எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 13, 2011

ராம ஜயம், ஸ்ரீராம ஜயம், நம்பினபேருக்கு ஏது பயம்!


காட்டிலே பதினான்கு ஆண்டுகள் கழிந்த பின்
காலம் சில கழிந்த பின்
கடிதினில் ஏகு எனப் பரதனை அனுப்பவே
காலம் சில கழிந்தபின்
கன்னி என இராவணன் தங்கையாம் சூர்ப்பநகை
கபடங்கள் பல செய்திட
காதோடு தனத்தையும் மூக்கையும் அறுக்கவே
கர தூடணாதி கேட்டு
வேர் கொண்டு எழுந்த தம் சேனை முழுதும் சென்று விண்ணுலகடைந்த பின்னர்
விசை கொண்ட தசமுகன் அறிந்து மாரீசனை
வேடமானாக்கிவிடவே
விளையாடி அந்த மான் நின்றதைக் கண்டுமே
மெல்லியல் சீதை அதை வேண்ட
வீர ராகவ முனிவர் கோதண்டம் வாங்கியே
வெகு தொலை தூரத்தில் எய்ய,
விழும்போது இலக்குவா, என்றவன் கூவவே
வீர இலக்குவனும் ஏக
வீற்றிருந்த பர்ணசாலையோடு சீதை
வேரோடு எடுத்து அரக்கன்
விமானமதிலே வைத்து இலங்கை நகர் செல்கையில்
விடேன் என்ற சடாயு தன்னை
வெட்டித் துணிந்தேகி அசோகவன மீதினில்
தேவியைச் சிறை வைத்திட,
வெந்துயர் கொள் இராகவன் இளைய பெருமாளோடும்
வெங்கானெல்லாம் திரிந்து,
விரைவுடன் தேடி உயிர் விட்ட சடாயுவெனும்
வீரன் கடன் முடித்து
விராதனை வதைத்து சவுரியைப் புட்பக

விமானத்தில் ஏற்றி விட்டு
வீர அனுமானுடன் சுக்கிரீவனைக் கண்டு
வெய்ய வாலியை மடித்து
வித்தக மாருதி தனைத் தூது அனுப்பியே
வெற்றி அடையாளம் வாங்கி வெள்ளம் எழுபது கொண்டு கடலில் அணை கட்டியே
மேருமுடி இலங்கை மேவி,
வீடணன் சரணடைய அபயம் அவனுக்கு ஈந்து
தம்பி என அவனை ஏற்று,
வெளியாக இராவணன் வராமையால் தேவி
மெல்லியலின் விடுதல் நாடி
பார் கொண்ட அங்கதன் தனைத் தூது அனுப்பியே
பத்துமுடியோனிடத்தில்
பச்சை இள மயில் தனை விட்டு விடு
இல்லை எனில் படை பொருத வருக என்ன
பரமனுறை மாமலையை எடுத்த தோள் ஆண்மையால்
பத்து வாயால் நகைத்து
ப்ராக்கிரமமோடு வந்து மோதிப் பல்சேனையோடு
படை வீரரான சூரர்
பாலரோடு கும்பகனாதியர் இறக்கவே
பார்த்தன் நிகர் மேகநாதன்
படையுடன் எதிர்க்கவே இளைய பெருமாளுடைய
பாணத்தினால் மடித்துப்
பாரெலாம் அஞ்சுறும் மூலபல சேனையைப் பசை அற ஒழித்துப் பத்து முடியோனைத் துணித்து வீடணற்குப் பட்டமும் கட்டி வைத்து,
பருவரதி மாதின் உயர் மமையாம் சீதையாள்
பட்ட சிறை மீட்டி,
இந்திரபதி விட்ட புட்பக விமானத்திலேறியே
படை வீரர் சூழ்ந்து போதப்
பரதனுக்கு அனுமனை முந்தூது போக்கியே
பரதன் உயிர் பாதுகாத்து
பரத்துவாசன் விருந்து உண்டபின் அயோத்தி நகர்
பாங்காக வந்து சேர்ந்து,
பட்டாபிஷேஹமும் பண்ணிஒரு
குடையினால் பார் முழுதும் ஆண்ட,
சக்கரபதி ஆன ரகுராம சந்திரன் மருகனே!

பரம சிவனார் பாலனே,
பச்சை மயில் ஏறியே பக்தர்கள் தமைக்காக்கப் பாரினில் தேவ சபையாம்
பழநி மலை மேல் வந்து விளையாடி நிற்கின்ற பரமகுருவான குகனே


பழநி மலைக்குப் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பாடும் பாடல் இது எனக் கேள்விப் பட்டேன். எழுதியவர் பெயர் தெரியாது. தெரிந்தவர்கள் கூறவும். நன்றி.

3 comments:

 1. நல்ல பதிவு கீதாம்மா
  முடிவு பகுதி எதிர்பாராத விதமாக இருந்தது !

  ReplyDelete
 2. நல்ல பதிவு கீதாம்மா
  முடிவு பகுதி எதிர்பாராத விதமாக இருந்தது !

  ReplyDelete
 3. ராமருக்கு கல்யாண்ம் பண்னிக்கற்ச்சே 12 வயசாம், அப்புறம் 12 வருஷம் அயோத்தில இருந்தா எல்லாருமா. அப்பறம் 14 வருஷம் காட்டுக்கு போனார் சீதை லக்ஷ்மணனோட so ராவணோட சண்டை போடறச்சே 38 வயசு தான் அவருக்கு !! அப்புறம் லவ குசர்கள் .ஆனா ராமராஜ்யம் 11000 ஆண்டுகளாம்!! அப்போ நமக்கெல்லாம் கேள்விப்பட்ட அவரோட வாழ்க்கை ரொம்ப சின்ன பாகம் தான் அவரோட ராஜ்யத்துல !!!!நம்ப ஹனு ஜி 2 நாள்ல சுந்தரகாண்டம் பண்ணிட்டார் . போக ஒரு நாள் வர ஒரு நாள் !! ஆச்சர்யமா இருந்தது!! இதை இப்ப மாத்வாச்சாரியார் ராமாயண மொழிபெயர்ப்பு ஒண்ணு படிச்சிண்டு இருக்கோம் அதுலேந்து தெரிஞ்சுண்டது!

  ReplyDelete