எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 30, 2009

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!

படித்துவிட்டீர்களா? வெங்கை(கா)யா நாயுடுவுடன் ஒரு சந்திப்புதிநகரில் இருந்து திருவான்மியூர் பேருந்தைத் தேடிக் கண்டுபிடிச்சு ஏறுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு. பேருந்து நிலையம் பூராவும் பேருந்துகள் அதுக்கு மேலே திணறிட்டு இருக்கு. எல்லாம் வெளியே போகமுடியாமல் தவிப்பு. உள்ளே வர பேருந்துகள் அதுக்கும் மேலே ஜனக்கூட்டத்தைத் தாண்டி வரத் தவிப்பு. எப்படித்தான் மனிதர்கள் அங்கே அவ்வளவு கூட்டத்தில் போய்ட்டு வராங்களோனு தினம் தினம் இந்த வேதனையை அநுபவிக்கும் மக்களின் மீது பரிதாபம் பொங்கி வந்தது. பகல் ஒன்றரை மணிக்கே இப்படின்னா அதுவும், ஞாயிற்றுக்கிழமையில், அலுவல்நாட்களில் கேட்கவே வேண்டாம். :( நல்லவேளை, நான் பிழைத்துக் கொண்டேன்னு பாடணும்போல் இருந்தது. ஒருவழியாப் பேருந்து வெளியே வந்து திருவான்மியூர் நோக்கிச் சென்றது. பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் பொருட்காட்சி நடக்குதுனு சொன்னாங்களே தவிர, அது அங்கே இருந்து நடக்கும் தூரம் எல்லாம் இல்லை. ஆட்டோ வச்சுண்டு தான் போனோம். இனி இந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

உலக மக்களின் அனைத்துத் தரப்பு மத ஒற்றுமைக்காகவும், அனைத்து மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்திற்காகவும் துவங்கப் பட்ட இந்த அமைப்பின் பெயர் global foundation for civilizational harmony என்பது. திரு அப்துல் கலாம் அவர்களால் துவக்கி வைத்த இந்த அமைப்பு அனைத்து மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைந்து செயலாற்றி வருகிறது. அதன் ஒருபடியாகச் சென்ற வருடம் பெப்ரவரி மாதம் 6,7,8 தேதிகளில் இந்த ஆன்மீகக் கண்காட்சியை நடத்தினார்கள். இதைத் தவிரவும் பல்வேறு சமூகநலத் திட்டங்களையும் இது மேற்கொண்டு செயலாற்றுகிறது. முதல்முறையாகப் பெருவாரியான மக்களுக்கு ஹிந்து அமைப்புகள் செய்யும் தொண்டுகள் பற்றிய தெளிவான அறிமுகம் சென்ற வருடம் தான் கிடைத்தது என்றே சொல்லலாம். படித்தவர்கள் பலருக்கும் கூட ஆச்சரியம், இவ்வளவு செய்யறாங்களா?? தெரியவே இல்லையேனு! அண்ணா நகரில் ஜெயகோபால் கரோடியா பள்ளி மைதானத்தில் நடந்த இந்தப் பொருட்காட்சியின் முக்கிய நோக்கமே ஹிந்து இயக்கங்கள், மடங்கள், மற்றும் ஆன்மிகக் குழுமங்கள், மற்ற மதங்களின் இயக்கங்கள் போன்றவைகள் பொதுமக்களுக்குச் செய்து வரும் பல்வேறு தொண்டுகளைப் பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லுவதே ஆகும்.


அதிலும் முக்கியமாய் இந்து அமைப்புகளோ அல்லது இயக்கங்களோ மக்கள் தொண்டு செய்வதே இல்லை என்னும் எண்ணம் பரவலாக இருப்பதையும் கருத்தில் கொண்டு பல்வேறு இந்து இயக்கங்கள் இதில் பங்கு பெற்று தங்கள் தொண்டைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கொடுத்துள்ளது. ஆனால் சென்ற வருடம் இந்த நிகழ்வு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்ததால் வெகுஜனங்களைச் சென்றடையவில்லை. அதையும் மனதில் கொண்டு இந்த வருடம் சற்றே பெரிய அளவில் இந்தப் பொருட்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் முக்கிய அங்கம் வகித்தவை தயாநந்த சரஸ்வதி அவர்களின் அர்ஷவித்யா குருகுலம், அதைச் சார்ந்த தொண்டு அமைப்புகள், ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை குழுமங்களின் தொண்டு அமைப்புகள், சாந்தாநந்தரின் ஸ்கந்தாஸ்ரமம், ஸ்ரீகணபதி சச்சிதாநந்த ஸ்வாமிகளின் ஹீலிங் த்ரூ ம்யூசிக் குழுவினர், அவர்களின் தொண்டுகள், காஞ்சி காமகோடி மடம், சிருங்கேரி மடம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம், மாதா அமிர்தாநந்தமயி, பிரம்மகுமாரிகள் அமைப்பு, ராமகிருஷ்ணா மடம், விவேகாநந்தா மடம், விவேகாநந்தா யுவகேந்திரா, ராஷ்ட்ரீய சேவிகா அமைப்பு, திருமலா திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம், ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸ்வாமிகளின் தன்வந்திரி ஆரோக்கியபீடம், ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமி அவர்களின் தென்னாங்கூர் மடம், மதுரை செளராஷ்டிரா சங்கம், ஸ்ரீராம்தேவ் அவர்களின் யோகாஸ்ரமம், சிவாநந்த ஆசிரமம், சேவாலயா, தமிழ் ஹிந்து தளம், சுத்தாநந்த பாரதியாரின் சீடர்கள், வைதீகஸ்ரீ, பத்மா சுப்ரமணியத்தின் ந்ருத்யோதயா, போன்ற பல்வேறு அமைப்புகள் சேர்ந்து நடத்தியது இந்தத் திருவிழாவை.

மாபெரும் கூட்டம்னு சொல்ல முடியாட்டியும் கூட்டம் தான். பல கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், நல்லவேளையா சாலை பெரியது. நடந்ததும் உடையார் தோட்டம் என அழைக்கப் படும் ராமச்சந்திரா பல்கலைக்கழக வளாக மைதானம். ஐயப்ப பக்த சமாஜத்தினரால் உணவு விடுதி நடத்தப் படுகிறது. அநுமதி இலவசம். கழிப்பறை வசதிகள், அரங்குகள் நிர்மாணித்திருப்பவர்களுக்கு, மற்றும் அமைப்பாளர்களுக்கான சாப்பாடு வசதிகளுக்கு எனப் பந்தல் போட்டு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அதிகமாய் மாணவ, மாணவியர், கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், இளம்பெண்கள், தனியாகவோ, குழுக்களாகவோ, பள்ளி, கல்லூரிகள் மூலமாகவோ வந்த வண்ணம் இருந்தார்கள். அவர்களைக் கவரவும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்தும் மாலை ஐந்து மணிக்கு மேல் தான். என்றாலும் காலையில் ரத்ததான முகாமும், அதன் பின்னரும் புதிர் போட்டிகளும், கேள்வி, பதில் பகுதிகளும் அவற்றுக்கான பரிசுகளும், படம் வரையும் போட்டியும் அதற்கான பரிசுகளும் வழங்கப் படுகின்றன. கலைநிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கில் அப்போது யோகக்கலை பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்க நாலு பேர் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

விவேகாநந்தா யுவகேந்திராவைப் பார்த்ததும் எனக்குள் உற்சாகம் பீரிட்டுக் கொண்டு வர, அங்கே போனேன். நாமளும் இளைஞர்களின் ஒருத்தி அல்லவோனு அங்கே போனால் அது உனக்கில்லைனு ரங்க்ஸ் என்னைப் பிடிச்சு இழுக்க, அங்கே நடக்கும் போட்டியில் பங்கு பெறணும்னு ஆசையோடு போனால், அட, அது சின்னப் பசங்களுக்குனு இழுத்துட்டு வந்துட்டார். நானும் சின்னப் பொண்ணுதானேனு சொன்னால் முறைப்பு. அதுக்குள்ளே ராமகிருஷ்ணா மடத்தின் அரங்கம் வந்ததா?? அங்கே புத்தகங்களைப் பார்த்தோமா? ஹிஹி, பார்த்தேனானு தான் சொல்லணும். அதைப் பார்த்ததும் லாலிபாப்பைப் பார்த்த குழந்தை மாதிரி அங்கே நுழைய ரங்க்ஸோ என்னைப் பின்னால் இழுக்கிறார். அவர் கையில் கத்தை ஸ்வாமிபடங்கள். ஏற்கெனவே நாங்க போற ஊரிலே எல்லாம் பார்க்கிற ஸ்வாமிபடங்களை எல்லாம் வாங்கி மாட்டி வச்சிருக்கார். இனிமேல் ஸ்வாமி அலமாரியிலே இடமே இல்லைனு வீட்டிலே உள்ள எல்லா அறையிலும் மாட்டியாச்சு. இனிமேலே புதுசா வீடு கட்டினாலோ அல்லது, புதுசா அறை இந்த வீட்டிலேயே போட்டாலோ தான் உண்டு. இங்கே என்னடான்னா எல்லாரும் அவங்க அவங்களோட சேவைகளை விளக்கும் குறிப்புகள் கொண்ட கையேடுகள் மட்டுமில்லாமல் ஏதானும் ஸ்வாமிபடமும் வேறே கொடுக்கிறாங்க. அது தவிர, ரமணர் படமே இல்லைனு ஒரு ரமணர் படம், ஏற்கெனவே வீட்டிலே இருக்கும் ராமர் படங்கள் பத்தாதுனு சின்னதா ஒண்ணு, கையடக்கமா. விலைக்கு வாங்கி வச்சுண்டாச்சு. இந்த மாதிரி இருக்கையிலே என்னை முறைக்கிறார். புத்தகம் வாங்கக் கூடாதாமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்போ இங்கே எந்தப் புத்தகத்தை வாங்கி எங்கே வைக்கப் போறே?? வீட்டிலே இடமே இல்லை, உனக்கப்புறம் படிக்க ஆளும் இல்லை. ரங்க்ஸின் முறைப்புக்கு அஞ்சாமல்,அட, நான் போனதுக்கப்புறம் இருக்கிறவங்க படவேண்டிய கவலைனா அதுனு சொல்லிட்டு, ரா.கணபதியோட "அறிவுக்கனலே, அருட்புனலே" புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். இவ்வளவு பெரிய புத்தகத்தை வாங்கி இருக்கேனே, கூடவே பெரிசா ஒரு பையானும் கொடுப்பாங்க, கையிலே இருக்கிற கையேடுகளைப் போட்டுக்கலாம்னு நினைச்சால், அவங்க என்னடானா சின்னதா ஒரு பையிலே போட்டுக் கொடுத்துட்டாங்க. கையேடுகளே ஒரு இருநூறு சேர்ந்திருக்கு. வெயிட் தாங்கலை. எப்படிடா இத்தனையையும் தூக்கிட்டு மத்த அரங்கங்களுக்குப் போறதுனு முழிச்சோம். அதுக்குள்ளே அங்கே நுழையுமிடத்தில் ஒரே பரபரப்பு. என்னடானு பார்த்தா, வெங்கையாநாயுடு வராராம். அதுவும் நான் வந்திருக்கிறது தெரிஞ்சு என்னைப் பார்க்கவே வரார் போலிருக்கே?? அட??? எந்தப் பத்திரிகைக்காரங்களையும் வரக்கூடாதுனு ரகசியமா இல்லை போனேன்?? :P:P:Pஆச்சரியமா இருந்தது. அங்கே இருந்த அரங்கிலேயே உட்கார்ந்து கொண்டேன். வெங்கையா நாயுடுவோட பேசவேண்டியதை மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்த்து வச்சுக் கொண்டேன். அதோ அங்கே நிக்கிறவங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே??? எங்கேயோ பார்த்தமுகம்??? யார் அது????

7 comments:

 1. ஹிஹிஹி, மார்க்கி நல்லா வந்திருக்கில்லை?? என் திறமையை நானே மெச்சிக்கிட்டு இந்தப் பின்னூட்டம்!

  ReplyDelete
 2. இடமில்லைன்னா என்ன? வீட்டுக்கு வரவங்களுக்கு ஆளுக்கு ஒரு புத்தகமா குடுங்க. எனக்கு அந்த அரை நுற்றாண்டு வயதுடைய கிருஷ்ணர் படம் போதும் ஹிஹி. :))

  மார்க்கி யாரு போட்டு குடுத்தாங்க..? :p

  ReplyDelete
 3. @அம்பி, அரை நூற்றாண்டு வயதுடைய கிருஷ்ணர் படம் எதுவும் எங்க வீட்டிலே இல்லையே?? அப்பாடா, தப்பிச்சேன்! நல்லவேளையாப் பல நூற்றாண்டுகள் ஆன ராமர் பட்டாபிஷேஹப் படத்தைக் கேக்கலை! :P:P:P:P

  ReplyDelete
 4. மார்க்கி யாரு போட்டு குடுத்தாங்க..? :p//
  க்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கிரமமா இல்லை??? எப்போவோ இருந்தே மார்க்கி போட்டுட்டு இருக்கேன்?? என்னை மாதிரி ஒரு தொழில் நுட்ப நிபுணியைக் கேக்கற கேள்வியா இது?? :P:P:P

  ReplyDelete
 5. ஹாஹா உங்க வீட்டில் கூட எங்க அண்ணா மாதிரி சுவாமி பட சண்டை எல்லாம் நடக்குதா. எங்க அண்ணா எங்க போனாலும் பெருமாள் படமா வாங்கி வருவார். எங்க மன்னி சண்டை பிடிப்பார். கொஞ்சம் ஏமாந்தால் எங்க தலையில் கூட ட்ரில் பண்ணி மாட்டி விடுவீர்கள் என்று. நன்றி.

  ReplyDelete
 6. hihiபித்தனின் வாக்கு, சத்தமாச் சொல்லாதீங்க, இடம் தேடிட்டு இருககார் இன்னும் நாலுபடம் மாட்ட, அப்புறமா என் தலை பிழைக்கணும்!

  ReplyDelete
 7. மத நல்லிணக்கத்துக்கு சொன்னீங்க, ஆனா நீங்க குடுட்த லிஸ்ட்ல மற்ற மத அமைப்புகளைக் காணுமே?

  எப்படியோ பெரீய்ய புத்தகம் வாங்கீட்டிங்களே. அப்புறம் என்ன? :)

  (ஆமா... நீங்க வலையுலகத்துக்கு மட்டும்தானே பாப்பா, எல்லா இடத்திலயும் சொன்னா ஒத்துப்பாங்களா? :)

  ReplyDelete