எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 01, 2008

அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர் - 2

இந்த நவராத்திரியில் பலரும் தேவி மஹாத்மியம் படிப்பது வழக்கம். இங்கே நாம் கொஞ்சமே கொஞ்சமாய் அதில் ஒரு சிறு பகுதியைப் பார்க்கப் போகின்றோம். இது தேவி மஹாத்மியத்தில் அத உத்தம சரித்திரத்திற்குப் பின்னர் வரும் ஐந்தாம் அத்தியாயத்தில் இருந்து எடுக்கப் பட்டது. சில முக்கிய ஸ்லோகங்களையும், அதற்கான அர்த்தங்களும் மட்டுமே அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லப் படும்.

சும்ப, நிசும்பர்களால் அவதிப்பட்ட தேவர்கள் ஆதி பராசக்தியை நினைத்துத் தொழுகின்றனர். கஷ்டப் படும் வேளையின் தன் உதவி கிட்டும் எனத் தேவி அளித்திருந்த வாக்குறுதியை நினைவு கொண்டனர். எவராலும் வெல்ல முடியாத அந்தத் தேவி ஒருவளால் மட்டுமே நாம் காப்பாற்றப் படுவோம் என்ற உண்மையை நன்குணர்ந்து தேவியைப் பல்வேறு துதிகளால் துதிக்க ஆரம்பித்தனர்.

1.“நமோ தேவ்யை மஹா தேவ்யை சிவாயை ஸததம் நம:
நம:ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதாஸ்ம தாம்”

தேவிக்கு நமஸ்காரங்கள், மஹா தேவிக்கு நமஸ்காரங்கள், சிவ வடிவினள் ஆனவளுக்கு சுபமானவளுக்கு என்றும் நமஸ்காரம். ப்ரக்ருதி வடிவானவளும், பத்ரை எனப்படும் நியதிகளின் வடிவானவளும் ஆன அந்த தேவியை நமஸ்கரிக்கின்றோம்.

இங்கே பத்ரை எனப்படுபவள் பசுமாட்டை மட்டுமில்லாமல் மாதங்களில் வரும் வளர்பிறை, தேய்பிறைத் திதிகள் ஆன த்விதியை, ஸப்தமி, த்வாதசி போன்ற திதிகளையும், பத்ரா நதியையும் குறிப்பிடுகின்றது. ஆகவே அம்பிகையை ஒட்டியே இயற்கையும் அமைந்துள்ளது என்பதை ப்ரக்ருதியானவளே என்ற சொல்லில் இருந்தும் தெரிந்து கொள்கின்றோம்.

2.ரெளத்ராயை நமோ நித்யாயை கெள்ர்யை தாத்ர்யை நமோ நம:
ஜ்யோத்ஸ்ணாயை சேந்துரூபிண்யை ஸுகாயை ஸததம் நம:


2. ப்ரக்ருதி என்னும் இயற்கை வடிவான இந்த அன்னை ஒரு சமயம் பயங்கர உரு எடுத்தும் வருகின்றாள். அந்த பயங்கர வடிவினளையும் நமஸ்கரிக்கின்றோம். ரெளத்ராயை நமோ, இந்த ப்ரக்ருதி அழிந்தாலும் அம்பிகை நித்திய ஸ்வரூபிணி. என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவள். அந்த நித்திய கல்யாணிக்கு நமஸ்காரங்கள். நித்யாயை நம:

கெளர்யை நம: கெளரி என்றால் வெண்மை கலந்த மஞ்சள் நிறமுள்ள பெண் என்ற பொருளில் வரும். இந்த பூமியும் அப்படியே. பச்சை, வெண்மை, மஞ்சள் கலந்தே காணப்படுகின்றது. பூமி என்ற பொருளும் வரும். பேச்சு என்ற பொருளும் வரும். அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் பூமியாக மட்டுமின்றி அனைவருக்கும் வார்த்தையாகவும், பேச்சாகவும் வெளிப்படுகின்றாள் அன்னை. நம் வாக்கினிலே சரஸ்வதி உறைகின்றாள் எனப் புரிந்து கொண்டோமானால் அமங்கலமான பேச்சுக்களே எழாதல்லவா?? எல்லாவற்றிற்கும் மேல் இமவான் புத்திரி கெளரி, பருவமடையான எட்டு வயதே ஆன கன்னிப் பெண்ணான இவளே அந்த ஈசனைக் குறித்துத் தவம் இருந்தாள். அவளை நமஸ்கரிக்கின்றோம்.

3.கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்த்யை ஸித்த்யை குர்மோ நமோ நம:
நைர்ருத்யை பூப்ருதாம் லக்ஷ்ம்யை சர்வாண்யை தே நமோ நம:””


கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்த்யை ஸித்த்யை குர்மோ நமோ நம: நின்னைச் சரணடைந்தேன் என்கின்றார் பாரதியார். அது போல் தேவியைச் சரணடைந்தவர்க்குச் சகல கல்யாணங்களும், சகல நன்மைகளும், சகல முன்னேற்றங்களும் அளிப்பவள் ஆன அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள். அரசருக்கு வெற்றியை ஈட்டித் தரும் விஜயலட்சுமியும் அவளே, முறையற்ற போர்களில் தோல்வியைத் தருபவளும் அவளே. இப்படி அரசரின் நெறியைக் காக்கும் அந்த சிவபத்தினிக்கு மீண்டும் நமஸ்காரங்கள்.


இன்றைய சேர்க்கை:
இன்று பொதிகையில் (செப்டம்பர் 30 செவ்வாய்) வந்தது "தாரா" தேவியைப் பற்றிய கருத்து. தசமஹா சக்தியில் 7-வது சக்தியாகக் கொண்டாடப் படும் இவள் ஒலி வடிவினள். வாக்கு தேவியானவள். தாரா என்றால் நட்சத்திரம், கண்ணின் மணி என்ற பொருள் வந்தாலும் இந்த இடத்தில் அவள் சம்சார சாகரத்தைக் கடக்க உதவுகின்றவள் என்ற பொருளில் கொள்ள வேண்டும். தாரா வான இவள் உதவி இல்லாமல் பிறவிக்கடலைக் கடக்க முடியாது. உலகில் தோன்றிய முதல் ஒலி ஸ்வரூபம் ஆன இவள் தோன்றியதும் நீரிலேயே. தாமரைப்பூவில் மலர்ந்த இவளின் தோற்றமும் காணக் கிடைக்காத சொரூபமே. இவளைத் தொழுதால், வணங்கி வழிபட்டால் கல்வி, கேள்வி, ஞானம் போன்றவற்றை அமுத தாரையாகப் பொழிவாள். ஸ்ரீராமருக்கு இவளை வழிபட்டதன் மூலமே சகலமும் கிடைக்கப் பெற்றதாகவும் சொல்கின்றார்கள். சம்சாரம் என்னும் கடலைக் கடக்க உதவும் இவள் நீல சரஸ்வதி எனவும் அழைக்கப் படும் இவள் விண்ணின் நீலத்திலும், பயிர், பச்சைகளின் கரும்பச்சை கலந்த நீலத்திலும், கடல் நீரின் நீலத்திலும் என சகலத்திலும் உறைந்து இருப்பதாய்க் கருதப் படுகின்றாள். இந்த தாரா தேவியே அக்ஷரத்தின் ஆரம்பம். இவள் இல்லையே வாக்கு இல்லை. நாம் பேசுவது என்பது இல்லை.
படம் சரியாகக் கிடைக்கவில்லை. தாரா தேவி நாகாபரணங்கள் பூண்டு, யானைத் தோலை ஆடையாகத் தரித்து எலும்பும், நாகமும் மாலையாக அணிந்து நான்கு தெற்றிப் பற்களுடன் காட்சி அளிக்கின்றாள். ஸ்ரீராமரின் சக்தியாகவே வர்ணிக்கப்படும் இவள் தோன்றிய அந்தப் பிரணவத்தையும் தாரகா பிரணவம் என்றே சொல்லப்படுகின்றது. காஷ்மீரத்தில் உள்ள மக்கள் பிறந்து மூன்று நாட்கள் ஆன குழந்தையின் நாக்கில் இந்தத் தாரா தேவியின் காயத்ரியை தர்ப்பையைத் தேனில் நனைத்து எழுதுவார்கள் என்றும், நாலந்தாவில் பல்கலைக்கழகம் இருந்த சமயம் அங்கே பெருமளவில் வழிபட்டு வந்ததாய் அங்கே கிடைக்கும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் சொல்லுவதாயும் தெரிய வருகின்றது.

ஒவ்வொரு நாளும் தீட்சிதரின் நவாவர்ணக் கீர்த்தனைகள் தவிர, அபிராமி அந்தாதியும், ஊத்துக்காடு கவிஞரின் காமாட்சி நவாவர்ணக் கீர்த்தனைகளும் பாடப் படுகின்றது இந்த நிகழ்ச்சியில். ஆனால் அந்த அந்த நாட்களுக்கு உரிய தேவியரை கிரமப்படி சொல்லாமல் ஏன் முன், பின்னாகச் சொல்கின்றனர் என்று புரியவில்லை. இதுவும் பொதிகையின் முத்திரையோ என்னமோ? என்றாலும் நிகழ்ச்சி ரசிக்கும்படியாக இருப்பதற்குப் பாராட்டுகள்..இன்றைய நைவேத்தியம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல். படம் வழக்கம்போல் சுட்டுத் தான் போட்டிருக்கேன்.

9 comments:

  1. மஹாதேவிக்கு நமஸ்காரங்கள்!
    நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  2. மஹாதேவிக்கு நமஸ்காரங்கள்!


    //இந்த இடத்தில் அவள் சம்சாக சாகரத்தைக் கடக்க உதவுகின்றவள் //

    சம்சார என்று இருக்கனுமோ? :))

    ReplyDelete
  3. சம்சார என்று இருக்கனுமோ? :))

    @அம்பி, சம்சார என்று திருத்தியாச்சு, நீங்களும், இருக்க"ணு"மோ, என்று மூணு சுழி "ண" போடுங்க! :P

    வாங்க கவிநயா, நன்றிம்மா, தினமும் வருவதற்கு!

    ReplyDelete
  4. சுண்டலுக்கு பர்ஸ்ட் எண்ட்ரீ போட்டுக்கிறேன்! (சுட்டுத்தான் போட்டுருக்கீங்களா!!!! நான் தட்டு நிறைய தரப்போறீங்கன்னு வந்தேன் இருக்கட்டும்!)

    ReplyDelete
  5. //தேவி மஹாத்மியம் படிப்பது வழக்கம்//


    ம்ம் நானும் படிக்கிறேன் நல்லது நடக்கணும்ன்னு வேண்டிக்கிட்டே :)

    ReplyDelete
  6. ஆயில்யன், சுண்டலுக்குத் தானே பர்ஷ்டு?? ஓகே, ஓகே, சரி, சரி, சீக்கிரமேவ விவாக ப்ராப்திரஸ்து! இப்போ சரியா, தேவி மகாத்மியம் படிச்சதும் கிடைக்கும் பலன் போதுமா? :)))))))

    சீக்கிரம் வந்தால் எல்லாத்தையுமே எடுத்துக்கலாம். வாங்க தினமும்!

    ReplyDelete
  7. எங்கே எனது பின்னூட்டம்?...

    ReplyDelete
  8. மெளலி, என்னிக்குக் கொடுத்தது?? வந்தது எல்லாம் போட்டுட்டேன், வேறே இல்லை, வச்சுக்கிட்டு வஞ்சனையா என்ன?? :P:P:P

    ReplyDelete
  9. நேத்துக் காலைல குடுத்தது. :)

    ReplyDelete