எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 02, 2010

ஆஹா, வந்துடுச்சே, ஆசையில் சொல்லி விட்டேன்!

அம்மா எங்கேயோ போய் அலைஞ்சு திரிஞ்சு சாப்பிட ஏதானும் கொண்டு வரா. அது வரைக்கும் குழந்தைகள் எல்லாம் அலையோ அலைனு அலைஞ்சு திரிஞ்சுண்டு இருக்குங்க. பசி எடுக்காத வரைக்கும் விளையாடிக்கிறது. ஒண்ணோட ஒண்ணு விளையாடும்போது பார்க்கவே அழகாய்த் தான் இருக்கு. படம் எடுக்கத் தயாராப் போனால் ஓடிப் போய் ஒளிஞ்சுக்கறது. அதிலும் அந்த வெள்ளை இருக்கே! மாடிப்படியிலே உள்ள முதல் லாண்டிங்கிலே போய் ஒளிஞ்சுண்டு தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்துக்கிறது. நாம வேறே கவனமா இருக்கோமானு தெரிஞ்சுண்டு ஓடிப் போறது. இல்லைனா மாடிக்கே போயிடும். அங்கே மேலே இருக்கும் ஷெட்டிலே தான் மொட்டை மாடிக்குப் போற வழியிலே குடித்தனம் நடக்குது போல. நான் சில மாசங்களாய் மாடிக்கு ஏறலை.

ஆனால் இந்த அம்மா வழக்கமா வருமே அது இல்லை. கொஞ்சம் புதுசா இருக்கு. குழந்தைங்களுக்குப் பசி வந்துடுத்துன்னா ஒரே அமர்க்களம் தான். ஒண்ணு வெராந்தாவிலே இருக்கும் கதவிலே ஏறி இடுக்கு வழியா உள்ளே நுழைஞ்சு அம்மா இங்கே இருக்காளானு பார்க்கிறது. இன்னொண்ணு வாசல் கேட்டிலே ஏறிப் பார்க்கிறது. அவங்க தான் ரெண்டு பேரும் பார்க்கிறாங்களே நமக்கு என்னங்கறாப்போல் இன்னொண்ணு கொஞ்ச தூரத்திலே படுத்துண்டு குரல் கொடுத்துப் பார்க்கிறது. ஒண்ணு நல்ல பால் வெள்ளை. கொஞ்சம் கொழு கொழுனு இருக்கு. இன்னொண்ணு சாம்பல் நிறம், இன்னொண்ணு அம்மா மாதிரி ப்ரவுனும், க்ரேயும் கலந்த நிறம். அம்மாக்காரி இரண்டு நாளைக்கு முன்னால் பெரிய எலி ஒண்ணைக் கவ்விண்டு வந்துடுத்து. உடனே எல்லாம் மாடிக்குப் போயாச்சு டின்னர் சாப்பிட. அன்னிக்கு ஸ்பெஷல் டின்னர் போல. ஆனா ஒண்ணு சாப்பிட்டது தெரியாம இடம் சுத்தம் பண்ணி வச்சுடறது.

இப்போக் கொஞ்சம் கொஞ்சம் என்னோட பழகியாச்சா?? காலம்பர வாசல் தெளிக்கிறச்சே கூடவே வந்து வெள்ளை உட்கார்ந்துக்கும். அது பாட்டுக்கு விளையாடும். தண்ணி தெளிக்கிறச்சே மட்டும் ஓடிப் போய் ஒளிஞ்சுக்கும். குடு குடுனு அங்கேயும், இங்கேயும் ஓடி ஓடி சுறு சுறுப்பாய் விளையாடிக்கும். இல்லைனா மாடிப்படியிலே ஒளிஞ்சுண்டு எனக்கு அட்டாச்சு காட்டும். கொல்லையிலே துளசிக்கு விளக்கு ஏத்திட்டா அந்த வெளிச்சத்தைப் பார்த்துட்டு ஒரே சந்தோஷம் தாங்கறதில்லை. அந்த வெளிச்சத்தோட விளையாட்டு. இன்னிக்குக் கொல்லைப் பக்கம் வராந்தாவுக்கு வெளியே எல்லாமும் அம்மாவோட உட்கார்ந்திருந்ததுங்களா? சரினு போய்ப் படம் எடுத்துடலாம்னு தயார் பண்ணிட்டுப் போனா எல்லாம் அதுக்குள்ளே போயிடுத்து. அம்மா சுவர் ஏறிக் குதிச்சு பின்னாடி வீட்டுக்குப் போக, இதுங்க சுவர் ஏறத் தெரியாமல் கீழேயே நின்னுண்டு குரல் கொடுக்குதுங்க. நல்லவேளையா சைடிலே உள்ள குளியலறை வெண்டிலேட்டரை அடைச்சு வச்சிருக்கோம். இல்லாட்டி அதிலே ஏறிண்டு கீழே இறங்கத் தெரியாம! ஒரு தரம் ஒரு குட்டி அப்படி ஏறிடுத்து, அம்மாவும் ரொம்ப நேரமா எங்கேயோ போயிட்டு வரவே இல்லை. மத்தது எல்லாம் ஒரே கத்தல். தாங்கலை. சரினு இவர் எடுத்துக் கீழே விடலாம்னு போனால் பயப்படறது. கீழே விழுந்து வைக்குமோனு எங்களுக்கும் பயம். அப்படியே விட்டுட்டு வந்துட்டோம். அப்புறமா அம்மா எங்கேருந்தோ வந்து கவ்விண்டு போச்சு.

இது போறாதுனு சமையலறை ஜன்னலிலே ஒரு தரம் அணில் கூடு கட்டிட்டு, அணில் பிள்ளைகள் சமையலறையிலே குறுக்கும், நெடுக்குமாச் சத்தம் போட்டுண்டு போக, அம்மா அணில்?? அப்பா அணில்?? தெரியலை. அதுங்கிட்டே ஏகத்துக்குக் கோவிச்சுண்டேன். உன்னோட குழந்தைங்களை எடுத்துண்டு முதல்லே இடத்தைக் காலி பண்ணு. இல்லாட்டி மிதிச்சுத் தொலைச்சுடப் போறேன்னு திட்டினேன். என்ன புரிஞ்சதோ? வாலைத் தூக்கிண்டு நான் சொல்றதையே கவனிச்சது. அப்புறமாப் பார்த்தா அணில் பிள்ளைகளை அங்கே காணோம். அப்புறமா நாங்களும் கீழ்க் கதவுகளை மூடறதில்லை. இதுங்களுக்கெல்லாம் எங்க வீடுதான் மெடர்னிடி ஹோம். இன்னும் பைரவர் தன் குடும்பத்தோட வரலை. ஆனால் அவர் வந்தால் பைரவி குட்டிகள் இருக்குமிடம் போக முடியாமல் கடிக்க வந்துடும். ஜாக்கிரதையா இருந்து தொலைக்கணும். ஏற்கெனவே ஒரு குட்டி பைரவருக்குச் சாதம் போட்டுண்டு இருக்கோமோ, தெருவிலே போனால் கூடவே வருது. கோலம் போடும்போது அதுக்குத் தான் ஏதோ தரேன்னு நினைச்சுண்டு கிட்டே வந்து நக்க வருது. எல்லாம் நேரம்!

17 comments:

  1. //இதுங்களுக்கெல்லாம் எங்க வீடுதான் மெடர்னிடி ஹோம். இன்னும் பைரவர் தன் குடும்பத்தோட வரலை. //
    :)
    http://vaarththai.wordpress.com

    ReplyDelete
  2. ஆஹா.... சுப்புக்குட்டியோன்னு நினைச்சுப் படிச்சேன்:-)))))

    மியாவ் குடும்பமுன்னா நீங்க ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  3. வாங்க சிதம்பரம் செளந்தரபாண்டியன், எவ்வளவு பெரிய பேரு?? எப்படிங்க எழுதறீங்க? கை வலிக்கலை?? :P

    நன்றிங்க, முதல்வரவுக்கும் ரசிப்புக்கும்

    ReplyDelete
  4. வாங்க துளசி, சுப்புக்குட்டியெல்லாம் என்னமோ தெரியலை கொஞ்ச நாட்களாக் கண்ணிலேயே படக் காணோம். இன்னும் ஒருத்தர் கூட அன்பா விசாரிச்சார். சரி கண்ணிலே பட்டால் அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன்.

    இதை எழுதும்போது உங்க கோகியைத் தான் நினைச்சுட்டு எழுதினேன். என்ன செய்யறது? அதான் இப்போ இந்த ஆசையே வச்சுக்கலை, வேண்டாம்னு விட்டாச்சு! :(

    ReplyDelete
  5. வாங்க கோபி, சிரிச்சால் என்னப்பா அர்த்தம்?? புரியலையே?

    ReplyDelete
  6. எல்கே?? என்ன அலுப்பாச் சொல்றீங்க போல???

    ReplyDelete
  7. வீடு முழுக்க ஜேஜேன்னு இருக்குன்னு சொல்லுங்க :-))

    ReplyDelete
  8. சுப்புக்குட்டியை எல்லாம் மியாவ் சாப்டு இருக்கும். எங்க வீட்டிலேயும் அம்மா மியாவ் இப்பதான் ௪ குட்டிகளையும் அழைச்சுண்டு வரது. வேற எதோ இடம் கிடச்சுருக்கு போல.

    ReplyDelete
  9. @திவா, ஓஹோ, சுப்புக்குட்டியை மியாவ் சாப்பிடுமா என்ன?? அது கடிச்சிடாது இதை?? ம்ம்ம்ம்ம்?? விஷம் இல்லையோ??

    ReplyDelete
  10. வாங்க சாரல், வீட்டுக்குள்ளே விடறதில்லைனு வச்சுட்டோம். போதும், போதும் இதுங்களை வளர்த்து ஆளாக்கி ஏதாவது ஒண்ணுன்னா மனசுக்குக் கஷ்டப் பட்டு, ம்ஹும், சரிப்பட்டு வரலை! :(

    தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி! :D

    ReplyDelete
  11. தாராளமா சாப்பிடுமே! நான் வெஜிடேரியன்தானே!
    ஆமாம் பாம்பு விஷத்தை அப்படியே சாப்பிடலாமே ஒண்ணுமே ஆகாது...வயித்திலே புண் இருந்தாலொழிய.

    ReplyDelete
  12. உங்க ப்லாகும் இப்ப பாஸ்வேடர்ட் கேக்குது...:P

    ReplyDelete
  13. அப்படியா?? பூனை பாம்பைச் சாப்பிடும்கிறது எனக்குப் புதுச் செய்தி! ம்ம்ம்ம் விஷம் ஒண்ணும் பண்ணாதா??அப்போ சரி.

    ReplyDelete
  14. ம்ம்ம்ம்?? உங்களையும் பாஸ்வேர்ட் கேட்டதா?? ஹிஹிஹி, இப்போத் தான் திவாகரோட ப்ளாகிலே கிருஷ்ணமூர்த்தியோட விவாதம் இதுக்காக. :)))))) என்னைக் கேட்கலையேனு சொல்றார். காரணம் கண்டு பிடிச்சுட்டேன். ஜிமெயிலில் இருந்து பின்னூட்டம் கொடுத்தால் மட்டும் பத்தலை, ப்ளாகிலேயும் ஏதானும் எழுதி இருக்கணும்னு சொல்லுதுனு நினைக்கிறேன். ப்ளாகிலே பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுத்துட்டுப் போனால் கேட்கிறதில்லை. :)))))))) ஹிஹிஹி, நான் தான் வியர்டுன்னா என்னோட சேர்ந்த எல்லாமுமா???? :)))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  15. அப்படி இல்லைன்னு நினைக்கிறேன். ரேண்டமா அப்பப்ப கேக்கும் போல இருக்கு. some times we reconfirm password ன்னு ஒரு மெசேஜ் பாத்தேன். அடுத்த தரம் பாத்தா மேலும் தகவல் சேகரிக்கணும்.

    ReplyDelete
  16. @திவா, அப்படிங்கறீங்க?? ஆனால் நான் கவனிச்ச வரைக்கும், நம்ம சொந்த வலைப்பக்கத்திலே பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுத்துட்டு மத்த ப்ளாகுக்கு ஜிமெயிலில் இருந்து போனாலும் கேட்கிறதில்லை. நான் முதல்லே லாகின் பண்ணறது ஜிமெயிலில் தான். அதிலே மெயில் கொடுக்கும் நண்பர்களின் பதிவுகளுக்கு என்னோட பதிவுக்குள்ளே நுழையாம ஜிமெயிலில் இருந்து நேரடியா போனாக் கட்டாயமாய் ஐடி, பாஸ்வேர்ட் கேட்குது! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்???????

    ReplyDelete