எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 31, 2008

கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்!

இன்னும் இரண்டு நாட்களிலே நம்ம நண்பரின் பிறந்த நாள் வருது. இந்த வருஷமும் அவரோட பிறந்த நாளை பதிவுகள் மூலம் கோலாகலமாய்க் கொண்டாட எண்ணம். அதுவும் ராமாயணம் முழுதும் எழுதி முடிக்க உறுதுணையாக இருந்திருக்காரே! சின்ன வயசிலே முதன்முதல் கற்றுக் கொண்ட ஸ்லோகமே அவருடைய "கஜானனம் பூதகணாதி சேவிதம்" தான். அப்புறமாய்ப் பள்ளி செல்ல ஆரம்பித்ததுமே முதன் முதல் கற்றுக் கொண்ட பாரதி பாட்டும் "கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்" பாட்டு தான். பிள்ளையாரைப் போன்ற உற்ற சிநேகிதரும், கடவுளும் இல்லை என்னைப் பொறுத்தவரை. (கேஆரெஸ், நோட் திஸ் பாயிண்டு!!!) அவரோட சண்டை போட்டிருக்கேன், திட்டி இருக்கேன். பேசமாட்டேன் என்று சொல்லி இருக்கேன், சொல்லுகின்றேன். ஆனாலும் அவர் கோவிக்கிறதே இல்லை. என்ன சொன்னாலும் பேசாமல் இருக்கார். ஆனால் இந்த மூஞ்சுறைத் தான் அனுப்பி வைச்சுடறார் வீட்டிலே குட்டி போட. என்ன செய்யறதுனு புரியலை!

அவ்வளவு பெரிய சாமிக்கு இவ்வளவு சின்ன வாகனமா என்ற கேள்வி எனக்கும் வந்திருக்கு. ஆனால் ஒரு எலி போன்ற சாதாரணப் பிராணியைத் தன் வாகனமாய் வைத்துக் கொண்டது அவரோட எளிமையையே காட்டுகின்றதுனு அப்புறமா தோன்றியது. எலி பொதுவாய் எல்லாரும் விரட்டும் ஒரு பிராணி. பொறி வைத்துப் பிடிப்போம். அதைத் தன் வாகனமாய் வைத்துக் கொண்டதில் இருந்து எவ்வளவு சிறிய மனிதராய் இருந்தாலும் அவர்களிடமும் ஏதாவது ஒரு முக்கியத்துவம் இருக்குனு புரிய வைக்கிறார் போலிருக்கு. காலால் ஒரு நசுக்கு நசுக்கினால் உயிர் போயிடும் அந்த எலிக்கு. ஆனால் அதை இத்தனை பெரிய தொப்பை உள்ள பிள்ளையார் வாகனமாய்க் கொண்டிருக்கின்றார் என்றால் தன் உடம்பையும் அதற்கேற்றவாறு மிக மிக கனமில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்றும் தோன்றுகின்றது.

உட்கார்ந்திருக்கும் இடமோ அநேகமாய் ஏதாவது ஆற்றங்கரையிலோ, அல்லது குளத்தங்கரையிலோ, அரசமரத்தடி போதும். வேறே சுக, செளக்கியங்கள் வேண்டாம். அரசமரத்தின் சலசல, சப்தம் கேட்டால் தான் புரியும் எத்தனை இனிமை என்று. மேலும் மரத்தில் வந்து கூடு கட்டும் பலவிதமான பட்சிகள், அவற்றின் இனிய கானங்கள் சற்று நேரம் உட்கார்ந்து பார்த்தால் புரியும் பட்சிகள் ஒன்றுக்கொன்று நடத்திக் கொள்ளும் பேச்சு வார்த்தை. சாதாரணமாய் நம் நாட்டில் அரசமரத்தை வெட்டுவதில்லை. ஏனெனில் அவை மும்மூர்த்திகளின் சொரூபமாய்ப் பார்க்கப் படுகின்றது. விருட்சங்களுக்கெல்லாம் அரசன் என்பதால் அரசமரம் என்ற பெயர் பின்னால் வந்தது. ஆனால் அதற்கு முன்னால் அந்த மரத்திற்கு வேறு பெயர். ம்ம்ம்ம்????? அதுக்கும் ஒரு கதை உண்டு. மறந்துடுச்சு, நினைவு வரும்போது எழுதறேன். இந்த அரசமரம் மூலத்தில் அதாவது வேர்பாகம் பிரம்மா, என்றும் மத்திய பாகம் விஷ்ணு என்றும், மேல்பாகம், அதாவது தலைப்பாகம் ஈசன் என்றும் சொல்லுவதுண்டு. நீர், நிலைகளில் நீராடிக் குளித்துவிட்டு, இந்த மாதிரி கரையில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்குவது மிக மிக உடலுக்கும், மனதுக்கும் நல்லது. அரசமரக் காற்று உடலுக்கு நன்மை செய்யும்.

நீர் தான் உலகில் முதலில் தோன்றியதாய்ச் சொல்லுவார்கள். பின்னர் தோன்றியது மண் எனப்படும் பூமி. பிள்ளையாரைக் களிமண்ணால் பிடிக்கின்றோம். மண்ணில் இருந்து தோன்றியவர் பிள்ளையார். முதலில் தோன்றியவர் என்பதற்காகவும், மண்ணில் இருந்து தோன்றியவர் என்பதாலும் மண்ணில் செய்த பிள்ளையார்களை நீரில் கரைக்கின்றோம். நீரில் அனைத்து தேவதைகளும் குடி இருப்பதாய்ச் சொல்லுகின்றோம். ஆகவே நீரில் கரைப்பதுதான் முறையானது என்பதாலேயே மண்ணும், நீரும் சேர்த்துச் செய்த கலவையான பிள்ளையாரை நீரில் கரைக்கின்றோம். ஆனால் இன்றைய நாட்களில் இது மிக மிக அருவருப்பான ஒரு விஷயமாய்ப் போய் விட்டது.

பிள்ளையார் இன்னும் வருவார்.

14 comments:

 1. நல்வரவு பிள்ளையாரே.....நல்ல புத்தி கொடுங்க!
  :-))

  ReplyDelete
 2. பிள்ளையாரே, திவா கேட்கிறதை அவருக்குக் கொடுத்துடுங்க ப்ளீஸ்!!!!! :P :P :P

  ReplyDelete
 3. பிள்ளையார் பிள்ளையார்
  பெருமை வாய்ந்த பிள்ளையார்.

  நன்றி கீதாம்மா :)

  ReplyDelete
 4. நன்றி கவிநயா, ரொம்ப நன்றி. :)))))))

  ReplyDelete
 5. பிள்ளையாருக்கு நல் வரவு. நன்றி கீதா. அப்புறம் ஒரு மண் பிள்ளையார் படம் கிடைக்குமான்னு பார்த்துப் பேரனை கைகூப்பச் சொல்லணும்.

  ReplyDelete
 6. நண்பருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. ஆக, வினாயகர் புராணம் ஆரம்பமா?.

  :-)

  ReplyDelete
 8. தலைவியின் நண்பருக்கு ஒரு வணக்கம் ;))

  \\காலால் ஒரு நசுக்கு நசுக்கினால் உயிர் போயிடும் அந்த எலிக்கு.\\

  ஏன் இந்த கொலைவெறி ;))

  ReplyDelete
 9. //அதுக்கும் ஒரு கதை உண்டு. மறந்துடுச்சு, நினைவு வரும்போது எழுதறேன்.//

  உங்களுக்கேவா? அதிசயம் தான். :D

  //நல்ல புத்தி கொடுங்க!
  //

  //திவா கேட்கிறதை அவருக்குக் கொடுத்துடுங்க ப்ளீஸ்!!//

  அவர் கேட்டதே உங்களுக்கு தான், அதனால் கண்டிப்பா குடுப்பார், கவலைபடாதீங்க. :p

  ReplyDelete
 10. Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

  Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

  ReplyDelete
 11. //திவா கேட்கிறதை அவருக்குக் கொடுத்துடுங்க ப்ளீஸ்!!//

  அவர் கேட்டதே உங்களுக்கு தான், அதனால் கண்டிப்பா குடுப்பார், கவலைபடாதீங்க. :p

  01 September, 2008//

  ஹிஹிஹி, அம்பி, இதை, இதை, இதை, இதைத் தான் எதிர்பார்த்தேன் உங்க கிட்டே, ஆனால் திவா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப நல்லவர், எப்படி வாக்குமூலம் கொடுத்திருக்கார் பாருங்க கீழே!  நல்வரவு பிள்ளையாரே.....நல்ல புத்தி கொடுங்க!
  > :-))
  >
  > பிள்ளையாரே, திவா கேட்கிறதை அவருக்குக் கொடுத்துடுங்க ப்ளீஸ்!!!!! :P :P :P
  >


  பரிந்துரைக்கு நன்னி!

  ஹிஹிஹி, மூக்கிலே ஏதோ உடைபட்ட சத்தம் கேட்கலை?? அம்பி, பார்த்து, ஜாக்கிரதை, ஜூனியர் உதை வேறே இருக்கு பாக்கி, இப்போவே உடைஞ்சுட்டா?????? :P:P:P:P

  ReplyDelete
 12. @வல்லி, பிள்ளையார் படம் நிறையக் கிடைக்குதே?? அது ஏன் மண் பிள்ளையார் படம்?? பிள்ளையார் சதுர்த்தி பூஜையின்போது எடுத்ததா???

  @ஜீவா, நன்றி/
  @மெளலி, ஏற்கெனவே வேறே சைட்டிலே விநாயக புராணம் எழுதியாச்சு, இங்கே அது இல்லை!

  @கோபிநாத், வீட்டுக்கு வருவீங்க இல்லை??? அப்போ ஒரு டஜன் கொடுக்கிறேன் எலியை, இல்லைனா மூஞ்சுறை, அப்புறமாச் சொல்லுங்க! :P :P

  @டெச்பன் அல்லது டெச்பென், தமிழிலேயே எழுதி இருக்கலாமே??? :(((((((

  ReplyDelete
 13. கணபதி என்றி கலங்கிடும் வல்வினை!

  கீதாம்மா ஆரம்பமே சூப்பர்!

  எலி மைபிரண்டுன்னு சொல்ற கணேசரோட பிரண்டா நீங்க, நானும் அப்படியே!

  சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க!

  அடடா! ரெண்டு நாள் லீவே சரி அப்பறம் படிச்சுக்கிறேன்.

  (மீனாட்சி அம்மன் கோவில்ல 997 விதங்கள்ள பிள்ளையார் இருக்கார் - கல்யாண சுந்தரர் சன்னிதியுள்ள பிள்ளையாரை சேர்த்து! எல்லாம் வித்யாசமா இருக்கும்!)

  வெள்ளிகவசம் சாற்ற பெற்ற முக்கூறனி விநாயகர் படம் அனுப்புகிறேன் அடுத்த பதிவில் (தயவு செய்து) இடவும்.

  ReplyDelete
 14. @சிவமுருகன், சீக்கிரம் அனுப்பி வைங்க, முக்குறுணி அரிசி போட்டுக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்துவிட்டுப் பின்னர் பக்தர்கள் விநியோகம் நடக்கும் அந்த நாளை நினைவில் ஏற்படுத்தி விட்டீர்கள். இப்போ மீனாட்சி கோயிலினுள் நுழையவே முடியலை!! நம்ம ஊரில் இருக்கிறப்போல் இல்லை, வேறே எங்கேயோ தெரியாத அந்நிய ஊருக்கு வந்துட்டாப்போல் ஒரு எண்ணம்! :(((((((((

  ReplyDelete