எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 07, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் ! 1

ராதாவிற்குத் திடீர்னு எல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆகலை;  ஏற்கெனவே அவள் வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தான்.  ராதா படித்துக் கொண்டிருந்தாள். வயசும் இன்னமும் பத்தொன்பது நிறையவே இல்லை; அதனால் ராதாவின் அம்மாவுக்குக் கொஞ்ச நாட்கள் போகலாம்னு எண்ணம். ஆனால் ராதாவின் அப்பாவின் வார்த்தையை மீறி அந்த வீட்டில் யாரும் எதுவும் பேச முடியாது.  அவர் சொன்னால் சொன்னதுதான்.  அப்படியே இந்த மாப்பிள்ளையை நிச்சயமும் பண்ணிக் கொண்டு வந்துவிட்டார். தெரிந்த இடம்; பையன் அரசாங்க உத்தியோகம்.  கூடப்பிறந்தவர்கள் ஐந்தாறு பேரு இருக்காங்க தான். அதனால் என்ன! பையனின் அம்மா, அப்பா இருக்காங்களே கவனிச்சுப்பாங்க. இந்த இடத்தையே முடிச்சுடலாம்.  அப்பா தீர்மானித்து விட்டார்.

கல்யாணம் குறித்த சிந்தனைகளோ, கனவுகளோ ராதாவிடம் இல்லை. ஆனால் பிறந்த வீட்டின் நிலைமை தெரியுமாதலால் ஒரு வகையில் திருமணத்தை விடுதலையாகவே நினைத்தாள்.  அதே சமயம் தான் தன் கணவனோடு இப்படி எல்லாம் பயந்து கொண்டும், அபிப்பிராயங்களை மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டும் இருக்கக் கூடாது என்ற தீர்மானமும் இருந்தது. பெண் பார்க்க வந்த போது அவள் பையனைச் சரியாகப் பார்க்கவில்லை.  கூச்சம் மட்டும் காரணம் இல்லை.  திருமணத்தின் ஆசாபாசங்களும், கனவுகளும் அவள் இள மனதில் இன்னமும் பூரணமாய்த் தன் வேலையைக் காட்டவில்லை.  ஆகவே ஒருமுறைக்கு இருமுறை பார்க்க வேண்டும் என்றோ, பேச வேண்டும் என்றோ அவள் எதிர்பார்க்கவே இல்லை.

திருமண நாளும் வந்தது. அவள் மாமியாருக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது.  ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருந்தார்.  போதாக்குறைக்குப் பையன் இப்போது திருமணமே வேண்டாம்னு சொல்லிக் கொண்டிருந்ததாகவும், பெண்ணைப் பார்த்ததுமே மனம் மாறிவிட்டதாகவும், இப்போவே இப்படின்னா கல்யாணம் ஆகி வந்ததும் எங்க பையன் எங்க சொத்தாய் இருக்க மாட்டான் என்று கவலைப் படுவதாகவும் வெளிப்படையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாருக்குமே இது தர்மசங்கடமாக இருந்தாலும் யாரும் வாயைத் திறக்கவில்லை.

ராதா ரொம்ப உயரம் இல்லை என்றாலும் நடுத்தர உயரம்.  அப்பாவின் வழியைக் கொண்டு நல்ல சிவந்த நிறம். எடுப்பான மூக்கு, வில் போல் வளைந்த புருவங்கள், நீண்ட விழிகள், அதிகம் நீளமில்லாத அடர்த்தியான, சுருண்ட தலைக்கேசம், ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப்பார்க்கச் சொல்லும் முகம். கல்யாண அலங்காரத்தில் ஜொலித்தாள். இயல்பாகவே சிவந்த முகம் வெட்கத்திலும், சந்தோஷத்திலும் இன்னமும் சிவந்து காணப்பட்டது.  மாப்பிள்ளையும் தன் மனைவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்து அந்தக் கால வழக்கப்படி மறுநாள் கிரஹப்ரவேசமும்முடிந்து பிள்ளை வீட்டில் முதலிரவு.

மாப்பிள்ளையும், கல்யாணப்பெண்ணும் முதலிரவு அறைக்குள் போயாச்சு! அறைக்கு வெளியே சங்கீதம் தெரிந்த சில பெண்கள் பாட வேண்டும் என ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மாப்பிள்ளையின் அம்மா தழுதழுத்த குரலில் ஏதோ பேசும் சப்தமும், அதை அடுத்து  தடார் என்ற சப்தமும் கேட்டது.   யாரோ விழுந்துட்டாங்க போலிருக்கே!  கூடி இருந்த விருந்தினர் எல்லாரும் ஓடி வர மாப்பிள்ளையின் தாய் கீழே விழுந்திருந்தாள்.

20 comments:

 1. ராதா அவ்வளவாக அழகா இல்லைன்னாலும் கொஞ்சம் அதிகமாவே அழகாக இருப்பாள் போல..... தொடர்கதையா என்று கேட்க நினைக்கும் பொது முந்தய பதிவுக்கானப் பின்னூட்டம் பார்த்து இது அதன் தொடர்ச்சி என்று புரிகிறது! அதற்குள் அப்பாதுரை கேள்வியைப் பார்த்து விட்டு என் பின்னூட்டங்கள் என்னாச்சுன்னு கேட்க 'அந்த'ப் பதிவுக்கு விரைந்து வர நினைக்குங்கால் இந்த பதிலைப் பார்த்ததும் இங்கேயே, இந்தப் பதிவுக்கே பின்னூட்டம் போட்டு விடலாம் என்று தீர்மானம் செய்து, போட்டும் விட்டேன். அப்பா...... மூச்சு வாங்குது.... இருங்க... இன்னும் ஒரு ஆப்ஷன் அங்க போய் பிளேடு போட்டுட்டு வர்றேன்!

  ReplyDelete
 2. மாப்பிள்ளையின் தாய் கீழ விழுந்துட்டாரா.... டாக்டர் வந்து நாடி பிடிச்சுப் பார்த்துட்டு, "கங்காரு ரிலேஷன்ஸ்... ஸாரி... கங்ராஜுலேஷன் .... நீங்க மறுபடி அம்மாவாகப் போறீங்க" ன்னு சொல்லப் போறாரோ... வயதான காலத்தில் பிறக்கப் போகும் அந்தப் பெண்தான் ரம்யாவோ!

  ReplyDelete
 3. இதென்ன கதை? புதுசா? ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு.

  ReplyDelete
 4. காலைல படிச்சேன்.. இப்பவும் படிச்சேன்.. வேறே கதைனு நெனச்சுட்டேன்.. ஹிஹி.. உங்க பின்னூட்ட பதிலைப் படிச்சதும் தான் புரிஞ்சுது.

  ReplyDelete
 5. தொடர்ன்னா குறைந்த பட்சம் ஒரே தலைப்பு கூட கொடுக்க மாட்டாங்களோ?.. ஒரு க்ளூ கூட இல்லைனா, என்னத்தைப் புரிஞ்சிண்டு, என்னத்தைக் கண்டுபிடிச்சு?.. ஆங்! ரம்யாவின் அம்மாவோ ராதா?.. அந்தக் குழந்தைப்பேறு இல்லாததுக்கு சினிமா மாதிரி ஏதாவது காரணம் சொல்லலாம்னா.. அப்படினாலும் மாப்பிள்ளை அம்மா தானே கீழே விழுந்திருக்காங்க.. சரி.. அடுத்த பகுதி போடமாட்டாங்களா?.. ஆனா, இதோட தொடர்ச்சிதான்னு தெரியறத்துக்கு தலைப்பு மாத்தாமா இருக்கணும்.. அது வேறே இருக்கே!

  ReplyDelete
 6. ஜீவி சார்.. நானும் அதைத்தான் கேக்க நினைச்சேன்.. அப்புறம் கதை எழுதுறவங்களுக்கு தலைப்பு வைக்கவும் வைக்காமல் இருக்கவும் உரிமை இருக்குனு விட்டுட்டேன் :) கடைசி வரைக்கும் தலைப்பே வைக்காமலும் இருக்கலாம்.. என்ன சொல்றீங்க கீதா சாம்பசிவம்?

  ReplyDelete
 7. கீழே கண்டிருப்பது அப்பாஜியின் கமெண்ட். தவறி என் பதிவுக்கு வந்திருக்கிறது. உங்களின் எந்தப் பதிவுக்கு இது பொருந்தும் என்று தெரியவில்லை. Copy & Paste உங்கள் பொறுப்பு.

  அப்பாதுரை

  அந்தக் கோவில்களை எடுத்து நடத்துவதால் என்ன பயன் கீதா சாம்பசிவம். அதற்கு பதில் அந்த நிலத்தையும் இடத்தையும் அனாதை இல்லம், முதியோர் இல்லம், பள்ளிகூடம் என்று உருப்படியாக ஏதாவது செய்யலாமே?

  ReplyDelete
 8. ஹிஹிஹி, வாங்க ஸ்ரீராம், எல்லாரையுமே குழப்பிட்டேன் போல! போட்டிருக்கணும், தொடர்ச்சினு என்னமோ தோணலை. முன்னே, பின்னே கதை எழுதி இருந்தால் தானே! :)))))

  உங்க ஆப்ஷன்கள் எல்லாம் பத்திரமாச் சேமிச்சு வைச்சிருக்கேன். அப்பாதுரையோட ஒரு ஆப்ஷன் தான் கொஞ்சமே கொஞ்சம் மாற்றத்தோட நான் கொடுக்க நினைச்ச முடிவு. என்றாலும் இதையும் பார்த்து வைச்சுக்கிறேன். திடீர்னு மாத்தி எழுத வேண்டி இருந்தா? :))))))

  ReplyDelete
 9. @ஆஹா, அப்பாதுரையையே ஒரு வழி பண்ணிட்டோமுல்ல! குழப்பியாச்சு நல்லா!

  ReplyDelete
 10. ஜீவி சார், தலைப்பு என்ன கொடுக்கிறதுனு தெரியலை. ஆனால் அத்தியாயங்களின் தலைப்பாக மட்டும் யோசிச்சு வைச்சேன். மத்தபடி அவங்க அவங்களுக்குத் தோன்றுவதை எல்லாம் யோசிச்சு வைங்க.

  ReplyDelete
 11. கடைசி வரைக்கும் தலைப்பே வைக்காமலும் இருக்கலாம்.. என்ன சொல்றீங்க கீதா சாம்பசிவம்?//

  நல்ல ஐடியா அப்பாதுரை! அப்படியே செய்யலாமானு ஒரு யோசனை இருக்கு! :))))

  ReplyDelete
 12. ஜீவி சார், குலுக்கல்லே கிடைச்ச அப்பாதுரையோட கமென்ட் எந்தப் பதிவுக்குனு எனக்கும் புரியலை. சமீபத்திலே கோயில்கள் பத்தி எழுதலையே?? சரி இருக்கட்டும், அதை வைச்சு ஒரு பதிவாக்கிடலாம். :)))))) ஐடியா கொடுத்த அப்பாதுரைக்கு நன்னி ஹை!

  ReplyDelete
 13. //என்ன தலைப்பு வைக்கலாம்//

  ஏங்க.... கதையும் நாங்களே எழுதணும்.... தலைப்பும் நாங்களே வைக்கணும்... கமெண்ட்ஸ் கூட நாங்களே போடணும்.... என்னங்க இது..... பதிப்பிக்கறது மட்டும்தான் நீங்களா! :)))))))))))))))))

  ReplyDelete
 14. அது எந்தப் பதிவுக்கான (அல்லது பின்னூட்டத்துக்கான) கருத்துனு சரியா கண்டுபிடிச்சு சொல்லுறதுக்கு எங்கள் பிளாக் காரங்களுக்கு அஞ்சு சான்ஸ்.

  ReplyDelete
 15. ஹாஹா, ஸ்ரீராம், எஞ்சாய் பண்ணிட்டு இருக்கேன். நல்லா இருக்கு இந்த ஐடியாவும். தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 16. ஹை, அப்பாதுரை, ஆமா இல்ல? இது எனக்குத் தோணவே இல்லை பாருங்க, இதுக்குத் தான் அப்பாதுரை மாதிரி ஒருத்தர் உதவி வேணும்ங்கறது! எங்கள் ப்ளாக், கண்டு பிடிச்சுச் சொன்னீங்கன்னா எனக்கும் வசதி! :))))))

  ReplyDelete
 17. எங்களுக்கு ரம்யாவின் பெற்ற அம்மாவைத் தெரியாது - ஆனால் அவளை பத்து நாள் குழந்தையாக சர்ச் வாசலிலிருந்து எடுத்து வந்து ஆளாக்கியவரைத் தெரியும் - இப்படிக்கு வனிதாவின் அம்மாவுக்கு சிநேகிதி!

  ReplyDelete
 18. அரியலூர் ரயில் விபத்தில் மத்தியில் பிரயாணம் செய்த லலிதாவின் குழந்தையை அந்த இடத்திலேயே தத்து எடுத்துக் கொண்டு தான் பெற்ற பிள்ளை போல் வளர்த்து ஆளாக்கியவள் - சென்னையிலிருந்து மருத்துவரிடம் தனக்கு ஒரு குறையும் இல்லை என்று சான்றிதழ் வாங்கி வந்தவள் - இந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்புக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்று லலிதாவுடனேயே தன்னுடைய ஆசைகளையும் [ஏன் சான்றிதழையும் தான் ] போட்டுப் புதைத்தது யாருக்காக ?

  ReplyDelete
 19. ஹிஹிஹி, ஶ்ரீராம், கற்பனா சக்தியிலே எங்கேயோ போயிட்டீங்க, அது சரி, அது யாருங்க லலிதா? இதுவரைக்கும் அப்படி ஒரு காரக்டரைப் பத்தி எழுதினதா நினைப்பில் இல்லை. இருந்தாலும் பேரைக் கடன் வாங்கி வச்சுக்கிறேன். :)))))

  ReplyDelete
 20. "இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால்" தொடர்கின்றேன்.

  ReplyDelete