எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 06, 2008

ஏதோ சொல்லி இருக்கேன் கோபிக்காக!

!கோபிநாத் "திருச்சிற்றம்பலம்" பற்றி எழுதச் சொல்லிக் கேட்டுப் பல நாட்கள் ஆகிறது. ஆனால் என்னால் எழுத முடியலை. பொதுவாகப் பொன்னம்பலத்தில் நடனம் ஆடும் அம்பலவாணனைக் குறிக்கும் அந்த சொல் ஏன் சொல்லப் படுகிறது என்பதும் அவர் கேள்வி. இறைவன் ஆடும் கூத்தன். அம்பலவாணன். அவன் ஆட்டம் இல்லையேல் இந்த உலகு இயங்காது, என்பது அடியார்களும், இறை அன்பர்களும் நம்புவது. அவன் ஆடுவதே இந்த அண்ட சரா சரங்களும் காணும் விதமாய், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாய், பெருவெளி எங்கும் பரந்தவனாய் எங்கும், எதிலும் நிறைந்திருப்பவனாய் ஆடுகின்றான். இந்த உலகு ஒரு பேரம்பலம். அதிலே நித்தியமும் அவன் ஆட்டம் இடைவிடாது நடை பெறுகின்றது. ஆனால் அதை நாம் கண்ணால் காண முடியவில்லை. என்றாலும் ஓடும் மேகங்களில், ஒளிரும் சூரியனில், சந்திரனில், நட்சத்திரங்களில், மலைகளில், ஆர்ப்பரித்து ஓடும் அருவிகளில், செடிகளில், கொடிகளில், மரங்களில், புயல் காற்றில், வீசும் தென்றலில், சுட்டெரிக்கும் வெயிலில், பெரு மழையில், என்று இவ்வுலகின் ஒவ்வொரு இயக்கத்திலும் இறைவனின் கூத்து இல்லையெனில் இவ்வுலகின் இயக்கமே இல்லை என்பதை உணருகிறோம்.

ஆனால் அத்தகைய ஒரு ஆட்டத்தை அவன் ஆடிக் காட்டிய இடம் முதலில் திரு உத்தர கோச மங்கை என்னும் ஊரில் உள்ள ஒரு அறையில் என்று சொல்லுவார்கள். உமை அம்மை மட்டுமே காணும்படியாக அறைக்குள்ளே ஆடிய அந்தக் கூத்தனின் ஆட்டம், பின்னர் பல ரிஷி முனிவர்கள், இந்திராதி தேவர்கள், மகா விஷ்ணு, பிரம்மா போன்ற பலரின் வேண்டுகோளுக்கும் இணங்க அம்பலத்தில் ஆடப் பட்டது. இவ்வுலகையே மேடை ஆக்கி ஆடிய அந்தக் கூத்து, ஆடப் பட்ட அந்த இடத்தில் இறை சக்தி அப்படியே உறைந்து போய்ப் பின்னர் இறைவன் அந்தக் கோலத்துடனேயே இருப்பேன் என அருள் பாலித்து, கோவில் எழும்பிஅ இடமே சிதம்பரம் என்னும் திருச்சிற்றம்பலம். பேரம்பலத்தில் ஆடிய இறைவன் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிறிய அம்பலத்தில் ஆடிய இடத்தில் ஒரு கோயிலும் எழும்பியது.

சிற்றம்பலத்தில் ஆடியவன் என்பதைக் குறிக்கும் வண்ணம் இறைவனைத் துதித்த அடியார்கள், அவனின் துதியாக "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லுவதை வழக்கமாய்க் கொண்டு இருக்க வேண்டும். பின்னர் மற்றச் சிவன் கோயில்களிலும் இறைவனின் ஆட்டத்தைக் குறிக்கும் வண்ணமும், எந்நேரமும் அவன் ஆட்டம் இருப்பதைக் குறிக்கும் வண்ணமும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லுவதை வழக்கம் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால் இந்தத் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லும் வழக்கம் திருவாரூரில் மட்டும் கிடையாது. அங்கே "ஆரூரா, தியாகேசா" என்று சொல்லுவதே வழக்கம். அம்பிகையின் ஸ்ரீசக்கரத்தை மார்பில் தாங்கிக் கொண்டு, தாளத்தை வெளியே சொல்லாமல் மறைவாக மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டு இறைவன் அங்கே ஆடும் ஆட்டம் "அஜபா நடனம்" ஆகும். ஆகவே அங்கே ஆடும் ஆட்டத்திற்கு ஏற்ப, ஆரூராரின் நாமம் ஆன தியாகேசரையே அங்கே வழிபடுவதும் வழக்கம். கமலாம்பிகையாக அம்பிகை அங்கே யோக சக்தி பீடத்தில் அமர்ந்து இருக்கிறாள்.

கோபி என்னை லிங்க் கொடுங்க என்றும் கேட்டிருந்தார். ஆனால் லிங்க் எல்லாம் போய்ப் பார்க்க முடியலை. :( எனக்கு இந்த நிமிஷம் மனதில் என்ன தோணியதோ அதை எழுதி இருக்கேன். லிங்க் பார்க்க முடிஞ்சதும் இன்னும் விவரமா எழுதறேன்.

12 comments:

 1. /ஓடும் மேகங்களில், ஒளிரும் சூரியனில், சந்திரனில், நட்சத்திரங்களில், மலைகளில், ஆர்ப்பரித்து ஓடும் அருவிகளில், செடிகளில், கொடிகளில், மரங்களில், புயல் காற்றில், வீசும் தென்றலில், சுட்டெரிக்கும் வெயிலில், பெரு மழையில்,//

  வாவ் வாவ்! ஒரே கவித்துவமா இருக்கு! (கவின்னா என்னன்னு தெரியுமில்ல?)

  ReplyDelete
 2. வாவ் வாவ்! ஒரே கவித்துவமா இருக்கு! (கவின்னா என்னன்னு தெரியுமில்ல?)

  06 March, 2008

  ஹிஹிஹிஹி, அக்கா எப்படியோ அப்படியே தானே தம்பியும்? :)))))))))

  ReplyDelete
 3. /ஓடும் மேகங்களில், ஒளிரும் சூரியனில், சந்திரனில், நட்சத்திரங்களில், மலைகளில், ஆர்ப்பரித்து ஓடும் அருவிகளில், செடிகளில், கொடிகளில், மரங்களில், புயல் காற்றில், வீசும் தென்றலில், சுட்டெரிக்கும் வெயிலில், பெரு மழையில்//

  இந்த வரிகள் தாகூரின் கீதாஞ்சலியில் இருந்து சுட்ட மாதிரி இருக்கே! :)))

  ReplyDelete
 4. சிவராத்திரியண்ணிக்கு திருச்சிற்றம்பலமா!

  திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்!

  தென்னாடுடைய சிவனே போற்றி!
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  ReplyDelete
 5. முதலில் தலைவிக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள் ;))

  \\இறை சக்தி அப்படியே உறைந்து போய்ப் பின்னர் இறைவன் அந்தக் கோலத்துடனேயே இருப்பேன் என அருள் பாலித்து, கோவில் எழும்பிஅ இடமே சிதம்பரம் என்னும் திருச்சிற்றம்பலம். \\


  \\சிற்றம்பலத்தில் ஆடியவன் என்பதைக் குறிக்கும் வண்ணம் இறைவனைத் துதித்த அடியார்கள், அவனின் துதியாக "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லுவதை வழக்கமாய்க் கொண்டு இருக்க வேண்டும்.\\

  ஒஒ...அப்படி என்றால் அவரின் ஆட்டத்தை பார்த்த அடியார்கள் அழைப்பது தான் திருச்சிற்றம்பலம் என்ற சொல்லா!!!

  நன்றி ;)

  ReplyDelete
 6. \\கோபி என்னை லிங்க் கொடுங்க என்றும் கேட்டிருந்தார். ஆனால் லிங்க் எல்லாம் போய்ப் பார்க்க முடியலை. :( எனக்கு இந்த நிமிஷம் மனதில் என்ன தோணியதோ அதை எழுதி இருக்கேன். லிங்க் பார்க்க முடிஞ்சதும் இன்னும் விவரமா எழுதறேன்.\\

  தலைவி மேலும் தகவல்கள் கிடைத்தால் கண்டிப்பாக பதிவுவிடுங்கள் ;))

  நான் லிங்க் கொடுங்க என்று சொன்னது இந்த பதிவில் லிங்க்கை...வேற எதுவும் இல்லை..;)

  ReplyDelete
 7. @அம்பி, உங்களை மாதிரி எல்லாருமேவா ஜி3 பண்ணுவாங்க? :P

  @G வாங்க, நல்வரவு,
  @சிபி, வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க, நன்றி.
  @கோபி, இதைப் பத்தி இன்னும் நிறையவே எழுதலாம், ஆனால் நேரமும், சூழ்நிலையும் ஒத்து வரவில்லை. அவசரப் பதிவு இது! ரொம்பவே மன்னிச்சுக்குங்க!

  ReplyDelete
 8. (வாயிலிருந்து கட்டை விரலை எடுத்துவிட்டு)
  G3 னா என்னங்க?

  ReplyDelete
 9. @திவா, தொ.கி. இது கூடத் தெரியலையே? ஜி3 னா காப்பி, பேஸ்ட், காப்பி, பேஸ்ட் என்றால் ஜி3., இது இந்த வலை உலகின் எழுதப் படாத ஆனால் "தனிபெரும் தலவி"யால் பரப்பப் பட்ட சட்டம்! உங்களுக்கு ஒரு தேர்வு வைக்கணும், என்னோட பழைய பதிவுகளில் இருந்து, சரியாப் படிக்கலைனு புரியுது! நறநறநறநற :P

  ReplyDelete
 10. காப்பி -இன்னும் அம்மா தரலை. பால்தான். பேஸ்ட்? இன்னும் பல்லே முளைக்கலை. அதனால தேவை இல்லை

  ReplyDelete
 11. திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலம்.

  எனக்கும் திவா குறித்ததைப் படிக்கும் போது ஆகா வரிசையாகக் கொட்டுகிறதே என்று தோன்றியது. :-)

  ReplyDelete