எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 28, 2010

சர்க்கரை நோய்க்கான நீண்டநாள் கை மருந்து உங்கள் கைவசமே!

சுல்தான் அமீரகத்திலே என்ன செய்யறது மாவிலைக்கும், வேப்பிலைக்கும், கறிவேப்பிலைக்கும், துளசிக்கும் எங்கே போகனு கேட்டிருந்தார். அதை ஒரு மாதிரியா சமாளிச்சுட்டாலும், தகுந்த பதில் கொடுக்கலையேனு மன வருத்தமாய் இருந்தது. அப்போது நண்பர் மதுரபாரதி அவர்கள் ஒரு வீட்டுக்குறிப்புக் கொடுத்தார். இது அனைவராலும் இயலும். இயலக் கூடிய ஒன்றே. அநேகமாய் எல்லார் வீட்டிலும் ஜீரகம், வெந்தயம் இருக்கும். அமீரகத்திலேயும் கிடைக்கும் இல்லையா சுல்தான் அவர்களே? இந்தியாவுக்கு வருகை தரும்போது அல்லது யாரானும் உடனடியா வந்தா அவங்க கிட்டேச் சொல்லி சுண்டைக்காய் வற்றல் உப்புப் போடாதது வாங்கி வச்சுக்குங்க. எல்லாம் சம அளவு இருக்கணும். நூறு கிராம் வெந்தயம்னா, ஜீரகம் நூறு, சுண்டை வத்தல் நூறு. மூன்றையும் வெறும் வாணலியில் பொன்னிறமாக வரும்வரை வறுத்து அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீ ஸ்பூன் சாப்பிட்டு வரவும். சர்க்கரை கிட்டேயே வராது. நூறு மடங்கு உத்திரவாதம் தருகிறார். சர்க்கரை அளவு குறையாமப் பார்த்துக்கணும். சர்க்கரை அளவு குறைந்ததுனு தெரிஞ்சதுமே அவ்வப்போது காபி, டீயில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும் அல்லது எலுமிச்சைச்சாறில் வெல்லம் சேர்த்துச் சாப்பிடவும். அல்லது ஆடை நீக்கிய பாலில் பனங்கல்கண்டு போட்டுச் சாப்பிடவும்.

கஷாயம் போட்டுத் தினம் சாப்பிட முடியாதுனு சொல்றவங்க எல்லாம் ஒரு நாள் ஒரு அரை மணி செலவு செய்து (அவ்வளவு நேரம் கூட ஆகாது) இதைத் தயார் செய்து வைத்துக்கொண்டால் பின்னர் ஒரு மாதத்துக்குக் கவலையில்லாமல் இருக்கலாமே! முயலுங்கள்! சர்க்கரையை வெல்லுங்கள்! அனைவருக்கும் சர்க்கரை இல்லாமல் இருக்க வாழ்த்துகள்!

7 comments:

  1. நன்றி.எங்கப்பா கூட சுகர் பேஷண்ட்தான்.பனங்கற்கண்டு என்பது கருப்பட்டிதானே?

    ReplyDelete
  2. பனங்கல்கண்டு வேறே, கருப்பட்டி வேறே. கருப்பட்டி வெல்லம் மாதிரி இருக்கும். பனங்கல்கண்டு கூந்தல் பனங்கல்கண்டுனு கேளுங்க. எங்கே இருக்கீங்க தெரியலை. சில கல்கண்டு பொடிப்பொடியாக மிளகு மாதிரி இருக்கும். சிலது கட்டியாகவே இருக்கும். தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலம்.

    ReplyDelete
  3. வளைகுடாவில் கறிவேப்பிலை நிறையவே கிடைக்கிறது.சுல்தான் பொட்டிக்கடை,ஜமியா காய்கறிப் பகுதிகளை அதிகம் சுற்றுவதில்லை என நினைக்கிறேன்:)

    வளைகுடாக்களில் பொருட்கள் கிடைப்பதில்லை.அதனால் பரிட்சித்துப் பார்க்கும் சாத்தியமில்லையென்றாலும் அனைத்தும் கிடைக்கும் தமிழகத்தில் தொலைக்காட்சிகளின் மருத்துவர் பகுதியில் அதிகமாக பேசப்படும் பொருள் சர்க்கரை நோய்.தொலைபேசியில் மருத்துவரிடம் பேசுபவர்கள் நான் அந்த மாத்திரை சாப்பிடுகிறேன்,இந்த மாத்திரை சாப்பிடுகிறேன் என்ற குரல்கள் மட்டுமே அதிகம் கேட்கின்றன.

    ReplyDelete
  4. வாங்க ராஜநடராஜன், நாங்க எப்போவுமே வீட்டு மருந்தையும் விடறதில்லை. ஜலதோஷம்னாக் கூட வீட்டில் இருக்கும் தூதுவளை இலைகளைப் பறிச்சு ரசமோ, அல்லது பாலில் போட்டுக் கொதிக்கவைச்சோ சாப்பிடுவோம், அல்லது துளசியோடு சேர்த்துக் கஷாயம் சாப்பிடுவோம். இதம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும், சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும். :D மாத்திரைகளைப் படிப்படியாகத் தான் குறைக்கணும். திடீர்னும் குறைக்கக் கூடாது. வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவியை வைச்சுத் தினமும் பரிசோதிச்சுக்கணும்.

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள பதிவு தந்திருகிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  6. அது படிக்கும் பொழுதே நினைச்சேன். வெளிநாடுகள்லே இருக்கறவங்க என்ன செய்வங்கன்னு. இது பரவாயில்லை. எல்லாமும் இண்டியன் ஸ்டோர்ஸ்லேயே கிடைக்கிறது.

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு அம்மா!!
    கொஞ்ச நாள் முன்னாடி கிடைச்சிருந்தா சுகரினால் பாதிக்கப்பட்ட என் சகோதரருக்கு உபயோகமா இருந்திருக்கும்..

    ReplyDelete