எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 08, 2011

ஜெயிக்கப் போறது யாரு?? கடும் போட்டி!

தினம் தினம் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் இதே பிரச்னை! இதே பேச்சுக்கள்! இதே மாதிரியான பாடல்கள்! காட்சிகள்! அதிலும் எல்லாத் தொலைக்காட்சியும் சேர்ந்து இப்படிப் பாடாய்ப் படுத்துகின்றன. என்ன ஒரே தொந்திரவாப் போச்சு! ஒண்ணுமே புரியலையே! சன்னில் ஒண்ணு, ஜெயாவில் ஒண்ணு, விஜயில் இன்னொண்ணு, ராஜில் வேறொன்றுனு வெவ்வேறு நிகழ்ச்சிகளையும் மாற்றி மாற்றிப்போட்டுப் பார்த்தாச்சு. ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. எல்லாத்திலேயும் ஒரே மாதிரிதான் வருது. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?

சச்சின் வந்து பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி னு சொல்றார். இன்னொரு விளம்பரத்தில் காம்ப்ளான் பையன் வந்து காம்ப்ளான் சாப்பிட்டால் தான் உயரமே வரும்னு சத்தியம் பண்ணறான். ஹார்லிக்ஸோ வெறும் உயரமும், எனர்ஜியும் என்ன பண்ணும்? நாங்க எல்லாத்தையும் சேர்த்துக் கொடுக்கிறோமே, சுறுசுறுப்பா இருப்பாங்க, அத்லெட்டா ஆகலாம்னு பி.டி.உஷா, ஷைனி வில்ஸன்னு எல்லாருமே வந்து சத்தியம் பண்ணறாங்க. அதோட ஹார்லிக்ஸ் குடிச்சாத் தான் படிச்சதெல்லாம் நினைவில் இருக்குமாம். கணக்கெல்லாம் நல்லாப் போடலாம். முதல்லேயே சொல்லி இருந்தால் சாப்பாடு சாப்பிடாம ஹார்லிக்ஸே குடிச்சுட்டு ராமாநுஜத்துக்கும் சகுந்தலா தேவிக்கும் போட்டியா வந்திருக்கலாம். இதெல்லாம் பத்தாதுனு சிம்ரன் வேறே வந்து கம்ப்யூட்டரைப் போட்டுப் போட்டுப் பார்த்துட்டுக் கடைசியிலே ந்யூட்ரி ஸ்மார்ட் குடிக்கிற அவங்க பிள்ளைக்குத் தான் இதெல்லாம் வரும்னு சொல்லிடறாங்க. என்னடா இதுனு பார்த்தா போர்ன்விடாகாரங்க, லிட்டில் சாம்ப்ஸ் ஆகணும்னா போர்ன்விடா குடிக்கணும்னு சொல்றாங்க. பேசாம(பேசிண்டே தான்) எல்லாத்தையும் வகைக்கு ஒண்ணா வாங்கி வச்சுட்டு எல்லாத்திலேயும் ஒரு ஒரு ஸ்பூன் போட்டுக் கலந்து இந்த விளம்பரப் படம் எடுக்கிறாங்களே அவங்களை எல்லாம் கூப்பிட்டுக் குடிக்க வைக்கணும்னு ஒரு அல்ப ஆசை!

சரி இதெல்லாம் போகட்டும், சோப்புப் போட்டுத் துணியைத் துவைக்கிற காலமெல்லாம் மலையேறியாச்சு. பவுடர் வந்தாச்சு. நாம மட்டுமா பவுடர் போட்டுக்கணும். துணியும் போட்டுக்கட்டுமே. அதிலே வேறே போட்டி. ஒரு குட்டிப் பையர் கீழே வேணும்னே விழுந்து புரண்டுட்டுப் போறார் வீட்டுக்கு. அவங்க அம்மாவோ பையனை ஒரு சாத்துச் சாத்தாம கறை நல்லதுனு சொல்லிட்டுச் சும்ம்ம்ம்ம்ம்ம்மா அப்ப்ப்படி சர்ப் எக்ஸெலில் ஒரு முக்கு முக்கி எடுக்கிறாங்க. துணி வெண்மையோ வெண்மை. ம்ஹும், இது சரியா வராது. நானும் முயற்சி பண்ணினேன். தோட்டத்து வாழைக்காயின் கறையும், மாங்காய்ப் பாலும் பட்டு வீணான புடைவையை சர்ப் எக்ஸெலில் முக்கிட்டுத் தோய்ச்சா, ஹிஹிஹி, வெளுத்தது. எது தெரியுமா?? புடைவையின் கலர்! கறை அப்படியே இருந்தது. இது என்ன கறைனு கேட்டவங்களை எல்லாம் இது ஒரு டிசைன், நானே கையால் போட்டேன்னு சொல்லிச் சமாளிச்சுக்கறேன். வேறே வழி??

இப்போ ஒரு வாரமாக் கறை கெட்டதுனு கண்டு பிடிச்சிருக்காங்க. ஒரு காலேஜ் பொண்ணு மழையிலே நனைஞ்சு கீழே விழுந்து சேத்திலே புரண்டுட்டு வீட்டுக்குப் போறா. சேச்சே இல்லைங்க, மெளனராகம் ரேவதியெல்லாம் இல்லை. இது வேறே. வீட்டுக்குப் போனா அங்கே அவளைப் பெண் பார்க்க வந்திருந்த ஒரு பெண்மணி, "ம்ஹும், இந்தப்பொண்ணு எங்களுக்கு வேண்டாம். கறை பட்ட பெண்" அப்படினு சொல்றாங்களாம். விளம்பரமே நல்லா இல்லையேனு நினைச்சேன்.
உடனே பவர் டிடர்ஜெண்டாலே அந்தப் பெண்ணின் தாத்தாவோ, அப்பாவோ தோய்ச்சுடும்மா, கறை கெட்டதுனு புரிஞ்சுக்கோ, யாரானும் கறை நல்லதுனு சொன்னா நம்பாதேனு சொல்றாங்க. அந்தப் பொண்ணும் ஒருவாரமா வந்து கறை கெட்டதுனு சத்தியம் பண்ணிட்டு இருக்கு. இப்போ என்னோட தலையாய சந்தேகம்: இரண்டிலேயும் கறை போகவே இல்லையே! அப்போ ரெண்டையும் தூக்கிக் கடாசிடலாமானு யோசிக்கிறேன். உங்க கருத்து என்ன?? ஒரே தலை சுத்தல்! :P

8 comments:

 1. ம்... தேர்தல் சமாசாரமோன்னு நினைச்சேன்!! ADs ஆ . ப்ரம்மி ராம்தீர்த், அமிதப் பச்சன் வற ஆயில்,ஊர்ப்பட்ட மஸாலா ஆச்சி, சக்தி அணில் நு இப்ப இந்த ராஜேந்தரோட மசாலா வேற புதுக்கடி!! இன்ஸ்யூரன்ஸ் ல பீவீ கோ சுனோ நு ஒன்னு வருமே அது ??

  ReplyDelete
 2. இந்த விளம்பரத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது ஒரு புறம் இருக்க

  இந்த விளம்பரத்துக்கு ஆகும் செலவும் பொருளின் விலையோடு சேர்த்து நாம் வாங்கி பயன்படுத்துவது

  இன்னும் நம்மை ஏமாளியாக்கும் செயல் ;இதையும் நாம் கண்டிக்க வேண்டும் கீதாம்மா

  ReplyDelete
 3. கேழ்வரகுக் கஞ்சி தான் பெஸ்டுங்க.

  ReplyDelete
 4. ஜெயஸ்ரீ, தேர்தல் னாலே தானே எனக்கும் இப்படி ஒரு தலைப்புத் தோணித்து?? :)))) ராஜேந்தர் மசாலாவா?? இன்னும் பார்க்கலை! பார்க்கிறேன்.

  ReplyDelete
 5. ப்ரியா, இந்த விழிப்புணர்வு இருந்தாலே போதும். விளம்பரத்தைப் பார்த்துட்டு அழகு சாதனப் பொருட்கள், இம்மாதிரியான ந்யூட்ரிஷியன் பவுடர்கள் என வாங்கிக் குவிப்பவர்கள் அதிகம்.

  ReplyDelete
 6. அப்பாதுரை, எங்க ஓட்டும் கேழ்வரகுக் கஞ்சிக்கே! புளிச்ச மோரில் கேழ்வரகு மோர்க்கூழும் பிரமாதமா இருக்கும். :)))))

  ReplyDelete
 7. மாதேவி, :)))))))

  ReplyDelete