 மாப்பிள்ளை அழைப்புக்கு வந்திருந்த ஆனையோடு யார் இது?? :))))))  இப்போதெல்லாம் ஜானவாசம்னா என்னனு பலருக்கும் தெரியாது.  ஆனால் மறைந்திருந்த அந்த வழக்கம் இப்போது சில கல்யாணங்களில் மீண்டும் வந்து கொண்டு இருக்கிறது. என்றாலும் அதில் வட இந்திய வழக்கப்படி ஆடுகின்றனர். ஒரு சில கல்யாணங்களில் "பல்லே" "பல்லே" கூடப் பஞ்சாபியர் ஆடுவது போல ஆடுகின்றனர்.  சில கல்யாணங்களில் "டான்டியா" பார்க்க முடிகிறது.  மெஹந்திவிழா எனக் கல்யாணத்துக்கு முதல்நாள் சில கல்யாணங்களில் வைக்கின்றனர்.   ஒரு பக்கம் ஹிந்தி வேண்டாம்; என்று சொன்னாலும்  வட இந்திய எதிர்ப்பைக் காட்டினாலும், இன்னொரு பக்கம் குஜராத்தி வழ்க்கப்படி புடைவை கட்டிக் கொண்டும், சல்வார், குர்த்தாக்களிலும், நேரு பைஜாமாவிலும் ஆண்களும், பெண்களும் உடை உடுப்பதும் நிற்கவில்லை.    அநேகமாய் இரு பக்கத்துப் பழக்கங்களும் இப்போதெல்லாம் உணவில், உடையில், கல்யாணங்களில் கலந்தே காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாது.
மாப்பிள்ளை அழைப்புக்கு வந்திருந்த ஆனையோடு யார் இது?? :))))))  இப்போதெல்லாம் ஜானவாசம்னா என்னனு பலருக்கும் தெரியாது.  ஆனால் மறைந்திருந்த அந்த வழக்கம் இப்போது சில கல்யாணங்களில் மீண்டும் வந்து கொண்டு இருக்கிறது. என்றாலும் அதில் வட இந்திய வழக்கப்படி ஆடுகின்றனர். ஒரு சில கல்யாணங்களில் "பல்லே" "பல்லே" கூடப் பஞ்சாபியர் ஆடுவது போல ஆடுகின்றனர்.  சில கல்யாணங்களில் "டான்டியா" பார்க்க முடிகிறது.  மெஹந்திவிழா எனக் கல்யாணத்துக்கு முதல்நாள் சில கல்யாணங்களில் வைக்கின்றனர்.   ஒரு பக்கம் ஹிந்தி வேண்டாம்; என்று சொன்னாலும்  வட இந்திய எதிர்ப்பைக் காட்டினாலும், இன்னொரு பக்கம் குஜராத்தி வழ்க்கப்படி புடைவை கட்டிக் கொண்டும், சல்வார், குர்த்தாக்களிலும், நேரு பைஜாமாவிலும் ஆண்களும், பெண்களும் உடை உடுப்பதும் நிற்கவில்லை.    அநேகமாய் இரு பக்கத்துப் பழக்கங்களும் இப்போதெல்லாம் உணவில், உடையில், கல்யாணங்களில் கலந்தே காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாது.மதுரையிலே கல்யாணத்துக்குப் போயிருந்தப்போ மாப்பிள்ளை அழைப்புக் காத்திருந்த கார். வெளிச்சம் சரியாக இல்லாததால் கொஞ்சம் வேலை செய்தேன். பொதுவா எனக்கு இந்த ஃபோட்டோ ஷாப்பில் எடிட்டிங் ரொம்பச் செய்தால், வெட்டி ஒட்டினால் பிடிக்கிறதில்லை. இயற்கைத் தன்மை போயிடும்னு ஒரு எண்ணம். ஆனால் இம்முறை வேறு வழியே இல்லை. நம்ம நண்பர் இருட்டிலே மறைந்திருந்தார். அதே போல் காரும். பூக்கள் மட்டுமே தெரிந்தன. ஆகவே கொஞ்சம் லைட்டிங்க் தேர்ந்தெடுத்துக் கொண்டு போட்டிருக்கேன்.
கூகிள் சொல்லும் மாபெரும் பொய்! :P :P :P :P
Add blogs to follow in your Reading list
 You are not currently following any blogs. Use the "Add" button to enter blogs you'd like to follow in your Reading List.  Learn more  
 
 
கீதா இப்போ போன வாரம் நானும் ஒரு கல்யாணத்தில் குஜராத்தி ஸ்டைலில் சாரி கட்டின்னு இருக்கேன் கல்யானத்துக்கு முதல் நாளே ரிசப்ஷன் வச்சிருந்தா. கால்துக்குதகுந்தாப்போல எல்லாருமே மாறிட்டுதான் வராங்க அந்தப்பதிவு வெள்ளிக்கிழமை போடுரேன் வாங்க.
ReplyDeleteEnakku theriyumayirukkum yarunnu ............
ReplyDelete//மாப்பிள்ளை அழைப்புக்கு வந்திருந்த ஆனையோடு யார் இது??//
ReplyDeleteஆனையோட அனை பாகன்தான் இருப்பார். அது கூட தெரியாதா என்ன?
அது யாருங்கறதையும் நீங்களே சொல்லிடுங்க.
ReplyDeleteசூப்பர் படம் தலைவி ;-))
ReplyDeleteயார் அது? யூகித்திருப்பது சரிதானா என்று நீங்கள் சொன்னப்புறம் 'செக்' செய்து கொள்கிறேன்!
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, கட்டாயமாய் வந்து படிக்கிறேன். அழைப்புக்கு நன்றிங்க.
ReplyDeleteஜெயஸ்ரீ, தெரியுமா? அட??? :))))))))
ReplyDeleteவா.தி. ஆ.பா. இல்லை இது. யாருனு உங்களுக்கு மறந்து போச்சோ? :P வயசாச்சு இல்லை, அதான். :))))))
ReplyDeleteகெளதம் சார்,
ReplyDeleteசொல்லுவேனா? மாட்டேனே!
கோபி,
ReplyDeleteநல்லா வந்திருக்கா படம்? லைட்டிங்? முழுக்க முழுக்க இருட்டா இருந்தது. லைட்டிங் கொடுத்துப் பார்த்தால் கொஞ்சமே கொஞ்சம் சுமார்! அதான் முதல்லே போடாமல் இருந்தேன். :(
ஸ்ரீராம், ஹை, என் கிட்டே இருந்து பதிலை வரவழைக்க முடியாத்த்த்த்த்த்..... சொல்ல மாட்டேனே!
ReplyDelete"ஜானவாசம்" நாங்கள் படங்களில்தான் பார்த்திருக்கின்றோம்.
ReplyDeleteவாங்க மாதேவி, ஜானவாசம் ஒரு காலத்தில் எல்லாக் கல்யாணங்களிலும் கட்டாயமாய் இருக்கும். காசுக்கடைச் செட்டியார்களிலே ஜானவாசம்னு இருக்காது. பெண் அழைப்புனு சாரட் வண்டியை அலங்கரித்துப் பெண்ணைக் கல்யாண வீட்டிற்கு (அநேகமாய்ப் பிள்ளை வீடுகளில் தான் கல்யாணம்) அதில் ஊர்வலமாகப் பல்வேறு சீர்வகைகளோடு அழைத்து வருவார்கள். கல்யாணம் முடிந்ததும், அதே சாரட்டில் பெண்ணும், பிள்ளையுமாகப் பெண்ணின் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். என் தோழி ஒருத்தியின் கல்யாணத்தில் பார்த்தது இது.
ReplyDelete////மாப்பிள்ளை அழைப்புக்கு வந்திருந்த ஆனையோடு யார் இது??////
ReplyDeleteஎனக்குத் தெரியுமே.... :)
ஹை! எனக்குத் தெரியுமே!
ReplyDeleteவெங்கட்,
ReplyDeleteஉங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியுமே? :))))
கவிநயா, ஹை, உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? :)))))
ReplyDeleteஎனக்கும்தான் தெரியும்.....! :)))
ReplyDelete@Sriram, grrrrrrrrrrrrrr who is that Blacksheep? :)))))))))))))))))))))
ReplyDeleteIppo kalyanangalla janavasam ellam Kooda unda?
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, மறு வரவுக்கு நன்றி. இப்போ மறுபடி ஜானவாசம் ஆரம்பித்திருக்கிறது மெல்ல மெல்ல. அநேகமாய் மணப்பெண்களும், மாப்பிள்ளைகளுமே விரும்பித் தங்கள் நண்பர்களுடன் ஜானவாசத்தில் பங்கேற்கின்றனர். ஒரு சில திருமணங்களில் மாப்பிள்ளையையும், பெண்ணையும் கூட நடுவில் நிறுத்திக்கொண்டு அல்லது கூடவே ஆட வைத்துக்கொண்டு பாட்டும், நடனமும் அமர்க்களப்படும். என்ன ஒரு பிரச்னை என்றால் அன்னிக்கே நிச்சயதார்த்தம், அது முடிஞ்சு ஜானவாசம், அப்புறம் ரிசப்ஷன்னு வைச்சுக்கறதாலே ரிசப்ஷன் ஆரம்பிக்கும்போது எட்டு மணிக்கு மேலே ஆயிடுது. ரிசப்ஷன் மட்டும் கலந்துக்கணும்னு தொலைதூரத்திலே இருந்து வரவங்க பாடு தான் கொஞ்சம் திண்டாட்டம். சமீபத்துக் கல்யாணத்திலே பேசினதை வைச்சுச் சொல்றேன்.
ReplyDeleteஎன்றாலும் எங்க குடும்பத்திலே அனைவருக்குமே பொதுவான கருத்து காலம்பர தாலி கட்டி முடிஞ்சதுமே அன்னிக்கு மாலையில் ரிசப்ஷன் வைக்கிறதே நல்லதுனு. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேஇதைக் கட்டாயமாய் அனுசரிக்கிறோம். பெண்வீட்டுத் தரப்பிலோ பிள்ளைவீட்டுத் தரப்பிலோ ரிசப்ஷன் வைக்கவேண்டிய கட்டாயம் இருந்ததானால் கல்யாணம் ஆகி இரண்டொரு நாட்கள் கழித்து வசதியான நாட்களிலே வைச்சுக்கலாம்.
ரசிச்சு பண்ணிக்கிற கல்யாணமாக இருந்தால், பார்க்க நன்றாகவே இருக்கிறது. அதைவிட நாங்கள் எழுதியதை படிக்கும் போது, கூடவே இருந்தால் போல ரசிக்க முடிகிறது.
ReplyDeleteஅடுத்த பதிவுக்கு ஆவலுடன்....