எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 29, 2010

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

காலையில் கிளம்பும் முன்னரே பூசாரிக்குத் தொலைபேசி நாங்கள் வரப்போவதைத் தெரிவித்தோம். ஏற்கெனவே அவரிடம் இரண்டு முறை உறுதி செய்து கொண்டிருந்தோம். என்றாலும் பால் வர தாமதமாகும் என அவர் யோசித்தார். போய்ப் பார்த்துக்கலாமேனு நாங்கள் கிளம்பிச் சென்றோம். இங்கே அபிஷேஹம், மாவிளக்கு போன்றவற்றை முடித்துக்கொண்டு, அந்த ஊரிலேயே இருக்கும் பெருமாள் கோயிலின் திருப்பணிக்காக பாலாலயம் ஏற்படுத்தும் நிகழ்விலும் பங்கு கொள்ள வேண்டும்.பெருமாளையே காணோம் இந்தக் கோயில் பெருமாளைத் தான் தூக்கிக்கொண்டு போயிட்டு பின்னர் திலகவதி அவர்களிடம் நேரில் சென்று மனுக்கொடுத்து வேண்டுகோள் விடுத்துப் பின்னர் கண்டு பிடிக்கப் பட்டது.பெருமாள் கிடைத்துவிட்டார் இன்னும் உற்சவர் கைக்கு வரவில்லை. ஆனாலும் அறநிலையத் துறையின் அநுமதி வாங்கித் திருப்பணியைக் கார்த்திகை மாசமே ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதிலிருந்து அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். போகமுடியலை. இப்போ நாங்க நிச்சயம் வந்துவிட்டோம் என்பதை உறுதி செய்து கொண்டு பாலாலயம் அமைக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள். எங்களுக்கே கும்பகோணம் வந்துதான் தகவல் தெரிந்தது.

மாரியம்மன் கோயிலில் பூசாரி ஊரில் நடந்த சில அசம்பாவிதங்களினால் கோயிலின் புனிதம் பாதிக்கப் பட்டதைச் சொல்லி வருந்தினார். அதோடு இனி தான் பூசாரியாக இருக்கவே யோசிக்க வேண்டி இருக்கிறது என்றும் சொன்னார். மனதே வேதனையில் ஆழ்ந்து போக, எப்படியோ அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து மாவிளக்கையும் அவசரம், அவசரமாப் போட்டுவிட்டுக் கிளம்பினோம் பெருமாள் கோயிலுக்கு. இந்தப் பூசாரி மாரியம்மன் கோயிலின் பரம்பரை பூசாரி. அவங்க அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்திலிருந்தே பூசாரியாக இருந்து வந்திருக்கின்றனர். இதற்காக அவர் பெற்றுக்கொள்ளும் சம்பளமோ அந்தக் காலத்தில் என்ன கொடுத்தாங்களோ அதுதான் இப்போதும். என்றாலும் கோயிலை விடக்கூடாது என பக்தியோடு செய்து கொண்டிருக்கிறார். இனி எப்படியோ? மனது கவலையில் ஆழ்ந்தது.

பெருமாள் கோயிலில் பரம்பரை பட்டாசாரியார் வாரிசே வந்துவிட்டார் பாலாலயம் எடுக்க. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவரும் நன்கு கற்றறிந்தவர் என்பதால் நியமங்கள் குறையாமல் நல்லபடியாக பாலாலயம் எடுத்து முடிந்தது. நாங்கள் அதன் பின்னர் கும்பகோணம் திரும்பும் போது மணி மூன்றாகிவிட்டது. திரும்பும் வழியிலேயே மறுநாள் சனிக்கிழமை இரவு பேருந்துக்கு முன்பதிவு செய்யவேண்டும் என்று செய்து கொண்டோம். இம்முறை நம்ம ம.பா.வுக்கு அரசுப் பேருந்து வேண்டாம்னு தோணிப்போய் ரதிமீனாவில் முன்பதிவு செய்துவிட்டார். இரவு பதினொன்றரைக்குத் தான் வண்டி. அறைக்குப் போய் ஓய்வு எடுத்துக்கலாம்னு படுத்தால், உடம்பில் ஒரே அரிப்பு. படுக்கையில்தான் ஏதோனு பார்த்தால் சின்னச் சின்னதாய் எறும்புகள் தான். அதைத் தட்டிட்டுப் படுத்தாலும் மீண்டும் மீண்டும் அரிப்புத் தாங்கலை.

கம்பளிப்பூச்சி கடிச்சாத் தடிக்குமே அது போலத் தடிச்சுப் போச்சு. கட்டி இருந்த புடவைக்கும் மேலே அரிப்புத் தாங்கலை. புடைவைக்கும் மேலே??? அட??? ஆமாம், ஒருவேளை இந்தப் புடைவை ஒத்துக்கலையோ??? ம்ம்ம்ம்ம்ம்?? எனக்குச் சில துணிகள் ஒத்துக்கவே ஒத்துக்காது. அதே போல் சில கடையில் வாங்கிய துணிகளும் ஒத்துக்கறதில்லை. இது எந்தக் கடையிலே வாங்கினதோ? ஓசி வந்த புடைவை, அண்ணா சஷ்டி அப்தபூர்த்திக்குக் கொடுத்தது. இதான் ஒத்துக்கலையா?? கடவுளே! காட்டன் புடவையோ, சிந்தடிக் புடவையோ, சில்க் காட்டன் புடைவையோ சில குறிப்பிட்ட ப்ராண்ட் புடவைகள் தான் ஒத்துக்குது. இது ஒத்துக்கலைனு முன் கூட்டியே எப்படிக்கண்டு பிடிக்கிறது?? ஒரு நாள் முழுக்க அல்லது பகல் பூராக் கட்டி இருக்கும்போது இப்படி அரிப்பு வந்தால் அப்போ அது புடைவையினால்தான் அப்படினு எனக்கே புரியும். (புத்திசாலியாக்கும்) தலை எழுத்தேனு நொந்து நூலாய்ப் போய்ப் புடைவையை மாத்தினேன். ஹிஹிஹி, அதான் அம்பிட்டே கேட்கிறதெல்லாம் வஸ்த்ரகலா, நேச்சுரல்ஸ், பரம்பரா, நகாசு, ரிவெர்சிபிள்னு கேட்டுடறது. ஒண்ணும் பண்ணாது பாருங்க! பிரச்னையே இருக்காதே! :P

என்னதான் மாத்தினாலும் 24 மணி நேரம் பிடுங்கல் தாங்காது. எண்ணெய்க்காப்புச் சார்த்தினால் தான் சரியாகும். அதுக்கு ஊருக்குப் போகணுமே. அதுவரை தாங்கிக்கணுமே! வேறே வழியே இல்லை. மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கவும் முடியாத நிலைமை. ரங்க்ஸ் கிட்டே சொல்லலை முதல்லே. அவரே பார்த்துட்டார் கை, முகம் எல்லாம் அதீதமாய்ச் சிவந்து தடித்திருப்பதை. தலையில் அடிச்சுண்டார். என்னதான் புடைவை ஒத்துக்குமோ னு அலுப்பு வேறே. நல்ல கைத்தறிக் காஞ்சீபுரம் பட்டு ஒத்துக்குமே , அதிலும் கோ ஆப்டெக்ஸ் என்றால் இன்னும் காரண்டியே, மினிமம் ஐந்தாயிரம் ரூபாய்தான், அதே வாங்கிக் கொடுங்கனு சொன்னேன். பதிலே இல்லை.

அதற்குள் மறுநாள் எட்டுக்குடி, சிக்கல், எண்கண், திருவாரூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை செல்லத் திட்டம் போட்டு, (ராத்திரி பதினொன்றரை வரை பொழுது போகணுமே) டாக்சிக்காரரை வரச் சொல்லி இருந்தோம். அவரிடம் பேசி முடிவு செய்துவிட்டு காலை ஆறரைக்கெல்லாம் கிளம்ப நேரம் குறித்துவிட்டுப் படுத்தோம். மறுநாள் விடிந்தது, அன்று நடக்கப் போவதை அறியாமல் நாங்களும் ஏற்கெனவே செய்த முடிவின் படி எண்கண் வழியே திருவாரூர், எட்டுக்குடி, சிக்கல் செல்ல ஆயத்தமானோம்.

பாலாலயம் படங்கள்

எல்கே, படங்களைஇப்போத் தான் சேர்த்தேன், தனியாகக் கொண்டுவர முயன்று முடியலை, ராமசாமி கோயில் படங்களோட சேர்ந்து தான் வருவேன்னு அடம், என்ன பண்ணறதுனு புரியலை. அதன் கீழேயே பாருங்க. முடிஞ்சா விளக்கம் சேர்க்கிறேன். நன்றி. :D

9 comments:

 1. //திலும் கோ ஆப்டெக்ஸ் என்றால் இன்னும் காரண்டியே, மினிமம் ஐந்தாயிரம் ரூபாய்தான், அதே வாங்கிக் கொடுங்கனு சொன்னேன். பதிலே இல்லை. //

  pavam rangs...

  ReplyDelete
 2. பாலாலயம் என்றால் பால் அபிஷேகமா?

  ReplyDelete
 3. @ஜெயஸ்ரீ
  //பாலாலயம் என்றால் பால் அபிஷேகமா?//

  இல்லை . பிரதிஷ்டை செய்யப்பட்ட சாமி சிலையை அந்த இடத்தில் இருந்து அப்புறபடுத்த செய்யபடுவதுதன் பாலாலயம்

  ReplyDelete
 4. வாங்க ஜெயஸ்ரீ, பாலாலயம் என்றால் கருவறையில் ஏற்கெனவே மூர்த்தி பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் இடத்திலிருந்து அங்கே உள்ள ஜீவசக்தியை குடத்தில் ஆவாஹனம் செய்து வைப்பது. கருவறையிலும் வேலை இருந்தால் மூர்த்தங்கள் அப்புறப்படுத்தப் படும், எங்க கோயிலில் கருவறையில் வேலை இல்லை, ஆகையால் மூர்த்தத்தின் ஜீவ சக்தியை ஆவாஹனம் செய்ததும் கருவறையை மூடிவிடுவார்கள். இனி அந்தக் கும்பமே பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அதே போல் ஆஞ்சநேயருக்கும் ஒரு சிறிய கும்பம். அவற்றுக்கே கும்பாபிஷேஹம் வரை நித்தியப்படி வழிபாடுகள் நடக்கும்.

  ReplyDelete
 5. எல்கே, நன்றிப்பா ஜெயஸ்ரீக்கு விளக்கம் கொடுத்தமைக்கு.

  pavam rangs...//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
  இது உங்க பின்னூட்டத்துக்கு பதில்! :D

  ReplyDelete
 6. //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
  இது உங்க பின்னூட்டத்துக்கு பதில்! :D//
  avaroda sogam enakuthan purium :D

  ReplyDelete
 7. அச்சா! energy transformation? More or less இந்த principle தான் ஈம காரியங்களில் "கல்" லுக்குமா?

  ReplyDelete
 8. திருச்சேரை பக்கத்தில் தேப்பெருமாநல்லூர் போகவில்லையா? 2 வருஷம் முன்னால போயிருந்தோம். எனக்கு பிடித்த கோவில்.quiet!!.எல்லா அமைப்பு விக்ரகங்களும் மத்த கோவில் முறைப்படி இல்லாம வித்யாசமா இருக்கு. இந்த கோவிலில் சிவனாருக்கு அர்ச்சனை ருத்ராக்ஷத்தால். ப்ரசாதமா ஆளுக்கு ஒரு ருத்ராக்ஷம் தந்தார் கோவில் குருக்கள். விசேஷ நாட்களில் ருத்ராக்ஷ கவசம் , வேற எங்கையும் பார்க்க முடியாது. பிள்ளையார் கழுத்தில பைரவர் மாலை, அவருக்கு கீழே பைரவர்கள் சிலை. ரொம்ப பழைய கோவில். அற்புதமான சிலைகள். அம்பாள் சிலை காலை முன்னால எடுத்து வைக்கிறமாதிரி இருந்தது. வாயும் பேசறமாதிரி கொஞ்சம் குவிஞ்ச மாதிரி அமைந்திருப்பது போல் இருக்கு. 12 ஜ்யோதிர் லிங்கம் தரிசனம் தந்த கோவிலாம்.ஏதோ ஒரு பாம்பு வருஷத்துல ஒருநாள் ஸ்வாமியை விசிட் பண்ணுமாம், குருக்கள் சொன்னார். சீந்த ஆள் இல்லாம இருந்தது:(( எங்களை வரவேற்றதே வாசலில் படுத்துண்டு இருந்த சோனி பைரவர் தான் .வயசான innocent, enthusiastic சோனி குருக்கள்!! வருத்தமா இருந்தது , மக்களுக்கு அருமை தெரியலையேனு:((

  ReplyDelete
 9. கீதா நீங்க பகவான் சேவிக்கப் புறப்படுகிறீர்கள் என்றால் கூடவே பிரச்சினையும் எறும்பு ரூபத்தில வரதே. இப்போ சரியாகி இருக்கும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete