எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 27, 2011

ஜெய் சாயிராம்!

இரண்டு, மூன்று நாட்களாக ஊரில் இல்லை. நாங்க கும்பகோணத்தில் இருக்கையில் புட்டபர்த்தி பாபாவின் மரணச் செய்தி கிடைத்தது. அப்படி ஒண்ணும் பெரிய அளவில் பாபாவின் தொண்டர்கள் இல்லை நாங்க என்றாலும் என் அண்ணா வீட்டில் நடக்கும் பாபா பஜனைகளில் தவறாமல் கலந்து கொள்வோம். எங்க பெண்ணின் மாமியார் சாய் பக்தை. அவங்க கொடுக்கும் பஜனைகளைப் பாடுவோம். சாய்பக்தர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறோம், அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றிருக்கிறோம். என் அண்ணா பையரே படிச்சது முழுக்க முழுக்க புட்டபர்த்தியில் தான். எம்.எஸ்சி. மாத்ஸ் வரை படிச்சுட்டுப் பின்னர் எம்.டெக்.கும் அங்கேயே படிச்சார். இப்படி எத்தனையோ மாணவர்களை உருவாக்கி இருக்கிறார். வேதபாடசாலையில் இருந்து அனைத்தும் ஏற்படுத்தி உள்ளார். ஏழை மக்களுக்கு ஒரு வரப் பிரசாதம் புட்டபர்த்தி பாபா. அங்கே மாணவர்களுக்குக் கட்டணம் கிடையாது. மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கட்டணமின்றிக் கொடுக்கப் படுகிறது. இவை எல்லாம் செய்ய எவ்வளவு உயர்ந்ததொரு மனம் வேண்டும்?


அரசாங்கங்கள் செய்யத் தவறியவற்றைத் தனி ஒரு மனிதராக பாபா செய்திருக்கிறார். அப்படிப்பட்ட பாபா இறந்துவிட்டது நம் போன்ற சாமானியர்களுக்கு மாபெரும் நஷ்டமே.
என்றாலும் ஒரு நல்ல ஆன்மாவுக்கு முக்தி கிடைச்சது என்பது சந்தோஷமே என்றாலும் தனி ஒரு மனிதனாக இவர் செய்த பணிகளை நினைத்துப் பார்க்கையில் மலைப்பாய் உள்ளது. மகத்தானதொரு மக்கள் தொண்டைச் செய்து வந்துள்ளார். ஆந்திராவுக்கு மட்டுமே எனக் குறுகிய மனப்பான்மையோடு இல்லாமல் தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிற்கு, இன்னும் மஹாராஷ்டிராவிலே, எனப் பல இடங்களில் சாய் டிரஸ்ட் செய்து வரும் சேவைகள் எண்ணிலடங்காதது. யாரும் வற்புறுத்தி சாய் சேவார்த்திகள் இவற்றைச் செய்யவில்லை. தாங்களாக விரும்பியே செய்கின்றனர். செய்தனர். இன்னமும் செய்து வருவார்கள்.

உலகத் தரத்தில் மருத்துவ சிகிச்சை, கல்வி, இசைக்கென சர்வதேசத் தரத்தில் கல்லூரி என ஏற்படுத்தி உள்ளார். தன் பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், தன்னை நாடி வரும் அனைத்துத் தரப்பினருக்கும் மதம், மொழி, ஜாதி, இன வேறுபாடில்லாமல் உணவு, உடை, இருக்குமிடம், கல்வி, மருத்துவம், ஆன்மீகம், கலை, விளையாட்டு, அறிவியல் என யாருக்கு எது தேவையோ அவற்றைக் குறைவின்றி அளித்திருக்கிறார். இத்தகைய ஒரு மஹா மனிதர் இறந்தது நமக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் என வரும் நாட்களில் உணரப் போகிறோம். உலகெங்கும் அவருக்கென உள்ள கோடி, கோடி பக்தர்கள் அவரின் வழியைப் பின்பற்றி சாய்பாபா விட்டுச் சென்ற சேவைகளை இன்னும் சிறப்பாகச் செய்வார்கள் என எதிர்பார்ப்போம். இன்று சகல அரச மரியாதைகளுடனும் அவர் உடலை அடக்கம் செய்கின்றனர். ஆன்மீக உலகில் குறிப்பிடத் தக்க இடம் பெற்றிருந்த அவரின் மறைவை எண்ணி உளமார வருந்துவோம். அஞ்சலி செலுத்துவோம்.

என்னடா இது இவருக்குக் கூடவா சாவு? என்று சிலர் கேட்கின்றனர். சிலர் தனி மடல்களிலும் கேட்டிருக்கின்றனர். மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம். தேவர்களும் ஒரு காலகட்டத்தில் அழிந்து போவார்கள். சநாதன தர்ம சாஸ்திரங்களின் கூற்றின்படி மஹா ப்ரளய காலத்தில் பிரம்மா, விஷ்ணுவும் அழிந்துபோகின்றவர்களே. ஈசனிடம் இவர்கள் ஒடுங்குவார்கள் எனக் கூறப்படும். அனைத்தும் அழிந்து போய் மிச்சம் இருப்பது அந்த ஆதி மஹா சக்தியே. அந்த மஹா சக்தி தான் நம்மைத் திரும்பத் தோற்றுவிக்கும். கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனுக்கு வேட்டுவனால் சாவு வந்தது. ராமாவதாரத்தில் ஸ்ரீராமரும் சரயூ நதியில் மூழ்கி உயிரைப் பிரித்துக்கொண்டார். லக்‌ஷ்மணனும் மூச்சை அடக்கித் தவம் இருந்து உயிரைப் போக்கிக் கொண்டான். இன்றும் பல சாதுக்கள், அவ்வளவு ஏன்? சமீப காலத்தில் ஸ்ரீ ஹரிதாஸ்கிரி அவர்கள் சரஸ்வதி நதி தோன்றுமிடத்தில் ஜலசமாதியை வலிந்து ஏற்றுக்கொண்டார். இப்படியான மஹாத்மாக்கள் சாவது என்பது நமக்காகவே தான். நமக்குப் புரிய வைக்கத் தான். மஹாத்மாக்களுக்கே இவ்வாறு எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்??? அதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு உன்னதமான மனிதன் இறந்ததற்காகக் கண்ணீர் விட்டு அழமுடியாவிட்டாலும் பரவாயில்லை. ஒதுங்கி இருப்போம். அவருக்கு மெளன அஞ்சலியானும் செலுத்தலாம். ஒரு சிலரின் கருத்துக்களும் ஒரு சில மடல்களும் மிக மிக வருந்த வைத்தன. அதனாலேயே இந்தப் பதிவு. அவ்வளவு மனிதத் தன்மையைக் கூட நாம் பெறவில்லையா என நினைக்கையில் பாபா இறந்ததை விட அதிகம் துக்கமாய் வருகிறது. :(((((((((

14 comments:

  1. பாபா சுவாமிஜிக்கு அஞ்சலிகள்

    நீங்க அஞ்சலி செலுத்த நேரில் போய் விட்டீர்களோ என்று கூட நினைத்தேன் கீதாம்மா.....

    எனக்கு தெரிந்தவர்கள் கூட இதய நோய்க்கு சிகிச்சை எடுத்து கொண்டு பலன் பெற்று இருக்கிறார்கள் .,

    சுவாமிஜியின் அருள் தொண்டு தொடரட்டும் என்று வேண்டி கொள்கிறேன்

    ReplyDelete
  2. இது வேத பூமி . மீண்டும் இவரை போன்று ஒருவர் வருவார். கவலை வேண்டாம்.

    மகான்களின் வாழ்வில் இருந்து நாம் கற்கவேண்டிய விஷயங்கள் நெறைய .

    மகாபாரதத்தில் வரும் துரியோதன பார்வை , தருமர் பார்வை மாதிரிதான் இதுவும். நம்ம பார்வைக்கு ஏற்றமாதிரிதான் காட்சிகள் :)

    ReplyDelete
  3. எங்க வாழ்க்கையில் நாங்க ரொம்ப மனம் தளர்ந்து நொந்து போய்யிருந்த சமயத்தில வலிய வந்து எங்களை ஆட்கொண்ட தெய்வம். தனிப்பட்ட முறையில் அவரை பார்த்து பேசியது கிடையாது . SPIRITUAL ஆ எங்களுக்கு நிறையவே செய்திருக்கிறார். என்னைக் கவர்ந்தது அவரோட MIRACLES ஓ கட்டிட சாதனைகளோ NUMBER OF DEVOTEES ஓ இல்லை அந்த unconditional and non judgemental love . அன்பு என்கிற சாதனம் எத்தனை உள்ளங்களை அவரிடத்தில் இழுத்துக்கொண்டு வந்தது . அவரோட DEVOTEES ல பலபேரொட வாழ்க்கை DARK PAST. எத்தனையோ பேர் திருந்திவாழ்கிறார்கள்.
    அவர் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த middle school drop out. !! அவரோட சாதனைகள் எண்ணிலடங்காதது !எண்ணிய முடித்தல் வேண்டும் நல்லதே எண்ணல் வேண்டும் என்று பாரதி தாத்தா பாடினார். சாயி சாதித்தார் !!
    இத்தனை படிச்சு என்னால ஒரு பாத்ரூம் கூட ப்ராப்பரா கட்டமுடியலை! அத்தனை சின்ன வயதிலிருந்து தனக்குனு வச்சுக்காம selfless ஆ நன்றே செய் அதை இன்றே செய் னு சொல்லியதொடு நிறுத்தாமல் தான் செஞ்சு காட்டிய ஒருவர் என்னைபொருத்தவரையில் தெய்வமே. சத்ய சாயிடம் இருந்த அந்த LEADERSHIP இந்த க்காலதில் வெகு சிலரிடமே பாக்க முடிகிறது . நிறைய பேர் எழுதியிறுப்பதை பார்த்தேன் நானும் > வேதனையா இருந்தது. போற்ற முடியாவிட்டாலும் தூற்றாமல் இருக்கலாம் அந்த கண்ணியம் வேண்டாமா ? நான் செய்ய முயலாததை சாதித்த மனிதர் , முதியவர் என்று இறப்பிலாவது மதியுங்கள் என்று வேண்டத்தோனுகிறது

    ReplyDelete
  4. அற்புதமான கருத்துக்கள். தெளிவான பார்வை. எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  5. வாங்க திவா, குறைந்த பக்ஷ மனிதத் தன்மை கூட நம்மிடம் இல்லாமல் போயிடுமோனு தோணுது. அதைத் தட்டி எழுப்பவே இந்தப் பதிவு. வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க ப்ரியா, நான் சொந்த ஊருக்குப் போயிருந்தேன் ப்ரியா. பாபாவின் மரணச் செய்தி அங்கே தான் கிடைத்தது. மனம் ரொம்ப வருந்தி இருந்த வேளையில் இங்கே சில மடல்களைப் பார்த்ததும் எழுந்த வேதனை தான் இந்தப் பதிவு. தனி ஒரு மனிதனாக எந்தவித அரசின் உதவியும் இல்லாமல் சாதித்த ஒரு மஹாத்மாவின் மரணத்துக்கு வருந்தாவிட்டாலும் கேலி செய்யாமலாவது இருக்கலாம் இல்லையா? :((((((((((((((((( போகட்டும், உங்களைப் போல் நானும் சாயி சேவார்த்திகளின் தொண்டு தடையேதுமில்லாமல் தொடர வேண்டுகிறேன். நம்மால் இயன்றது இது தான்.

    ReplyDelete
  7. வாங்க எல்கே, கவலை எல்லாம் பாபா இறந்ததை விட அதைக் கேலி செய்த சில நல்ல உள்ளங்களின் போக்கை நினைந்தே. :(((((((

    ReplyDelete
  8. வாங்க ஜெயஸ்ரீ, நினைச்சேன், உங்களுக்கும் வருத்தம் ஏற்பட்டிருக்கும் என. :(((((((( தொய்வில்லாமல் சாய் பக்தர்கள் பாபாவின் தொண்டுகளைத் தொடரப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  9. வாங்க பந்து, முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. உங்கள் பதிவையும் படிச்சேன். மனித நேயம் என்றால் என்னவெனக் காட்டிய ஒரு மஹாத்மாவின் மறைவுக்கு வருந்துவதே அந்த மனிதத் தன்மையை நாம் மதிப்பதற்கு ஒரு அடையாளம்.

    ReplyDelete
  10. சாய் பாபாவின் தீவிர பக்தர்களாக இல்லை என்றாலும் நண்பர்களின் இல்லங்களில் பஜனை என்று அழைப்பு வந்தால் செல்லும் வழக்கம் உண்டு. பதினைந்து வருடங்கள் முன் பிரசாந்தி நிலையம் நுழைவுத் தேர்வு எழுத சென்றுள்ளேன். பாபா அப்பொழுது அங்கு இல்லை என்ற நினைவு. இதே சாய் குல்வந்த் ஹாலில் பஜனையில் கலந்து கொண்டேன். மன அமைதி தந்த இடம். சரீர உடல் உள்ள அனைவருக்கும் இறுதி என்ற ஒன்று உண்டே.அவர் ஸித்தி அடைந்தது குறித்து சிலரின் கருத்துகளைப் படித்த போது வருத்தமாகத் தான் இருந்தது. நாத்திகவாதம் இந்து மதத்தில் புதிதல்ல. ராமாயண காலத்தில் ஜாபாலி முனிவர் முதல் உள்ளது. ஆனால் இவர்களின் எழுத்துக்கள் நாத்திகம் அல்ல விதண்டா வாதம். மறைந்த ஒருவரைப் பற்றி நக்கல் செய்வது என்ன குணமோ :( அவர் செய்த சமூக சேவைக்காகவாவது அவரை பாராட்டலாம். மனம் இல்லை என்றால் சும்மாவாவது இருக்கலாம்.

    ReplyDelete
  11. பெரியவர் சாய் பாபாவினுடைய ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். அவருடைய பக்தர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள். 1 மனுஷன் இறந்து விட்டால் இனிமேல் அவரை பார்க்க முடியாதே என்ற காரணத்தால் அழுகிறோம். அவர் இருந்தாலும், இறந்தாலும் அவருடைய உங்களுடன் தான் வாழ்கிறார். அவர் செய்த உதவிகளை அவரவர் வசதிக்கேற்ப முடிந்தவரை, முடியாதவர்களுக்கு செய்து அவரை ஞாபகபடுத்திகொள்ளுங்கள். அதுதான் உண்மையான சமர்ப்பணம். கீதாம்மா, அந்த மாதிரி பேசுபவர்களுக்கு வயித்தெரிச்சல் தான் காரணம்.நம்மனால முடில. அவரால முடியுது. பென்சன் வாங்கும் வயதானவர்களை பார்த்து பொறமை பட்டு அவர்களிடம் commison வாங்கி சந்தோஷப்படுபவர்கள் மாதிரி. நம்மால் செய்ய முடியாததை இன்னொருவரால் செய்ய முடிந்தால் அதை மதித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் வளரவில்லை. அவர் கடவுளா, மனிதனா என்ற வாதம் வேண்டாம். அவர் ஒரு 85 வயது ஆன பெரியவர். இன்று மறைந்துவிட்டார். வாழும் போது பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். அவரால் எவ்வளவோ பேர் மனமகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். நம்மால் நம்மை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள முடிகிறது?.அவருக்கு நன்கொடைகள் வருகிறது. அதை கொண்டு உதவி செய்கிறார் என்று சொல்பவர்களால், யாரிடமாவது அப்படி நன்கொடை வாங்க முடியுமா? பேங்க்ல1 லோன் வாங்கமுடியுமா? அப்படியே வாங்கினாலும் அதை யாருக்காவது கொடுக்க மனது வருமா?. வருடத்தில் எத்தனை பேருக்கு உணவு வாங்கி கொடுத்திருப்பார்கள்? எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், பணம் இருந்தாலும் மற்றவர்களுக்கு குடுத்து அந்த சந்தோஷத்தை அடையும் மனம் வர வேண்டும்.பெற்றோர்களையே சுமைகளை கருதும் அந்த மாதிரி மக்களிடம் மனிதத்தன்மை எதிர்பார்ப்பது தவறு தான். நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாய் ஒதுங்கிகொள்லாமல் மற்றவர்கள் மனம் புண்படுமே என்ற ஒரு basic commensense கூட இல்லாமல் அப்படி சொல்வதால் அவர்களுடைய ஆழ்மனதினுடைய இயலாமையை இப்படி வெளிப்படுத்தி வக்கிர மனதை சந்தோஷப்படுத்துகிறார்கள்.மற்றவர்களை பாராட்டும் மனம் இல்லாதவர்கள்.கண்மூடித்தனமாக மறுப்பார்கள். உதரணமாக ராமர் கடவுள் இல்லை. அவர் சாதாரண மனிதன் தான். என்பார்கள்.ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை மதிக்க மாட்டார்கள். எதையுமே நம் பார்க்கும், அணுகும் கண்ணோட்டத்தில் தான் இருக்கும். 1 மனுஷன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவர் இல்லாத போதுதான் தெரியும். நமக்கு தான் எதுமே இருக்கும் போது மதிக்க மாட்டோம். இல்லாத போதுதான் நினைத்து உருகுவோம்.உயிரோடு இருக்கும் போது சாப்பாடு, கஞ்சி கூட குடுக்காமல் மறைந்த பின்பு வடை பாயசத்துடன் படையல் படைப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.அவர்கள் அப்படிதான். அப்படி பேசி கொண்டே தான் இருப்பார்கள். எண்ணம் போல் வாழ்வு.

    ReplyDelete
  12. வாங்க ஸ்ரீநி, உங்க கருத்தே தான் எங்க கருத்தும். நாத்திகவாதிகள் பொதுவாச் சொல்லும் ஒரு குற்றம் ஆன்மீகவாதிகளுக்கு சேவை மனப்பான்மையே கிடையாது என்பது. இப்போப் பாருங்க ஆன்மீகவாதியான பாபா செய்திருக்கும் சேவைகளைப் பாராட்ட யாருக்கும் மனம் வரவில்லை. :(

    ReplyDelete
  13. பப்லு, கலக்கல் பின்னூட்டம். இதெல்லாமும் எழுத நினைச்சு அப்புறமா ரொம்பக் கடுமையா இருக்குமோனு எடுத்துட்டேன். உங்க மூலமா வரணும்னு இருந்திருக்கு. நன்றிப்பா.

    ReplyDelete
  14. எனக்கு அப்படிப்பட்டவர்கள் மீது பயங்கர கோபம் கீதாம்மா. எதை பார்க்க வேண்டுமோ அதை விட்டு விட்டு தேவை இல்லாததை பற்றியே நேரத்தை வீணடிக்கும் கும்பல். இது ஒரு வியாதி. மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதில். முட்டாளாக்குவதில் அவர்களுக்கு 1 அல்ப சந்தோசம். தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு மிதப்பு. நான் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் போது என்னிடம் lift கேட்டு வந்த ஒருவர் கேட்டார் "தம்பி நீங்க தான் சாமி சிலையை பிரதிஷ்டை பண்றீங்க.நீங்களே என் அந்த சிலை கிட்ட போய் கை ஏந்தி நிக்குறீங்க?" கும்பாபிஷேகம் பண்றீங்க?சாமிக்கே சக்தி இல்லையா?. அவர் கேட்ட முறை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு பயங்கர கோபம். " சார். நாம தான் ஒட்டு போட்டு 1 மினிஸ்டர், chief minister ன்னு செலக்ட் பண்றோம். அவுங்ககிட்டயே நமக்கு ஏதும் வேணும்னா போய் கை கட்டி நிக்கிறோம்? 5 years க்கு 1 முறை election வருதுல்ல? அப்படித்தான் கும்பாபிஷேகமும்.அந்த லாஜிக் தான் சார்ன்னு சொல்லிட்டு அவரை அவர் சொன்ன இடத்திலேயே இறக்கிவிட்டேன் அவர் வயதிற்கு மரியாதையை கொடுத்து. எந்த 1 விஷயத்தையுமே முடிந்தவரை தெரிந்து கொண்டு அப்புறம் பேசாமல் தன்னை அறிவாளியாக காட்டி கொள்ளும் அல்ப ஆசை. வயதிற்கு மரியாதை குடுப்பது, மற்றவர்கள் கருத்திற்கு மதிப்பு குடுப்பது கூட இல்லாமல் சும்மா பேசவேண்டுமே என்பதற்காக பேசுபவர்கள். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. அப்படியே யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

    ReplyDelete