எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 26, 2010

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்......

மறுநாள் வியாழனன்று காலை கும்பகோணத்திற்கு அருகே ஒப்பிலியப்பன் கோயிலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டும். முதல்நாளே ராமசாமி கோயிலில் இருந்து வந்ததுமே மாயவரத்திற்கு அபி அப்பாவுக்குத் தொலைபேசி, மறுநாள் ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்து மாயவரம் வருகிறோம் என்பதை உறுதி செய்தேன். நட்ராஜ் பிறந்ததில் இருந்து அபி அப்பா கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நாங்களும் இரண்டு மாசத்துக்கு ஒருதரம் மாயவரம் வழியாப் போயிட்டிருக்கோம். இம்முறை எட்டிப் பார்த்துவிடுவது என முடிவு செய்தாச்சு. வியாழனன்று காலை ஒப்பிலியப்பன் கோயிலில் திருமண மண்டபத்திற்குச் சென்றோம். திருமணப்பத்திரிகையை அவர் எடுத்து வச்சுப்பார்னு நான் அது பத்திக் கேட்டுக்கவே இல்லை. எந்தச் சத்திரம்னு தெரியலை. நம்ம ரங்க்ஸ் ரொம்பவே ஜாலியா கோயிலைச் சேர்ந்த மண்டபம்னு ஆட்டோக்காரர்ட்டே சொல்லிட்டார். அவரும் அழகாய்க் கோயிலைச் சேர்ந்த மண்டபத்தின் வாயிலில் கொண்டு நிறுத்திட்டார். என்னை முன்னால் போகச் சொல்லிட்டு ஆட்டோவுக்கு செட்டில் பண்ணிட்டு வரேன்னு சொன்னாரா, நானும் உள்ளே போனால், வரவேற்பில் ஆட்களே புதுசா இருந்தாங்க. ஹிஹிஹி.. கல்யாணம் செய்துக்கும் பையரை மூணு வயசிலே இருந்து தெரியும். அவங்க குடும்பமே பழக்கம். இங்கே பார்த்தால் வேறே யாரோ இல்லை இருக்காங்க. பெண் வீட்டுக்காரங்களானால் அதுவும் இல்லைனு புரிஞ்சது. ஆனாலும் அவங்க வரவேற்று(நாங்க பெண்ணுக்குச் சொந்தம்னு நினைச்சிருப்பாங்க போல! :D) உடனே போய் டிபன் சாப்பிடுங்கனு உபசாரம் வேறே பண்ணினாங்க. போயிருப்பேன். ஆனால் நம்ம மண்டைக்குள்ளே தான் குடையுமே! குடைச்சல் தாங்காமல், கல்யாண மாப்பிள்ளை பெயரைச் சொல்லி அவர் கல்யாணம்தானேனு கேட்டால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., பையர் அவர் இல்லை. அந்தப் பையர் வீட்டு ஆளுங்க எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவுங்க போல. கல்யாணப்பையர் பெயரை நான் சொன்னதை வைச்சு அந்தப் பெயர் உள்ள பையர் கல்யாணம் நடக்கும் சத்திரத்துக்கு இப்படிப் போங்கனு வழியும் சொல்லி அனுப்பி வச்சாங்க.தேங்காய், பழம், வெத்திலை, பாக்குப் பை மட்டும் கொடுக்கலை. கொஞ்ச நேரம் இருந்தா கொடுத்திருப்பாங்க போல!

ரங்கனார் ஆட்டோவிலிருந்து இறங்கறதுக்குள்ளே ஓடிப் போய் ஆட்டோவிலே உட்கார்ந்து ஓட்டுநரிடம் சத்திரத்தின் பெயரைச் சொல்லி அங்கே போங்கனு சொன்னேன். அப்ப்பபாடா! வாசல்லேயே கல்யாணப் பையரின் அப்பாவான எங்க சிநேகிதர் நின்னுட்டு இருந்தார். நிம்மதினா என்னனு அப்போப் புரிஞ்சது. நல்லவேளையா மொய் மாறிப் போகறதுக்கு இருந்தது, உங்க பையரோட அதிர்ஷ்டம் இங்கே வந்துட்டோம்னு அவர் கிட்டே சொல்லிட்டு, டிபன் சாப்பிடப் போனா, அவரோ, “அங்கே நுழைஞ்சுட்டு டிபன் என்னனு பார்த்துட்டுச் சாப்பிட்டு வந்திருக்கக் கூடாதோ?”ங்கறார். என்னத்தைச் சொல்ல??? டிபன் முடிஞ்சு மாடிக்குப் போய் பையரின் அம்மாவைப் பார்த்துப் பேசிட்டுக் கீழே வந்து கல்யாணம் பார்க்க உட்கார்ந்தால் பெண் வீட்டுக்காரர்களில் சிலர் எங்களையே முறைச்சுப் பார்த்துட்டு இருந்தாங்க. சரினு நாங்களும் முறைச்சோம். அதுக்குள்ளே காசியாத்திரை போயிட்டு, மாலை மாத்தி, ஊஞ்சல் முடிச்சு, பெண்ணும் பையனும் மணவறைக்கு வந்தாங்க. முறைப்பு தொடர்ந்தது.யாரு இவங்க??? எங்க சந்தேகம் தீரலை. கல்யாணம் ஆரம்பிச்சது. தாலி கட்டும்போது வழக்கம்போல கை குலுக்க வேண்டாம் என்ற அன்பான வேண்டுகோள், (இப்போ எல்லாக் கல்யாணங்களிலேயும் இதைச் சொல்லவேண்டிய கட்டாயமாயிடுச்சு! ) சப்தபதி முடிஞ்சதும், சிறிது நேரம் ஓய்வு கொடுத்து புரோகிதர்கள் இப்போதைய வழக்கப்படி பையரையும்,, பெண்ணையும் பெரியவங்களை நமஸ்கரிக்க அனுப்பினாங்க. அப்போ நாங்க அட்சதை போடும்போது பெண்ணோடு வந்த பெண்களில் ஒருத்தி, நம்ம ரங்க்ஸ் கிட்டே எங்க ஜாதகத்தைக் கேட்க அவரும் விலாவாரியாகச் சொல்ல! அட??? இவங்க ஜாம்நகரிலே நம்மளோட இருந்தவங்களா? இப்போவும் அங்கேதான் இருக்காங்களாம், பெண்ணுக்கு மித்தாபூரில் வேலைங்கறதாலே அங்கே போயிருக்காங்களாம். மித்தாப்பூர்னதும் யாரோனு நினைச்சோமே. அதுக்குள்ளே பெண்ணின் அம்மாவுக்குத் தகவல் போக அவங்க வந்து, “நிச்சயதார்த்தம் போதே உங்களைப் பார்த்தேன், நினைச்சேன் நீங்கதானோனு. ஆனால் சந்தேகமா இருந்தது”னு சொல்ல இரு தரப்பிலும் சற்று நேரம் பதினைந்து வருஷத்திய மலரும் நினைவுகள் ஓடின.

அப்புறமா அங்கே சாப்பாடு முடிச்சு கும்பகோணம் வந்து மாயவரம் பேருந்தில் ஏறி அபி அப்பாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் அவர் காலையே மிஸ் பண்ணி இருக்கார்னு அப்புறமாத் தெரிஞ்சது. ஒருவழியா மாயவரம் வந்து, அபி அப்பாவை மறுபடி கூப்பிட்டு, எப்படி வரணும்னு கேட்டு, ஆட்டோக்காரர் கிட்டே வழி சொல்லிப் போனால் அது பாட்டுக்குப் போகுது. நம்ம ரோடு மாதிரியே அங்கேயும் ரோடு போட்டிருக்காங்கப்பா. ஒருவேளை வலை உலகப் பதிவர்கள் குடியிருக்கும் வீடுகளில் இதுதான் அங்கீகரிக்கப் பட்ட சாலை அமைப்போனும் நினைச்சேனே. அபி அப்பா என் கிட்டே அவங்க வீடு ரொம்பக் கிட்ட பேருந்து நிலையத்திலே இருந்துனு சொன்னார். ஆனால் அது பாட்டுக்கு தூரக்கத் தான் இருக்கு. வீட்டுக்குப் போனோம். நட்ராஜைப் பார்த்தோம். ஆஹா, அவன் என்னை அழைத்த அழைப்பு இருக்கே! நட்ராஜுக்கு அபி அப்பா என்னை அறிமுகம் செய்து வைத்தார். என்ன வழக்கம்போல் பாட்டினு சொல்லித் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனால் நட்ராஜா அதெல்லாம் கேட்பான்? அவன் யாரு?? நாம பேரு வச்சு ஆளாச்சே? அதெல்லாம் காதிலேயே போட்டுக்கலை. அவன் பாட்டுக்கு ஆண்ட்டினு கூப்பிட்டுட்டான். (புதுகைத் தென்றல், என்னமோ என்னோட படத்தைப் பார்த்துட்டேன், அப்படி, இப்படினு பெருமை அடிச்சீங்க இல்லை??, பதிவர் மீட்டிங்கைப் பத்தி எழுதுங்கனு சொன்னீங்கல்ல?? இதான் விஷயமே! ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா, குளிர்ச்சியா இருக்கு, அம்பி நோட் திஸ் பாயிண்ட்! நட்ராஜே சொல்லிட்டான்! இனிமே என்னைப் பாட்டினு எழுதினீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே!(என்னங்க?? அதெல்லாம் கட்டெறும்பு போகலை காதுக்குள்ளே) இதனால் வலை உலகத்தினர் சகலருக்கும் தெரியப் படுத்துவது என்னவென்றால் நான் சின்னப் பொண்ணுதான் என்பதை நட்ராஜே உறுதி செய்துவிட்டான். எப்படிக் கூப்பிட்டாங்கறீங்க?? “அந்த ஆண்ட்டி எங்கே?” னு கேட்டான். ஆண்ட்டினு கூப்பிட்டானே! அபி அப்பா முகத்திலே டன் டன்னாக அசடு வழிய, வேறு வழியில்லாமல் முழிச்சார். கவனிக்காதது போல் காட்டிக் கொண்டார். உடம்பு அலுப்பு மட்டும் இல்லைனா டான்ஸே ஆடியிருப்பேன். அபி பள்ளிக்குப் போயிருந்தா. பேசிட்டு இருந்தோம். அபி அம்மா நாங்க போனதிலே இருந்து சமைச்சாங்க. பாவம். அவங்க சமைச்ச நேரத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு நேரம் கூட நாங்க சாப்பிட எடுத்துக்கலை. வேண்டாம், நாங்க கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டாச்சுனு சொன்னாக் கேட்டாத்தானே! நினைச்சு, நினைச்சு ஏதேதோ பண்ணிட்டு இருந்தாங்க. ஆயில்யன், குசும்பன், சீமாச்சு, ராமலக்ஷ்மி, கண்மணி டீச்சர், கயல்விழி முத்துலக்ஷ்மி, வல்லி சிம்ஹன், துளசி கோபால்னு எல்லாரையும் பத்தி நினைவு கூர்ந்தோம்.விட்டுப் போனவங்க எல்லாம் உங்களையும் நினைச்சோம்பா. கோபி, முக்கியமா உங்களை! வீட்டையும் சுத்திப் பார்த்தோம். எங்களைப் போல அபி அப்பாவும் சுப்புக்குட்டிகளைச் செல்லமாக வைத்திருப்பது தெரிய வந்தது. அவை வந்து போகும் வழியையும் காட்டினார். அபி அப்பா எங்களை அழைத்துச் செல்லவேண்டிய இடங்கள்னு பெரிய ப்ளானெல்லாம் வச்சிருந்தார் எங்களை அழைத்துச் செல்லவேண்டிய கோயில்கள்னு ஒரு லிஸ்டே கொடுத்தார். ஆனால் எங்கள் உடல்நிலையும் இடம் கொடுக்கலை, நேரமும் பற்றாக்குறை, மேலும் அவர் சொன்ன கோயில்கள் அனைத்தும் நாங்க இரண்டு, மூன்று முறை போய்வந்தவையே. அலையவேண்டாம் மறுநாள் பெருமாள் கோயிலில் நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டோம். பேச்சு வாக்கில் அவரோட நெருங்கிய சிநேகிதர் குரங்கு ராதா என் மாமியாரோட சொந்தம்னு புரிஞ்சது. அபி பள்ளியிலிருந்து வந்ததும் அங்கே இருந்து மாயூரநாதர் கோயிலுக்குப் போனோம். நட்ராஜ் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல் எங்களோட தனியா ஆட்டோவிலே வந்துட்டான். அவங்க அப்பாவையோ, அம்மாவையோ தேடவே இல்லை. ரொம்பச் சமர்த்தாக இருந்தான். நாங்க முன்னாலே போய் கோயில் மண்டபத்தில் நின்னுட்டு இருந்தோம். உள்ளே திரை போட்டிருந்தது. சாயரட்சை வழிபாட்டிற்காக. அபி அப்பா வந்ததும் உள்ளே போய் ஸ்வாமி தரிசனம் செய்துட்டு அங்கே இருந்தே பேருந்து நிலையம் வந்து கும்பகோணம் வந்து, மறுநாள் குலதெய்வம் கோயிலில் செய்யவேண்டிய அபிஷேஹத்திற்கான பொருட்கள், மலர்மாலைகள், பெருமாள் கோயிலின் பாலாலயம் எடுக்க வேண்டியதற்காக பெருமாளுக்குத் துளசி மாலைகள் என வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எங்க ஊரான பரவாக்கரைக்குச் சென்றோம். மாயூரநாதர் கோயில் பற்றிய கட்டுரை ஆன்மீகப் பயணம் பக்கத்திலே வரும்.

21 comments:

 1. ஹா ஹா பயணக்குறிப்பு சூப்பர். அதுவும் நட்டு கூப்பிட்டதை கொட்டை எழுத்துல போட்டதை ரொம்பர் ரசிச்சேன்.

  ReplyDelete
 2. வந்தாச்சா கீதா. உங்க படம் அபி அப்பா அனுப்பி இருந்தார்.
  ஆயில்யன் உங்களை மிஸ் பண்ணிட்டதாகவும் சொன்னார்.
  இனிமே கண்ணன் தொடருவான்னு நம்பறேன்.:)

  ReplyDelete
 3. //தாலி கட்டும்போது வழக்கம்போல கை குலுக்க வேண்டாம் என்ற அன்பான வேண்டுகோள், (இப்போ எல்லாக் கல்யாணங்களிலேயும் இதைச் சொல்லவேண்டிய கட்டாயமாயிடுச்சு! )//

  ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?

  :-)

  ReplyDelete
 4. வாங்க புதுகை, ஹிஹிஹி, நல்லா இருக்கு இல்லை???? இது எப்படி இருக்கு????

  ReplyDelete
 5. வாங்க வல்லி, அன்னிக்குக்காலம்பரத் தான் உங்க மெயில் பார்த்ததாகவும் சொன்னார். நன்றிம்மா. கண்ணன் எழுதி வச்சிருக்கேன். தொடரணும்! :))))))))))

  ReplyDelete
 6. ஹுசைனம்மா, இதுக்கு ஒரு பதிவே போடணும், என்றாலும் உங்களுக்காக ஒரு சுருக்கம். தாலி கட்டுவது என்பது ஒரு அடையாளம் மட்டுமே. ஹிந்து திருமணங்களில் சப்தபதி முடிந்தால் தான் திருமணம் முடிந்ததாக அர்த்தம், அதுதான் முக்கியம். தாலி மட்டும் கட்டினால் போதும் கல்யாணம் முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஒரு இருபது வருடங்கள் முன்வரை தாலி கட்டினதுமே கைகுலுக்கல், பரிசுப் பொருட்கள் கொடுத்தல்னு மணமக்கள் முக்கியச் சடங்குகள் செய்யமுடியாமல் தொந்திரவாய் இருக்கும். அதனால் இப்போதெல்லாம் மைக் வைத்தே அறிவிப்பு செய்கின்றனர்.

  ReplyDelete
 7. ஓ, இதான் காரணமா. ஆமா, நீங்க சொன்ன மாதிரி தாலி கட்டினதும் பரிசு கொடுக்க நானும் லைன்ல நின்னுருக்கேன், ஃப்ரண்ட்ஸ் கல்யாணத்துல. ஆனா அப்ப யாரும் எதுவும் சொல்லல. நாங்கள்லாம் சாப்பிடப் போனப்புறமும் தம்பதிகள் இன்னும் நிறைய சடங்குகள் செஞ்சுட்டு லேட்டாதான் சாப்பிட வருவாங்க.

  விளக்கத்திற்கு நன்றி ஆண்ட்டி.

  ;-D

  ReplyDelete
 8. \\ அபி அப்பாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் \\

  ஹி..ஹி...அவருக்கு போயி மிஸ்டு கால்.;))))

  \\\கோபி, முக்கியமா உங்களை! \\

  உள்குத்து பலமாக இருக்கு...நான் அவர் வீட்டுக்கு வந்ததை பத்தி சொல்லியிருப்பாரு ;))

  ReplyDelete
 9. பயணக்கட்டுரை கலக்கல்..

  ReplyDelete
 10. மறு வருகைக்கு நன்றி ஹூசைனம்மா, ஆனால் நான் உங்களுக்குமா ஆண்ட்டி???? ஹிஹிஹி, உங்க பேரனுக்கோனு இல்லை நினைச்சேன்?? :P:P:P:P

  ReplyDelete
 11. வாங்க கோபி, அதெல்லாம் ஒண்ணும் இல்லை, சும்மா உங்களை துளசி வீட்டிலே பார்த்துட்டு நான் அசடு வழிஞ்சதைத் தான் சொன்னேன். :)))))))))

  ReplyDelete
 12. வாங்க சங்கவி, பொண்ணுனு நினைச்சேன், அது சரி, உங்க ப்ரொஃபைலில் குறிப்பிட்டிருக்கும் அத்தனை வலைப்பக்கங்களையும் எப்படிங்க படிக்க முடியுது??? நம்மளாலே முடியலைங்க! சில பதிவுகளுக்குப் போயே மாசக்கணக்கா ஆகுது! :))))))))))))))

  ReplyDelete
 13. //நல்லவேளையா மொய் மாறிப் போகறதுக்கு இருந்தது//

  ஆமா அப்படியே குடுத்துட்டாலும். :)))

  எனக்கு பிள்ளை பிறந்து பேரும் வெச்சு ஒன்னரை வயசும் ஆயாச்சு. இன்னும் என் கல்யாண மொய் வந்து சேரலை. கர்ர்ர்ர்ர்... :)))

  //குரங்கு ராதா என் மாமியாரோட சொந்தம்னு புரிஞ்சது. //

  யப்பா என்னா உள்குத்து.
  இருங்க! சாம்பு மாமாவை நேர்ல பாக்கும் போது போட்டுக் குடுக்கறேன். :))

  ReplyDelete
 14. ஆன்ட்டி என்றால் சின்ன பொண்ணுனு யார் உங்களுக்கு சொன்னது..? :))

  நட்டு சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சு வெச்ருகீங்க.

  அபி அப்பாவுக்கு நீங்க ஆன்டி, அதாவது நட்டுவுக்கு ஆன்ட்டி-பாட்டி. ஹிஹி.

  ReplyDelete
 15. @அம்பி, உங்க கல்யாணப்புடைவையிலே இருந்து ஆரம்பிச்சு எனக்கு மொத்தம் நாலு வரணுமே! இப்போ லேட்டஸ்ட் ஆரெம்கேவியில் நேச்சுரல்ஸ் புடவையும் வரணும். அதை எல்லாம் அனுப்பி வைங்க. மொய் கொடுக்கலாமா வேண்டாமானு யோசிக்கிறேன்!

  ReplyDelete
 16. //யப்பா என்னா உள்குத்து.
  இருங்க! சாம்பு மாமாவை நேர்ல பாக்கும் போது போட்டுக் குடுக்கறேன். :))//

  இதைப் பத்தி விசாரிச்சு உறவுதான்னு உறுதிப்படுத்திக்கொண்டதே அவர் தான்! ஹிஹிஹி!! :P:P:P:P:P

  ReplyDelete
 17. அபி அப்பாவுக்கு நீங்க ஆன்டி, அதாவது நட்டுவுக்கு ஆன்ட்டி-பாட்டி. ஹிஹி.//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர், நட்டு அழகா, "அந்த ஆண்டி எங்கே? " னு தான் கேட்டான். அவனுக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரியலை, நாளைக்கு உங்க பிள்ளை சொல்லுவான் பாருங்க, தகப்பன் சாமி மாதிரி! :))))))))))))

  ReplyDelete
 18. உங்களை பார்க்கணும் என்கிற ஆவல் இருந்தது. நீங்க டூரில் இருக்கையிலேயே படம் வந்து விட்டதே எனக்கும்:)! நல்லாயிருக்கீங்க ஆண்ட்டி:)!

  //ஆரெம்கேவியில் நேச்சுரல்ஸ் புடவையும்//

  ரைட் ரைட்:)!!!

  ReplyDelete
 19. இது போல மண்டபம் மாறிப் போய் சாப்பிட்ட கதையை நான் கல்யாணமாம் கல்யாணம் என்னும் பதிவில் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளேன். படிக்கவும். நன்றி.

  ReplyDelete
 20. வாங்க, ரா.ல. எப்படி இருக்கீங்க?? நல்லா இருக்கீங்களா?? :D ரொம்ப நாளாச்சு பார்த்து. நேச்சுரல்ஸ் கலர்லே புடைவைக்குச் சொல்லி வச்சாச்சு அம்பிட்டே, இன்னும் வரலை. :P

  ReplyDelete
 21. வாங்க பித்தனின் வாக்கு, நல்லவேளையா நாங்க மண்டபம் மாறிப் போயிருந்தாலும் சாப்பிடலை, மொய்யும் கொடுத்துடலை, எனக்கு எப்போவுமே கொஞ்சம் சந்தேகம் இருந்துட்டே இருக்கும்! :)))))))))

  ReplyDelete