![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5iVqIlUpAI4mIn1qqzbwfMbR2xmZPRPrmzObcwibZxFuqHuG7GCYw5HQGOMDsmWVnGuOuLGfHlZQo5DQzNsAYwG9V_708CsmWVp4LIQz9tc52X2GkuLY9YrQ1TOIiAjW24H3c/s320/images+arunagirinathar.jpg)
முன்பு விநாயக சதுர்த்தியின் போது நம்பியாண்டார் நம்பியின் நிகழ்ச்சியின் வழியாக எனக்கு புரிந்ததை எழுதியிருந்தேன். குழந்தை போல் மனம் கொண்டவருக்கு இறைவன் எளிதில் வந்துவிடுவான் என்பது அந்த நிகழ்ச்சியில் எனக்கு புரிந்தது. உடல் சார்ந்த எண்ணம் கொண்டவருக்காக அவர் ஸ்தூல வடிவத்திலும் வருகிறார் என்பது நம்பியாண்டார் நம்பிக்கு நடந்த நிகழ்ச்சி.
இன்னொன்று சித்தர்கள் முறையில் நடக்கும் அகவழிப்பாடு. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், அகவழிப்பாட்டில் யோகசித்தர்கள் கடைப்பிடிக்கும் முறை. அருணகிரிநாதர் தான் சிவராஜயோகி என்பதை அவரது பாடல்களில் அவரே தெரிவித்திருப்பார்.
உதாரணம்:
...மகளி தோத இன்பின்மு யங்குதல்
ஒழியுமாறு தெளிந் துளம் அன்பொடு சிவயோகத்
துருகு ஞானப ரம்பர தந்திர
அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி.... (அளக பாரம:திருசெந்தூர்)
சரணகம லாலயத்தை அரைநிமிட நேரமட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத ... (சுவாமிமலை)
...தகைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீகொடுத்து
தவிபுரிய வேணுநெய்த்த வடிவேலா... (சரணகமலாலயத்தை:திருசெந்தூர்)
...துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போத சுக... (சுருதிமுடி: பழநி)
எல்லாவற்றிற்கும் மேலாக,
"மூலங்கிள ரோருரு வாய் நடு..." என்ற பழநியில் பாடிய பாடலில் முழுக்க முழுக்க தான் சிவராஜயோகி என்பதை தெரிவித்திருப்பார்.
சிவராஜயோகமென்பது வெறும் ப்ராணாயாமம் சார்ந்தது அல்ல; வெறும் வாசி யோகமும் அல்ல. அதனால்தான் கந்தரலங்காரத்தில்
"துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே"
என்பார்.
அருணகிரிநாதர் எழுதிய "கைத்தல் நிறைகனி..." பாடல், சிவராஜயோகத்தை சார்ந்தது.
ஆஹா. ஸ்ரீகாழியூரர் தரிசனம் இங்குமா? அவர் எழுதியதை அனைவருக்கும் தரும் நீங்கள் கொடுத்து வைத்தவர் கீதாம்மா :)
ReplyDelete