எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 22, 2008

ராமனின் தலமைப் பண்பு!! தவறு யார் மேல்???

//ஒரே ஒரு குறிப்பு:
எளியோர்க்கு எளியோனான அனுமன் முன்பும் காலம் தவறவில்லை!

இத்தனை காலத்துக்குள் கொண்டு வந்து சிவலிங்கம் கொணர்விக்க வேண்டும் என்று இராமன் காலத்தைச் சொல்லி அனுமனை அனுப்பவில்லை! - dissemination of resource information
அது இராமன் என்னும் மேலாளரின் குறையே அன்றி, அனுமனின் குறை ஆகாது!
ஆனால் தாமதத்தை உணர்ந்து, தன்னால் தான் தாமதம் ஆனது என்பதையும் இராமன் உணர்ந்தான்!
அதான் சீதை பிடித்த சிவலிங்கம்! - Alternate Allocation!//

வழிபாடு நடத்தணும்னு முடிவாய் விட்டது. அது அனுமனுக்குத் தெரியும். அதிலும் எப்போது??? கடல் கடக்கவேண்டும், அதற்காகப் பாலம் கட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பாலத்தை நல்லபடியாய்க் கடந்து இலங்கை சென்று சீதையை மீட்கவேண்டும். எத்தனை முக்கியமான வேலை?? சீதை அங்கே எத்தகைய நிலையில் இருந்தாள்?? கிட்டத் தட்டத் தற்கொலை செய்துகொள்ளப் போனவள், அனுமன் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப் பட்டுக் காத்திருக்கின்றாள். அந்த நிலைமையில் தான் ராமர் அங்கே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்துவிட்டுப் போக விரும்புகின்றார்.

அப்போது நேரத்துக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?? அந்தச் சமயம் தாமதம் ஆகலாமா???

மேற்கண்ட விபரங்கள் துளசிராமாயணத்தில் காணப் படுவது. ஆனால் ஸ்காந்த புராணமோ வேறு மாதிரியாகச் சொல்லுகின்றது. ராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்த்துக் கொள்ளப் பிராயச்சித்தம் செய்ய நினைத்த ராமர், அதற்கான வழிமுறைகளை முனிவர்களிடம் கேட்டு அறிந்து, அதன் படி மஹேந்திரமலையில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க விரும்பி அனுமனைக் கொண்டுவரச் செய்கின்றார். தாமதம் ஆகவே முனிவர்கள் சீதையை விட்டு மணலால் லிங்கம் பிடிக்கச் செய்து பூஜையை முடிக்க வைக்கின்றனர். அனுமன் லிங்கம் கொண்டு வந்தும் அது ஏற்கப் படவில்லை. இங்கேயும் நேரத்தின் முக்கியத்துவமே கூறப் படுகின்றது.
ஏனெனில் உடனேயே அயோத்தி திரும்பவேண்டும் ராமர். பதினான்கு வருடம் முடியப் போகின்றது. தவற முடியாது. அப்புறம் பரதன் கதி அதோகதிதான். அதனாலேயே குறிப்பிட்ட நேரம் தவறாமல் வழிபாட்டை முடிக்கின்றார் ராமர். அதே சமயம் அனுமனைத் தான் தேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், நந்திகிராமத்தில் தவம் இருக்கும் தம்பி பரதன் ஒரு அவசரக் காரன், எதாவது செய்துகொள்ளாமல் தடுக்கவேண்டும் என்பதாலும், நீண்ட நாட்கள் கழித்துத் தான் வரும்போது, கொஞ்சம் தாமதம் ஆகிவிடும், வழியில் பலருடைய சந்திப்பு நேரும் என்பதாலும், பரதனுக்குச் செய்தி சொல்ல அனுமனை முன்னே அனுப்புகின்றான். ஏற்கெனவேயே செவ்வனே செய்து முடித்த பணி அல்லவா இது!!


மேற்கண்ட இரு கருத்துக்களுமே அதாவது ராமர் ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்தது பற்றிய குறிப்புகள் வால்மீகியில் இல்லை என்றாலும், பொதுவான நம்பிக்கையின் அடிப்படையிலேயே "மேலாண்மை" குறித்த பதிவு எழுதப் பட்டது. வழிபாட்டின் முக்கியத்துவத்தை அனுமன் அறியாதவர் அல்ல. இரு சமயங்களுமே எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அறியாதவர் இல்லை. எனினும் தாமதம் ஆகின்றது. வழிபாடு குறித்த நேரத்தில் முடிந்து விடுகின்றது. தன் தூதனும், அந்தரங்க மெய்க்காப்பாளனும் ஆன அனுமன் இல்லாமலா ராமன் வழிபாட்டைக் குறித்து ஆலோசித்திருப்பார். அதன் விபரங்களைக் கூறாமலா அனுமனை அனுப்புவார்?? ஆகவே குறித்த நேரம் தவறவேண்டாம் என வழிபாட்டையும் முடிக்கின்றார். அதே சமயம் அனுமன் கஷ்டப் பட்டு கொண்டு வந்த லிங்கம் பயனற்றுப் போய்விடவேண்டாம் எனவும் எண்ணுகின்றார். ஆகவே இன்று வரையிலும், இனிமேலும் அனுமன் கொண்டு வந்த லிங்கத்துக்கே முதல் மரியாதை ராமேஸ்வரம் கோயிலில். அந்த லிங்கத்தைத் தரிசித்துவிட்டே பக்தர்கள் உள்ளே செல்லவேண்டும். கோயிலிலும் முதலில் அனுமனின் லிங்கத்திற்கு வழிபாடு நடத்திவிட்டே உள்ளே மூலஸ்தானத்தில் வழிபாடு நடத்துவார்கள்.

இந்தப் பெருந்தன்மையினாலும், கருணையினாலுமே ராமன் ஒரு மாபெரும் தலைவன் ஆகின்றான். தொண்டர்கள் செய்த தவற்றைச் சுட்டுவதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்றும் நினைக்காமல் அவர்களின் உழைப்புக்குத் தகுந்த பலனையும் அளிக்கின்றான். ஆகவே ராமனின் தலைமைப் பண்பு பளிச்சிடுகின்றதே ஒழிய தாழவில்லை. இந்த இரண்டு கருத்துக்களுமே வால்மீகியில் இல்லை. இங்கே மகாதேவன் அருள் கிடைத்தது தனக்கு என்று ராமர் சீதையிடம் சேதுவைக் காட்டும்போது சொல்லுவதாய் மட்டுமே வருவதாய்த் தெரிகின்றது. தலைவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்று காட்டிய ராமன் கதாநாயகனாய் இருக்கும் ராமாயணத்தில் தேச ஒருமைப் பாடு பற்றி அடுத்துக் காணலாம்.

12 comments:

  1. //அப்போது நேரத்துக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?? அந்தச் சமயம் தாமதம் ஆகலாமா???//

    அனுமன் தாமதப்படுத்த வில்லையே! தாமதம் ஆகிறது! அவ்வளவே!

    பரதனைக் காக்க வேண்டும்-னு மேலோட்டமாக மட்டுமே அனுமனுக்குத் தெரியும்! ஆனால் இன்ன நேரத்துக்குள் போக வேண்டும் என்பது இராமனுக்கு அல்லவா தெரியும்? அதை அனுமனிடம் சொல்லி அனுப்பாதது தலைவன் குற்றமே அன்றித் தொண்டன் குற்றமில்லை!

    மீண்டும் சொல்கிறேன்!
    அனுமன் காலம் தவறவில்லை!
    அனுமன் வருவதற்கு காலம் ஆகியது!
    இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு!

    ReplyDelete
  2. பூசையை அப்புறம் வைத்துக் கொள்ளலாமே?
    சொந்த ஊருக்குப் போய் கூட வைத்துக் கொள்ளலாமே?

    தம்பி பரதன் உயிர் முக்கியமா இல்லை ராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்த்துக் கொள்ளப் பிராயச்சித்தம் முக்கியமா?

    ஹா ஹா ஹா
    நோ சப்பைக் கட்டுஸ் ப்ளீஸ்! :))

    ReplyDelete
  3. ஹ்ம், காப்பியத்தில், தவறு யார் மேல்னு பட்டிமன்றம்:)

    சிவாஜி (ரஜினிகாந்த் இல்லிங்க, ஒரிஜினல் மராட்டிய சூப்பர் ஸ்டார்) கிட்ட சாம்பாஜி இல்லாத அறிக்கையை வெண்தாளிலிருந்து படித்ததாகக் கதை உண்டு. மிக நம்பிக்கை உள்ளவர்களிடம் ப்ராஜக்ட் மானேஜ்மன்ட் தேவை இல்லை. At this level of comfort and seniority, such techniques are redundant.

    சீதை தான் மண்லிங்கம் பிடிக்கிறாள் (மேலாண்மை எங்க?:-), ஆசையா பிடிச்சாச்சே, இன்னும் அனுமன் வரலியேன்னு ராமர் தான் சரின்னு சொல்லிடறார்ன்னு படிச்சிருக்கேன்.

    ஏதோ என்னாலானது:-) நீங்க நடத்துங்க.

    ReplyDelete
  4. //அனுமன் வருவதற்கு காலம் ஆகியது!
    இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு!//

    காலம் ஆகி முடிக்கும் வரை அனுமன் ஏன் தாமதித்தாராம்???? :P:P:P:P:P காலத்துக்குள் அல்லது தலைவனின் தேவையை அறிந்து, அதற்கும் முன்னாலேயே செய்து முடிப்பவனே உண்மையான தொண்டன். தலைவனின் வேலையில் தாமதம் வராமல் தடுப்பவனே தொண்டன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பூஜையை அப்புறம் வச்சுக்கலாம் தான், ஆனால் அயோத்திக்கு அருகே சமுத்திரம் இருந்ததாய்த் தெரியவில்லை. மேலும் அயோத்தி போய்ப் பட்டாபிஷேகம் செய்து கொண்டதும் அரச கடமைதான் ராமனுக்கு முக்கியம் சொந்த விஷயம் இல்லை, இப்போ சும்மா இருக்கிறதாலே சொந்த விஷயத்தைக் கவனிச்சுட்டார். எல்லாம் நாம் ஆபீச்சுலே ப்ளாக் எழுதற மாதிரியா என்ன?? :))))))))))))))))))))))))

    ReplyDelete
  5. //சீதை தான் மண்லிங்கம் பிடிக்கிறாள் (மேலாண்மை எங்க?:-), ஆசையா பிடிச்சாச்சே, இன்னும் அனுமன் வரலியேன்னு ராமர் தான் சரின்னு சொல்லிடறார்ன்னு படிச்சிருக்கேன்//

    வாங்கம்மா, வாங்க, தலைவி பதவிக்குப் போட்டி போடறாங்களே, நல்லவேளை, நம்ம பக்கம் வரலைனு நினைச்சால், இப்படியா வந்து ஜிங்சக், ஜிங்சக் அடிக்கிறது??? நல்லாவே தாளம் போடுங்க, நடத்துங்க, நடத்துங்க வேறேயா இதிலே??? :P:P:P:P:P:P:P

    ராமர் கேட்டுக் கொண்டதால் தான் சீதை மணல் லிங்கம் பிடிக்கிறாள். நேரம் ஆயிடுச்சேன்னு, பர்த்தாவுக்கு ஏற்ற பத்னியாக. இன்னும் இதிலே என்ன சொல்லப் போறீங்க??? :)))))))))

    ReplyDelete
  6. //ஹா ஹா ஹா
    நோ சப்பைக் கட்டுஸ் ப்ளீஸ்! :))//

    அதெல்லாம் இப்போ கட்டிக்கிறதில்லை, நல்லாவே நடக்கிறேன்! :P

    ReplyDelete
  7. //காலத்துக்குள் அல்லது தலைவனின் தேவையை அறிந்து, அதற்கும் முன்னாலேயே செய்து முடிப்பவனே உண்மையான தொண்டன். தலைவனின் வேலையில் தாமதம் வராமல் தடுப்பவனே தொண்டன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    ஹா ஹா ஹா
    அனுமனுக்கே கர்ர்ர்ர்ர்ர் ஆஆ?

    //தலைவனின் தேவையை அறிந்து, அதற்கும் முன்னாலேயே செய்து முடிப்பவனே உண்மையான தொண்டன்//

    கிழிஞ்சுது போங்க!
    அப்போ, ஒருத்தனும் தேற மாட்டான்! பாவம் தலைவன்!

    தலைவனின் தேவையான சீதையைக் காட்டுக்கு அனுப்பலை முன்னாலேயே அறிந்து, அதைச் சொல்லும் முன்னரே செஞ்சி முடிச்சிருக்கணும்! ஆனா இலக்குவன் அப்படி எல்லாம் செஞ்சி முடிக்கலை! இலக்குவன் உண்மையான தொண்டன் இல்லை பாருங்க! :))

    ReplyDelete
  8. கடன் அறிந்து
    காலம் கருதி
    இடன் அறிந்து
    எண்ணி உரைப்பான் தலை!

    இப்படிச் செய்யறவன் தான் தலை! தல! தலீவரு! :)
    காலம் கருதி = காலத்தைச் சொல்லணும்!
    இந்த முகூர்தத்துக்குள் வா-ன்னு சொல்லி அனுப்பணும்!

    பிராஜக்ட் மேனேஜர் அப்படிச் சொல்லாம இருந்தா, deadline கொடுக்காம இருந்தா, நம்ம அம்பி என்ன பண்ணுவார்-ன்னு சும்மா கேளுங்க! அவர் உண்மையான தொண்டர்-ன்னு உங்களுக்குக் காட்டு காட்டுன்னு காட்டுவாரு :)

    ReplyDelete
  9. //பூஜையை அப்புறம் வச்சுக்கலாம் தான், ஆனால் அயோத்திக்கு அருகே சமுத்திரம் இருந்ததாய்த் தெரியவில்லை//

    அதான் கல்கத்தா பக்கம் கடல் இருக்கே!
    பிரம்மஹத்தி பரிகாரம் கடல் பக்கம் தான் செஞ்சிக்கணுமோ? ஆறு பக்கம் செஞ்சிக்கிட்டவங்க லிஸ்ட்டு எடுத்து விடவா? :))

    //இப்போ சும்மா இருக்கிறதாலே சொந்த விஷயத்தைக் கவனிச்சுட்டார்//

    ஓ...
    சண்டைய முடிச்சிட்டு சும்மா இருக்காரு! பரதன் உயிர் காக்க ரொம்ப டைம் இருக்கு!

    இல்லீன்ன்னா
    சண்டைக்கு முன்னாடி சும்மா இருக்காரு! சீதை உயிர் காக்க ரொம்ப டைம் இருக்கு!

    அனுமனுக்கு என்ன காரணத்தைக் காட்டி காலம் தவறியதாச் சொன்னீங்களோ
    அதையே இப்போ இராமனுக்கு ரொம்ப டைம் இருக்கு! சும்மா இருக்காரு-ன்னு சொல்றீங்கோ!
    சூப்பரோ! சூப்பர்!

    உங்கள் கருத்தை இப்பல்லாம் நீங்களே முறியடிச்சிக்கறீங்க!
    சூப்பரோ! சூப்பர்!
    :))))

    ReplyDelete
  10. //மிக நம்பிக்கை உள்ளவர்களிடம் ப்ராஜக்ட் மானேஜ்மன்ட் தேவை இல்லை. At this level of comfort and seniority, such techniques are redundant//

    சரியாச் சொன்னீங்கக்கா! கையைக் குடுங்க!

    இவிங்க ராமனின் தலைமைப் பண்பு-ன்னு காட்டுறத்துக்கு,
    தொண்டன் தவறு செஞ்சாலும் தலைவன் அவனைப் பெருமைப்படுத்துவான்-ன்னு சொல்லிப்பாங்களாம்!

    ஆனா தொண்டன் என்ன தவறு செஞ்சான்-ன்னு மட்டும் சொல்லவே மாட்டாங்களாம்! அடா அடா அடா!

    ReplyDelete
  11. மூல நூல் மற்றும் கம்பனில் இராமேஸ்வர வழிபாடு சொல்லப்படவில்லை!
    ஆனால் துளசி ராமாயணத்திலும், புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கு!
    அவற்றில் தேடிப் பாருங்களேன்!
    இராமன் அனுமனுக்கு நேரம் குறித்துக் கொடுத்து அனுப்பினாரா என்று தெரிந்து விடும்!

    வாலியைக் கொன்ற பின், சுக்ரீவனுக்கு இத்தனை நாளைக்குள் தேடும் படலம் ஆரம்பிக்க வேண்டும் என்று நேரம் குறித்ததைப் பாட்டில்/சுலோகத்தில் சொல்லி இருக்கிறார்களே!
    அதே போல் அனுமனுக்கும் சொல்லி அனுப்பி இருப்பான் அல்லவா இராமன்! தேடித் தாருங்களேன் பார்ப்போம்! :)

    //பொதுவான நம்பிக்கையின் அடிப்படையிலேயே "மேலாண்மை" குறித்த பதிவு எழுதப் பட்டது//

    ஹா ஹா ஹா! Confessions! :)

    ReplyDelete
  12. சரி...விஷயத்துக்கு வருகிறேன்!
    கீதாம்மா, அடியேன் வம்பு பண்ணவில்லை!

    இராமன் நல்ல தலைவன் தான்! அதைச் சான்று காட்ட பல நிகழ்வுகள் உள்ளன! அவற்றைத் தாருங்கள்! பாராட்டி மகிழ்கிறோம்!

    ஆனால் அனுமன் மேல் தவறு! அனுமன் காலம் தாழ்த்தினான்! இருந்தாலும் நல்ல தலைவனாய் இராமன் அதையெல்லாம் கண்டுக்கலை என்பது போல் பொத்தாம் பொதுவாகச் சொல்ல வேண்டாம் என்று தான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

    நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பதை நீங்களே இன்னொரு முறை வாசித்துக் கொள்ளுங்கள்!
    //ஒரு முறை காலத்தில் கடமையைச் செய்யவில்லை என்பதாலும்//

    //இது அனுமனுக்கு நேர்ந்த புறக்கணிப்பு என்றும் சொல்லலாம்//

    //அதே சமயம் அனுமன் தவறு செய்துவிட்டான் என்று அவனை வெறுத்தும் ஒதுக்கவில்லை//

    Dont take it literal என்று சொல்லி விடாதீர்கள்! :))
    சாஸ்திர விசாரத்தின் போது இது போன்ற பொத்தாம் பொதுக்கள் வேண்டாமே என்பது தான் அடியேன் விண்ணப்பம்!
    தில்லைப் பதிவுகளிலும் இதைத் தான் குறிப்பிட்டேன்!

    நகைச்சுவைக்குச் சொன்னது என்றால் அடிக்குறிப்பு இட்டு விடுங்கள்! அப்படிச் சொன்னது போலவும் தெரியவில்லை! மேலாண்மையைச் சான்று காட்டி விளக்குகிறீர்கள்!

    அடியேன் உங்களுடன் செய்யும் பட்டிமன்ற வாதாடல்கள் தவறு என்றால் சொல்லிவிடுங்கள்! (தனி மடலில் சொன்னாலும் ஓக்கே)
    உங்கள் கருத்தறிந்து இனி வாதாட மாட்டேன்! :)

    ஆனாலும் பின்னூட்டம் மட்டும் போடுவேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்! :)

    ReplyDelete