எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 25, 2008

அம்பி போயாச்சு, கேஆரெஸ் வந்தாச்சு! டும், டும், டும்!!

FRIDAY CAT AMBI IS BLOGGING

அம்பி போயாச்சு, கேஆரெஸ் வந்தாச்சு! டும், டும், டும்!!டும் டும் டும்!!!!!!!

அம்பிக்கும், எனக்கும் நடந்த, நடக்கிற, நடக்கப் போகும் பனிப்போர் வலை உலகு அறியும். ஆனால் இப்போ சமீப காலமா அம்பிக்கு டயாபர் மாத்தற அதிகப் படி வேலையினாலே, கொஞ்சம் குறைச்சுட்டு இருக்கார் போலிருக்கு. அதுக்காக என்னைச் சீண்டறதை விட முடியுமா?? அதுக்குச் சரியான ஆள் யாருனு அம்பி பார்த்திருக்கார். கேஆரெஸ் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சிருக்கார் போலிருக்கு.. கேஆரெஸ்ஸும், நாளொரு வம்பும், பொழுதொரு பின்னூட்டமாக அதைப் பரிமளிக்கச் செய்து வருகின்றார். சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாப் போல் கேஆரெஸ் அவர் பாட்டுக்கு ஏதோ ஆன்மீகம்னு பக்திக் கதைகளை ரொம்ப ஜனரஞ்சகமா எழுதிட்டு வந்தார். நான் பாட்டுக்கு எனக்குத் தெரிஞ்சதை எழுதிட்டு இருந்தேன். வந்தது வம்பு! யாரால் , எப்போது, எங்கே ஆரம்பிச்சதுனு சொல்ல முடியலை. இந்தக் கோயில்கள் சிலவற்றிலே அகண்ட ராம நாம பஜனை பண்ணுவாங்க, தெரியும் இல்லை, விடாமல் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பஜனை பண்ணிட்டே இருக்கணும், அது மாதிரி, அம்பி இறங்கியதும், இப்போ கேஆரெஸ் முறை! :P :P :P :P

அம்பி ஆரம்பிச்சு வைக்க, மதுரையம்பதி துணைப்பாட்டுப் பாட, குமரன் எடுத்துக் கொடுக்க, திராச அவர்கள் கம்போஸ் பண்ண, திவா தனி ஆவர்த்தனம் வாசிக்க, (சும்மாச் சொல்லக் கூடாது, நல்லாவே வாசிக்கிறார், தெரிஞ்சுக்க இந்த இடங்களுக்குப் போய்ப் பாருங்க! :P:P:P:P) அதிலேயும், மெளலிக்குப் பரிஞ்சு குமரனோட இந்தப் பதிவிலே மெளலிக்காக ரொம்பவே உருகி இங்கே பின்னூட்டத்திலே இருக்கிறதும், ப்ரூட்டஸாக மாறி துலா மஹாத்மியம் வேணுமான்னு மெளலியைக் கேட்டு, அவரோட நவ கைலாயம் பதிவிலே பின்னூட்டம்போட்டிருக்கிறதும்,ஆஹா, இந்த மாதிரித் தனி ஆவர்த்தனம் யாராலேயும் முடியாது போங்க! :P:P:P ஆகவே பதிவுலக மக்களே, கேஆரெஸ்ஸின் கச்சேரி சமீப காலமாய்க் களை கட்டி இருக்கிறது. முக்கிய ஆடியன்ஸில் ஜிங்சக்கா அடிக்க கெக்கெபிக்குணியும், துர்காவும் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கின்றனர். (மை ஃப்ரண்டு, நீங்க ஃப்ரண்டா, எனிமியா?? புரியலையே, மலேசிய மாரியாத்தா?, இந்த துர்கா பண்ணற அடத்தை என்னனு கேட்கக் கூடாது?????), அதிலேயும் இந்த துர்கா போன்ற ஒரு பாசமலரை, பாசக்கிளியை, தேடிப் பிடிச்சாலும் கண்டு பிடிக்க முடியாது. அம்பி அண்ணா, கடைசியிலே பாசமலர் சாவித்திரியை விட ஒரு மேலான தங்கையைக் கண்டு பிடிச்சாச்சு, அவங்க வேறே ஏதோ ஒரு படம் சொன்னாங்களே, என்னமோ கொட்டாங்கச்சினு?? ம்ம்ம்ம்ம்?? என்னமோ தங்கச்சி, கொட்டாங்கச்சினு விஜய டி.ராஜேந்தர் ஸ்டைலிலே பேத்திட்டு இருந்தாங்க. சிரிப்புத் தாங்கலை எனக்கு! :P :P மேற்கொண்டு ஆடியன்ஸாக ஆர்வமுடன் வந்த கவிநயாவும், ராகவும் கையைப் பிசையோ, பிசை என்று பிசைந்ததில், அவங்க கையில் சப்பாத்திக்கு மாவு பிசையக் கொடுக்க முடிவு எடுக்கப் பட்டது. ஆக மொத்தம் ஒரு ஸ்பெஷல் கச்சேரி களை கட்டுகிறது. அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கின்றோம்! இதிலே சஸ்பென்ஸ் அடுத்தது யாரு????????? இது தான் இப்போ என்னோட நிலைமை!!! :P:P:P:P:P அகண்ட நாம பஜனை முழு வேகத்துடன் தொடர்கின்றது. ஆவலுடன் எதிர்பாருங்கள்!

26 comments:

 1. இதென்ன அநியாயம்? கேஆரெஸ்க்கு நான் ஜிங்சக் அடிக்கிறேனா? ப்ராஜக்ட் மானேஜ்மன்டுனு அவர் ஊதினதை அவருக்கு(ம்;-) ஊதினேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  சரி, அங்க பின்னூட்டத்தில தலைவின்னீங்க. இங்க இப்படி வம்புக்கு இழுக்கறீங்க.

  நான் வம்பு சண்டைக்குப் போக மாட்டேன். வந்த சண்டையை விடமாட்டேன்.
  இப்படிக்கு, வேலியோரத்தில் கிடந்தது:-P

  ReplyDelete
 2. கீதாம்மா, கீதாம்மா, சிவசிவ கீதாம்மா, கீதாம்மா!
  தரமான பதிவுடன் பதிவுகளில் பெயர்பெற்ற கீதாம்மா!

  இட்லி உண்ட வாயாஆஆஆல் ரொட்டி உண்ட நீங்கள்
  பொட்டி தட்டும் எங்கள் வம்புக்கு மருந்தாக வேணும்!

  என்ன செய்ய நாங்கள் தோல் பாவைகள் தாம்
  உங்கள் கைகள் தாளம் போட வைக்கும் எங்கள் பஜனைதான்!

  சாம்ப சிவ சிவ கீதம் பாடு சாம்ப சிவ சிவ கீதம் பாடு!
  கீதா அம்மா கீதா பாட்டி! சாம்ப சிவ சிவ கீதம் பாடு! (கீதாம்மா, கீதாம்மா)

  ReplyDelete
 3. கொஞ்சம் மாற்றி:
  கீதாம்மா, கீதாம்மா, சிவசிவ கீதாம்மா, கீதாம்மா!
  தரமான பதிவுடன் பதிவுகளில் பெயர்பெற்ற கீதாம்மா!
  (இந்த ஓபனிங் இல்லைன்னா, பாட்டியம்மா பின்னூட்டத்தப் புறக்கணிச்சு, கம்ப்யூட்டருக்குள்ள பூனை தூங்கியது, மவுஸ் என் கையைக் கடிச்சதுன்னு சொல்லிடுவாங்க. ஒரே வார்த்தை: ஐஸ்).

  இட்லி அரைக்கும் அம்பியின் பாட்டியான நீங்கள்
  பொட்டி தட்டும் எங்கள் வம்புக்கு மருந்தாக வேணும்!
  (இதென்ன, அம்பி இல்லாம பஜனையா?)

  என்ன செய்ய நாங்கள் தோல் பாவைகள் தாம்
  உங்கள் கைகள் தாளம் போட வைக்கும் எங்கள் பஜனைதான்!

  சாம்ப சிவ சிவ கீதம் பாடு சாம்ப சிவ சிவ கீதம் பாடு!
  கீதா அம்மா கீதா பாட்டி! சாம்ப சிவ சிவ கீதம் பாடு! (கீதாம்மா, கீதாம்மா)

  என்ன பாட்டு மெட்டுலன்னு சொல்லவே வேண்டாம்!

  ReplyDelete
 4. இந்த ஜிங்சக் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

  ReplyDelete
 5. இந்த ஜிங்சக் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

  ReplyDelete
 6. கீதாம்மா.. கிளப்பிட்டீகளே, நான் நம்பியார் ஸ்டைல்ல கையப் பிசைஞ்சா.. நீங்க பாட்டுக்க மாவு பிசைய சொல்லிட்டீங்களே.. ஏதோ பெரியவங்களா பாத்து சொன்னா சரிதான்..

  ReplyDelete
 7. அம்பி, கேஆரெஸ், துர்கா, மைஃப்ரண்டு எல்லாரும் ரெடின்னா, நாம ஒரு பஜனை பாட்டு ரெகார்டு பண்ணிடலாம்.

  காலிங் எவரிஒன்! அறைகூவல் (நான் பாடினா அறைகேவலாத் தான் இருக்கும்;-)!

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. ennamo cholla vareenga-nu mattum puriyuthu!
  aana, as usual, unga pathivu pola, onnume puriya maatenguthu! :))

  etho enga geethamma nalla iruntha cheri! athukkaaga naanga enna venumnaalum cheivom :)

  ReplyDelete
 10. கச்சேரி நல்லாவே களை கட்டுது. ம்ம்ம்ம் நடக்கட்டும்! வம்பு இல்லாட்டாதான் உங்களுக்கு தூக்கமே வராதே! நேத்து நல்லா தூங்கி இருப்பீங்க!
  அப்புறம் அருமையான படம். எப்படித்தான் இதையெல்லாம் பிடிக்கிறீங்களோ!
  :P

  ReplyDelete
 11. ஆணி/வேலை அதிகம்...ஆகவே உள்ளேனம்மா மட்டும் போட்டுட்டு எஸ்கேப் ஆகிக்கறேன்.

  ReplyDelete
 12. urgent. visit my blog

  http://nagaindian.blogspot.com/2008/08/blog-post.html

  ReplyDelete
 13. i am Present geetha paatti,

  alot of Aanis. :(

  //இட்லி அரைக்கும் அம்பியின் பாட்டியான நீங்கள்
  //

  Superrrr yekkaaa :)))

  ReplyDelete
 14. //ennamo cholla vareenga-nu mattum puriyuthu!
  aana, as usual, unga pathivu pola, onnume puriya maatenguthu! :))//
  அட குமரன் நீங்க பெண்கள் மனசை தெரிஞ்சுக்ககூட முடியும்ன்னு நினைக்கிரீங்களா? அடப்பாவமே! ஹும்!

  ReplyDelete
 15. என் பின்னூட்டத்தை யாரும் personl-ஆ எடுத்துக்கிட்டு மனம் புண்படுவாங்களோன்னு அழிச்சிட்டேன்.

  ReplyDelete
 16. தலைவி என்ன மொக்கை இது....ஒன்னும் புரியல!! ;(

  \\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  ennamo cholla vareenga-nu mattum puriyuthu!
  aana, as usual, unga pathivu pola, onnume puriya maatenguthu! :))

  etho enga geethamma nalla iruntha cheri! athukkaaga naanga enna venumnaalum cheivom :)

  26 August, 2008
  \\

  வேற வழி ரீப்பிட்டே ;)))

  ReplyDelete
 17. சரி
  கெபி அக்கா ஆசியோட களத்துல எறங்கியாச்சி!

  ReplyDelete
 18. இப்படி எல்லாம் என்னை இன்சல்ட் பண்ணக் கூடாது கீதாம்மா!
  அம்பி உங்க கிட்ட கேட்ட கேள்வி எல்லாம் ஜல்லீஸ்/கும்மீஸ்!
  நான் உங்க கிட்ட கேள்வி எல்லாம் அப்படியா? அத்தனையும் தரவு! தரவு! :)))

  பதில் சொல்ல முடியாம மாட்டிக்கிட்டு, நீங்களே திணறலை? :)

  -Tom Reincarnate!

  ReplyDelete
 19. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  இட்லி உண்ட வாயாஆஆஆல் ரொட்டி உண்ட நீங்கள்//

  ஓ...யக்கா! கையைக் கொடுங்க!
  இதுல தான் எம்புட்டு உகு?
  இட்லி=தமிழ்நாட்டு உணவு
  ரொட்டி=வடநாட்டு உணவு
  அப்போ கீதாம்மா ரொட்டி உண்கிறார்களா? என்ன கொடுமை அம்பி! :)

  //பொட்டி தட்டும் எங்கள் வம்புக்கு மருந்தாக வேணும்!//

  மருந்து வேணாம்!
  விருந்து-ன்னு சேஞ்ச் சேஸ்கோண்டி!
  பாக சுந்தரங்கா உந்தி!

  //என்ன செய்ய நாங்கள் தோல் பாவைகள் தாம்
  உங்கள் கைகள் தாளம் போட வைக்கும் எங்கள் பஜனைதான்!//

  சூப்பர்ர்ர்ர்ர்ர்ர் பஜனை!

  ReplyDelete
 20. //இட்லி அரைக்கும் அம்பியின் பாட்டியான நீங்கள்//

  இப்பல்லாம் அம்பி இட்லி மாவு அரைப்பதில்லை!
  டயாப்பர் ட்ரான்ஸ்பர் ஆஃப் டெக்னாலஜி! :)

  ReplyDelete
 21. கெபி அக்கா
  ஹரஹர மகாதேவா இல்லாம அகண்ட பஜனையா?
  கோவிந்த நாம சங்கீர்த்தனம் இல்லாம கோபால பஜனையா?
  கிர்ர்ர்ர்ர்ர் இல்லாம கீதம்ம பஜனையா?

  கீதாம்மா, கீதாம்மா, சிவசிவ கீதாம்மா, கீதாம்மா!
  தரமான பதிவுடன் பதிவுகளில் பெயர் பெற்றவரே கீதாம்மா!

  கிர்கிர்கிர் கீதாம்மா! கிர் அஷ்டோத்திர கீதாம்மா!
  கிர்கிர்கிர் கீதாம்மா! கிர்ர்ர்ர்ர் அருள்வாயே கீதாம்மா!

  :)))

  ReplyDelete
 22. //கேஆரெஸ் அவர் பாட்டுக்கு ஏதோ ஆன்மீகம்னு பக்திக் கதைகளை ரொம்ப ஜனரஞ்சகமா எழுதிட்டு வந்தார்//

  யப்பா!
  பலப்பல உள் குத்துகள்!

  //ஏதோ ஆன்மீகம்னு//
  //ஊதிக் கெடுத்தாப் போல்//
  //கேஆரெஸ்ஸின் கச்சேரி சமீப காலமாய்க் "களை" கட்டி இருக்கிறது//

  ஒரு கிர்ர்ர்ர் கீதாம்மா, குத்து கீதாம்மாவாக அவதாரம் எடுக்கப் போகிறார்கள்!
  எல்லாரும் சூடம் கொளுத்த ரெடியா இருங்க! :))

  ReplyDelete
 23. //அது மாதிரி, அம்பி இறங்கியதும், இப்போ கேஆரெஸ் முறை! :P :P :P :P
  //

  //இதிலே சஸ்பென்ஸ் அடுத்தது யாரு????????? //

  பஜே மெளலீசம்!
  பஜேதி வாசுதேவம்!
  பஜே மெளலீசம்!
  பஜே மெளலீசம்!

  ReplyDelete
 24. //அதிலேயும் இந்த துர்கா போன்ற ஒரு பாசமலரை, பாசக்கிளியை, தேடிப் பிடிச்சாலும் கண்டு பிடிக்க முடியாது.
  என்னமோ தங்கச்சி, கொட்டாங்கச்சினு பேத்திட்டு இருந்தாங்க//

  அன்புத் தங்கை துர்காவைத் திட்டிப் பேசிய கீதாம்மாவுக்குக் கடும் கண்டனங்கள்!
  கீதாம்மாவை எதிர்த்து அம்பத்தூர் மாநகராட்சியில்
  இட்லி உண்ணும் விரதப் போராட்டம் நடைபெறும்!

  ReplyDelete
 25. அதான் "ராமாயணம் முடிஞ்சு போச்சு; தைரியமா மொக்கை படிக்க வாங்க!" பதிவு போட்டாச்சே! நண்பர்களும் வந்து சேந்தாச்சு. அடுத்த பதிவை போடறதுதானே?
  {@குமரன்: என்ன சொல்ல வந்தாங்கன்னு இப்ப புரியுதா?}

  ReplyDelete