எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 11, 2009

எங்கிருந்தோ வந்தான்! இடைச்சாதி நான் என்றான்!

பாரதியின் கண்ணன்


சேவகரால் பட்ட சிரமமிகவுண்டு கண்டீர்
சேவகரில்லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன், துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டுவழியானாலும், கள்ளர்பயமானாலும்


இரவிற்பகலிலே எந்நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமற்காப்பேன்
கற்றவித்தையேதுமில்லை, காட்டு மனிதன் ஐயே
ஆனபொழுதுங்கோவடி குத்துப்போர் மற்போர்

நானறிவேன், சற்றும் நயவஞ்சனைபுரியேன்
என்று பல சொல்லி நின்றான். ஏது பெயர் சொல் என்றேன்
ஒன்றுமில்லை கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்
கட்டுறுதியுள்ள உடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல்-ஈங்கிவற்றால்

தக்கவனென்றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்க உரை சொல்லி விருது பல சாற்றுகிறாய்
கூலியென்ன கேட்கின்றாய்? கூறுகென்றேன் ஐயனே
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகளேதுமில்லை
நானோர் தனியாள் நரை திரை தோன்றாவிடினும்

ஆனவயதிற்களவில்லை- தேவரீர்
ஆதரித்தாற்போதும் அடியேனை நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லையென்றான்
பண்டைக்காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
அண்டு மிகவும் களிப்புடனே நானவனை

ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நாளாக நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன். கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெலாம் பேசி முடியாது.
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்

வண்ணமுறக்காக்கின்றான், வாய் முணுத்தல் கண்டறியேன்.
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!


இன்று மகாகவியின் பிறந்தநாள்.

9 comments:

 1. வாழ்க பாரதி. கண்ணனிப் பாடி, கண்ணம்மாவைப் பாடி, மாரியைப் பாடி ,பாரத மாதாவையும் பாடி,
  செந்தமிழைப் பாடி உள்ளம் குளிவித்த பாரதிக்கு மனம் நிறைந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 2. "தேடிச் சோறுநிதந் தின்று
  பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
  மனம் வாடித் துன்பமிக உழன்று
  பிறர் வாடப் பல செயல்கள் செய்து
  நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
  கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
  பல வேடிக்கை மனிதரைப் போலே
  நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? "
  தாத்துவுக்கு பயங்கர தில் !! இன்னும் இப்படி ஒருவரை பாக்கவில்லை!!

  ReplyDelete
 3. யாரு மறந்தாலும் தலைவிக்கிட்ட இருந்து பதிவு எதிர்பார்த்தேன்...வந்தாச்சி ;)

  பாரதிக்கு மனமார்ந்த வணக்கங்கள் !

  ReplyDelete
 4. வாழ்க பாரதி! வாழ்க பாரதம்!

  ReplyDelete
 5. ஒண்ணு ரெண்டு எ.பி ந்னா பரவாயில்லை. உங்க பதிவிலே இவ்வளோ எ.பி? நேரமில்லாம ரொம்பவே கஷ்டப்படுறீங்க!உம்?
  பாரதியை நினைவு படுத்தியதுக்கு நன்னிங்கோ!

  ReplyDelete
 6. திவா, திருத்திட்டேன், இப்போப் பாருங்க.

  ReplyDelete
 7. வல்லி,
  ஜெயஸ்ரீ,
  கோபி,
  உங்களில் ஒருவன்,
  கவிந்யா
  அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete