எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 20, 2006

66. ஆறு மனமே ஆறு.

இந்தப் பதிவு நாகை சிவாவிற்குச் சமர்ப்பணம். அவருடைய ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு வகையில் என்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மற்றபடி அவருடைய பதிவிற்கு நான் கொடுத்த லின்க் எல்லாம் வருதோ வரலையோ ப்ளாக்கருக்குத் தான் வெளிச்சம். வராவிட்டால் என்னோட பொறுப்பு இல்லை என்று தெளிவாகச் சொல்லி விடுகிறேன். ஏற்கெனவே 4 பதிவு போட்டு விட்டேன். மறுபடி ஆறு பதிவு போடச் சொல்லி இருக்கிறார். அவருக்காக இந்தப் பதிவு.

எனக்குப் பிடித்த ஆறு நபர்கள்: யாரைக் குறிப்பிடுவது? புரியவில்லை.
1. லால் பஹாதூர் சாஸ்திரி
2. காமராஜர்
3. பி.ராமமூர்த்தி(கம்யூனிஸ்ட்)
4. மொரார்ஜி தேசாய்
5. நேதாஜி
6. விவேகானந்தர்.

தற்போது இருப்பவர்கள் என்றால்:

1.ஸ்வாமி தயானந்த சரஸ்வதி
2.வாஜ்பாய்
3.நல்ல கண்ணு
4.என்னுடைய யோகா குரு திரு ராஜூ அவர்கள்
5.-----
6.-----

யாரும் தெரியவில்லை. ப்ளாக்கர் வேறு could not connect to blogger.com. posting and publishing may fail னு வருது. என்னத்தை எழுதிக் கிழிக்கப் போறேன் தெரியலை.

பிடித்த சாப்பாடு என்று எதுவும் இல்லை. இப்போது் எல்லாம் inter- continental ஆகி விட்டதில் சாப்பாடே அவ்வளவு பிடித்தம் இல்லாமல் போய் விட்டது.ரொம்பப் பிடித்தது என்றால் ரசம் சாதமும் அப்பளமும். த்யிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் தான்.

செய்த தவறுகள்: தவறைத் தவிர வேறு என்ன செய்திருக்கேனு தெரியலை.
1.முதல் தவறு:கையில் கிடைத்த பாங்க் வேலையை வேண்டாம்னு சொன்னது.
2.கிடைத்த மின் வாரிய வேலையை விட்டது.
3.திருப்ப மின்வாரியத்தில் கூப்பிட்டப்போ போகாதது.
4.சிகந்திராபாத்தில் இருந்து சென்னை வந்தது. வாழ்நாளிலேயே பெரிய தவறு இதுதான்.
5.என் பெண்ணுக்குக் குஜராத்திலேயே காலேஜில் சேர்க்காமல் சென்னை அனுப்பினது. இது அடுத்த பெரிய தவறு.
6.எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லாருக்கும் செய்தது, அதனால் பட்ட மறக்க முடியாத நினைவுகள்.
இப்போ என்னுடைய பழைய வாழ்க்கையைத் திரும்ப நீ வாழணும்னு யாராவது திருப்பிக் கொடுத்தால் இந்தத் தவறுகளில் சிலதையாவது என்னால் திருத்த முடியும்னு நம்பறேன். ஆனால் கிடைக்குமா? A million dollar question?

இழந்தது: நிறைய. பட்டியல் போட முடியாது. ஆனால் அதற்காக வருத்தம் எதுவும் இல்லை.

பார்த்த இடங்களில் பிடிச்சது: நிறைய மேற்குப் பக்கமே பார்த்திருக்கிறோம். அதிலே எல்லாமே பிடிக்கும்.
1.கோவா

2.உடுப்பி, சிருங்கேரி

3.ஊட்டி, எத்தனை முறை போனாலும் அலுக்காது.

4.பத்ரிநாத்தில் இருந்து சில கி.மீ. தூரம் உள்ள "மானா" என்ற கிராமம். அங்கே தான் வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் தன் துதிக்கையை உடைத்து மஹாபாரதம் எழுதிய இடம் இருக்கிறது. விநாயகரே அழகு. அதிலும் இவர் மஹாபாரதம் எழுதும்போது கேட்கவே வேண்டாம். அங்கிருந்து சற்றுத் தூரத்தில் வியாசர் குகை உள்ளது. அதில் இருந்து கொஞ்ச தூரத்தில் சரஸ்வதி நதி ஆரம்பிக்கிறது. அந்த நதியைக் கடக்கத் திரவுபதிக்காக பீமன் கட்டிய பாலம் இருக்கிறது. அந்தப் பாலம் வரை தண்ணீர்ச் சாரல் தெறிக்கும். வியாசர் குகைக்குள் நதிப் பிரவாஹம் இருக்கும் இடத்தில்தான் ஸ்வாமி ஹரிதாஸ் அவர்கள் ஜலசமாதி அடைந்தார் என்று சிலரும், ஹரித்வாரில் என்று சிலரும் கூறுகிறார்கள்.

5.மத்ராவில் கிருஷ்ண ஜன்ம பூமி, பிருந்தாவனமும், கோகுலமும். எல்லாம் பழமை மாறாமல் இருக்கிறது. அதிலும் கோகுலம் நிஜம்மாவே கோகுலம்தான்.

6.ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி போய்ப் பார்த்தது. பழைய அழிவுகள் எல்லாம் பார்க்கப் பார்க்க வேதனையாக இருந்தது.

பார்க்க ஆசை:
1.கிழக்கே உள்ள ஊர்கள். இன்னும் கல்கத்தா போகவில்லை. கயா மட்டும் போயிருக்கிறோம்.

2.தலைக்காவேரி.

3.கைலாஷ், மானசரோவர். ஆனால் எனக்கு மருத்துவ அனுமதி கிடைக்காது.

4.கொடைக்கானல். மதுரையிலேயே இருந்தும் இன்னும் பார்க்கவில்லை.

5.துவாரகா. திரும்ப ஒருமுறை போய்ப் பார்க்க ஆசை. ஏற்கெனவே எல்லாம் பார்த்து இருந்தாலும் இப்போது ப்ளாக் எழுத ஆரம்பிச்சதும் போய்ப் பார்த்து விட்டு வந்து முழு விபரத்தோடும் எழுதணும்னு ஆசை.

6.நர்மதை நதி உற்பத்தி ஸ்தானம். ஜபல்பூர் கிட்டனு நினைக்கிறேன்.

கூப்பிட நினைப்பவர்கள்: சங்கத்தலமை வேண்டாம்னு சொல்றதா நாகை சிவா சொன்னதாலே அவர் ஆட்டத்துக்கு அவுட். பொன்ஸ், தேவ் இவங்களை எல்லாம் கூப்பிட்டுட்டாங்க. மேலும் பொன்ஸ் ரொம்ப பிசி. கூப்பிட்டால் வர முடியுமோ முடியாதோ தெரியலை.
1.விவசாயி இளா அவர்கள்

2.கார்த்திகேயன் முத்துராஜன். நான் எழுதுவதைப் பார்த்து ஆசைப்பட்டு அவரும் எழுதுகிறார். என் எழுத்தையும் தமிழ் நல்லா எழுதறீங்கனு சொன்ன ஒரே ஆள்.

3.அமபி. நான் என்ன எழுதினாலும் வந்து பார்த்து விட்டுப் போய் விடுவார். ஊக்க சக்தி.

4.மனு. என்னை உடன் பிறவா சகோதரியாக அங்கீகரிச்சவர். இப்போ வள்ளிங்கற பேர்ல பிசியா இருக்கார். அடிக்கடி வரதில்லைனாலும் எப்போவாவது வராங்க.

5.திருTRC Sir.என்னை "தேவன்" ரேஞ்சுக்குப் புகழ்ந்து ஊக்கம் கொடுத்தவர். நான் எழுதறது எல்லாம் என் வயசைப் போல கதையோனு ஒரு சந்தேகம் உண்டு. அக்மார்க் நிஜம் நான் எழுதறது எல்லாம். சொந்த அனுபவங்கள்.

6.நாகை சிவா: இவரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இப்போ கூடப் பாருங்க ப்ளாக்கர் தகராறு செய்து கொண்டே இருக்கிறது. எப்படி வருமோ தெரியாது. ஆனால் இவருக்கு எப்படியோ மூக்கில் வேர்த்து விடும். அது எப்படி சூடானில் இருந்து கொண்டு கண்டு பிடிக்கிறார் என் ப்ளாக் சரியா வரலைனு, அதான் எனக்குப் புரியலை. கரெக்டா வந்துடுவார், பார்த்துச் சிரிக்கிறதுக்கு.:)

17 comments:

 1. கீதா, உங்கள் பதிவில் என் பெயரை பார்த்தவுடன் கண்கள் ஆனந்தம் கொண்டு கலங்கிவிட்டன.. என்னை நீங்கள் கூப்பிட நினைத்தவுடனே, ஒரு பெரிய விருந்தே சாப்பிட்டது போல மகிழ்ச்சி.

  இந்த ஏப்பிரலில் அலுவலகத்தில் இருந்து தலைகாவேரி சென்றேன். டாக்டர் சிவா படத்தில் மலரே குறிஞ்சி மலரே பாடலில் முதல் காட்சியில் வருவதும் தலைகாவேரியே. கிட்டதட்ட இருபத்து ஐந்து வருடங்கள அப்படியே தான் உள்ளது அந்த இடம், எந்தவித முன்னேற்றமும் இன்றி..

  ஊட்டியை விட எனக்கு கொடை தான் பிடிக்கும். அதுவும் நான் அங்கு ஒரு வருடம் படித்தாலும் சளிக்கவே இல்லை.

  சன் டிவி பாணியில் ஆறு மனமே ஆறு - ஜோரு

  ReplyDelete
 2. //சென்னை வந்தது. வாழ்நாளிலேயே பெரிய தவறு இதுதான்.//


  //சேர்க்காமல் சென்னை அனுப்பினது. இது அடுத்த பெரிய தவறு.//

  சென்னை மீது அப்படி என்ன கோபம்??

  //இப்போ என்னுடைய பழைய வாழ்க்கையைத் திரும்ப நீ வாழணும்னு யாராவது திருப்பிக் கொடுத்தால் இந்தத் தவறுகளில் சிலதையாவது என்னால் திருத்த முடியும்னு நம்பறேன்//

  There is no "if"s and "but"s in cricket.

  வாழ்க்கைக்கும் கூட.

  //6.எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லாருக்கும் செய்தது, அதனால் பட்ட மறக்க முடியாத நினைவுகள்.//

  என்ன பண்றதுக்கா, எல்லோருக்கும் நல்லவங்களா இருக்க ட்ரை பண்ணி யாருக்குமே (including ourself) நல்லவங்களா இல்லாம போயிடுறோம்.

  ReplyDelete
 3. தவறுகள் செய்வது மனித இயல்பு என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் செய்தது தவறு அல்ல கர்வம் அதாவது நான் தான் என்ற ஒரு மெத்தனம் இதனால் தான் செய்ய தூண்டியதவறுகள். உங்களது வாழ்கையை துலைத்த பின்பு வருந்தி என்ன பயன். இனியாவது விட்டு கொடுத்து வாழும் மனப்பாண்மையும் எதையும் எற்றுக்கொள்ளும் தன்மையுடனும் வாழ பழகி கொள்ளுங்கள். இப்டிக்கு உங்கள் நலனில் அக்கரைக்கொண்ட
  குறிஞ்சித்தமிழ்
  http://kurinchitamil.blogspot.com

  ReplyDelete
 4. கார்த்திகேயன்,
  இதிலே என்ன பெரிசா நான் செஞ்சதா நினைக்கிறீங்க? ஒண்ணுமே இல்லை. தினமும் என் வலைப்பூவிற்கு வந்து என்னைப் பாராட்டும் உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும்.

  ReplyDelete
 5. மனசு, முடியாதுனு எனாக்குப் புரியாதா? ஒரு ஆத்தாமைலே சொல்றேன். வேறு என்ன? எனக்கு முதல் முதல் வந்ததில் இருந்தே சென்னை பிடிக்காமல் போனது. சிலருக்குச் சில ஊர் பிடிக்கும், சில ஊர் பிடிக்காது. காரணம் என்னனு சொல்றது?

  ReplyDelete
 6. வாங்க குறிஞ்சித் தமிழ், முதல் வரவுக்கு நன்றி. மத்தபடி
  உங்க அக்கறைக்கு முதலில் நன்றி. உங்க வலைப்பூவிற்கு வர முடியலையே, நாளைக்கு மறுபடி முயற்சி செய்யறேன்.
  அப்புறம் நான் செய்தது தவறு அல்ல, கர்வம் என்கிறீர்கள். இந்த ஒரு பதிவை மட்டும் வச்சுப் பார்க்காதீங்க. அந்த பாங்க் வேலை நேர்முகத் தேர்வு அன்னிக்கு எனக்குக் கல்யாணம். பழைய பதிவிலே தேடிப் பாருங்க கிடைக்கும். மின்வாரிய வேலையை விட்டது சொந்தக் காரணம். சொல்ல முடியாது. தவிர்க்க முடியவில்லை. அப்புறம் குஜராத்தில் குஜராத்தி மீடியம் தான் காலேஜில்ங்கறதாலே தான் பெண்ணை இங்கே அனுப்பும்படி ஆச்சு. இது நான் மட்டும் தனியா முடிவு எடுக்கற மாதிரி எதுவும் இல்லை. விட்டுக் கொடுத்துப் போகணும்னால் என்னனு ஓரளவு எனக்கும் புரியும். எதையும் ஏற்றுக் கொண்டதால்தான் எதிர் நீச்சல் போட்டு நீந்தி வந்திருக்கிறேன். என்னோட அனுபவம் முழுசா நான் எழுதலை. எழுதின வரை படிச்சுப் பாருங்க. ரொம்ப நன்றி.

  ReplyDelete
 7. //விநாயகர் தன் துதிக்கையை உடைத்து மஹாபாரதம் எழுதிய இடம் இருக்கிறது.//

  துதிக்கை illai, that's thantham...
  by the way, thanx for the compliment. :)

  ReplyDelete
 8. அம்பி, தவறைச் சுட்டிக் காண்பிச்சதுக்கு நன்றி. நான் திருப்பிப் பார்க்காமல் போடறதாலே தப்பு வருது. என்ன ப்ளாக் வேலை செய்யும்போது வெளியிடணுமேனு அவசரம்தான். "தந்தம்" என்று எழுத வேண்டியது துதிக்கை என்று வந்துவிட்டது.

  ReplyDelete
 9. //"66. ஆறு மனமே ஆறு." //

  பதிவு எண்ணுக்கு ஏற்ற பதிவு.:-))

  //அது எப்படி சூடானில் இருந்து கொண்டு கண்டு பிடிக்கிறார் என் ப்ளாக் சரியா வரலைனு, அதான் எனக்குப் புரியலை. கரெக்டா வந்துடுவார், பார்த்துச் சிரிக்கிறதுக்கு.:) //

  :-)

  ReplyDelete
 10. கூப்பிட நினைத்த ஆறுபேர்களில் என்பேரா? நம்ப முடியவில்லை.ஒருகதை சொல்லலாமா.ஒரு பக்தன் ஒரு ஸ்வாமிகளிடம் சென்றான்.அவர்கையில் ஒரு பேப்பரில் பலரின் பெயர்கள் எழுதிய லிஸ்ட் இருந்தது. அவன் அது என்ன லிஸ்ட் என்றான். அவர் அதில் கடவுளை மிகவும் விரும்புவர்களின் பெயர்கள் என்றார். 100 பக்கங்கள் கொண்ட லிஸ்டில் அவனும் சளைக்காமல் தேடிப்பார்த்து தன் பெயர் அதில் இல்லாததுகண்டு மிக வருத்தப்பட்டான். நாம் எவ்வளவு பக்தி செலுத்துகிறோம் ஆனால் நம்பெயர் இல்லையே என்று வருத்தப்பட்டு திரும்பிச்செல்ல முயன்றான். அப்போது ஸ்வாமிகள் கையில் சிறிய காகிதம் அதில் 10 அல்லது 15 பெயர்கள்தான் இருந்தது. இதில் கடவுளுக்கு மிகவும்பிரியமானவர்களின் பெயர்கள் இருக்கிறது இதயும் பார்த்துவிட்டு செல்லுங்கள் என்றார். அவன் சொன்னான் லக்ஷம் பெயர்களிலேயே இல்லை இதில் நிச்சயம் இருக்கது என்றான்.சரி நான் படிக்கிறேன் கேள் என்று அந்த 10 பேர் லிஸ்டைப் படித்தார். அதில் முதல் பெயராக அவன் பெயர் இருந்தது அவன் மனனிலை எப்படி இருந்திருக்கும். அது போல்தான் என் நிலையும் ஆறுபேரில் என்பெயரா நன்றி அன்பன் தி ரா ச

  ReplyDelete
 11. //தற்போது இருப்பவர்கள்//
  ஏங்க இந்த லிஸ்ட்ல உங்க ஆத்துக்காரரை விட்டுடீங்களே (ஏதோ என்னால முடிந்தது பத்தி போட்டாச்சு) :-)

  ReplyDelete
 12. trc Sir,
  "தேவன்" ரேஞ்சுக்குப் புகழறீங்கனு பார்த்தால் "தேவன்" என்றால் கடவுள்னு சொல்லிட்டீங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!இப்போ எனக்குத் தான் என்ன சொல்றது புரியலை.

  ReplyDelete
 13. ஹெல்லோ ச்யாம், அதெல்லாம் கொளுத்த முடியாது. என்னன்னு கேக்கறீங்களா? என்னோட ஒருபாதியை நான் எப்படி மறக்கமுடியும்? அவரை மறக்கமுடியாதவங்க லிஸ்ட்லே சேர்க்க அவர் என்ன வெளி ஆளா?நீங்க முதல்லே தினமும் உங்க மனைவியைக் கவனிக்கவும் புரியும்.

  ReplyDelete
 14. நல்லவேளை அம்பி சொல்லிட்டார்.
  என் யானையோட துதிக்கையை உடைச்சால்..... அப்பப்பா எவ்வளோ வலி இருக்கும்?

  பாவம்ப்பா யானை.

  ReplyDelete
 15. துளசி, யானை நமக்கும் சிநேகிதம் ஆச்சே! துதிக்கையை உடைப்பேனா என்ன? எல்லாம் இந்த ப்ளாக்கர் பண்ணுற அட்டகாசத்தில் தான் உடனே வெளியிடணும்னு அவசரப்பட்டுட்டேன். திருத்தாமல் இருந்துட்டேன். இன்னிக்காவது யானையைச் சாக்கு வைத்து வந்தீங்களே, ரொம்ப நன்றி.

  ReplyDelete
 16. //அது எப்படி சூடானில் இருந்து கொண்டு கண்டு பிடிக்கிறார் என் ப்ளாக் சரியா வரலைனு, அதான் எனக்குப் புரியலை. கரெக்டா வந்துடுவார், பார்த்துச் சிரிக்கிறதுக்கு //

  :-)))))))))))))))
  சிரிச்சாச்சு.... தாமதத்துக்கு மன்னிக்கவும்.

  66. ஆறு மனமே ஆறு.. நல்லா மேட்சிங்கா இருக்கு...

  நல்லக்கண்ணு, உண்மையிலே நல்ல மனுசங்க...

  தவறுகளை திருத்த எல்லாம் வேண்டாங்க... நடந்தது நடந்து விட்டது. பிற்காலத்தில் யோசிப்பதற்கு ஒரு வாய்ப்புனு விட்டு தள்ளுங்க...

  பார்க்க ஆசையில் நம்ம ஊரையும் சேர்த்துங்க... நல்ல ஊருங்க....

  கடைசியாக - இந்த சமர்ப்பணம் எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தைங்க... பெரியவங்க நீங்க இது மாதிரி எல்லாம் பேச கூடாது.....
  (ஹய்யா.... பெரியவங்க லிஸ்ட்டில் சேர்த்தாச்சே......)

  ReplyDelete
 17. நாகை சிவா, (இது என்னோட குரல்)
  கை சிவா)
  சிவா ) இது மூணும் எதிரொலி.
  வா )
  என்னைப்போய் பெரியவங்க லிஸ்ட்லயா? அக்கிரமம், அநியாயம், அடாவடி, பச்சை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள், நீலம் எல்லாக் கலர்லயும் துரோகம். நான் என்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றுறுறுறும் பதினாறுதான்
  அப்புறம் உங்க ஊருக்கு வந்து வெளிப்பாளையத்திலே தங்கிக் கோவில் எல்லாம் பார்த்து விட்டு வேளாங்கண்ணி, நாகூர் எல்லாம் போயிட்டு வந்தாச்சு எப்போவோ. உங்களுக்கு 60 வயசு ஆச்சுல்ல அப்பத்தான்னு நினைக்கிறேன். அப்புறம் உங்க ப்ளாகிலும் இதே பின்னூட்டம் போடுறதுக்கு ஒண்ணும் objection இல்லையே?

  ReplyDelete