எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 18, 2008

மனதைக் குத்திய கவிதை!

கதவைத் தட்டும்
கணத்துக்கு முன்னிருந்து
சப்தங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது

யார் யாரோ அழுகிறார்கள்
யார் யாரோ சிரிக்கிறார்கள்!

வீட்டின் அழைப்பு மணியின்
பெரும் சத்ததையும் மீறி
விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்
வசை மொழி வார்த்தைகளினூடே!

சிறு தட்டல், பெருந்தட்டலாகி
பெருங்குரலெடுத்து அழைக்கையில்
வேண்டா வெறுப்பில்
கதவு திறக்கும் முகங்களில்
"ஏன் வந்தாய்!" என்பதற்கான நிழற்படம்!

இன்னாரென அறிமுகமாகி
புன்முறுவல் பூக்கையில்
"சீக்கிரம் சொல்லுங்க,
நாடகத்தைப் பாதியிலேயே
விட்டுட்டு வந்திருக்கேன்!"

வந்த வழி திரும்புகிறேன்
ஆறாத சினத்தோடு
சொற்களால் அறைந்த
முகத்தைத் தடவியபடி!

கவிதை "கன்னிக்கோவில் ராஜா" கல்கி பத்திரிகைக்கு எழுதியது.

நாம் அனைவருமே ஒரு நாளாவது இம்மாதிரியான உணர்வில் இருந்திருப்போம், அல்லது இனி இருப்போம், இது தேவையா?

7 comments:

  1. நான் கூட ஒரு நிமிஷம் நீங்க எழுதிய கவிதை தானோ?னு மலைத்து விட்டேன். :p

    இப்ப ரொம்ப படம் எல்லாம் போடறீங்க போலிருக்கு. :))

    ReplyDelete
  2. மனதில் ஒட்டிய கவிதை!

    ReplyDelete
  3. நானும் படித்தேன்.
    என்னையே அலசிக் கொண்டேன்.

    வேறு ஒன்றும் இல்லை. இந்த ஒரு மணி மதியத்தில் வந்து அழைப்பு மணி அடிப்பார்கள்.
    கண் சொக்கும் அந்த நேரம் என்னை
    கோபம் கொள்ள வைக்கும்.
    தப்போ???

    ReplyDelete
  4. \\\இது தேவையா?\\

    எல்லாமே தேவை தான்...

    அந்த கோவம்

    அந்த ஏமாந்த முகம்

    இப்படி ஒரு கவிதை

    இதை போட்ட தலைவி

    இதை படிக்கும் தொண்டர்கள்

    இப்படி எல்லாமே தேவை தான் ;))

    ReplyDelete
  5. தான் சீரியல் பார்க்கும்போது யாரும் தன்னை
    டிஸ்டர்ப் பண்ணக்கூடாது என்றும், வாசற்பக்கம்
    மணி அடித்தால் கதவைத் திறந்து வந்தவங்களை நானே டிஸ்போஸ்
    செய்யவேண்டும், என ஸ்டிரிக்ட் இன்ஸ்டிரக்ஷன்ஸ் கொடுத்து
    முன் அறையில் என்னை அமரச்செய்திருக்கிறாள்.
    என் மனைவி.. பெஸ்ட் சொல்யூஷன் இல்லையா ?
    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  6. @அம்பி, நான் படம் போடறது இருக்கட்டும், நீங்க கூடக் கண்ணபிரான் பதிவிலே ரொம்பவே சீன் காட்டி இருக்கீங்க போலிருக்கு??? :)))))))

    @திவா, நன்றி.

    @வல்லி, அப்படி எடுத்துக்காதீங்க, இது தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறவங்களுக்கு மட்டும் சொல்றது! :(

    @கோபிநாத், என்ன தேவையோ போங்க, ஒண்ணும் புரியலை எனக்கு, அப்படி என்னதான் இருக்கு சீரியலிலேனு புரியலை! :P

    @சூரி சார், வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, மழைனாலே வரலை போலிருக்கு! :))))))
    உங்க மனைவிக்கு இதை விட நீங்க செய்ய வேண்டிய உதவி வேறே என்ன சொல்லுங்க? :)))))))))

    ReplyDelete
  7. கீதா,

    நல்ல கவிதையை அறிமுகப்படுத்தியிருக்கீங்க

    ஆறாத சினத்தோடு- இந்த இரு சொற்களை எடுத்துவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete