எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 19, 2008

சினிமா! சினிமா! சினிமாவின் தாக்கம் தொடர்கின்றது!

திரைப்படங்களைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், தில்லானா மோகனாம்பாளில் மனோரமா தன்னுடைய நாடகக் கொட்டகையில் சிவாஜியைப் பார்த்து உபசரிக்கும் இடம் மிகப் பிடித்த இடம். "நாயனக்காரரே? ஜோடா, வெத்திலவாக்கு?" என்று கேட்கும் அந்த இடம் வரும்போது மட்டும் பார்ப்பேன். அடுத்து கரிஷ்மா நடிச்ச ஜுபைதா படமும் அந்த அளவுக்கு மனதைக் கவர்ந்த ஒன்று. இதுவும் "உம்ராவ் ஜான்" மாதிரி அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் கதை என்றே சொல்கின்றார்கள். கரிஷ்மாவின் ரத்தத்திலேயே நடிப்புக் கலந்து இருக்கின்றதால் அருமையாக வாழ்ந்திருப்பார் இந்தப் படத்தில். முடிவு அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே! கதாநாயகனாய் வருவது மனோஜ் வாஜ்பாய்?? விக்ரம் கோகலே?? யாருனு தெரியலை, மறந்துட்டேனே! :)))))
சினிமாவின் பாதிப்பு என்னும்போது இந்தப் படத்தை எவ்வாறு மறந்தேன் என்பது போல நேற்று 9x சானலில் மீண்டும் இந்தப் படத்தைப் போட்டிருந்தார்கள். இணையம் இல்லை, மின் தடையினால். மழை பெய்து கொண்டிருந்ததால் நடைப்பயிற்சிக்கும் செல்லமுடியாது என்பதால் மீண்டும் இந்தப் படத்தைப் பார்த்தேன். "உம்ராவ் ஜான்" என்றொரு பெண்ணைப் பற்றிய இந்தக் கதை மனதைத் தாக்கியது முதல்முறை ரேகா நடிச்சப்போ பார்த்தப்போவே. ஏமாற்றி அழைத்துச் செல்லப் பட்ட பெண்ணின் மனநிலையும், அவள் பிறந்த இடத்தைப் பார்க்கவும், உறவுகளைப் பார்க்கவும் ஏங்குவதையும் ரேகா சித்தரித்தாற்போல் ஐஸ்வர்யாவால் முடியுமா என்றால், சாதித்தே காட்டி இருக்கின்றார் ஐஸ்வர்யா. அல்கா யக்னிக்கின் குரலில் அமைந்த அனைத்து கஜல்களும் பொருள் பொதிந்தவையாகவும் இருக்கின்றன. நேற்றே மீண்டும் பாடலை நன்கு பொருள் புரிந்து கேட்கவும் முடிந்தது. அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் பிரியும் இடத்தில் இருவருமே அசத்தலான நடிப்பால் மனதைக் கலங்க அடித்திருக்கின்றார்கள்.

தாயைப் பார்த்ததும் உணர்ச்சி வசத்தால் இருவரும் அணைத்துக் கொண்டு அழுவதும், பின்னர் உம்ராவ் ஜானின் தற்போதைய நிலைமை புரிந்த தாய் அவளை மறுப்பதும், தன் மகள் ஆன ஆமீரா இறந்துவிட்டாள் என்று சொல்லுவதும் மனதை மிகவும் கஷ்டப் படுத்தியது. தன்னுடைய மிகப் பெரும் பொறுப்பை உணர்ந்தே ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடித்திருக்க வேண்டும். கடைசியில் சொல்லுவது போல் உம்ராவ் ஜானுக்காகப் பரிதாபப் படுவதா? அல்லது தன் குழந்தைமையைத் தொலைக்க நேர்ந்த ஆமீராவிற்காகவும், அவள் தவறு செய்துவிட்டதாய்க் கருதி வெறுத்து ஒதுக்கிய வீட்டினரையும் பார்த்து வருந்துவதா எனப் புரியவில்லை. தாய் அவளை மனம் மாறி ஏற்றுக் கொண்டிருக்கலாமோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

இன்றளவும் இம்மாதிரியான ஒரு நிகழ்ச்சி தொடர்கதையாக ஆகிப் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டும் இருக்கின்றதே? தெரிந்தோ, தெரியாமலோ பல பெண்கள் துன்புறுகின்றார்களே? :(((((((((( அதில் வரும் ஒருபாட்டில் வரும் இந்த வரிகள் மனதைக் கலங்க அடிக்கும். "அக்லே ஜனம் மோஹே பிட்டியா நா கீஜியே!" இந்தப் படம் முதல்முறை பார்த்தப்போ எழுதின விமரிசனம்இங்கே

6 comments:

  1. தோள் சரியாகாத நிலையிலே இப்படி ஒரு மொக்கை தேவைதானா?

    ReplyDelete
  2. 'கி’ந்தி படம் பார்த்ததாய் தமிழ்ப் பதிவு போடலாமா?

    ReplyDelete
  3. @திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    @இ.கொ. தமிழ் ஆர்வலர்???? :P:P:P:P:P

    ReplyDelete
  4. உலக சினிமா. ஒரு சின்ன அறிமுகம்.. இவ்ற்றையெல்லாம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாருங்கள்ள்.. அப்புறம் ரசனை என்பதுக்கு புதுசாய் தெரியும்..


    Pursuit of Happyness- உண்மை தழுவிய கதை. Hollywood'ன் success formula இது. Will Smith தயாரித்தது மற்றும் நடித்தது. நமக்கு பழகிய இந்திய மத்தியதர வாழ்க்கை. ஆனால் கதை நடப்பது San Francisco. அவ்வளவே தான் வித்தியாசம். Spider Man, Harry Potter எல்லாம் தமிழ் பேசினார்கள், நம் நாட்டில். இந்த படத்தை தமிழ் செய்து வெளியிட்டார்களா என தெரியவில்லை. செய்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு. சராசரி சினிமா ரசிகனுக்கு தெரிந்த Hollywood படங்களில் இருந்து இது பல காணி தூரம் தள்ளியே இருக்கிறது. பல தரப்பில் ரசிக்கபட்ட ஒரு படம் இது.

    Babel - இது முதலில் Horror படமில்லை. ஆனால் பயமுறுத்துகிறது. சாதாரண வாழ்க்கையின் அசாதாரண பயங்கள் தான். பிரமாண்டமாய் யோசிக்காமல், எளிமையான script. ஆனால் நிகழ்வுகள் அழுத்தமானவை. தனி தனி கதைகளாய் சொல்லபட்டு வருபவற்றை, கொஞ்சம் கொஞ்சமாய் முடிச்சு போட்டு ஒரே கதை தான் என தெளிவாக்கபடும் ஒரு திரைப்படம்.

    L.A. Confidential & The Departed - இரண்டுமே ஒரு வகையில் ஒரு மாதிரி. தங்களுக்குள் (police/gangster groups) தங்களுக்கு தெரியாமல் புகுத்தபட்ட விஷயத்தை கண்டுபிடிப்பது தான். குருதிபுனல், காக்கிசட்டை, போக்கிரி எல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. நல்ல பர பர திரைக்கதை. Dinner சாப்பிட்டுகொண்டே பார்க்க சரியான படங்கள்.

    Bicycle Thief - இது ஒரு பழைய இத்தாலிய திரைப்படம். கடைசி நிமிஷ பன்ச் தான் திரைப்படம். . ஒரு சைக்கிளுக்கு அவ்வளவு மரியாதை அந்த காலத்தில் (1948). தனுஷின் பொல்லாதவன் இதன் உல்டா தான்..

    Apocalypto - Mel Gibson'ன் The passion of the Christ. இது.. Mel Gibson'ன் இரண்டாவது இயக்க முயற்சி. அசாத்திய முயற்சி. Mayan நாகரீகம் தான் கதைக்களம் மற்றும் அந்த மக்கள் தான் கதையில் இருக்கிறார்கள். கொஞ்சமாய் பல தமிழ் பட கதைகளில் வரும் விஷயம் தான். அப்பாவி ஹீரோ, கடைசியில் வில்லனை ரவுண்ட் கட்டி அடிக்கும் மசாலா கதை. ஆனால் இதன் பிரமாண்டம் ஆச்சரியம். இங்கே பிரமாண்டம் graphics அல்லது set கிடையாது. நம் கண் முன் விரியும் Mayan மக்களின் வாழ்க்கை.

    Walk the line - ஒரு biography வழி கதை. The beautiful mind, Pursuit of Happyness எல்லாம் இந்த வகையறா. இங்கே Johnny Cash என்பவரின் இசை வாழ்க்கை. பார்க்க பார்க்க எனக்கு முன் சிந்து பைரவி தான் ஓடியது. அச்சு அசல் அப்படியே எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இரண்டிருக்கும் பெரும்பாலும் நிறைய ஒற்றுமை. வாழ்ந்து, கெட்டு மறுபடியும் வாழ்ந்து விட்ட ஒரு இசைஞனின் வாழ்க்கை அழகாக நெய்யபட்ட படம். படத்தின் கதாநாயகி Reese Witherspoon கொள்ளை அழகு.

    சூர்யா
    சென்னை
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  5. உலக சினிமா பற்றி ஆனந்தவிகடனில் வந்து கொண்டிருந்தது. படிச்சிட்டு இருந்தேன். இப்போ ஒரு வருஷத்துக்கு மேலே விகடன் படிக்கிறதில்லை. எங்கேயாவது போனால் கிடைத்தால் படிப்பதோடு சரி. நீங்கள் சினிமாவை அணு, அணுவாக ரசிப்பது புரிகின்றது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மனதைத் தொடும் படங்களும்,பார்க்க ஆசை தான். என்றாலும் நிறைவேறுவது கொஞ்சம் கஷ்டமே. நன்றி உங்கள் அறிமுகத்துக்கு. இதை எல்லாம் உங்கள் பதிவில் இட்டுப் பொதுவில் வைத்திருக்கலாமே என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

    ReplyDelete
  6. தங்கள் வாழ்த்துக்கும் அறிவுரைக்கும் நன்றி..

    அன்புடன்

    சூர்யா
    சென்னை
    butterflysurya@gmail.com

    ReplyDelete