எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 22, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு

முத்தமிழ்க் குழுமம் கூகிளில் ஆரம்பிக்கப் பட்டு இந்த ஜனவரி 20 தேதியோடு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முத்தமிழ்க் குழுமம் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது. தமிழில் சிறந்த கதைகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ அனுப்பி வைப்பவர்களுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. 400 வார்த்தைகளுக்கு மேல் மிகைப் படாமல் எழுதப் படும் படைப்புக்கள் தமிழையும், தமிழ் நாட்டையும் சார்ந்ததாய் இருத்தல் நல்லது. போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். தமிழ் மணம் நண்பர்களும் அதைச் சாராத மற்ற நண்பர்களும் கலந்து கொள்ளலாம். ஆனால் தமிழில் தான் எழுத வேண்டும். படைப்புக்களை அனுப்ப வேண்டிய முகவரி; muththamiz@gmail.com.
அனுப்ப வேண்டிய கடைசித் தேதி 10-2-2007.

இதைத் தவிர முத்தமிழ்க் குழுமம் தமிழ் நாட்டில் சில கிராமங்களைச் சேர்ந்த பள்ளி நூலகங்களுக்கு, அல்லது பொது நூலகம் இல்லாத கிராமங்களில் பொது நூலகம் ஏற்படுத்தியோ புத்தகங்களாக வாங்கிக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. இதற்குப் புத்தகங்கள் சேர்க்க வேண்டிய பொறுப்பை "உமாநாத்" என்ற "விழியன்" ஏற்றிருக்கிறார். தங்களிடம் இருக்கும் தேவையில்லாத நல்ல புத்தகங்களோ அல்லது புத்தகங்கள் கொடுக்க முடியாதவர்கள் பணமாகவும் அனுப்பலாம்.

உமாநாத்தின் முகவரி:
SRI. S. UMANATH,
Blue Star Info-Tech., Limited,
7, 18th Main Road,
7th Block,
KORAMANGALA- BANGALORE-560095.
The cheques or D/D should be sent to Umanath to his CITIBANK A/C. No. 563700084, or contact him through phone in these numbers.
09886217301
09894110534 (TN Number).
நன்றி, வணக்கம்.

7 comments:

  1. இதற்குப் பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும் யாராவது ஓரிருவராவது படித்திருப்பார்கள் என நினைத்தேன். ஹிஹிஹி, நான் என்னமோ பெரிய ஆள்னு நினைச்சு மஞ்சூர் ராஜா அவர்கள் என்னை உங்கள் பதிவிலே போட்டு உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்னு கேட்டார். இப்போ நான் அ.வ.சி. :D

    ReplyDelete
  2. படித்தேன் மாமி.ஆனால் பின்னோட்டம் இடவில்லை.மன்னிக்கவும்.--SKM

    ReplyDelete
  3. அ.வ.சி என்றால் என்ன என்று அன்பு கூர்ந்து விடையளிக்க வேண்டுகிறேன் .:-)

    ReplyDelete
  4. ஹிஹிஹி, வல்லி, அ.வ.சி.ன்னா தெரியலையா? இப்போ நீங்க அ.வ.சி. நான் வி.வி.சி. அதாவது நீங்க அசடு வழியச் சிரிக்கிறதப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரிக்கிறேன். இப்போ புரியுதா?

    ReplyDelete
  5. பரவாயில்லை எஸ்.கே.எம். பொதுவாவே இப்போ சில பதிவாளர்கள் இல்லை என்பதாலும், சிலருக்கு வேலை அதிகம் என்பதாலும் பின்னூட்டம் குறைந்து தான் இருக்கிறது. இந்த ச்யாம் மட்டும் எப்படி நூற்றுக் கணக்கில் பின்னூட்டம் வாங்கறார்னே புரியலை. உண்மையிலேயே பொறாமையா இருக்கு! :D

    ReplyDelete
  6. கீதாம்மா, இப்போதான் படித்தேன்....உமாநாத்திடம் பேசுகிறேன்....இயன்றதை செய்கிறேன்.

    ReplyDelete
  7. திரு உமாநாத்துடன் பேசினேன்...தங்களது இந்த பதிவிற்க்கு நன்றி...

    ReplyDelete