எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 30, 2007

பதிவைக் காணோம்!!!!!!!!

நேத்து ஒரு பதிவு எழுதி சேமிப்பில் போட்டேன். எந்தக் கணக்கிலே போச்சோ, காணவே காணோம், இந்த அழகிலே இந்த ராம் வந்து புது ப்ளாகுக்கு மாறுங்க, மாறுங்க அப்படின்னு தொந்திரவு செய்யறார்.அப்புறம் என்னோட ப்ளாகையே தேடிக் கண்டு பிடிக்கிறாப்பல ஆயிடும். அப்புறம் என்னோட இலக்கியத் தொகுப்பு என்ன ஆகிறது? ராமுக்கு இந்த ப்ளாக்கர் ஏதாவது சம்திங் கொடுத்திருப்பாங்களோ என்னமோ தெரியலை. அப்புறம் நிறையப் பேர் இப்போ ஒண்ணும் எழுத முடியலைன்னு சொல்லி இருக்காங்க. அம்பி தான் தங்கமணி கிட்டே பேசவே நேரம் பத்தலைன்னு சொல்லிட்டார். இதிலே கார்த்திக் மட்டும் கொஞ்சம் பிசி. அவர் இப்போ ரொம்பவே நிறைய இடத்தில் எழுத ஆரம்பிச்சிருக்கார். நல்லா எழுதட்டும். அந்தக் கிராமத்து மண் வாசனை நிஜமாவே எழுத்தில் வருது. அதான் பாராட்டும், புகழும் தேடி வந்திருக்கு. வாழ்த்துக்கள். வேதா(ள்) பிசின்னு சொல்லிட்டு,என் ப்ளாகைத் தவிர மத்த எல்லாருக்கும் பின்னூட்டம் கொடுத்துட்டு இருக்காங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இதுக்கு இருக்கு உங்களுக்குத் தனி ஆப்பு. அப்புறம் எஸ்.கே.எம்., புலி இவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா எழுதலை. புலிதான் இந்தியாவிலே இருக்கு. ஹிஹிஹி, என்னைக் கூட வந்து பார்த்து உறுமிட்டுப் போயிடுச்சு. அப்புறம் சூடான் போய்த் தான் எழுதணும்னு சொல்லிட்டார். எஸ்.கே.எம்.சீக்கிரம் எழுத ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.

இந்தச் சென்னை மாமி அல்லது உமாகோபுவையும் காணோம். ச்யாம் வழக்கம்போல் 4 வரி எழுதிட்டு நூத்துக்கணக்கில் பின்னூட்டம் வாங்கிட்டு இருக்கார். அது எப்படி? பெரிய "சிதம்பர ரகசியம்" மாதிரி இருக்கே? மணிப்ரகாஷ் நான் பின்னூட்டம் போட்டதைக் கூடப் பார்க்காமல் ஏன் வரலைன்னு கேட்டுட்டுப் போறார். அவ்வளவு பிசி. மத்தவங்க சில பேர் எழுதறதே இல்லை, பின்னூட்டத்துக்காக ப்ளாக் வச்சுட்டு இருக்காங்க. விஷயம் நிறைய இருந்தும் என்னாலயும் எழுத முடியலை. 2 மாசமாவே ரொம்பப் பிரச்னைகளுக்கு நடுவில் ஏதோ ஒப்பேத்திட்டிருக்கேன். இப்போக் கூடச் "சிதம்பர ரகசியம்" பத்தித் தான் எழுதணும்னு ஆரம்பிச்சேன். ஆனால் எங்கேயோ போயிடுச்சு. சனிக்கிழமை சிதம்பரம் போயிருந்தேன். அப்போ எங்க நண்பரான தீட்சிதர் அவரோட ஆராய்ச்சி பற்றியும், சிதம்பரம் பற்றியும் புதுத் தகவல்கள் கொடுத்தார். இன்னும் கடலூரில் ஸ்ரீநடேசன் அவர்கள் சில கோயில்கள் அழைத்துப் போனார். அது பற்றியும் எழுதணும். ஆனால் என்னமோ நேரமே கிடைக்கிறதில்லை. நேத்து எழுதி அதை நோட்பேடிலேயாவது போட்டு வச்சிருக்கணும், இதிலேயே சேமிப்போம்னு சேமித்தால் "சேமிப்பா அப்படின்னா?" னு கேட்குது ப்ளாகர். என்னத்தைச் சொல்றது? அப்புறம் நிறையப் பேர் என்னைப் பார்க்கவும் நேரம் கேட்டிருக்காங்க. ஹிஹிஹி, இதிலிருந்தே தெரியுது இல்லையா? நான் தலைவின்னு? (மனசாட்சி: ஆனால் பார்க்கிறவங்க ஏமாந்து தான் போவாங்க, அப்படி ஒண்ணும் பார்க்க ஒரு தலைவி மாதிரி இருக்க மாட்டாங்க, எல்லாம் உங்க பக்கத்து வீட்டு ஆண்டி மாதிரி தான் இருப்பாங்க) இது ஒண்ணு குறுக்கே, குறுக்கே நேரம் காலம் தெரியாமல் வரும். இந்தப் பக்கத்து வீட்டு ஆண்டின்னு சொன்னது கைப்புள்ள தான். அதனாலே பார்க்க வரவங்க உங்க பக்கத்து வீட்டு ஆண்டியை நினைவு வச்சுட்டு வந்துடுங்க. அப்புறம் வந்து ஏமாந்து போனால் (அம்பி என்னை மாடர்ன் கெட்-அப்பில் எதிர்பார்த்து ஏமாந்தாப்பல) நான் பொறுப்பு இல்லை. இந்த மாடர்ன் கெட்-அப் எல்லாம் எனக்கு ஒத்து வராது எந்த விதத்திலேயும், அதான் அந்தப் பக்கமே போகிறது இல்லை.

இப்போ கொஞ்சம் வெளியே போகணும். போயிட்டு அப்புறமா வந்து மிச்சம் எழுதறேன். பாதியிலே விடறதுக்குக் கஷ்டமாத் தான் இருக்கு. ஆனால் வந்திருக்கிறது ஒரு பெரிய ஆள். ஹிஹிஹி, என்னை விடப் பெரிய ஆள் யாருன்னு பார்க்கிறீங்களா? என்னோட மாமியார் வந்திருக்காங்களாம். நாங்க இங்கே இல்லாததால் என்னோட நாத்தனார் வீட்டிலே இருக்காங்க. போய்க் கூட்டிட்டு வரணும். வரேன் அப்புறமா, வர்ட்டா?

14 comments:

  1. //விஷயம் நிறைய இருந்தும் என்னாலயும் எழுத முடியலை. //

    yappa, intha mokkaiye thaanga mudiyalai. innumaaa? aprum oru payalum etti paaka maattan. :)

    //2 மாசமாவே ரொம்பப் பிரச்னைகளுக்கு நடுவில் ஏதோ ஒப்பேத்திட்டிருக்கேன்//

    2 monthsaa..? enna korachu solreenga?

    Veda buthishaali, vara maataal! nambaathe!(read in dharumi style) :)

    ReplyDelete
  2. //இதிலே கார்த்திக் மட்டும் கொஞ்சம் பிசி. அவர் இப்போ ரொம்பவே நிறைய இடத்தில் எழுத ஆரம்பிச்சிருக்கார். நல்லா எழுதட்டும். அந்தக் கிராமத்து மண் வாசனை நிஜமாவே எழுத்தில் வருது. அதான் பாராட்டும், புகழும் தேடி வந்திருக்கு. வாழ்த்துக்கள்//


    எல்லாம் உங்களை போன்ற பெரியவங்க ஆசிர்வாதம் தான் தலைவியே..

    அம்பி.. என்ன இது இங்க வர்ற.. G3 பக்கம் போற.. நம்ம பக்கம் மட்டும் வர்றதில்லை.. இது ஏதும் தங்கமணி போட்ட கண்டிஷனா

    ReplyDelete
  3. //விஷயம் நிறைய இருந்தும் என்னாலயும் எழுத முடியலை//

    மேடம், காமெடி கீமடி பண்ணலையே நீங்க

    ReplyDelete
  4. //வரேன் அப்புறமா, வர்ட்டா?
    //


    இது என்ன புது ஸ்டைல் மேடம்..

    ReplyDelete
  5. பதிவ காணோம்னு ஒரு பதிவா...மாமா சொல்றதுல தப்பே இல்ல... :-)

    ReplyDelete
  6. //ச்யாம் வழக்கம்போல் 4 வரி எழுதிட்டு நூத்துக்கணக்கில் பின்னூட்டம் வாங்கிட்டு இருக்கார். அது எப்படி? பெரிய "சிதம்பர ரகசியம்" மாதிரி இருக்கே? //

    அதான பார்த்தேன்...இது பத்தி சொல்லனா உங்களுக்கு தூக்கம் வரேதே...எல்லோருக்கும் ஆப்பு ஆப்புனு சொல்வீங்களே...இப்போ உங்களுக்கே ஆப்பு வைக்க ஒருத்தர் வந்துட்டாங்களா :-)

    ReplyDelete
  7. அப்புறம் நிறையப் பேர் என்னைப் பார்க்கவும் நேரம் கேட்டிருக்காங்க.

    @ அடப்பாவமே ஒருதரம் பார்த்த அம்பியே இன்னும் நிலைக்கு வரலே. இன்னும் நிறையப்பேரா ஆண்டவா காப்பாத்து.
    @ அம்பி என்னை மேடம் பதிவுக்கு பின்னுட்டமே போடக்கூடதுன்னு சொல்லிட்டு நீ முதல்லே வந்து நிக்கறயே இது சரியா? மேடம் அப்பறம் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க

    ReplyDelete
  8. வணக்கம் தலைவி,
    //நான் பின்னூட்டம் போட்டதைக் கூடப் பார்க்காமல் ஏன் வரலைன்னு கேட்டுட்டுப் போறார்//

    தலைவி எனக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் லேட்டாதான் வந்தது..நான் பார்க்கும்போது வரலையா.. அதுதான் வந்து கேட்டுவிட்டு போனேன்.

    நானும் நிறைய எழுதனும்தான் நினைக்கிறேன்..ஆனா என்ன ,எதை எழுதனும்தான் தெரியல..

    //விஷயம் நிறைய இருந்தும் என்னாலயும் எழுத முடியலை// தலைவி எவ்வழியோ தொண்டனும் அவ்வழிதான்

    நேத்துதான் உங்களது முதல் பதிவுகளை படித்தேன்.டோண்டு,பொன்ஸ் னு இப்ப பார்க்கதா ஆட்கள் நிறைய பேர் வந்து போயிருக்காங்க..

    ReplyDelete
  9. //பின்னூட்டத்துக்காக ப்ளாக் வச்சுட்டு இருக்காங்க//

    ஆமாம் நான் மட்டும்தான் அப்படின்னு நேனச்சேன், வேற யாரு மாமி?..

    ReplyDelete
  10. இப்படி அடிக்கடி எல்லோருக்கும் மிரட்டல் செய்கிற உங்களை மிரட்ட மாமியார் விஜயமா?அவங்ககிட்டேயும் மொக்கை நல்லா போடுவீங்களா?
    அம்பி உங்களை ரொம்ப ரொம்ப தங்கமான மாமி,பால்கோவா மாமின்னுதான் சொன்னார்.பக்கத்துவீட்டு ஆன்ட்டி போல நினைத்துக் கொள்ளனுமா?எல்லோரும் அப்படிதான் இருப்பாங்க.கண்டிப்பா"ஜெ" மாமி போல எல்லாம் இருப்பீங்கன்னு நினைக்கலை.போதுமா?--SKM

    ReplyDelete
  11. @அம்பி, பின்னே என்ன உங்களை மாதிரி ப்ளாக் எழுதிப் பொண்ணு பாருங்கன்னு எல்லார் கிட்டேயும் சொல்லிட்டா இருக்கேன்? :D
    க்ர்ர்ர்ர்ர்ர்ர், இதெல்லாம் மொக்கைன்னா "மொக்கை ஸ்பெஷலிஸ்ட்" ஆன நீங்க எழுதறதை என்ன சொல்றது? வேதா எல்லாம் என் கிட்டே சொல்லிட்டுத் தான் வரலை. எப்போ வருவா எப்படி வருவான்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.

    @கார்த்திக், இது என்ன அம்பிக்கு இங்கே விளம்பரமா? அதெல்லாம் வேண்டாம். அவர் தான் தங்கமணி கிட்டே உத்தரவு வாங்கிட்டுத் தான் பதில் போடுவார். இது தெரியாதா?

    ReplyDelete
  12. ஹிஹிஹி, ச்யாம், இந்த நூத்துக்கணக்கில் பின்னூட்டம் வாங்கிறதைப் பத்தி ஒரு புத்தகம் வெளியிடுங்களேன். :D செலவு அம்பியோடது. அதனாலே நல்லா லே-அவுட் எல்லாம் இருக்கட்டும்.

    @தி.ரா.ச. சார், ஹிஹிஹி, நான் என்ன இருந்தாலும் தலைவி இல்லையா? அதான் நேரம் கேட்டுட்டு வராங்க. அதுவும் நான் இப்போ ரொம்பவே பிசி, பி.எம். ஷெட்யூல் எல்லாம் ஒண்ணுமே இல்லை.
    க்ர்ர்ர்ர்ர்ர், இதென்ன அம்பி கிட்டே இருந்து இன்னுமா பெர்மிஷன் கேட்கிறீங்க? :D

    ReplyDelete
  13. மணிப்ரகாஷ், கட்-அவுட் இருக்கட்டும். இப்போ லேட்டஸ்ட் தமிழ்நாட்டில் விளம்பர போர்டு தான். அதனாலே அதை வைக்கவும் ஏற்பாடு செய்யுங்க. என்னத்தைச் சொல்றது? எதை முதலில் எழுதறதுன்னு புரியாம ஏதோ எழுதறேன். அவ்வளவு விஷயம் பெண்டிங்.

    @மதுரையம்பதி, அதெல்லாம் நிறையப் பேர் அப்படிச் சொல்லிட்டுத் தான் வந்துட்டிருந்தாங்க. இப்போ அவங்களை எல்லாம் காணோம். நீங்க எப்படி? :D

    எஸ்.கே.எம். அம்பி சொல்றது எல்லாமே பொய். நம்பாதீங்க.நான் சின்னப் பொண்ணுன்னு தெரிஞ்சதும் இஷ்டத்துக்கு அள்ளி விடறார். அம்பி மட்டுமா? வேதா, சூடான் புலி, இன்னும் முத்தமிழில் காழியூரார், பாசிட்டிவ் ராமா, நடேசன்ன்னு நிறையப் பேர் பார்த்தாங்க. அவங்க எல்லாம் ஒத்துக்கிட்டாலும் இந்த அம்பி மட்டும் ஒத்துக்கவே இல்லை பாருங்க, எல்லாம் பொறாமை தான் வேறென்ன? :D :D :D

    ReplyDelete
  14. /நேத்து ஒரு பதிவு எழுதி சேமிப்பில் போட்டேன். எந்தக் கணக்கிலே போச்சோ, காணவே காணோம், இந்த அழகிலே இந்த ராம் வந்து புது ப்ளாகுக்கு மாறுங்க, மாறுங்க அப்படின்னு தொந்திரவு செய்யறார்.அப்புறம் என்னோட ப்ளாகையே தேடிக் கண்டு பிடிக்கிறாப்பல ஆயிடும்.//

    என்னத்தை சொல்லுறது, சீக்கிரமே உங்க ப்ளாக்கும் ஜாங்கிரி சுத்தணுமின்னு ஆசைதான்!! வேறன்ன....


    //அப்புறம் என்னோட இலக்கியத் தொகுப்பு என்ன ஆகிறது?//

    அது எங்கே இருக்கு இந்த பிளாக்'லே???

    // ராமுக்கு இந்த ப்ளாக்கர் ஏதாவது சம்திங் கொடுத்திருப்பாங்களோ என்னமோ தெரியலை//

    அது மட்டும் ரகசியம் :)

    ReplyDelete