எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 20, 2008

இயக்குநர் ஸ்ரீதர் மறைந்தார்! :(((

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பெரிதும் பேசத்தக்கப் பல படங்களை இயக்கியவரும், சித்ராலயா என்னும் படக்கம்பனியின் நிர்வாகியாகவும் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் இன்று மலர் மருத்துவமனையில் காலம் ஆனார். பலநாட்களாக உடல் நலம் இன்றி இருந்த இவர் என்றேனும் ஒருநாள் உடல்நலம் தேறி மீண்டும் படங்களை இயக்க வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கனவு மண்ணாகிப் போனது. எனினும் அவர் மனைவியின் உதவியுடன் நோயுடன் போராடினார். காலம் வென்றது. இனி பேசப் போவது எந்நாளும் அவர் இயக்கிய படங்களே.

பொதிகைத் தொலைக்காட்சி தன்னுடைய வாழ்நாள் சாதனையாளர் விருதை அவருக்குக் கொடுத்து கெளரவித்தது ஒரு பெரிய ஆறுதல் இத்தனை வருத்தத்திலும். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.இங்கே படிக்கலாம் அவருக்கு விருது வழங்கிய செய்தி பற்றிய ஒரு பதிவை!

8 comments:

 1. வருந்துகின்றோம்.

  அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறோம்.

  என்றும் அன்புடன்,
  துளசியும் கோபாலும்

  ReplyDelete
 2. எங்களது வாலிப வயதில் எங்களின்
  ப்ரிய இயக்குனர்; முக்கோணக் காதலை வெவ்வேறு வடிவங்களில் காவியமாக வெள்ளித்திரையில்
  படைத்தவர். எதிர்பாராதது, மீண்ட சொர்கம், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைக் காவியங்களுக்குச் சொந்தக்காரர். சிறு சிறு வார்த்தைகளால் ஆன இவரது திரைவசனம் நெஞ்சில் ஆழப்பதிந்து
  உணர்வுகளை பாசாங்கில்லாமல் வெளிப்படுத்தும். ஸ்ரீதர், கோபு, கவிஞர் கண்ணதாசன், ஒளிப்பதிவாளர் வின்சென்ட் கூட்டு சாதித்த சாதனைகள் அனந்தம்.

  பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி
  சாதித்தவர். அவர் பெருமையை நெஞ்சம் மறப்பதற்கில்லை.
  அன்னாரின் மறைவுக்கு அஞ்சலிகள்;
  அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 3. ஆழ்ந்த அனுதாபங்கள்....

  ReplyDelete
 4. வருத்தம் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 5. கீதா,
  இவரது மகனும் எங்க பையனும் ஒண்ணாகப் படித்தவர்கள். ஒரு பந்தாவே இல்லாமல் பழகுவார் என்று பையன் சொல்லி இருக்கிறான்.

  அந்த மாதிரிப் புதுமையான படங்கள் இனிமேல் எங்கே கிடைக்கும்.அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 6. காலத்தால் அழியாத காவிய நாயகன் இயக்குநர் ஸ்ரீதர்..

  செங்கல்பட்டில் உள்ள சித்தாமூரைச் சேர்ந்த ஸ்ரீதர், டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் வசனகர்த்தாவாகத் தன் கலையுலகப் பயணத்தைத் தொடங்கியவர். இவர் எழுதிய "ரத்த பாசம்' என்ற நாடகம் பின்னாளில் திரைப்படமாக உருவானது. அந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதித் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீதர்.

  சினிமாவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர்.

  சினிமாவை நேசித்த மிகச்சிலரில ஒருவர். தனகென தனி பாணி அமைத்தவர். இயக்குநரால் திரைப்படங்கள் ஒடும் என தனி formula அமைத்தவர்.

  1959 ல் வெளி வந்த கல்யாண பரிசு படத்தில " அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் " என்ற ஒரே வசனத்தால் அதை marketing மந்திரமாக பயன் படுத்தியவர். ..அந்த காலத்தில் ஒருவரை காதலித்துவிட்டு இன்னொருவரை மணந்துகொண்ட முதல் சினிமா கதை, கல்யாண பரிசுதான். அது எப்படி சாத்தியம்? என்று கடும் விமர்சனத்துக்குள்ளான கதை அது. முதல் இரண்டு நாட்கள் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. அது தோல்வி படம் என்று முடிவுகட்டிய நிலையில், மூன்றாவது நாளில் இருந்து கூட்டம் அலைமோத ஆரம்பித்தது

  "நெஞ்சில் ஓர் ஆலயம்' வெற்றிப் படம், 14 நாள்களில் படமாக்கி புதுமை வித்தகர். ஒரே செட். ஒருபுற்ம மருத்துவமனை, மறு புறம் வீடு.. என அசத்தியவர்.

  பெண்களுக்கு என்று ஆடியன்ஸ் ஏற்படுத்தியவர். அவரை பின்பற்றியே பல இயக்குநர்கள் { பாலச்சந்தர், விசு, பாக்யராஜ் } பெண்களை கவர பல உத்தியை கையாணடார்கள்.

  தமிழ் சினிமாவில், புராண காலக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சமூகம் சார்ந்த கதைகளையும், மனித உறவுகளின் மேன்மையைச் சித்திரிக்கும் கதைகளையும் அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தியவர் ஸ்ரீதர். நடிகர்கள் ராஜா, ராணி உடையணிந்து நடித்துவந்த சூழ்நிலையில் தன்னுடைய படங்களில் கதாபாத்திரங்களுக்கு நவநாகரிக உடைகளை அணிவித்து ரசிகர்களுக்கு நவீன தமிழ் சினிமாவை அறிமுகம் செய்தவர்.

  இதைபற்றி அவர் கூறும் போது.. சினிமா என்பது "Talkie" மட்டுமே அல்ல அது 'Movie" எனபார். புதிய பரிமாணதை 1960 களில் ஏற்படுத்தியவர்.

  எந்த பாடல்களிலும் 30 வினாடிகளுக்கு மேல் ஒரே ஷாட் இருக்க கூடாது என அடம் பிடிப்பவர்.


  நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்டதில் "சொன்னது நீதானா"? என்ற திரைப்பட கட்டிலுக்கு கீழேயிருந்து தான் கேமரா வரவேண்டும் என அந்த ஒரு ஷாட்டுக்காக பல வழிகள்ளில் முயன்று பட மாக்கியவர்.

  தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியடையாத கருப்பு-வெள்ளைப் பட கால கட்டங்களிலேயே தன்னுடைய நுணுக்கமான இயக்கத் திறனால் நுட்பமான விஷயங்களைத் திரையில் புகுத்தியவர்.

  ஸ்ரீதர் கையாண்ட வித்தியாசமான கதைக் களங்கள், அவர் படங்களில் இடம்பெற்ற யதார்த்தமான ஒளிப்பதிவு, இயல்பான வசனங்கள், இனிமையான பாடல்கள், புதுமையான காட்சிகள் போன்றவை இன்றைய இயக்குநர்கள் பலருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

  ஸ்ரீதர் இயக்கிய `தேன்நிலவு'தான் முதன் முதலாக காஷ்மீரில் படமாக்கப்பட்ட தமிழ் படம் ஆகும்.

  இப்படி எவ்வளவோ விஷயங்க்ளை கூறிக்கொண்டே போகலாம்..

  புதுமையின் விருட்சம் இன்று பூமிக்குள் புதைந்துவிட்டது. அவரை நெஞ்சம் மறப்பதில்லை.

  தமிழ்த் திரையுலகின் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் பெயர்-ஸ்ரீதர். சொன்னவர்

  வேறு வார்தைகளில்லை....

  சூர்யா
  சென்னை
  butterflysurya@gmail.com

  ReplyDelete
 7. வாங்க சூர்யா! முதல் வரவு?? தெரியலை! குழுமத்தில் ஒருத்தர் இருக்கார். ஆனால் உங்க வலைப்பக்கம் திறக்கலை, அல்லது அழைப்பு அனுப்புபவர்களுக்கு மட்டுமே திறக்கும்?? போகட்டும், திரு ஸ்ரீதர் பற்றி நீங்கள் எழுதி இருக்கும் விஷயங்கள் பற்றி நான் குறிப்பிடவில்லை, ஏனெனில் நீளம் அதிகமாகி இரங்கல் செய்தி விமரிசனமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில்.

  இப்போதான் "அவள் விகடன்" புத்தகமும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளது. எழுதியது நீங்களோ என ஒரு கணம் நினைத்தேன். நன்றி, வரவுக்கும், கருத்துக்கும்.

  ReplyDelete
 8. அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதா..

  முதல் வரவுதான் என நினைக்கிறேன்.. பிளாக் ஒப்பன் பண்ணி தொடர்ந்து எழுத முடியலை.. அதை தவிர நல்லா ஒடுற பிளாக்குகளில் ஒரிரு வரி எழுதினா அப்படியே சுவர் விளம்பரம் மாதிரி பாத்துட்டு போவாங்கன்னு நல்ல சினிமா பற்றி எழுதினேன்..அவள் விகடன் நான் வாசிப்பதில்லை..

  உலக சினிமா பற்ற்றி சில பல குழுமங்களிலும் எழுதி வருகிறேன்..

  எல்லா குழுமத்திலும் அப்பப்ப தெரு நாய் சண்டைதான்.. பிடிக்கலை..

  ஸ்ரீதர் என் பெருமதிற்குரியவர்.. தமிழில் கதை திருடாத டைரக்டர்..

  சிறிது எழுத ஆசை.. இப்போது நிறைய படித்து வருகிறேன்.

  சூர்யா
  சென்னை

  ReplyDelete