதையில் காஷ்மீரத்துக்குப் போகும் ஒரு ராணுவ மேஜர் சமீபத்தில் மனைவியை இழந்தவர், அங்கு ஒரு காஷ்மீரப் பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண்ணின் மேல் இனம் புரியாத அன்பு தோன்றுகிறது. விவரம் தெரியாத குழந்தையான அவர் பையனும் அந்தப் பெண்ணிடம் அன்பு செலுத்துகிறான். அந்தப் பெண் தினமும் காஷ்மீர மொழியில் தாலாட்டுப்பாடித் தூங்கச் செய்வதாக வரும் அந்த ராகம் அவர் மனைவி ஜோதிக்குப் பிடித்தமான நாதநாமக்கிரியா வாக வரும் கதையும் அந்த இடத்தில் முடியும். என் ஜோதிக்குப் பிடித்தமான ராகம். நாதநாமக்கிரியா என்று கதை முடியும். அதற்கு திரு கோபுலு அவர்களால் வரைந்த படங்களும், அந்தக் கதையும் இன்னும் மனதில் நிற்கிறது. "திருமல்கிரி போஸ்ட் ஆஃபீஸ்: கதையில் கணவன் இன்னும் உயிருடன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையுடன் தினமும் அவன் தபாலை எதிர்பார்த்துப் போஸ்ட் ஆஃபீஸுக்கே வரும் பெண்ணைப் பற்றி. விஷயம் தெரிந்த அவள் தந்தையின் முகபாவமும், அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்புகள் நிறைந்த முக பாவமும் திரு கோபுலு அவர்களால் நன்றாகச் சித்திரிக்கப் பட்டிருக்கும்.

இந்தப் படங்களைப் பற்றிப் பேசும்போது எங்க வீட்டிலேயே ஒரு சித்திரக்காரர் இருக்கிறார். என்னுடைய பெரியப்பா மாப்பிள்ளை. எனக்கு அக்கா வீட்டுக்காரர். அவர் பெயர் சந்திரசேகரன். சேகர் என்ற பெயரில் படங்கள் வரைவார். ரொம்பத் திறமைசாலி. அவருடைய அப்பா திரு வி.வி.சர்மா அவர்களால் வரையப்பட்ட மதுரை மீனாக்ஷி அம்மன் படமும், ராஜராஜேஸ்வரி படமும் இல்லாத வீடே மதுரையில் இருக்காது ஒரு காலத்தில். என்னுடைய அத்திம்பேர் படம் வரைந்தால் நம்மை அப்படியே தலைகீழாகப் பார்த்து வரைவார். கோயம்புத்தூரில் இருக்கிறார். தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். "தீக்கதிர்" பத்திரிகை வேலைக்காகத் தன்னுடைய மத்திய அரசுப் பணியை (பொட்டானிக்கல் சர்வே) விட்டார். திடீரென்று என்ன ஆச்சு தெரியவில்லை யாருடன் எப்படிப் போனார் என்றும் புரியவில்லை திருமீயச்சூரில் போய் லலிதாம்பிகையைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. அதற்குப் பிறகு கம்யுனிஸ்டாவது, ஒன்றாவது. இப்போ என்னடாவென்றால், திருவாரூர் மாவட்டக்கோயில்கள், தஞ்சை மாவட்டக் கோயில்கள், திருச்சி மாவட்டக் கோயில்கள் என்று ஊர் ஊராகப் போய் வந்துவிட்டு "மயன்" என்ற பெயரில் குமுதம் "பக்தி"யில் எழுதுகிறார். ஏற்கெனவே கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்த சமயம் பிரயாணம் நிறையச் செய்வார் என்று நாங்கள் எல்லாம் "உலகம் சுற்றும் வாலிபர்" என்று கேலி செய்வோம். இப்போது நிஜமாகவே உலகம் சுற்றுகிறார். அது சரி, சித்தப்பாவில் இருந்து எங்கேயோ வந்து விட்டேனே, சித்தப்பா யார்?

சித்தப்பாவின் கதை இந்த மாதிரி வெகுஜனப் பத்திரிகைகளில் ஜாஸ்தி வரவில்லை. சில கதைகள் விகடனிலும், கல்கியிலும், எப்போவோ சிறுகதை மலர் போட்டப்போ குமுதத்திலும் வந்துள்ளது. ஆனால் கல்கி, அமுதசுரபி தீபாவளி மலரில் தவறாமல் வரும். சமீபத்தில் நிறையப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவரும் அவர் வாழ்க்கையை ஒட்டிய சம்பவங்களைத்தான் கதையாக எழுதுகிறார். அதிலே ஒன்றுக்குத் தான் "சாகித்ய அகாடமி" பரிசு கிடைத்தது. அதில் ஒரு பிரதி எனக்குக் கூடக் கொடுத்திருக்கிறார். என் பெண்ணிற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் எனக்குத் தமிழும் கொடுத்தார். சில விஷயங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்தவையாகவே இருக்கும். மெலிதான நகைச்சுவை உணர்வோடு எழுதுவார். சித்தப்பா யார்?

ஒன்றுக்கு ஒன்று சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறேன் என்று நினைப்பவர்களுக்கு, நான் எழுதி வைத்துக் கொள்வது இல்லை. அந்த சமயம் மனதில் தோன்றுவதை அப்படியே தட்டச்சு செய்கிறேன். எண்ண ஓட்டத்தைத் தடுக்கத் தெரியவில்லை.மன்னிக்கவும்.

33 comments:

 1. சித்தப்பா பெயர் அசோகமித்திரனா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 2. //இப்போவே சின்னப் பெண்தானே? அப்போ இன்னும் சின்னப் பெண்.//

  Murugaaaaaaa! Yen paaa ennai ippadi sothikara? :)

  unga chithappa sarath kumar thaane! he, hee.. chithi - radhika na chithappa sarath kumar!
  how is it..? :)

  ReplyDelete
 3. Upto 30th june,2006 Iwill busy with the bank,handing over charge,send off,party etc.,.After that visit to Singapore for 2 months.after that CA practice in chennai.chitthappa perai eppo sollaporinko.ashokamithrana yaar athu. TRC

  ReplyDelete
 4. டோண்டு சார், நீங்களும் trc sir-ம் கரெக்டாக் கண்டு பிடிச்சுட்டீங்க. அதன் முதலிலேயே அவர் ஜெமினியில் வேலை பார்த்தது பத்தி எழுதலை.அப்புறம் உங்க நண்பர் நிறைய விசிட் செய்கிறார். தமிழினியிடம் சொல்லுங்கள். இன்னிக்கு என்ன உங்களுக்கு என் வலைப்பூ பக்கம் வர நேர்ந்தது? இல்லாட்டி இன்னும் ஒரு இரண்டு பதிவு சித்தப்பா பத்தி ஓட்டி இருப்பேன்.

  ReplyDelete
 5. அம்பி, அது எப்படி உங்க கண்ணிலே இது மட்டும் படுது? நல்ல sense of humor, உங்களுக்கு இல்லை, எனக்கு. அப்புறம் என் சித்தப்பாவைக் கண்டு பிடிச்சுட்டாங்க, அதனாலே இரண்டு பதிவுக்கு விஷயமே இல்லை.
  சகிக்கலை, சித்தி ராதிக்கான்னா சித்தப்பா சரத்குமார் என்பது அரதப் பழசான ஜோக்.

  ReplyDelete
 6. Sir,
  I am honoured by this kind intimation. I pray God for a peaceful retired life for you.
  Happy Retired Life.
  Happy Second Honeymoon.
  Geetha Sambasivam.&
  K.Sambasivam.
  And your guess of my chithappa is correct. Just a build up. That is all.

  ReplyDelete
 7. "டோண்டு சார், நீங்களும் trc sir-ம் கரெக்டாக் கண்டு பிடிச்சுட்டீங்க. அதான் முதலிலேயே அவர் ஜெமினியில் வேலை பார்த்தது பத்தி எழுதலை."

  இல்லையே, பதிவை சரியாகப் பாருங்கள். நீங்கள் எழுதியது:

  "அப்போது அவர் அவ்வளவு பிரபலம் அடையவில்லை. ஜெமினியில் தான் வேலை செய்து கொண்டிருந்தார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு வெளி நாடு சென்று வந்த பின் முழு நேர எழுத்தாளராக மாறினார்."

  நீங்கள் சொன்ன அடையாளங்கள் அவருக்குத்தான் பொருந்தும். கொத்தமங்கலம் சுப்பு எனக்குத் தெரிந்து வெளிநாடு போனதில்லை.

  கொத்தமங்கலம் சுப்புவைப் பற்றிப் பேசும்போது அசோக மித்திரன் அவர் வாசனுக்கு உதவியாக செய்த வேலைகளைக் கூறியிருந்தார். ஒரு உதாரணமும் கொடுத்தார்.

  அதாவது வாசன் சுப்புவிடம் ஒரு சினேரியோ சொல்வாராம், அதன்படி ஒரு எலி ஒரு புலியைக் கொன்று விடுமாம். பிறகு புலிக்குட்டிகள் அனாதைகளாகப் போக, எலியே அவற்றை எடுத்து வளர்த்து வந்ததாம். அப்போது புலிக்குட்டிகள் தூங்க, எலி பாடும் தாலாட்டுப் பாடலை எழுத வேண்டும் என்று வாசன் கேட்டால், சுப்பு அவர்கள் சிறிதும் சுணங்காது ஒன்றென்ன 4 பாட்டுகள் அந்த சிசுவேஷனுக்காக எழுதிக் கொடுப்பாராம்.

  இதை உங்கள் சித்தப்பா இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் ஆங்கிலத்தில் எழுதியது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 8. டோண்டு சார், நீங்க படிச்சது இந்த ஒரு பதிவு தான். சித்தப்பா பத்தி நிறையப் பதிவு போட்டிருக்கேன். அதிலே தான் முதலிலேயே அவர் ஜெமினியில் வேலை பார்த்தார் என்று கூறவில்லை. கூறினால் கண்டுப்பிடித்திருப்பார்கள் இல்லையா அதான். ஆனால் அதை உங்களுக்குத் தெளிவாக்கவில்லை.

  ReplyDelete
 9. good language..I am just wondering,,,,how you guys are able to type with so much of clarity in our language...nice blog..

  ReplyDelete
 10. கீதா, நானும் முதலிலேயே கண்டுப்பிடித்துவிட்டேன். ஆனால் பொதுவில் சொல்ல விருப்பப்படுவீர்களா இல்லையா என்ற
  சந்தேகத்தில் பேசாமல் இருந்துவிட்டேன். ஒரு பதிவில் "என் சித்தப்ப்பா, கணையாழியில் உதவியாசரியராய் இருந்தார்.
  சந்தாகாரர்களுக்கு தபால் தலை ஒட்டி, கணையாழியை அனுப்ப அவருக்கு உதவி செய்வேன் , கல்யாணம் ஆவதற்கு முன்னால் கதை- சொல்லியிருந்தீர்க்ளே அதில் அசோகமித்திரனாய் இருக்கலாம் என்று சந்தேகபப்ட்டேன்.

  இரண்டும் வருடங்களுக்கு முன்னால், உயிர்மை முதலாண்டு விழாவில் அவரை சந்தித்து ஐந்து நிமிடங்கள் பேசிக் கொண்டுஇருந்தேன்.
  நல்ல எழுத்தாளர் என்றெல்லாம், நானெல்லாம் சான்றிதழ் தரும் நிலை அவருக்கு இல்லை. ஆனால் நல்ல மனுஷன் என்ற எண்ணம் மனம் முழுவதும் நிறைந்திருந்தது. விழாவில் அவர் அத்தனை பேச்சாளர்களையும்
  தூக்கி சாப்பிட்டு விட்டார் என்பதில் மிகையில்லை. சொன்ன விஷயம், அதே கணையாழி சந்தாக்காரர்களுக்கு புத்தகம் அனுப்புவது, டெல்லிக்கு புத்தக கட்டை கட்டி அனுப்பும் கலையை சிரிக்காமல் சொல்லி எல்லாரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

  ReplyDelete
 11. //இவர் எங்க அப்பாவோட தம்பி இல்லை. அம்மாவோட தங்கை கணவர்.//

  credit எங்க சைடு தான்னு சொல்றீங்க அதானே!!

  சில ல.ச.ரா, புதுமைபித்தன் படிச்சிருக்கேன். அசோகமித்ரன் படிச்சதில்ல.

  ReplyDelete
 12. அப்படி என்றால் உங்கள் சித்தப்பாவின் வயதிலிருந்து உங்களின் தோராய வயதைத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
  :-)))

  ReplyDelete
 13. சீதாலக்ஷ்மி எனக்கு அசோகமித்ரனை பழக்கம் உண்டு.நான் டீநகரில் தமோதரரெட்டித்தெருவில் இருந்தபோது பக்கத்து வீட்டில் இருந்தார்.சரி....சரி...சித்தப்பா மேட்டர் ஓவர். இன்னும் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு பாக்கி இருக்கே. பத்தாவது எக்ஸாம் ரிசல்ட் என்ன ஆச்சு.எங்கள் வீட்டில் உள்ள 16 வயது சின்னப்பெண்கள் எல்லாரும் பாஸ் செய்து விட்டர்கள் தி ரா.ச

  ReplyDelete
 14. //சின்னப்பெண்ணாக இருந்தேன். இப்போவே சின்னப் பெண்தானே? //

  ஏங்க்கா உங்களுக்கே இது நல்லா இருக்கா... :-)

  ReplyDelete
 15. so unga chithappa mr.asokamitrana? naan neraya puthagangal padipathundu, aanal ivarai padithathtillai. aanal ivar pugazh patri theriyum.

  ReplyDelete
 16. krk,
  credit only goes to me for my blogging. Not to my chithappa, and he is not my father's brother. mother side chithappa.and to my language crdit goes to my native city Madurai and to my Tamil teachers.

  ReplyDelete
 17. உஷா,
  நிஜமாவே சந்தோஷம். நீங்க என்னோட பதிவை எல்லாம் படிக்கிறீங்கனதும். என்ன இருந்தாலும் வலை உலகின் சீனியர் பதிவாளர் இல்லையா? ரொம்ப நன்றி, உஷா.

  ReplyDelete
 18. நீங்க தான் இன்னும் 9 தாராவை விட்டு வெளியே வரவே இல்லையே? அப்புறம் எங்கேருந்து படிக்கறது?

  ReplyDelete
 19. லதா,
  இந்த வேலை தானே வேணாங்கறது. உங்களுக்கு என்ன என்னோட வயசு தெரிஞ்சாகணும் அவ்வளவு தானே, இதோ கீழே trc Sir எழுதி இருக்கார் பாருங்க, நான் இன்னும் சின்னப் பெண்தான் என்று, அதில் இருந்தே தெரியலை?

  ReplyDelete
 20. trc Sir,
  அப்போ 8-ம் நம்பர் வீடா? அப்படின்னா என்னையும் தெரிஞ்சிருக்கணுமே? அப்புறம் இவ்வளவு சின்னப் பெண்ணான நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை. பத்தாவது எங்கே பாஸ் செய்யறது?
  அப்புறம், திடீர்னு "சீதாலக்ஷ்மி"னு கூப்பிட்டதும் எங்க தாத்தா (!!!!!!!!!)னு நினைச்சேன். அவர்தான் அப்படி ,முழுப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்.

  ReplyDelete
 21. என்ன ச்யாம்,
  ஒரு சின்னப்பொண்ணு தன்னை வேறே எப்படி சொல்லிக்குவா? இதுக்கெல்லாம் மனம் கலங்கலாமா? :)

  ReplyDelete
 22. வேதா, படிச்சுப் பாருங்க, ஆனால் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் ஜாஸ்தி வராது.

  ReplyDelete
 23. கீதா, அசோகமித்திரன் உங்க சித்தப்பா வா? கொடுத்துவைத்தவர் நீங்கள் போங்க..

  ReplyDelete
 24. கார்த்திக்,
  இதிலே என்னப்பா கொடுத்து வச்சிருக்கு? நான் சும்மா ஒரு build-up கொடுத்துட்டு இருந்தேன் பதிவை இன்னும் நீட்டிக்க. சட்டுனு உண்மை தெரிஞ்சு போச்சு. இப்போ சப்புனு போயிருக்கும் எல்லாருக்கும்? என்ன செய்யறது?

  ReplyDelete
 25. நான் இந்த பதிவில் இட்ட பின்னூட்டத்திற்கு நீங்கள் ஏன் என் பதிவில் வந்து பதில் கூறுகிறீர்கள்? நான் முதலில் குழம்பி விட்டேன், என்னடா இது? நான் எழுதியதிற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று? பின்பு தான் புரிந்தது. நீங்கள் இங்கேயும் பதில் கூறி பின்பு அங்கேயும் வந்து கூறினால், உங்கள் நேரம் தான் விரயமாகும். அதுவும் தவிர, நாங்கள் இங்கே வருகை தரும் வேலை மிச்சமாகிவிடும்,நீங்கள் புதிய பதிவுகள் போட்டால் அதுவும் லேட்டாகத் தான் தெரிய வரும்.:)

  ReplyDelete
 26. //அப்புறம் உங்க நண்பர் நிறைய விசிட் செய்கிறார். தமிழினியிடம் சொல்லுங்கள்.//

  இது உள்குத்தாக்கும்..ஏம்மா நீங்க வேற...:)

  ReplyDelete
 27. அட அசோகமித்ரன் சாருக்கு பெண் முறை வேண்டுமா நீங்கள்...பெரிய பெரிய எழுத்தாளர்களை பார்த்திருக்கிறீர்கள் பழகியிருக்கிறீர்கள்
  ஆத்தாடி நீங்களும் ரொம்ப பெரிய ஆள்ன்னு தெரியாம போச்சே ஆனாலும் ரொம்ப தன்னடக்கம் தான் உங்களுக்கு.

  ReplyDelete
 28. வேதா, நான் காரனமாத்தான் எல்லார் பதிவிலும் போயும் பின்னூட்டத்தைப் போடறேன். நான் நோட்பாடில் எழுதிக்கொண்டு வெறுமே ஒட்டும் வேலை மட்டும் செய்வதால் நேரம் ஒண்ணும் ஆகிறதில்லை. நீங்கள் ஆஃபீஸ் வேலையும் பார்க்கணும். எனக்கு அது இல்லை. இனிமேல் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போடவில்லை. சரியா? :-)

  ReplyDelete
 29. டுபுக்கு,
  பார்த்தீங்களா, உங்களுக்கு நான் சின்னப் பெண்தான்னு தெரிஞ்சிருக்கு. இந்த அம்பி இப்படிச் சிரிக்கிறாரே? கொஞ்சம் சொல்றதில்லை? உங்க பேருக்கு ஏத்த மாதிரி டுபுக்குனு வரீங்க, டுபுக்குனு போறீங்க? என்ன அண்ணா நீங்க?

  ReplyDelete
 30. office velaya? athellam onnum illai.neenga en commentsuku en bloguku vanthu response kodutha, naan unga bloguku vanthu check panna maranthuduven, athukulla neenga ethavathu puthu post potruveenga:)athanala thaan sonnen:) mathapadi no probs:)

  ReplyDelete
 31. சரி, வேதா, அதுக்காக என் வலைப்பக்கத்துக்கு வராம இருந்துடாதீங்க. முடிஞ்சப்போ கட்டாயம் வாங்க. ரொம்ப நன்றி.

  ReplyDelete
 32. ஓஹ்ஹோ. அசோகமித்திரனா?
  எத்தனை நல்ல் எழுத்தாளர். உங்களுக்கும் அவர் சாயல் படியுமே. கொடுத்து வைத்தவர்.கொஞ்சம் கூட அலுக்காமல் ஒரு பதிவு படித்த நிறைவு வருகிறது.
  உங்க உத்திர காண்ட பதிவும் ப்ரமாதம். வாழ்த்துக்கள் கீதா.

  ReplyDelete
 33. மனு, அதெல்லாம் அவர் சாயல் வரக்கூடாதுனு ரொம்ப விழிப்போட இருக்கேன். வந்ததுனா உடனே சொல்லுங்க. மாத்திக்கணும். "என் வழி, தனி வழி"
  அப்புறம் அந்த யோகா மாஸ்டர் அம்பத்தூரில் இருந்து உங்களுக்குச் சரியா வருமா பாருங்க? அப்புறம் விவரம் தரேன்.

  ReplyDelete