எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 02, 2008

அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர்- 3

4.துர்க்காயை துர்க்கபாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை
க்யாத்யை ததைவ க்ருஷ்ணாயை தூம்ராயை ஸததம் நம:

துன்பங்களில் இருந்து விடுவிப்பவளே துர்கா. அவளே நம்மை இந்தத் துன்பத்தில் இருந்தும் விடுவிக்க வேண்டும். சகலத்தையும் ஆக்குபவளும் அவளே, அழிப்பவளும் அவளே. அனைத்திலும் பொருள் வடிவினள் அவளே. அனைத்திலும் உறைந்திருக்கும் ஜீவ சக்தியும் அவளே. அவளே அனைத்துக்கும் காரிய காரணமும் ஆகின்றாள். க்யாத்யை= கீர்த்தி வடிவானவளும் அவளே. க்ருஷ்ணாயை= கரிய நிறத்தினளான காளியும் அவளே. தூம்ராயை= புகை வடிவினளும் அவளே. இப்படி அனைத்திலு நிறைந்திருக்கும் தேவிக்கு என்றென்றும் நமஸ்காரங்கள்.

5. அதிசெளம்யாதி-ரெளத்ராயை நதாஸ்-தஸ்யை நமோ நம:
நமோ ஜகத்ப்ரதிஷ்ட்டாயை தேவ்யை க்ருத்யை நமோ நம:

அதி செளம்யாதி= மிக மிக இனிமையான வடிவான தேவியைக் குறிக்கின்றது. அடுத்து உடனே ரெளத்ராயை= பயங்கர வடிவினளைக் குறிக்கின்றது. நம்ம அம்மா நம்ம கிட்டே ஒரு சமயம் கொஞ்சுகின்றாள். மறு சமயம் கண்டிக்கின்றாள். சில சமயங்கள் தண்டனை மிகக் கடுமையாகவும் இருக்கின்றது அல்லவா?? அதே தான் இங்கேயும். இப்படி மாறி மாறித் தோற்றமளித்து நம்மைக் காக்கும் அந்தத் தேவிக்கு நமஸ்காரங்கள்.

ஜகத்ப்ரதிஷ்ட்டாயை= அகில உலகுக்கும் ஆதார சுருதி அம்பிகையே தான். அந்த ஆதார சக்தியாக, சுருதியாக விளங்குபவளுக்கு நமஸ்காரங்கள். க்ருத்யை= அனைத்திலும் காரியமாக, இயங்கும் சக்தியாக விளங்கும் தேவிக்கு நமஸ்காரங்கள்.

இப்போதைய சேர்க்கை:
இந்த பொதிகை நிகழ்ச்சி தினமும் காலையிலும், 6-45 மணிக்கு இந்திய நேரப்படி மறு ஒளிபரப்பு செய்யப் படுகின்றது. இது நேற்று புதன்கிழமை 1-ம் தேதி சொன்னது. மூன்றாம் நாள் சக்தியான மகா திரிபுர சுந்தரியைப் பற்றியது. இவளைக் காமாட்சி என்றும் ஸ்ரீலலிதை என்றும் அழைக்கலாம். மனிதர்களின் காமங்களை ஆட்சி புரிந்து, அந்தக் காமங்களில் இருந்து அவர்களை விடுவித்து முக்தியை அருளுபவள் இவளே. இங்கே காமம் என்ற சொல் ஆசை, விருப்பம் என்ற பொருளிலே வருகின்றது. இந்த உலகின் அனைத்து சிருஷ்டிகளுக்கும் இவளே காரணகர்த்தாவாய்ச் சொல்லப்படுகின்றது. அனைத்து உயிர்களிடத்திலும் நிறைந்து இருக்கும் அனைத்து ஆசைகளுக்கும் இவளே காரணமாய் அமைவதோட் அந்த ஆசைகளில் இருந்து அனைவரையும் விடுவிப்பவளும் இவளே.இவளின் திவ்ய மங்கள சொரூபம் காணக்கிடைக்காத ஒன்றாய் வர்ணிக்கப் படுகின்றது. பேரழகுப் பெட்டகம் ஆன இவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இவளைக் குறித்தே அழகு அலைகள் என்ற ஸ்தோத்திரங்களை ஆதிசங்கரர் பாடி இருக்கின்றார் என்பது குறிப்பிடத் தக்கது. ஸ்ரீபுரத்தில் நான்கு மூர்த்திகளும் காலாக, சதாசிவனே பலகையாகக் கொண்டு, நான்கு வேதங்களையும் சங்கிலியாகக் கொண்டு காமேஸ்வரனும், காமேஸ்வரியும் அமர்ந்து ஊஞ்சலில் ஆடும் கோலத்தைப் பாடும் ஊஞ்சல் பாட்டு இன்றளவும் திருமணங்களில் பாடப் படுவதாயும் சொல்கின்றார். மூன்று உலகங்களையும் ஆளும் இவளின் கீர்த்தியை அனுபவங்களால் மட்டுமே உணர முடியும்.இன்றைய நைவேத்தியம் பாசிப்பருப்புச் சுண்டல். நேத்திக்குச் சீக்கிரமாத் தீர்ந்து போச்சு, அதனால் அனைவரும் சீக்கிரமாய் வந்து எடுத்துக்குங்க! :)))

6 comments:

 1. நன்றி கீதாம்மா.

  'அதி சௌம்யாதி' எனக்குப் பிடிச்சது :)

  ReplyDelete
 2. பஞ்சப்பிரேதாசனஸ்திதாயை நம: நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்...செளம்யம் அப்படின்னா சுந்தரமான/அழகில் சிறந்த அப்படியும் அர்த்தம் உண்டுதானே கீதாம்மா?

  ReplyDelete
 3. ஆம் கவிநயா, அன்னையின் அன்பும் சரி, அவளின் கடுமையும் சரி, காரணம் இல்லாமல் இருக்காது இல்லையா?/ துஷ்டர்களைக் களைபவள் அல்லவா அவள்? நம் மனதில் ஏற்படும் துஷ்டத் தனமான எண்ணங்களே இங்கே அசுரர்களாய்ச் சொல்லப் படுகின்றது. அது புரிந்தால் போதுமே!

  @மெளலி, செளம்யாயை- அழகான, வடிவான என்ற அர்த்தங்களும் வருகின்றது தான், என்றாலும் தாயன்பின் உன்னதத்தை உணர்த்தும் வண்ணம் இந்த அர்த்தத்தை எடுத்துக் கொண்டேன். மேலும் ரொம்ப டீப்பாப் போக வேண்டாம் என்று "கணேசர்" உத்தரவு வேறே இருக்கு! :)))))

  ReplyDelete
 4. //@மெளலி, செளம்யாயை- அழகான, வடிவான என்ற அர்த்தங்களும் வருகின்றது தான், என்றாலும் தாயன்பின் உன்னதத்தை உணர்த்தும் வண்ணம் இந்த அர்த்தத்தை எடுத்துக் கொண்டேன். மேலும் ரொம்ப டீப்பாப் போக வேண்டாம் என்று "கணேசர்" உத்தரவு வேறே இருக்கு! :)))))//

  தலைவியோட சிறப்பே இதுதான், இந்த சின்னப்பையன் வார்தயை கூட ஏற்பதுதான்.

  தம்பி

  ReplyDelete
 5. தூயா, சிரிப்பின் காரணம் புரியலையே??? அம்மா/அப்பா?? அதுவும் தெரியலை, வலைப்பக்கம் வந்து பார்க்க நேரம் இல்லை, தப்பாய் நினைக்கவேண்டாம்.

  அட, தம்பி கணேசர்?? அம்பி அண்ணா தயவா?? இல்லைனா இங்கே நுழைய முடியாதே?? எப்படியோ முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. வயசிலே சின்னவங்க என்றாலும் அனுபவம் பேசுதே! அதை மதிக்கணும் இல்லையா?? ரொம்பவே நன்றி. அடிக்கடி வந்து கருத்துச் சொல்லுங்க, இது உங்களோட முக்கிய பாடம். நான் படிச்சது சரியா இருக்கானு சொல்லவேண்டாமா???

  ReplyDelete