எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 26, 2012

மதுரை, மதுரை, மதுரை, மதுரை, மதுரை! பகுதி 2


Posted by Picasa ஆனைமலைப் படம், பேருந்தின் வேகத்தில் கிட்டே வரச்சே எடுக்க நினைச்சாலும்  நான் க்ளிக்கறதுக்குள்ளே தள்ளிப் போயிடுச்சு! :(

கல்யாணச் சத்திரத்துக்குச் சீக்கிரமாப் போகணும்னு வேறே இருந்தது. ஆகையால் தெற்கு கோபுரவாசலோடு கோயிலின் உள்ளே சென்றோம்.  செல்கையிலேயே சீட்டு எடுத்தாச்சு.  தர்ம தரிசனத்திற்கு மக்கள் நின்று கொண்டிருக்க, நாங்க கொலு மண்டபம் வழியாப் போய் அங்கே இருந்த வாசல் வழியா உள்ளே போனோம். உள்ளே போக வரிசை இருந்தது என்றாலும் சீக்கிரமா விட்டுட்டாங்க.  அர்த்த மண்டபம் போவோம்னு ஆசையா இருந்தா ம்ஹும், வெளியேவே நிறுத்திட்டாங்க. என்ன ஒரு சமாதானம்னா சீட்டு வாங்கிப் பார்க்கிறவங்களையும், தர்ம தரிசனத்திற்கு வரவங்களையும் இம்முறை பிரிச்சுத் தடுப்புப் போட்டிருந்தாங்க.  ஆகையால் மீனாக்ஷியை நன்றாக யாரும் ஜரிகண்டி சொல்லாமல், போ, போ, நகருனு விரட்டாமல் நின்று, நிதானமாய்ப்  பிறந்தகத்துக்கே வராமல் வெகுநாட்கள் புக்ககத்திலேயே இருந்த பெண்ணைப் பார்க்கும் அம்மாவைப் போல் பார்த்துக் கொண்டேன்.  அலங்காரம் ரொம்ப சிம்பிள் அன்னிக்கு. :)) பின்னர் வெளியே வந்து பிராகாரம் சுற்றிக் கொண்டு போகலாம்னு போனால் சுத்த முடியாது, அப்படியே போங்கனு சொல்லிட்டாங்க.  சரினு திரும்பி வந்தால் மறுபடியும் சந்நிதிக்கு நேரே வந்தோம்.  மீண்டும் சில நிமிடங்கள் தரிசனம். அப்புறமா வெளியே வந்து குறுக்கே போய், ஆஞ்சநேயரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, உள்ளே போனோம்.

இங்கேயும் தர்ம தரிசனத்துக்கு நிறையக் கூட்டமாக இருந்தனர்.  நாங்க அர்த்தமண்டபம் போய் சுந்தரேசரைப் பார்த்து மனோன்மணியைக் காட்டாமலேயே வைச்சிருக்கீங்களே?  கும்பாபிஷேஹத்து சமயத்திலே மட்டுமே வெளியே வராளேனு கேட்டுட்டு, வெளியே வந்தோம்.  அப்படியே நடந்து நியூ சினிமாப் பக்கம் போகலாம்னு போனா அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  நியூ சினிமா அங்கே இருக்கா, இல்லையானே தெரியலை.  எனக்குப்பிரசவம் நடந்த வளையல்காரத் தெரு அந்தப் பக்கம் தானே இருந்தது?  இப்போ எங்கே போச்சு?  நியூ சினிமாவுக்குப் போகும் முன்னே தெற்குச் சித்திரை வீதியில் இருந்த பழைய பேப்பர் புஸ்தகக் கடைகளை எல்லாம் வேறே பக்கம் திருப்பி இருக்காங்க போல.  அப்படியே நடந்து வந்தால், அட கிஷ்கிந்தா!

கிஷ்கிந்தா கடைசியில் ஒரு பெரிய மால் போலிருக்கு.  இது புதுசு எனக்கு.  2007-இல் கூடப் பார்க்கலை.  2011-இல் இது குறித்து யாரும் பேசலை.  இப்போத் தான் வந்திருக்கோ?  இதைத் தான் ஆட்டோக்காரர் கேட்டிருக்கார்.  அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் இந்த மூலையிலே கோபு ஐயங்கார் கடையைக் காணோமேனு தேட ஆரம்பிக்க, இங்கே இல்லை, மேலச்சித்திரையும், வடக்குச் சித்திரையும் சேரும் இடத்தில் அந்த மூலையில் அது இருக்குனு இங்கே இருந்தே காட்டிட்டு இரண்டு பேருமா காணாமல் போன இடங்களைப் பத்திப் பேசிக் கொண்டே வந்து ஆட்டோ பிடிக்கப் பார்த்தால், அம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, போயிட்டே இருக்க வேண்டி இருக்கு.  கிட்டத்தட்டத் தெற்காவணி மூலவீதியில் போய் முடியற இடத்தில் தான் ஆட்டோ பிடிக்க முடிஞ்சது.  ஆட்டோ பிடிச்சுக் கல்யாணச் சத்திரம் போற வழியிலே ராஜாபார்லியைத் தேடினேன்; கிடைக்கலை.  இப்போ இருக்கா இல்லையானு தெரியலை.  ராஜாபார்லியின் வெண்ணெய் பிஸ்கட் அப்போல்லாம் ரொம்பப் பிரபலம்,  எங்களுக்கெல்லாம் உடம்பு சரியில்லைன்னா அப்பா அங்கே இருந்து தான் பிரெட், பன் வாங்கிட்டு வருவார்.   மேலகோபுர வாசல் ஃபன்ட் ஆஃபீஸ் வாசல்லே இருந்தே வாசனை மூக்கைத் துளைக்கும்.  ஃபண்ட் ஆஃபீஸ் எதிரே இருந்த ஒரு சின்னச் சந்தில் (ஹிந்தி பிரசார சபா அங்கே தான் இருந்தது) ராஜாபார்லியின் பேக்கரி இருந்தது.   ஃபன்ட் ஆஃபீஸ் வாசல்லே முன்னெல்லாம் வெள்ளரிக்காய்க் கூறு கட்டி விப்பாங்க.  செக்காநூரணி வெள்ளரிக்காய். சின்னச் சின்னப் பிஞ்சுகள்.  ருசி நல்லா இருக்கும்.
10 comments:

 1. ராஜாபார்லி கடை அங்கேதான் இருக்கு ரெண்டு வருஷம் முன்னால பார்த்தேன்! நியூ சினிமா பக்கம் இருந்த புத்தகக் கடை எல்லாம் இல்லையா.... கோபு ஐயங்கார்க் கடைல தவலை வடை, சீவல் தோசைச் சாப்பிட்டீங்களா இல்லையா?!! இந்த வீதிகளைச் சுற்றித்தான் பேட்டரிக் கார் விட்டிருக்கிறார்கள்!.

  ReplyDelete
 2. கொஞ்சம் கையடக்கமான ஊர் போலிருக்கே? கோவிலை விட்டா வேறே என்ன இருக்கு மதுரையில்?

  ReplyDelete
 3. நாம் பழகிய இடத்திற்கு பல வருடங்கள் கழித்துப் போனால் கண் அலைபாயும். பதிவில் அது புரிந்தது....

  ReplyDelete
 4. வாங்க ஸ்ரீராம், நீங்க பார்த்து ரெண்டு வருஷம் ஆயிருக்கே?? என்னமோ எனக்குக் கண்ணிலேயே படலை. :(

  கோபு ஐயங்கார் கடைக்கு இந்தத் தரம் போகலை. கல்யாண வீட்டிலே சாப்பிடலைனா அப்புறமாத் திரும்பி ஊருக்கு வரமுடியாதே! :))) நெருங்கிய சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம். சித்திரை வீதியில் பாட்டரிக்கார் ஓடிப் பார்க்கலை. :(

  ReplyDelete
 5. அப்பாதுரை, கையடக்கம் மட்டுமில்லை, காலுக்கும் அடக்கமே. ஊரை நடந்தே சுத்தி வந்துடலாம், ஒரு காலத்தில். இப்போ ஊர் விரிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் முக்கிய நகரைச் சுற்றி வருவது சிரமம் இல்லை. மீனாக்ஷி தான் மதுரையில் முக்கியம். அடுத்துத் திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர்த்தெப்பக்குளம், அழகர் கோயில், மதுரையின் மற்றக் கோவில்கள், காந்தி ம்யூசியம் னு இருக்கு. என்றாலும் மீனாக்ஷி தான் எல்லாரையும் வசீகரிக்கிறாள்.

  ReplyDelete
 6. வாங்க வெங்கட், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. :)))) நான் பார்த்த மதுரை மடிசாரோடு இருந்த ஒரு பெண்மணி. இப்போப் பார்ப்பது மூக்குத்தியோடு, பாப் கட்டோடும், ஜீன்ஸ், டீ ஷர்ட்டிலும் இருக்கும் ஒரு பெண்மணி. அதான் வித்தியாசம். :)))))))))

  ReplyDelete
 7. மலரும் நினைவுகள் என்றுமெ இனிமையான அனுபவம்தான். சொல்லி சென்றவிதம் நல்லா இருக்கு.

  ReplyDelete
 8. //மூக்குத்தியோடு, பாப் கட்டோடும், ஜீன்ஸ், டீ ஷர்ட்டிலும் இருக்கும் ஒரு பெண்மணி. அதான் வித்தியாசம். :)/

  ithu nadakattithan aacharyam

  ReplyDelete
 9. வாங்க லக்ஷ்மி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. எல்கே, ஆனாலும் பார்க்கச் சகிக்கலையே? :))))))))

  ReplyDelete