எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 12, 2011

ராமஜயம் ஸ்ரீராம ஜயம், நம்பினபேருக்கு ஏது பயம்!


ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்
ராம ஜெயம் நம் தேகபலம்
ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ராம ஜெயம் நம் ஜீவரசம்-ஸ்ரீ
ராம ஜெயம் நம் ஜீவ ரசம்

சரணங்கள்:-

ஓதிய நாவில் உணர்ந்தவர் நெஞ்சில்
உலாவிடும் ராமஜெயம்
உள்ளம் நினைத்ததை அள்ளி வழங்கி
உயர்த்திடும் ராம ஜெயம்
சீத இலக்குவன் மாருதி வீடணன்
சீர் பெற்ற ராம ஜெயம்
சித்தி தரும் பதம் சக்தி மயம் சிவம்
சீதா ராம ஜெயம்-ஜெய
சீதா ராம ஜெயம்

ஆழ நெடுங்கடல் சேதுவிலே அணை ஆக்கிய ராம ஜெயம்
ஆங்கொரு கல்லிடைப்பூங்கொடி தோன்ற
அருள் தரும் ராம ஜெயம்
தேடி அடைந்தவன் வாலி நெருப்பும்
சிலீரென்ற ராம ஜெயம்
சித்தி தரும் பதம் சக்தி மயம் சிவம்
சீதா ராம ஜெயம்-ஜெய ச்
சீதா ராம ஜெயம்

இப்போ சுருக்கமா ராமாயணப்பாடல்கள்:

சீர் கொண்ட செந்தமிழ் மதுரமொழி அமரர் பதி
செல்வி இந்திராணி மன்னன்
தேவரோடு வாசவன், எமதர்ம ராசனும்
திக்குப் பாலகனரனந்தர்
சென்று சீர்ச்சிவன் மலர் திருவடிகள்
போற்றியே
தீய ராவணன் இடுக்கண்
செப்பவட மேருகிரி தன்னிலே, ஒரு பால்
சென்று ரகசியம் முடித்து,
திருக்கொலு கலைந்தபின் அவரவர்
இருப்பிடம்
சென்றபின் நாரதர்க்கு
திரு உடல் வியர்த்து அவர் வயிறது வெடிக்குமுன்
செப்பினார் புற்றினுள்ளே:
செய்தவ வான் வான்மீகி உள்ளிருந்தோர் காதி
சென்று அந்த உரைகள் வீழ
சிவ சிவா என்றுமே கீர்வாண சுலோகமாய்ச்
செப்பினார் இராம காதை:


சென்று முதல் மூவரில் வைகுந்த வாசனும்
திருவளர் அயோத்தி நகரில்
தெசரதன் தேவி நல் கோசலை வயிற்றினில்
சீராமர் ஆக வந்தார்
சேயிழை சுமித்திரை கைகேயி
இருவர் பால்
சேடனோடு ஆழி சங்கு
சென்று இலக்குவன் பரதன் சத்துருக்கனனெனச்
சேயவர்கள் நால்வர் ஆகச்
சேர்ந்து விளையாடையில் கூனி
உடல் நிமிரவே சிற்று வில்
உண்டை எய்து,
சீலராகவனுடன் தம்பியும் சென்று விசு
வாமித்திரன் செய்த வேள்வியைச்
சீரழித்திட்டோர் தாடகை தனைக் கொன்று
சிறுமகள் தன்னை ஓட்டி,
செல்வி எனும் அகலிகை கல்லுருத் தீர்ந்திடத்
திருவடிச் செல்வம் நல்கி
கார் கொண்ட மிதிலையில் சனகன்
இடுசிலையினைக்
கையால் எடுத்து ஒடித்துக்

கலியாணம் செய்திடத் தாய் தந்தை முதலான
கணமெல்லாம் வரவழைத்துக்
கன்னியாம் சானகி தன்னை மணம் செய்து
கடுகி வரும் வேளை தன்னில்
கறுத்த முனியாம் பரசு இராமன் எதிர்த்திடக்
கனத்த கோதண்டம் வாங்கி,
கெளசலை தயரதன் முதலான பெரியோர்கள்
களித்திட அயோத்தி வந்து,
கனகமணி முடிசூட முன்னின்ற காலையில்
காய்ந்த பகையால் கூனியும்
கைகேயி இடம் வந்து சூழ்வினை உரைக்க
அவள் கணவனிடம் வரங்கள் வாங்க
காட்டினில் ஏழிரண்டு ஆண்டுகள் கழிந்திடக்
காகுத்தன் மனைவியோடும்
கணமும் பிரிந்திடாத தம்பி இலக்குவனோடும்
கங்கையின் கரையை நண்ணிக்
காட்டுவன் குகனெனும் வேடனைத் துணை கொண்டு
கங்கை நதியைக் கடந்து,
களிப்புடன் பஞ்சவடித் தீர்த்தத் திருக்கையிங்
கனசேனையோடு பரதனும்
கால் நடையதாய் வந்து சேவித்து நிற்கவே

கமலபாதுகமளித்து

9 comments:

 1. I found Pillaiyar Patti ramayanam for Nila yesterday!!!:)Padam paaththaa!! ada! namba alunu therinjathu!!

  ReplyDelete
 2. பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

  ReplyDelete
 3. அழகான எழுத்து நடையில் ராமாயணம் உரைக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ராமனைப்போல் ஓரு ஞானி உண்டோ பாரினுள்

  ReplyDelete
 4. //ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்
  ராம ஜெயம் நம் தேகபலம்
  ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
  ராம ஜெயம் நம் ஜீவரசம்-ஸ்ரீ
  ராம ஜெயம் நம் ஜீவ ரசம்//

  பதிவின் மூலமாக ராம ஜெயம் அளித்தத்கு நன்றி கீதாம்மா

  ReplyDelete
 5. வாங்க ஜெயஸ்ரீ, ஹிஹிஹிஹி, கண்டு பிடிச்சாச்சா?? :))))) நல்லது. ராமாயணம் இங்கேயே கிடைக்கும், 2008 ஏப்ரலில் இருந்து. இங்கேருந்து எடுத்துத் தான் அங்கே போடறார்.

  ReplyDelete
 6. வாங்க கீதா அசல், நன்றிம்மா.

  ReplyDelete
 7. நேசன், இந்தப்பாடலை நான் எழுதவில்லை, எழுதியது யாருனும் தெரியாது. பழநி பாதயாத்திரைப் பாடல் புத்தகத்தில் கிடைச்சது. அதிலே இருந்து எடுத்துப்போட்டிருக்கேன், மிச்சம் நாளை வரும்

  ReplyDelete
 8. வாங்க ப்ரியா நன்றிங்க. தினமும் ஸ்ரீராமஜயம் சொல்வதை வழக்கப் படுத்திக்கலாம். எழுதவும் செய்யலாம்.

  ReplyDelete
 9. இது வாலியின் கவிதை என நினைக்கிறேன் கடந்தவாரம் அவர் தன் தொடர் ஒன்றில் தான் முதலில் எழுதியதை தன்னுடைய நண்பர் சிறுபிரதியாக தன்பழனி பாதயாத்திரையின் போது வழி நெடுக வினியோகித்தது யாரோ பதிப்பகத்தார் அதை சேமித்து வெளியிட்டதாக எழுதியிருந்தார் அதில் தான் முதலில் வாலி என்று ஊர் அறிந்த தாக கூறியிருந்தார் ஓருவேளை அதுதான் உங்களிடம் சேர்திச்சோ தெரியாது எப்படி என்றாளும் உங்கள் மூலம் ராமாயணம் பலரிடம் போய் சேர்கிறதே காலத்தின் தேவை அது தோழி.

  ReplyDelete