எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 21, 2011

கல்யாணமாம், கல்யாணம் - தொடர்ச்சி!

நான் குளிச்சுட்டு வரச்சேயே கழுத்திலே நகைகள் இல்லைனு என்னோட பாட்டி பார்த்திருக்காங்க. அம்மாவோட அம்மா. ஹிஹிஹி, என் கல்யாணத்தின் போது அவங்களுக்கு 62 வயசுக்குள்ளேதான். என் அம்மாவுக்கு 40 ஆகலை. அப்பாவுக்கு 50 ஆகலை. )))) இப்போல்லாம் 60 வயசுக்குத் தான் முதல் பேரனோ, பேத்தியோ! அதுங்க கூட ஓடியாட முடியாமத் தவிக்கற தாத்தா, பாட்டிகள். இதை எல்லாம் யோசிச்சுத்தான் அந்தக் காலங்களிலே அப்படிப் பண்ணினாங்களோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மெயின் சப்ஜெக்டை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே. ஹிஹிஹி, இந்த அரசியலில் புகுந்தால் அப்புறமா நாட்டுமக்களைக் கவனிக்கணுமேனு கவலைதான் முன்னுக்கு வருது! கொஞ்ச நேரம் அரசியலை ஒதுக்கி வச்சுடலாம். பாட்டி பார்த்துட்டு என்னைக் கேட்கணும்னு இருக்கிறதுக்குள்ளே எனக்கு அடுத்துக் குளிக்கப் போன என் பெரியம்மா பெண் நகைகளைப்பார்த்துட்டா. இப்போவும் இங்கே அம்பத்தூரிலே தான் இருக்கா அவளும்! அவ அதை எடுத்துட்டு வந்து என்கிட்டே கொடுக்க வரச்சே கடைசி மாமா பார்த்துட்டு அதை வாங்கி ஒளிச்சு வைச்சுட்டார். பாட்டியையும், என்னோட அக்கா(பெரியம்மா பெண்)வையும் வாயைத் திறக்கக் கூடாது, அவளா கவனிக்கிறாளா பார்ப்போம்னு சொல்லி இருந்திருக்கார். ஹிஹிஹி, என்னோட கல்யாணம்னு நினைப்பு இல்லைனா கவனிச்சிருப்பேனா? சந்தேகமே. ஆனால் வெளி வீட்டுக்கல்யாணங்களுக்கு எல்லாம் நகைகள் போட்டுட்டுப் போறதில்லை என்பதால் அந்த எண்ணமே வந்திருக்காது.  கடைசியில் எப்படியோ கண்டு பிடிச்சுட்டுக் கவலையாப் போச்சு. பாட்டிட்ட கேட்கும்போது பாட்டி என்கிட்டே, “அப்படி என்ன மறதி? இன்னும் இரண்டு நாளில் கல்யாணமாகிப் புக்ககம் போகப் போறே! கழுத்திலிருந்து நகையைக் கழட்டினாக் கையோடு பெட்டியில் வைச்சுப் பூட்டணும்னு நினைவு வராதா? தோணாதா? போய் உன் மாமாவைக் கேள்!” னு சொல்லிட்டாங்க.

மாமா முதலில் ஒத்துக்கவே இல்லை. தெரியவே தெரியாதுனு சாதிச்சுட்டார். அப்புறமா ராத்திரி சாப்பாடும் வேண்டாம்னு நான் ரொம்பவே வருத்தமா இருக்கிறதைப் பார்த்துட்டு, ஸ்வாமி அறைக்குப் போய் 108 தோப்புக்கரணம் போடச் சொன்னார். போட்டேன். (யாரானும் சிரிச்சா பார்த்துக்குங்க!) அதுக்கப்புறமா கடுமையான கண்டிப்புடனும், நிபந்தனைகளுடனும் நகைகளை மாமா கொடுத்தார். ஆனால் என்னோட தாத்தா மட்டும் இருந்திருந்தா என்னை இப்படியெல்லாம் அழ விட்டிருக்க மாட்டார். குழந்தையை ஏன்ப்பா தொந்திரவு செய்யறீங்கனு மாமாக்களைக் கண்டிச்சிருப்பார். நான் ரொம்பவே செல்லம் தாத்தாவுக்கு. மறுநாள் அதிகாலையிலேயே பந்தக் கால்முஹூர்த்தம் நடந்து முடிந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை நல்ல நாளாய் இருந்ததால் அன்று சுமங்கலிப் பிரார்த்தனை, அதற்கடுத்த சனிக்கிழமை வெங்கடாசலபதி சமாராதனை. ஆகையால் அன்று மாலையே என்னைப் பெரியப்பா வீட்டில் கொண்டுவிடும்படி சொல்லிட்டு அப்பா போயிட்டார். நகை விஷயம் அப்படியே மூடி மறைக்கப் பட்டது. அப்பாவிடம் யாரும் மூச்சுக் காட்டவில்லை. அம்மாவுக்கு மட்டும் தெரியும். இதற்குள்ளாக ஹோசூரிலிருந்து என்னோட அண்ணா என் கல்யாணத்துக்காக லீவு எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அண்ணா அங்கே இருந்தப்போ நாங்களும் அடிக்கடி ஹோசூர் போவோம். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர்களிலே ஹோசூரும் ஒண்ணு. அங்கிருந்த மலைக்கோயிலுக்கு சாயந்திரம் மூணு மணிக்கு மெதுவா ஏற ஆரம்பிச்சு மேலே போய் தரிசனம் பண்ணிண்டுக் கீழே இறங்கி வரச்சே ஏழு மணிஆகும். ஆனாலும் அலுப்பே தெரியாது. அண்ணாவையும் பார்க்கணும், எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கார்னு பார்க்கணும்னு ஆசை. ஆனால் எங்க வீட்டுக்கு இப்போ வரவேண்டாம், நல்ல நாள், நல்ல வேளை பார்த்துப் போயாச்சு, இனிமேலே திரும்பி வரச்சே கல்யாணம் முடிஞ்சு பால், பழம் சாப்பிடத் தான் வரணும்னு அப்பா சொல்லிட்டார். கொஞ்சம் ஏமாற்றம் தான்! 

மறுநாள் பெரியப்பா வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை முடிந்தது. அன்று மாலையே எல்லாருக்கும் புடைவை வைச்சுக் கொடுக்க எல்லாருமே புதுசு கட்டிக்கொண்டோம். அதற்கடுத்த மறுநாள் சமாராதனை. முன்பெல்லாம் சமையலுக்கு நேரம் ஆச்சுனா என்ன சமாராதனைக்கா சமைக்கிறே எனக் கேலி செய்வாங்க. உண்மையில் அப்போல்லாம் சமாராதனை என்றால் அவ்வளவு விமரிசையாக நடக்கும். எங்க தெருவே அன்னிக்கு எங்க வீட்டில் சமாராதனையில் கலந்து கொள்வதோடு எல்லாருக்குமே சாப்பாடும் இருக்கும். சமைக்கிறதுக்கு வெளி ஆட்கள் எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் நபர்கள் தான். வீட்டுக்கார மாமி ஒரு வேலையை எடுத்துப்பாங்க. என்னோட அம்மா, பெரியம்மாக்கள் சமையலில் ஈடுபடுவாங்க. பெரிய பெரிய வெண்கலப் பானையில் சர்க்கரைப் பொங்கல், சாதம் வடிச்சு, ஈயம் பூசிய அண்டாக்களில் ரசம், சாம்பார், மோர்க்குழம்பு, வடை எனத் தயாராகும். குறைந்த பட்சமாக புரட்டாசி மாச சமாராதனைக்கே நூறு பேர் சாப்பிடுவாங்க. இது கல்யாண சமாராதனை. கேட்க வேண்டுமா? அதிலும் எங்க அப்பா வீட்டில் பெரியப்பா பெண்களுக்குக் கல்யாணம் ஆகி இருந்தாலும் அப்பா தலை எடுத்துச் செய்யும் முதல் கல்யாணம். அம்மா வீட்டிலோ அம்மாவின் அக்கா பெண்ணுக்குக் கல்யாணம் இன்னும் நிச்சயம் ஆகவில்லை. ஆகவே திருமணம் நடக்கப் போகும் முதல் பேத்தி நான் தான். மாமாக்களில் முதல் மாமாவுக்குத் தான் பெண். அவள் என்னைவிட நாலைந்து வயசு சின்னவள்.

அதனால் கூட்டம் சமாராதனையிலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது புரிய வந்தது. சுற்றம், சூழ என்பது அந்தக் காலங்களில் நிஜமாகவே பின்பற்றப்பட்டதோடுவருபவர்கள் உதவியாகவும் இருப்பார்கள். சமாராதனை முடிந்து நாங்க திரும்ப ராத்திரி ஆச்சு. கிட்டத்தட்ட ஒன்பது மணிக்கும் மேல் எல்லாரும் படுத்துக்கொண்டிருந்தோம். அப்போ வெளியே கல்யாணப்பந்தல் அலங்காரங்களைக் கவனித்துக்கொண்டிருந்த என்னுடைய மூணாவது மாமாவும், கடைசி மாமாவும் உள்ளே வந்து பாட்டியை எழுப்பினார்கள். அம்மா, அப்பா மறுநாள் காலை தான் வரப்போறாங்க. ஞாயிற்றுக்கிழமை தான் நாந்தி, விரதம் எல்லாம். அதனால் விடிகாலையில் கிளம்பி வருவாங்க. பாட்டியை எழுப்பின மாமாக்கள் , “அம்மா, சம்பந்தி வீட்டிலே எல்லாரும் வந்துட்டாங்க. அதிலும் மாப்பிள்ளையும், அவங்க அம்மா, அப்பாவும் வந்துட்டாங்க. “ என அறிவித்தனர். பாட்டிக்கு ஒரு நிமிஷம் புரியவே இல்லை. சனிக்கிழமை இரவு வண்டியில் கிளம்பி ஞாயிறு காலை மதுரையை வந்தடையும் வண்டியில் அல்லவோ வரதாகச் சொன்னார்கள்? இப்போ எந்த ரயில் வந்தது?? ரயிலில் வரலையாம். பஸ்ஸிலே வந்திருக்காங்க. மிச்சம் பேரும் அடுத்தடுத்த பஸ்ஸில் வந்துட்டு இருக்காங்களாம்.” கடைசிமாமாவின் நியூஸ். மாப்பிள்ளை வீட்டார் தங்க மாமா வீட்டுக்குப் பக்கத்து வீடு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த வீட்டு மனுஷங்க கதவைப் பூட்டிக்கொண்டு தூங்கிட்டாங்களே. காலையிலே ஒழிச்சுத் தரேனு சொல்லி இருந்தாங்களே! இப்போ அவங்களை எப்படி எழுப்பறது?

31 comments:

 1. கண்டிப்பா நான் சிரிக்கலை . நீங்க தாத்தா செல்லம். நான் பாட்டி செல்லம் (அம்மாவின் அம்மா ). என் தாத்தா ரொம்பக் கண்டிப்பு (அம்மாவின் அப்பா )

  அப்புறம் ஒரு விஷயம் இந்த காலத்திலும் சீக்கிரம் கல்யாணம் பண்றவா இருக்கா. என் மாமியார் என்னை விட பன்னிரண்டு வயதுதான் பெரியவங்க, நாற்பத்தி ஒன்றுதான் அவங்களுக்கு :))

  ReplyDelete
 2. // ஸ்வாமி அறைக்குப் போய் 108 தோப்புக்கரணம் போடச் சொன்னார். போட்டேன். (யாரானும் சிரிச்சா பார்த்துக்குங்க!..//
  அடடே ;கால் வலித்து இருக்குமே !உங்க மாமா ,கல்யாண பொண்ணை இப்படி படுத்தி இருக்க வேண்டாம்
  ஒரு 10 தோப்புக்கரணம் போடச் சொல்லி இருந்து இருக்கலாம்
  பாவம் கீதாம்மா :( :(
  கொடி,புவனா நீங்க எல்லோரும் சிரிக்க வேண்டாம் ;ஏன்னா இது சிந்திக்க வேண்டிய விஷயம் !


  ஏன் கீதாம்மா ! உங்களோட அக்கா(பெரியம்மா பெண்) மேல கோவமோ வருத்தமோ வரலையா !

  எனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது
  என்னோட ரங்க்ஸ் என்னை பொண்ணு பார்த்துட்டு ,வேறொரு அறையில் எங்க பெரிய அண்ணா ( பெரியப்பா மகன் )
  கூட பேசி கொண்டு இருந்தார் .,எங்க பெரிய அக்கா (பெரியப்பா பெண் ) போய் பார்த்து விட்டு வரேன் என்று போனவர்
  திரும்பி வந்து எப்படியும் திருப்பூரில் நாலைந்து பேராவது அவருக்கு இருப்பாங்க என்று ஒரு குண்டை போட்டு விட்டு போய் விட்டார்
  நாம்ப தான் கொஞ்சம் குழப்ப வாதி ஆயிற்றே ! என்னடா இது பையன் ஜாதகம் ஸ்ரீராமர் ஜாதகம் என்று எங்க வீட்டில் சொல்றாங்க
  இந்த அக்கா இப்படி சொல்றாங்களே என்று ஒரு வாரம் குழம்பி போய் திரும்பவும் அக்கா கிட்டே கேட்ட போது
  அடி அசடு ! ;நம்ம வீட்டு பசங்க பொண்ணுங்களை கண்டாலே பேசாம ஓடிடுவாங்க ; இவர் கண்ணை பார்த்து தெளிவா பேசினாரா
  அதை தான் கிண்டலாக கூறினேன் என்று சொல்லி சிரித்து எனது மனதில் அமைதியை கொண்டு வந்தார் .,
  அன்னைக்கே அவர் கேலி செய்து சிரித்து கொண்டு சொல்லியதை நான் தான் இருந்த டென்ஷன் னில் கவனிக்க வில்லை போலும் .
  எங்க அக்கா கிட்டே கோவை குசும்பு(கோவையில் வசிக்கிறார் ) கொஞ்சம் ஓவரா தான் இருக்கு என்று இப்போது நினைக்க தோன்றுகிறது

  இந்த அக்காவுக்கு 15 அ 16 வயதிலேயே திருமணம் ;இப்போ 38 அ 39 இருக்கும் என்று நினைக்கிறேன் .,அவங்க பொண்ணுக்கு திருமணம் ஆகி
  ஒரு வருடம் ஆகி விட்டது .,எங்க ரங்க்ஸ் தான் அக்கா பொண்ணுக்கு பையரை(ஜப்பான் மாப்பிள்ளை ) பார்த்து கொடுத்தார் .
  குடியும் குடித்தனத்தோடு (சுனாமி நிலநடுக்கத்தோடும் !) சந்தோசமா இருக்கிறார்கள் !

  Thanks for sharing Geethamma

  ReplyDelete
 3. கடந்த ரெண்டு வருஷமா தர்மஸ்தலா ல சமபந்தி போஜனம் செய்யற ஆஸிர்வாதம் எங்களுக்கு கிடைச்சது அப்ப எனக்கு எங்க தாத்தாவீட்டு சமராதனை தான் ந்யாபகம் வந்தது . வேறுபாடு இல்லாம வீட்டு மனுஷர்கள் தாத்தா, மாமா வோட கட்சிக்காரர்கள் , குமாஸ்தாக்கள் வீட்டு வேலை செய்பவர்கள் குடியானவர்கள் பண்ணை ஆட்க்கள் வண்டிக்காரர் ட்ரைவர் காய்கறி கார அம்மா வெண்ணைக்காற அம்மா எல்லாருமா ஒரே சமயத்துல ஒரே பந்தி. பெரிய வீட்டுல கொல்லை தாவாரத்திலேந்து வாசல் ல மாமா ஆஃபீஸ் வரை மாடிலையும் ஒரு பந்தியுமா நடக்கும். அந்தக்கால வீடுகள்ல உப்பரிக மாதிரி நடு கூடத்துக்கு மேல நாலுபக்கமும் தாழ ஜன்னல் வச்சு ரூம் இருக்கும்:)) ஜன்னல் வழியா எட்டிப்பாத்தா கீழ என்ன பரிமாரிண்டு வறானு தெரியும்:)) நண்டு சிண்டுங்கள் எல்லாம் மேல தான் :)) நெய் வார்த்து தீர்த்தம் விடறத்துக்கு முன்னால எட்டி பாத்து கீழ கேட்டுப்பா :) "ஹரி:" ங்கர கோஷம் கேட்க்கும் எல்லாருமா சேந்து சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிப்போம் அந்த நாள் திரும்பி வராது எத்தனை கொடுத்தாலும். ஏதோ நம்ப ட்ரெடிஷனை நாங்கள் ஓரளவுக்கு கடைப்பிடித்துக்கொண்டு தான் வருகிறோம் . இளைய சமுதாயம் என்ன செய்வார்களோ ! சில சமயம் தனியா பாஸ்ட்டை அசை போடும் போது ஒரு இனம் தெரியாத வருத்தம் வரும் !! சரி!! செய்யற விதம் வேற மாதிரி வித்யாசமா இருந்தாலும் faithஓட purpose ஒண்ணா இருந்தா சரிதான் .அவா நல்ல மனசு எண்ணங்களோட எப்பவும் பிறத்தியாருக்கு உதவி செய்யும் போது இதுவே அவா செயற சமாரதனைனு மனசுல வேண்டிப்பேன் !

  ReplyDelete
 4. //அதுங்க கூட ஓடியாட முடியாமத் தவிக்கற தாத்தா, பாட்டிகள்.//

  ஏன் அந்த காலத்துலே 80 வயசானாலும் நல்ல உடம்போட இருந்தாங்களே, அதை யோசிக்கறது? :P

  ReplyDelete
 5. என்ன்ன்ன்னது!!!! மாப்பிள்ளை வீடுன்னா ஒரு மட்டு மரியாதை இல்லே????

  ReplyDelete
 6. //அப்புறம் ஒரு விஷயம் இந்த காலத்திலும் சீக்கிரம் கல்யாணம் பண்றவா இருக்கா.//

  LK, dont even get me started, என்னோட கூட படிச்சவங்க எல்லாம் இப்பத்தான் நிச்சயம் பண்ணிக்கறாங்க! என் கதையை வெளில சொல்ல முடியலையாக்கும்!

  ReplyDelete
 7. \\ஸ்வாமி அறைக்குப் போய் 108 தோப்புக்கரணம் போடச் சொன்னார். போட்டேன்.\\

  தலைவிவிஇஇஇஇஇஇஇஇஇ....;)))

  தலைவி 108 தோப்புக்கரணம் போட்டார் கல்யாணத்தை முன்னிட்டு போஸ்டர் ஒட்டுவாங்களே ;)))

  ReplyDelete
 8. இப்போல்லாம் 60 வயசுக்குத் தான் முதல் பேரனோ, பேத்தியோ! அதுங்க கூட ஓடியாட முடியாமத் தவிக்கற தாத்தா, பாட்டிகள்
  நம்ம சொந்த கதையெல்லாம் இப்படி சபைலே விலாவாரியா சொல்லப்பிடாது

  ReplyDelete
 9. "ஸ்வாமி அறைக்குப் போய் 108 தோப்புக்கரணம் போடச் சொன்னார். போட்டேன்"


  நினைச்சுபாத்த எங்களுக்கே மூணுமனி நேரமா சிரிப்பு இன்னும் அடங்கலையே நேரிலே பாத்தவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.ஒரு சின்ன சந்தேகம் சாம்புசார் பாத்தாராஇதை.அப்போ விடியோவில்லாம் வேறே கிடையாது. கஷ்டம்தான்.

  ReplyDelete
 10. வாங்க எல்கே, ம்ம்ம்ம்ம் என்னோட மாப்பிள்ளையும் என்னைவிடப் பனிரண்டு வயசு சின்னவர். ஹிஹிஹி! :))))))) என்னோட பெரிய நாத்தனார், என் கணவரை விட ரெண்டு வயசுதான் பெரியவங்க, அவங்க பொண்ணுங்களுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் ஆறு ஏழுக்குள் தான்! :)))) என் கல்யாணத்தப்போ அவங்களுக்குக் கல்யாணம் ஆகிப் பதினைந்து வருடம் ஆகி இருந்தது. :))))) என் கணவரோட தங்கை ரெண்டு பேர். அதிலே பெரிய தங்கைக்கானும் திருமணம் முடிச்சுட்டுத் தான் பண்ணிக்கணும்னு இருந்ததாலே அவருக்கு லேட். :)))))))))

  ReplyDelete
 11. ஏன் கீதாம்மா ! உங்களோட அக்கா(பெரியம்மா பெண்) மேல கோவமோ வருத்தமோ வரலையா !//

  கோபத்துக்கும் வருத்ததுக்கும் ஒண்ணுமே காரணம் இல்லையே?? பார்க்கப் போனா என்னைத் தானே எல்லாரும் கோவிச்சுக்கணும்?? அஜாக்கிரதையா நான் இருந்துட்டு அவங்களை எப்படிச் சொல்ல முடியும்? நியாயமே இல்லையே! :))))))))))

  ReplyDelete
 12. ஹ ஹா !TRC சார் ;நீங்க கீதாம்மா கட்சி இல்லையா ?!
  @ கீதாம்மா ;நீங்க அழைத்ததோட purpose புரிச்சு போச்சு :)

  ReplyDelete
 13. அம்மா, சம்பந்தி வீட்டிலே எல்லாரும் வந்துட்டாங்க. அதிலும் மாப்பிள்ளையும், அவங்க அம்மா, அப்பாவும் வந்துட்டாங்க. “ என அறிவித்தனர். பாட்டிக்கு ஒரு நிமிஷம் புரியவே இல்லை. சனிக்கிழமை இரவு வண்டியில் கிளம்பி ஞாயிறு காலை மதுரையை வந்தடையும் வண்டியில் அல்லவோ வரதாகச் சொன்னார்கள்? இப்போ எந்த ரயில் வந்தது?? ரயிலில் வரலையாம். பஸ்ஸிலே வந்திருக்காங்க.
  "சாம்பு சாருக்கு அப்போ ஆரம்பிச்ச கஷ்டம் இன்னும் முடியலை"

  ReplyDelete
 14. அப்போல்லாம் தோப்புகரணம் போடறது ஒண்ணும் கஷ்டமா இல்லை ப்ரியா, என் கல்யாணத்தப்போ நான் 35 கிலோக்குள் தான். எப்படித் தெரியும்னு கேட்கிறீங்களா. கல்யாணத்துக்கு மூன்று மாசம் முன்னாடிதான் எனக்கு முதல் முதலாக வேலைக்கு ஆர்டர் வந்திருந்தது. அப்போ மெடிகல் டெஸ்ட் பண்ணி ரிப்போர்ட் அனுப்பணும். அதை அனுப்பும்போது மருத்துவருக்கு ஒரே கோபம். எடை கம்மியா இருக்குனு. பத்தொன்பது வயசுக்கு 35 கிலோன்னா வேலைக்கு எடுத்துக்கறது கஷ்டம்னு சொல்லிட்டு 42 கிலோனு எழுதிக் கொடுத்தார். அதனால் நல்லா ஓடியாட முடிஞ்ச வயசுதான். அதோட இதெல்லாம் ஒரு விளையாட்டுத் தானே!

  ReplyDelete
 15. வாங்க ஜெயஸ்ரீ, எங்க வீட்டு சமாராதனைகள் எல்லாத்திலேயுமே கூட்டம் வழியும். அதுவும் கார்த்திகை மாசம் வைக்கத்தஷ்டமி சமாராதனை என்றால் தெருக்காரங்க எல்லாருமா ஒண்ணாய்ச் சேர்ந்து செய்வாங்க. வீட்டுக்கு வீடு மொட்டை மாடியில் பந்தல் போட்டுச் சாப்பாடு நடக்கும். ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குத் தாவிக் குதிச்சுத் தெருக்கடைசி வரையிலும் போக முடியும்.

  ReplyDelete
 16. அந்தக்கால வீடுகள்ல உப்பரிக மாதிரி நடு கூடத்துக்கு மேல நாலுபக்கமும் தாழ ஜன்னல் வச்சு ரூம் இருக்கும்:)) //

  எடுத்துக் கட்டினு சொல்லுவாங்க. கீழே கல்யாணக்கூடத்தின் மத்தியிலே வெளிச்சம், காற்று வரதுக்காக அந்த இடத்திலே மட்டும் மேலே தூக்கிக் கட்டி நாலு பக்கமும் ஜன்னல் வைப்பாங்க. கீழே இடம் இல்லைனா மேலே இருந்து கொண்டும் கல்யாணத்தையும் பார்க்கலாம், நீங்க சொல்றாப்போல் சமாராதனைகள், ஸ்வாமிகள் வரச்சே செய்யும் பாதபூஜைகள்னு பார்த்திருக்கோம். சில சமயங்களில் கீழே இருந்து கொடிக்கம்பில் புத்தகங்களை மாட்டி மேலே இருக்கிறவங்களுக்குக் கொடுக்கிறதும் உண்டு. ஹிஹி, இது நானும், என் தம்பியும் கண்டு பிடிச்சது. அந்த மாடிக்கு மேலே இன்னொரு மாடி போகும். அங்கேயும் கீழே ஒண்ணு, மேலே இன்னொண்ணுனும் இருக்கும். முதல் தள மொட்டைமாடிக்கு இருபக்கமும் இரு வேறு தனி மொட்டை மாடிகளும்போகும். இரண்டிலும் முதல் தளங்களில் எதிரெதிர் திசைகளில் அறைகளும் இருக்கும். அப்படிக் கிழக்குப் பார்த்த அறையில் நாங்கள் குடி இருந்தோம். அந்த அறை நாங்க குடி இருந்த வீட்டின் கொல்லைப்பக்கம் வரும். ஜன்னல் வழியாப் பார்த்தால் மதுரை சோமு வீடு, கோபு அய்யங்கார் கடை, மேல கோபுரம், வடக்கு கோபுரம், தூரத்தில் கிழக்கு, தெற்கு கோபுரங்கள், தங்க கோபுரங்கள்னு தெரியும். அங்கே உட்கார்ந்து கொண்டே மீனாக்ஷியின் கும்பாபிஷேஹத்தை பி.டி. ராஜன் நடத்திய சமயம் பார்த்திருக்கேன். :))))))))

  ReplyDelete
 17. //அதுங்க கூட ஓடியாட முடியாமத் தவிக்கற தாத்தா, பாட்டிகள்.//

  போர்க்கொடி, அந்தக் காலத்துத் தாத்தா, பாட்டிங்களை நான் எங்கே சொன்னேன்?? தற்காலங்களில் நாப்பது வயசிலேயே மூட்டு வலி, நடக்கமுடியலைனு சொல்றதைச் சுட்டிக் காட்டினேன். அந்தக் காலத்து மனுஷங்க உடம்பு வைரம் பாய்ந்தது! :)

  ReplyDelete
 18. என்ன்ன்ன்னது!!!! மாப்பிள்ளை வீடுன்னா ஒரு மட்டு மரியாதை இல்லே????//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னவாம் இப்போ? :P

  ReplyDelete
 19. LK, dont even get me started, என்னோட கூட படிச்சவங்க எல்லாம் இப்பத்தான் நிச்சயம் பண்ணிக்கறாங்க! என் கதையை வெளில சொல்ல முடியலையாக்கும்!//
  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேண்டாம், வேண்டாம், பீத்தலை நிறுத்திக்குங்க,. என்னோட படிச்சவங்க எல்லாம் என் கல்யாணத்தப்போ படிச்சுட்டுத் தான் இருந்தாங்களாக்கும்! :P

  ReplyDelete
 20. தலைவி 108 தோப்புக்கரணம் போட்டார் கல்யாணத்தை முன்னிட்டு போஸ்டர் ஒட்டுவாங்களே ;)))//

  எனக்கு வேறே வினையே வேண்டாம். :)))))))

  ஏடிஎம், ஏடிஎம், ஏடிஎம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், சீக்கிரமா வந்து கோபி செலவிலே சர்க்கரையை அள்ளிக்கொட்டிக்குங்க, எனக்கு எதிரியை நான் தேடவே வேண்டாம்! :))))))))

  கோபி வந்து விலாவரியாச் சொல்லிக் கொடுத்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

  ReplyDelete
 21. /

  @திராச, சார், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல்லே கூப்பிட்டால் தான் வருவேன்னு சொல்லிட்டு வராம இருந்ததுக்குக் கடுமையான கண்டனம்.

  அப்புறமாத் தான் கமெண்ட்

  ReplyDelete
 22. இப்போல்லாம் 60 வயசுக்குத் தான் முதல் பேரனோ, பேத்தியோ! அதுங்க கூட ஓடியாட முடியாமத் தவிக்கற தாத்தா, பாட்டிகள்
  நம்ம சொந்த கதையெல்லாம் இப்படி சபைலே விலாவாரியா சொல்லப்பிடாது/

  இதுக்குப் பேருதான் சொ.செ.சூ.ங்கறது. வேலியோட போற ஓணானை மடியிலே கட்டிண்டாப்பலனு சொல்லுவாங்க, அதுவோ இல்லாட்டி?? :P:P:P

  ReplyDelete
 23. நினைச்சுபாத்த எங்களுக்கே மூணுமனி நேரமா சிரிப்பு இன்னும் அடங்கலையே நேரிலே பாத்தவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவர் கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி தானே வந்தார். அதெல்லாம் தெரியாது. நான் சொன்னேன் அப்புறமா! :))))))))

  ReplyDelete
 24. ப்ரியாவுக்கு திருமண நாள் வாழ்த்தா!!!! அடேங்கப்ப்ப்பா.. ரொம்ப ஓவர் பாச மழையா இருக்கே இது? Belated wishes Priyakkaaa!

  ReplyDelete
 25. உங்களோட இந்த சமாராதனை பதிவும் இந்த வாரம் தக்குடு போட்ட சாஸ்தா ப்ரீதி பதிவும் எனக்கு எங்கள் கிராமம் விசேஷத்தை நினைவு படுத்துகிறது. மேல சொன்ன மாதிரி நாங்கள் தூத்துக்குடி அருகே ஆத்தூரில் வசித்த போது வைக்கத்து அஷ்டமி போது ஊருக்கே சாப்பாடு போடுவா. எங்கள் பூர்விகம் ஆன திருநெல்வேலி ஜில்லா அரியனாயகிபுரதிலும் இதே போல சமாராதனை பண்ணிருக்கோம். இந்த மாதிரி விசேஷங்கள் போது ஒரு community bonding இருந்துது. இப்போ city culture ல எதிராத்து மனுஷா கூட யாருன்னு தெரிஞ்சுக்கரதில்லை நான் உட்பட :(
  திங்கட் கிழமை கல்யாணமா - அப்போ காலை 6 - 7:30 முஹூர்த்தம் போல இருக்கு. காலை சீக்கிரமே கல்யாண மண்டபம் களை கட்டிருக்குமே?

  ReplyDelete
 26. ப்ரியாவுக்கு திருமண நாள் வாழ்த்தா!!!! அடேங்கப்ப்ப்பா.. ரொம்ப ஓவர் பாச மழையா இருக்கே இது? Belated wishes Priyakkaaa!//

  புகை ஓவரா இருக்கே போர்க்கொடி, எனக்கு மூச்சுத் திணறுது! :P

  ReplyDelete
 27. இந்த மாதிரி விசேஷங்கள் போது ஒரு community bonding இருந்துது. இப்போ city culture ல எதிராத்து மனுஷா கூட யாருன்னு தெரிஞ்சுக்கரதில்லை நான் உட்பட :(//

  ஆமாம், ஸ்ரீநி, உண்மைதான் பிரச்னை என்னன்னா, நாங்க இன்னும் இந்தக் கலாசாரத்திற்குத் தயாராய் இல்லை என்பதே! அது புரிஞ்சும் எங்களாலே மாற முடியலை. :((((((


  //திங்கட் கிழமை கல்யாணமா - அப்போ காலை 6 - 7:30 முஹூர்த்தம் போல இருக்கு. காலை சீக்கிரமே கல்யாண மண்டபம் களை கட்டிருக்குமே?//

  ஆமாம், கூட்டம் வரும்னு அப்பா தள்ளி வைச்சார் கல்யாணத்தை, அப்படியும் கூட்டம், :)))))))))

  ReplyDelete
 28. சென்ற மாத பதிவை அக்கறையாக படித்து வாழ்த்துக்கள் சொன்னதற்கு
  மிக்க நன்றி கொடி!

  ReplyDelete
 29. //ப்ரியாவுக்கு திருமண நாள் வாழ்த்தா!!!! அடேங்கப்ப்ப்பா.. ரொம்ப ஓவர் பாச மழையா இருக்கே இது? Belated wishes Priyakkaaa!//

  புகை ஓவரா இருக்கே போர்க்கொடி, எனக்கு மூச்சுத் திணறுது! :ப//

  Thanks porkodi .....
  அது வந்து கொடி, போன ஜென்மத்திலே நாங்க விருந்தாவனத்திலே சந்தித்த விட்ட குறை தொட்ட குறை யாக கூட இருக்குமோ !:)

  ReplyDelete
 30. ப்ரியா, போர்க்கொடி நல்லாப் புகை விடட்டும், கண்டுக்காதீங்க. :P

  ReplyDelete
 31. நம் கட்சிக்கு ஆள் வேண்டும் கீதாம்மா
  அதுவும் பொற்கொடி மாதிரி ஒரு தளபதியின் சேவை நம் கட்சிக்கு தேவை !
  அதனால் நெடு நாள் களித்து ச்சே மன்னிக்கவும் கழித்து தாய் கழகத்திற்கு வரும் கொடியை பற்றி கொஞ்சம் யோசனை செய்யும்படி
  தலைவியை கேட்டுக்கிறேன்

  ReplyDelete